Sunday, 31 January, 2010

மத்திய அமைச்சரை முற்றுகையிட்ட விவசாயிகள்

மரபணு மாற்று கத்தரிக்காயை இந்தியாவில் பயிரிட அமெரிக்க கம்பெனிய விட நம்ம ஊர் அரசியல்வாதிகள் ரொம்ப ஆர்வம் காட்டுறங்க என்ன காரணம்னு தெரியல. ஏற்கனவே ஐரோப்பிய நாடுகள் மரபணு மாற்று கத்தரிக்காய்க்கு தடை விதித்துள்ளது.. ஏனெனில் அந்த கத்தரிக்காயில் இருக்கும் கிரை 1ஏசி என்ற வைரஸில் விஷத்தன்மை உள்ளது என்றும் இதை பயிரிட்டால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் வேளாண்மை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நன்றாக வேக வைக்காமல் சாப்பிட்டால் உடலில் எதிர் விளைவுகள் ஏற்படும் எனவும் செய்தி நிலவுகிறது... மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் இதை சாப்பிடக்கூடாது என்ற செய்தியும் யோசிக்க வைக்கிறது.

இவ்வளவு பின்விளைவை ஏற்படுத்தக்கூடிய இந்த கத்தரிக்காயை அனுமதிப்பது தொடர்பாக மத்திய சுற்று சூழல் அமைச்சர் 7 நகரங்களில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி வருகிறார். இதில் சென்னை கிடையாது..எனென்றால் இந்த கத்தரிக்காய் குறித்த விழிப்புணர்வு குறும் படம் எடுத்து முதல்வரிடம் காட்டி தற்போதைக்கு இந்த கத்தரிக்காய்க்கு தடை வித்துள்ளது தமிழ்நாடு அரசு. இந்த காரணத்தாலே சென்னையில் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த மத்திய சுற்று சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மறுத்து விட்டார்.

இந்நிலையில் இன்று மரபணு மாற்று கத்தரிக்காய் குறித்த கூட்டம் ஹைதரபாத்தில் நடைபெற்றது..கூட்டத்திற்கு வந்த மத்திய அமைச்சரை 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சூழ்ந்து கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்தனர்... இதனால் பெரும் பரபரப்பு நிலவியது அந்த அரங்கில்..பின்னர் பேட்டியளித்த அமைச்சர் பிப்ரவரி 10ஆம் தேதி இது குறித்து முடிவடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.


அனைத்து விவசாய அமைப்புகளுமே இந்த மரபணு மாற்று கத்தரிக்காய்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் ஏன் இந்த கருத்து கேட்பு கூட்டம்.???????.....எல்லா நாடுகளும் இந்த கத்தரிக்காய்க்கு தடை விதித்துள்ள நிலையில் எதற்கு இந்த சல்ஜாப்பு.......ஒரு வேளை அந்த அமெரிக்க கம்பெனியிடம் நம்மை அடகு வைத்து பொட்டி வாங்கிட்டாங்களோ..இதுக்காகவா உங்களுக்கு ஓட்டு போட்டு ஆட்சியில் அமர்த்தினோம்.............என்னவோ போங்க..............

Friday, 29 January, 2010

கோவா........அய்யோ

 சென்னை28, சரோஜா வெற்றிக்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்பில் வந்திருக்கும் படம் கோவா.முழுக்க முழுக்க காமெடி படம் எடுக்க ஆசைப்பட்ட இயக்குனர் அப்படியே பல இடங்களில் நெளிய வைத்திருக்கிறார்.

ஊர்க்கட்டுப்பாடுகள் நிறைந்த கிராமத்தில் அந்த கட்டுப்பாடுகள் பிடிக்காமல் வாழும் இளைஞர்களாக ஜெய்,பிரேம்ஜி,வைபவ்... ஓரு கட்டத்தில் ஊரைவிட்டு வெளியேறி மதுரையில் உள்ள நண்பனை காண வருகிறார்கள்..வந்த இடத்தில் நண்பனுக்கு திருமணம் அதுவும் வெளிநாட்டு பெண்ணுடன்...நண்பனிடன் விவரம் கேட்கும் நம் கதாநாயகர்கள் நண்பனை பின்பற்றி கோவா சென்று வெளிநாட்டு பெண்களை காதலித்து வாழ்க்கையில் செட்டிலாகனும் என்ற லட்சியத்துடன் செல்கிறார்கள்..அவர்களது லட்சியம் நிறைவேறியது எப்படி எனபதை நம்மை நெளிய வைக்கும் காட்சிகளுடன் சொல்கிறார் இயக்குனர்.


