Saturday, 30 May, 2009

பேருதான் பெருசா மெட்ரோ சிட்டி............

பேருதான் பெருசா மெட்ரோ சிட்டி மற்ற்படி பல விசயங்களில் சென்னை சொல்லிக்கிற மாதிரி இல்லை...நான் சொல்ல வருவது சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் செயல்பாடுகள் குறித்து. கிட்டத்தட்ட 10லட்சம் பயணிகள் பயணம் செய்கிறார்கள்... பெருமைதான். புதுப்புது வழித்தடங்களில் மாநகர போக்குவரத்து கழகம் அறிமுகப்படுத்துகிறது. சந்தோசம்.எல்லாம் நல்லாத்தான் இருக்கு.......ஆனா......

நான் சொல்ல வருவது காலை 5 மணி முதல் 10 மணி வரை... இரவு 8 மணியிலிருந்து 11 மணி வரையுள்ள நெரிசல் நேரம் பற்றியது. பொதுவாக காலை நேரங்களில் சென்னை நகருக்கு வெளியே செல்லும் கூட்டத்தை விட உள்ளே வரும் கூட்டம் அதிகம்..அதற்கு ஏற்றார்போல் மாநகர போக்குவரத்து இருக்கிறதா என்றால் ..........பதில் கண்டிப்பாக இல்லை என்றுதான்வரும்..தற்போதுள்ளநிலையில் மாநகரசாதாரணப்
பேருந்துகளைவிட விரைவுப்ப்பேருந்துகள்,சொகுசுப்பேருந்துகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது. இந்த நடைமுறைதான் பேருந்துகளில் கூட்ட நெரிசலுக்கு வழிவகுக்கிறது. காலை 5 மணிக்கு நீங்கள் மாநகர பேருந்துக்காக நின்றீர்களானால் கண்டிப்பாக சாதரணப்பேருந்துகள் வராது... விரைவோ,சொகுசு பேருந்துதான் வரும். சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்களின் நிலைதான் மிக மோசம்.. சீசன் டிக்கெட் சாதாரண மற்றும் எல் எஸ் எஸ் பேருந்துகளில் மட்டும்தான் செல்லும்... ஆனால் அதிகலை நேரங்களிலும் நெரிசல் நேரங்களிலும் விரைவு மற்றும் சொகுசு வழித்தடங்கள் தான் அதிகம் வரும். இந்த தொல்லையால் தினசரி எக்ஸ்ட்ரா காசு கொடுத்துதான் செல்ல வேண்டியுள்ளது. அதே மாதிரி இரவு 8மணியை தாண்டிவிட்டாலே போதும் ஏறக்குறைய எல்லாப்பேருந்துகளும் கட்சர்வீஸாக பணிமணையை நோக்கி செல்ல ஆரம்பிக்கும்....

இரவு 9:30 மணிக்கு மேல் பேருந்து நிறுத்தங்களில் மக்கள் கூட்டம் அலையடிக்கும்..ஆனால் பேருந்து மட்டும் வராது..... அதற்கு மேல வரும் பேருந்துகள் அனைத்தும் கண்டிப்பாக விரைவு அல்லது சொகுசாகத்தான் இருக்கும்.... போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அவர்களின் கல்லா நிறைந்தால் போதும்... மக்கள் எப்படி கஷ்டப்பட்டால் என்ன.... கண்டக்டரிடமோ டிரைவரிடமோ கேட்டால் "அதிகாரிகள் இந்த மாதிரியான விரைவு மற்றும் சொகுசுப்பேருந்துகளைத்தான் அதிகமாக இயக்க சொல்லுகிறார்கள்" என்கிறார்கள்.


மாநகர போக்குவரத்து துறை நெரிசலை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்...

1.நெரிசல் நேரம் என்பது இன்னும் பழைய நேரமான காலை 8மணி என்பதையே பின்பற்றுகிறார்கள். அதை 7 அல்லது 6மணியாக மாற்றவேண்டும்..


2.நெரிசல் நேரங்களில் சாதாரணப்பேருந்துகளின் வழித்தடங்களை அதிகமாக இயக்கவேண்டும்.


3.இரவு 11மணி வரை நெரிசல் நேரம் என கருத்தில் கொள்ள வேண்டும்.......


4.சீசன் டிக்கெட்களின் விலையை சற்று உயர்த்தி விரைவு மற்றும் சொகுசுப்பேருந்துகளில் அனுமதிக்க வேண்டும்( தற்போது மினிமம் சீசன் டிக்கெட் விலை 140ரூபாய்)


இதையெல்லாம் செய்வாங்களா ....................

 50 வது FOLLOWER வேத்தியனுக்கு நன்றிகள்

Friday, 29 May, 2009

ப்ளாஸ் நியூஸ் : தமிழக துணை முதல்வர் --ஆளுநர் அறிவிப்பு

தமிழகத்தின் துணை முதல்வராக திரு ஸ்டாலின் அவர்கள்நியமிக்கப்பட்டுள்ளார்.ஆளுநர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்... கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக இழுபறியில் இருந்த விசயம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது....கலைஞருக்கு அடுத்தபடி ஸ்டாலின்தான் என்பது உறுதியாகியுள்ளது.

கலைஞர் - ஜெயா ஒரு விசயத்தில் மட்டும் ஒற்றுமை............

நடந்து முடிந்த மக்களவைத்தேர்தலில் தோற்ற கட்சிகள் தங்கள் தோல்விக்கு காரணத்தை தேடுகின்ற அதே நேரத்தில் தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் ஒப்பாரி சத்தங்கள் கொஞ்சம் அதிகமாகவும், நகைச்சுவையாகவும் இருக்கிறது.பிரதான எதிர்க்கட்சியான பிஜேபி தங்களின் பிரச்சாரம் கடைக்கோடி மக்களை சென்றடையவில்லை என்றும்,மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொளவதாகவும் தெளிவாக சொல்லிவிட்டார்கள்... பீகார்ல நம்ம லல்லு திருவிளையாடல் தருமி பாணியில் எனக்கு வேணும் ஆசை ரொம்ப ஆசை என்ற அளவில் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.. ஆனால் தமிழ்நாட்டில் இதற்கு எதிர்மாறாக மக்கள் தீர்ப்பை ