Sunday, January 31, 2010

மத்திய அமைச்சரை முற்றுகையிட்ட விவசாயிகள்

மரபணு மாற்று கத்தரிக்காயை இந்தியாவில் பயிரிட அமெரிக்க கம்பெனிய விட நம்ம ஊர் அரசியல்வாதிகள் ரொம்ப ஆர்வம் காட்டுறங்க என்ன காரணம்னு தெரியல. ஏற்கனவே ஐரோப்பிய நாடுகள் மரபணு மாற்று கத்தரிக்காய்க்கு தடை விதித்துள்ளது.. ஏனெனில் அந்த கத்தரிக்காயில் இருக்கும் கிரை 1ஏசி என்ற வைரஸில் விஷத்தன்மை உள்ளது என்றும் இதை பயிரிட்டால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் வேளாண்மை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நன்றாக வேக வைக்காமல் சாப்பிட்டால் உடலில் எதிர் விளைவுகள் ஏற்படும் எனவும் செய்தி நிலவுகிறது... மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் இதை சாப்பிடக்கூடாது என்ற செய்தியும் யோசிக்க வைக்கிறது.

இவ்வளவு பின்விளைவை ஏற்படுத்தக்கூடிய இந்த கத்தரிக்காயை அனுமதிப்பது தொடர்பாக மத்திய சுற்று சூழல் அமைச்சர் 7 நகரங்களில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி வருகிறார். இதில் சென்னை கிடையாது..எனென்றால் இந்த கத்தரிக்காய் குறித்த விழிப்புணர்வு குறும் படம் எடுத்து முதல்வரிடம் காட்டி தற்போதைக்கு இந்த கத்தரிக்காய்க்கு தடை வித்துள்ளது தமிழ்நாடு அரசு. இந்த காரணத்தாலே சென்னையில் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த மத்திய சுற்று சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மறுத்து விட்டார்.

இந்நிலையில் இன்று மரபணு மாற்று கத்தரிக்காய் குறித்த கூட்டம் ஹைதரபாத்தில் நடைபெற்றது..கூட்டத்திற்கு வந்த மத்திய அமைச்சரை 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சூழ்ந்து கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்தனர்... இதனால் பெரும் பரபரப்பு நிலவியது அந்த அரங்கில்..பின்னர் பேட்டியளித்த அமைச்சர் பிப்ரவரி 10ஆம் தேதி இது குறித்து முடிவடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.


அனைத்து விவசாய அமைப்புகளுமே இந்த மரபணு மாற்று கத்தரிக்காய்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் ஏன் இந்த கருத்து கேட்பு கூட்டம்.???????.....எல்லா நாடுகளும் இந்த கத்தரிக்காய்க்கு தடை விதித்துள்ள நிலையில் எதற்கு இந்த சல்ஜாப்பு.......ஒரு வேளை அந்த அமெரிக்க கம்பெனியிடம் நம்மை அடகு வைத்து பொட்டி வாங்கிட்டாங்களோ..இதுக்காகவா உங்களுக்கு ஓட்டு போட்டு ஆட்சியில் அமர்த்தினோம்.............என்னவோ போங்க..............