அட்டகாசமான கிராமத்து பாடலுடன் ஆரம்பமாகும் காட்சிகள் அருமை....பஞ்சாயத்து காட்சிகள் நீளம் என்றாலும்சுவாரஸ்யத்துக்கு குறைவில்லை...நக்கலும் அதிகம். காட்சிக்கு காட்சி பிரேம்ஜி அசத்துகிறார் ஒரே மேனரிசத்துடன்... முதல் 45நிமிடங்கள் நன்றாகப்போகிறது... கோவாவுக்கு சென்ற பிறகு வரும் காட்சிகள் பெரும்பாலும் நம்மை நெளியவைக்கின்றன. அரைகுறை இங்கிலீஷில் பீட்டர் விடும் ஜெய், எந்த பெண்ணை பார்த்தாலும் மன்மதலீலை பிண்ணனி இசையுடன் வைபவ் கதை சொல்வது...என..... காமெடி காட்சிகள் இருந்தாலும் கோவா என்றவுடன் குடி கூத்து என திரும்ப திரும்ப காண்பிப்பது எரிச்சலடையவைக்கிறது.

இடைவேளைக்கப்புறம் படம் தொய்வடையும் போதெல்லாம் பிரேம்ஜியை காண்பித்து காமெடி பண்ணியிருக்கிறர் இயக்குனர்..இவருக்கு டூயட் பாடல் வேறு..அவ்வ்...........பிரெம்ஜியின் ஜோடியாக வரும் பெண் நல்ல பிகர்.............. ஓரினச்சேர்க்கையாளராக வரும் சம்பத்தின் பாடிலேங்குவேஜ் நல்லா இருக்கு........... ஆனால் பல நெளியவைக்கும் முக்கியமாக ஜட்டியுடன் ரூமில் ஆடுவது, அரவிந்த் கனவு காண்பதாக வரும் பாடல் காட்சிகள்,தேவையில்லாமல் சேர்த்திருப்பதாக தோன்றுகிறது.......... இது போன்றகாட்சிகளை நீக்கினால் நல்லாயிருக்கும்பா...
..
அப்புறம் பாடத்தின் ஆரம்பத்தில் இருந்து நம்ம கதாநாயகர்களை பற்றி ஒருவர் கேள்வி கேட்பார்.அவர் படம் முழுவதும் பின் தொடர்வார்......... அவர் ஏன் அப்படி செய்கிறார்?? இயக்குனர்ட்டதான் கேக்கனும், கோவில் நகை திருடுவது, கப்பல் காட்சிகள் எல்லாம் ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....வழக்கம் போல் யுவன் கலக்கியிருக்கிறார்.... இதுவரை என்ற மெலடி பாடல் அருமை....கிளைமாக்சில் எதிர்பாக்காத திருப்பம் அருமை......சினேகா வருகிறார், போகிறார் அவ்ளோதான்

பிரேம்ஜி மட்டும் இல்லனா.............படம் அய்யோஅய்யய்யோ
கோவா இயக்குனர் கதையை நம்பாமல் சதையை நம்பியிருக்கிறார்.

கடைசி வரை DTS SOUND- ஐ ஆன் பண்ணாத தாம்பரம் வித்யா தியேட்டர் ஆப்பரேட்டர் வாழ்க.....................

Tuesday, 19 January, 2010

ஆயிரத்தில் ஒருவன் பார்க்க வேண்டிய படம் தான்

பொங்கலுக்கு வெளிவந்த படங்களில் இந்த படத்தைதான் நம்ம மக்கள் அதிக விமர்சனம் செஞ்சிருக்காங்க.சேரன்,சோழன்,பாண்டியன் வரலாறுகளை சிறு வயதில் படிக்கும்போதே ஆவலாக இருக்கும்.. கேபிளின் விமர்சனம் & கார்க்கியின் விமரசனத்தை படிச்ச பிறகுதான் இந்த படத்தை பார்க்க முடிவு செய்தேன்.. குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் பார்த்தேன் டிக்கெட் விலை 100ரூபாய்.(டிக்கெட்டில் 17ரூபாய் என்று இருந்தது).... வாழ்க தியேட்டர் அதிபர்கள்...இப்ப்படியெல்லாம் டிக்கெட் விலை விற்றால் எவன் வருவான் படம் பார்க்க.காலேஜ் படிக்கும் நிஜ யூத்கள்தான் வரிசையில் அதிகம் பேர் இருந்தனர். 

