Friday, August 28, 2009

வலைப்பதிவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் இணையதளம்

நம்ம ஆளுக எழுதும் சினிமா பதிவுகளுக்கு எப்பவும் கிராக்கி இருக்கும்.கதை,கவிதை,நேர்த்தியான அரசியல் அலசல்கள் என யோசிச்சு எழுதும் பதிவுகளை விட ரெண்டு வரி சினிமா பதிவுகளுக்கு ஹிஸும் அதிகம் பின்னூட்டமும் அதிகம்...

நான் சொல்ல வருவது சினிமா விமர்சனம் பற்றி... முன்பெல்லாம் சினிமா விமர்சனம் என்றால் ஆ.வி.தான்.அவர்கள் போடும் மார்க்கை வைத்தே படத்தின் தலைவிதியை தெரிந்து கொள்ளலாம்...ஆனால் தற்போது எந்த பத்திரிக்கையும் நடுநிலையான விமர்சனம் செய்வதில்லை......ஆனால் நம்ம வலைப்பதிவுகளில் சினிமாவிமர்சனம்னாலே எந்த படம் என்றாலும் பிடி கொடுக்காமல் விளாசித்தள்ளுகிறார்கள்.......இந்த விசயத்தை பற்றி தமிழ்சினிமா.காம் வேண்டுகொளை விடுத்துள்ளது....... கீழே படிக்கவும்.....

//பிளாக் என்று சொல்லப்படும் வலைப்பூக்கள் கணிசமான வாசகர் வட்டாரத்தை கொண்டிருக்கிறது. இங்கே எழுதப்படும் சினிமா விமர்சனங்கள் பற்றிதான் இப்போது பெரும் கவலையோடு பேச ஆரம்பித்திருக்கிறார்கள் திரையுலகத்தில். சமீபத்தில் வெளிவந்த ஒரு மாபெரும் பட்ஜெட் படத்தை கிழிகிழியென்று கிழித்துவிட்டார்கள் இந்த பிளாக் எழுத்தாளர்கள். இவர்களின் விமர்சனத்தை பார்த்தால், ஒரு சீனுக்கு கூட தகுதியில்லாத படம் போலிருக்கிறது என்ற எண்ணமே எழும். ஆனால், நீளம் என்ற ஒரு குறையை தவிர கவலைப்படுத்துகிற மாதிரியான படம் இல்லை இது. அப்படியானால் இவர்கள் ஏன் இப்படி எழுதி கிழிக்க வேண்டும்? அநேகமாக எல்லா படத்தையும் இப்படிதான் கிழித்து தொங்கப் போடுகிறார்கள் இந்த வலைப்பூக்காரர்கள். எங்கோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு உதிரத்தை சிந்தி படம் எடுக்கும் படைப்பாளிகளையும், கோடி கோடியாக கொட்டிவிட்டு தவிக்கும் தயாரிப்பாளர்களையும் பீதிக்குள்ளாக்குகிற இவர்கள் கொஞ்சம் மனிதாபிமானத்தோடு விமர்சனங்கள் எழுத வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். ஒன்றுக்கும் உதவாத படங்களை கிழித்தால் கூட பொறுத்துக் கொள்ளலாம். பிரமாண்டம், நேர்த்தி, இசை, ஒளிப்பதிவு என்று எதிலும் குறைவைக்காத படத்தையெல்லாம் கூட ஒரே தராசில் வைத்து பார்ப்பதுதான் பெரும் சோகம். இனியாவது யோசியுங்கள் நண்பர்களே...////

கொஞ்சம் பாத்து எழுதுங்க மக்களே