ஹீரோயின், ஹீரோ அறிமுக காட்சியில் ஆரம்பமான கைத்தட்டல் இடைவேளை வரைக்கும் தொடர்ந்தது. கதையையும், காட்சிகளையும் நம்ம பதிவர்கள் நூடுல்ஸ் பண்ணிட்டதால அத பத்தி நான் சொல்ல மாட்டேன்...அதோ அந்த பறவை போல வாழவேண்டும் பாடல் ஒரிஜினல் கெடாமல் அழகாக இருந்தது.. கார்த்தி இன்னும் ப்ருத்திவீரன் பாதிப்பில் இருந்து மீளவில்லை.. இருந்தாலும் ரசிக்க வைக்கிறார்...எல்லோரிடமும் அடிவாங்குகிறார்.இடைவேளை வரைக்கும் இவர் என்ன பண்ண போறார் என்பது .......ஆங்.ஆண்ட்ரியாவிடமும், ரீமாவிடமும் கார்த்தி அடிக்கும் லூட்டி கலகல.காட்சிக்கு காட்சி ரெட்டை அர்த்த வசனங்கள் ரசிக்க வைக்கிறது...ஹீரோவை ரொம்ப பயந்தாங்கொள்ளியாவும், ஹீரொயினை எதற்கும் அஞ்சாதவளாக கண்பிப்பது அருமை.இடைவேளை வரை படம் ஜெட் வேகத்தில் பறக்கிறது.

அதிலும் முக்கியமாக நடராஜர் சிலை நிழல் போல் வரும் காட்சி மிக மிக அருமை. இடைவேளைக்கப்புறம் ஆண்ட்ரியாவுக்கு வேலையில்லை.பார்த்திபன் நடிப்பு ஓஹோ.சுத்த தமிழில் இவர் பேசும் வசனங்கள் வாவ்.என்ன நல்லா கவனிச்சாத்தான் அந்த சுத்த தமிழின் அர்த்தம் புரிகிறது.இடைவேளைக்கப்புறம் படத்தில் தொய்வு ஏற்பட்டாலும் சண்டைக்காட்சிகள் அருமை ( கிளாடியேட்டர் படத்தை போல் வரும் சண்டைக்காட்சி ஓகே)கார்த்தி சோழ அரசனின் தளபதியாக மாறுவது அனுமாஷ்யமான காட்சிகள் என்றாலும் நல்லாவே சொல்லியிருக்காங்க.... ஒளிப்பதிவு, இசை அனைத்தும் அருமை. எடிட்டர் கோலா பாஸ்கரை விட தியேட்டர் ஆப்பரேட்டர் எத்தனை சீன்களை கத்தரி போட்டாரோ....தாய் தின்ற மண்ணே பாட்டையும் கட் பண்ணிட்டாங்கப்பா............ துணை நடிகர்கள் அனைவரையும் கண்டிப்பாக பாராட்டவேண்டும்....


மொத்தத்தில் ஆயிரத்தில் ஒருவன் செல்வா எடுத்த வாந்தியல்ல...அவர் கொடுத்த பூந்தி என்று சொல்லலாம்( லட்டுதான் கொடுக்கனும்னு நினைச்சி கொஞ்சம் மாறிப்போய் பூந்திய கொடுத்திட்டார்.......).நம்ம எப்பவுமே தமிழ் படத்தை ஒரு மனநிலையிலும், ஆங்கில படத்தை வேறொரு மாதிரி மனநிலையிலும் பார்க்கிறதை மாத்துங்கப்பா.......... ஒரு உதாரணத்துக்கு சொல்றேன் ஆங்கிலப்படத்தில் ஹீரோ எங்கிருந்து குதித்தாலும் ஆஹா ஓஹோ.........அதையே தமிழ் படத்தில் செய்தால்................... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........... மாத்துங்க மாறுங்க

கண்டிப்பா படத்தை தியேட்டரில் போய் பாருங்கள்

Monday, 11 January, 2010

என்டர் கவிதைகள்- 1 யூத் கேபிளுக்கு சமர்ப்பணம்


வா என்கிறேன்
வரமாட்டேன் என்கிறாய்
வரவேண்டாம் என்கிறேன்
வருவேன் என்கிறாய்
தா என்கிறேன்
தரமாட்டேன் என்கிறாய்
தர வேண்டாம் என்கிறேன்
தருவேன் என்கிறாய்
இப்படி எதிர்வாதம் செய்யாதே என்கிறேன்
செய்வேன் என்கிறாய்
செய் என்கிறேன்
செய்யமாட்டேன் என்கிறாய்.
பேசு என்கிறேன்

பேச மாட்டேன் என்கிறாய்
பேசவேண்டாம் என்கிறேன்
பேசுவேன் என்கிறாய்..
இப்படி ஒவ்வொன்றிலும் எதிராக இருந்தாலும்

ஏதோ ஒரு புள்ளியில் ஒன்று சேர்கிறோம்


Wednesday, 6 January, 2010

சாருவிடம் கடன் கேட்ட கேபிள் சங்கர்
      அப்துல்லா அண்ணன்,வெண்பூ,டம்பீ மேவியுடன் நான்
  
போன வருடம் வரைக்கும் புத்தக கண்காட்சிக்கு போனது கிடையாது. ஆனாலும் நம்ம கா.பா விடுவதாக இல்லை... நானும் ரவுடி ஆகிட்டேன்.நீங்க அந்த புக்கை வாங்கிப்பாருங்க அப்படினார்.. இல்லப்பா நம்ம அறிவு விகடன் ,குமுதம் அப்படினே இருக்கட்டுமேன்னு சொன்னேன்.எஸ்.ரா எழுதியதெல்லாம் படிச்சதில்லையா? அப்படினார்..படிச்சிருக்கேனே ....எதுல.விகடன்லதான்...... ஆளு ரொம்ப டென்சன் ஆகிட்டார்........ புக் வாங்கி படிங்கய்யா அப்படினார்.....அந்த மாதிரி எலக்கிய புக்கெல்லாம் வாங்குன பழக்கமும் கிடையாது, படிச்ச பழக்கமும் கிடையாதுனேன்....


தன்னுடைய கவிதையை புத்தகத்தில் ஆர்வமுடன் தேடும் யூத் தண்டோரா, அருகில் நான்.

இருந்தாலும் புரொபசர் சொன்னா கேக்கனுமில்ல ...போன 2ஆம் தேதி கேபிளுடன் புத்தக கண்காட்சியில் ஆஜர் ஆனேன்... நானே எதிர்பார்க்காத கூட்டம்.... எடுத்த எடுப்பிலே தண்டோராவும் நானும் வம்சி புக் ஸ்டாலுக்குச்சென்றோம்.. 10ஆம் வகுப்பு பையன் ரிசல்ட் பாக்குற மாதிரி தண்டோரா அண்ணன் தன்னுடைய கவிதை வந்திருக்கானு ரொம்ப ஆவலா புக்கை புரட்டினார்..... அது கன்பார்ம் ஆனவுடன் அதை வாங்கினார்... நானுன் என் பங்குக்கு இரண்டு புத்தகங்கள் வாங்கினேன்.... அப்படியே உயிரைமை ஸ்டாலுக்கு சென்றோம்.... அப்துல்லா, நர்சிம்,சங்கர்,நித்யகுமாரன்,வெண்பூ, அகநாழிகை உட்பட எல்லோரும் அங்கே இருந்தார்கள்.சாருவுடனும்,எஸ்ராவுடனும் போட்டோ எடுத்துக்கொண்டனர்.. அப்பொது சாருவுக்கு டீ தந்தார் ஒருவர். அதை வாங்கிய அவர் எனக்கு இப்ப இது வேண்டாம் நீங்க யாராவது குடிங்க என்றவுடன்.... கேபிள் அண்ணன் நைசாக அந்த டீயை என்னிடம் தள்ளிவிட்டார்..புத்தக கண்காட்சியை விட்டு வெளியே வரும்போது டம்பிமேவிஐ சந்தித்தோம்..... தனக்கு 21வயதுதான் ஆகிறது என்று சத்தியம் பண்ணாத குறையாக சொன்னார். எதுக்கு அப்படி சொன்னார்னே தெரியலை..அவருடன் போட்டோ எடுத்துக்கொணடோம்.........

 பதிவர் சங்கரிடம் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.... அவரும் எங்க ஊர்தான் அம்பாசமுத்திரம். அடுத்ததாக யூத்துகளெல்லாம் வட்ட மேசை மாநாடு நடத்துனாங்க.. சின்னப்பையனான நான் ஒரு ஓரமாக ஒதுங்கி கொண்டேன்.சாரு நந்தலாலா படத்தை ரொம்பவும் சிலாகித்து பேசத்தொடங்கினார்...கேபிள் சங்கரும் கூடவே இருந்ததாலோ என்னவோ சினிமாவை பற்றியே அவர்கள் பேச்சு தொடர்ந்தது...அப்துல்லாவிடம் சாரு நீங்கள் கண்டிப்பாக ஒரு படத்திலாவது கதாநாயகனாக நடிக்க வேண்டு என்று அன்பு கட்டளை இட்டார்....... மாநாடு முடிந்து வெளியே வந்தவுடன் கேபிள் சாருவிடம் நான் படம் எடுத்தால் பங்குலாவின் கதாபாத்திரத்தை பயன்படுத்துவேன் அப்படினு கடன் கேட்டார்........ சாரு என்ன சொன்னார்னு தெரியல.......

கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்


1.கிளிஞ்சலகள் பறக்கின்றன--- 48 பதிவர்களின் கவிதை தொகுப்பு
2.பெருவெளிச்சலனங்கள் --22 பதிவர்களின் அனுபவக்கட்டுரைகள்


இரண்டு புத்தகங்களுமே வம்சி புக் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
இரண்டு புத்தகங்களின் விலை ரூபாய் 100.( கண்காட்சியில் விலை ரூபாய் 90)


அண்ணன் தண்டோரா எனக்கு அன்பளிப்பாக கொடுத்த புத்தகங்கள்
அய்யனார் கம்மா
கருவேல நிழல்கள்.

Friday, 1 January, 2010

எலக்கிவியாதியான அந்த பதிவர்,என்னை தோற்கடித்த கலைஞர்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.... இன்றைக்கு எனக்கு வேலை நாள் என்பதால் ஒரு சபதம் எடுத்தேன்.... பள்ளிக்கரணையில் இருந்து தரமணிக்கு சாதாரணப்பேருந்தில்தான் போக வேண்டும் என்பது.. முதல் ஷிப்ட் என்பதால் காலை 6மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும்...05:15மணியிலிருந்து காத்திருந்தேன் சாதாரண பேருந்துக்காக...இன்னைக்கு ஒரு நாளாவது எக்ஸ்ட்ரா காசு கோடுக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான்.05:30மணிக்குள் 4 பேருந்துகள் வந்தன. ஒன்று கூட சாதாரண பேருந்துகள் இல்லை..05:40க்குதான் வந்தது.05:50க்கு விஜய நகரில் இறங்கினேன்.காத்திருந்தேன் இங்கேயும் அதே கதைதான்..... 10நிமிடம் காத்திருந்து வேற வழியில்லாமல் சொகுசுப்பேருந்தில் ஏறினேன்.. என் சபதத்தை முறியடித்த கலைஞர் அரசு வாழ்க....


போன வருடத்தில் கிட்டத்தட்ட 120படங்கள் வெளியாகியிருக்கின்றன..இதில் நான் பார்த்த படங்கள்... அயன்,வெண்ணிலா கபடிக்குழு,பசங்க,நாடோடிகள்,மாயாண்டி குடும்பத்தார்,பேராண்மை,உன்னைப்போல் ஒருவன் இதில் அயன் இந்த வருட பிளாக்பஸ்டர் படம்.......அதிவேகமான திரைக்கதை, பாடல்கள் என கலக்கியது.

அடுத்ததாக வெண்ணிலா கபடிக்குழு,பசங்க,நாடோடிகள்........ இந்த மூனு படங்களுக்கும் ஒரு ஒற்றுமை.....இயல்பான திரைக்கதை......கதைதான் இந்த படங்களில் நாயகன். கடேசியா இந்த மூனு படங்களிலும் சைட் அடிக்கிற விசயங்கள் அருமையா இருக்கும்.இப்பவெல்லாம் யாரும் பொண்ணுங்க பின்னாடி சைட் அடித்து சுற்றுவதில்லை..ஏன்னா இன்டர்நெட்,ஈமெயில் செல்போன்,மெசேஜ் அப்படினு பசங்களும் பொண்ணுங்களும் ரொம்ப ஸ்பீடா இருக்காங்க.............

உன்னைப்போல் ஒருவன் -- பதிவுலகில் இந்த வருடம் அதிகம் விமர்சிக்கப்பட்ட படம்...இந்துயிசம், அந்த இசம் ஆயாயிசம்னு துவைச்சி காயப்போட்டாலும்......ஒன்றரை மணிநேரத்துக்குள் படம் ஜெட்டாகபறக்கிறது.......பேராண்மை முதல் பாதி மண்டை காய வைத்தாலும், இரண்டாம் பாதியில் திரைக்கதையும், சண்டைக்காட்சிகளாக படம் பறக்கிறது........
-------------------------------------------------------------------------------------------------------------

அந்தப்பிரபல பதிவரிடம் பேசும்போது என்ன அண்ணே இந்த வருடக்கடைசில (2009)பதிவர் சந்திப்பே வைக்கலியே அப்படினு கேட்டேன்."யோவ் நாங்க எல்லாம் இப்ப ரொம்ப பிசி தினசரி புத்தக வெளியீட்டு விழா, எலக்கிய கூட்டம் அப்படினு போய்க்கிட்டே இருக்கு..நீ என்ன சின்ன புள்ளத்தனாமா இப்படி கேக்குற" அப்படினு ஏறிட்டார்..நானும் இப்ப ரவுடிதான் அப்படின்ற ரேஞ்சில நானெல்லாம் இப்ப எலக்கியவியாதி ஆயிட்டேன் தேரியுமா என ஷாக் கொடுத்தார்..........அல்லாரும் பெரிய ஆளாயிட்டாங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..


அப்படியே நம்ம மதுரை பதிவருக்கு போன் போட்டேன்.. என்னப்பா சென்னை புத்தக கண்காட்சிக்கு போகலியா..நீங்கதான் ஒரு ஊர் விடாம போவிங்களே அப்படினேன்... "நான் அங்க வாங்கின புக்கே இன்னும் தூங்கிட்டு இருக்கும் அதுக்குள்ளயா?? "அப்படினார்..நீங்க தான் இப்ப எலக்கியவியாதி ஆகிட்டீங்களே.....ஆப்படினு சொன்னதுதான் தாமதம் "தலைவரே இதுல ஏதோ சதி நடக்குது.எனக்கும் அதுக்கும் சம்பந்த்மே கிடையாது" அப்படின்ற ரேஞ்சில ஸ்டேட்மென்ட் குடுத்துட்டார்........பாவம் பொழைச்சி போகட்டும்
-------------------------------------------------------------------------------------------------------------

இந்த வருடம் பதிவுலகில் நான் எதிர்பார்ப்பது

1. எதிர் கவுஜை இல்லாமல் நைனா அண்ணாச்சி  பதிவு போட வேண்டும்
2.மீண்டும் தங்கமணி பதிவுகளை ஆதி அண்ணன் போட வேண்டும் பழைய உத்வேகத்துடன்.
3.உண்மைத்தமிழன் அண்ணன் கவிதை எழுத வேண்டும்( எப்படினாலும் ஒரு பக்க்கத்துக்குள்ள முடிஞ்சிருமில்ல)
4.சினிமா பற்றி எதுவும் இல்லாமல் கேபிள் அண்ணன் ஒரு பதிவு போடவேண்டும்
5.சினிமாக்காரனை வம்புக்கு இழுக்காமல் அரவிந்த் ஒரு பதிவு போடவேண்டும்
6.அல்லாருக்கும் புரியிற மாதிரி அனுஜன்யா அண்ணாச்சி கவித எழுதனும்
7.கார்க்கியும் , வசந்தும் டாக்டர் இளைய தளபதிய பேஜார் பண்ணி ஒரு பதிவு போடனும்.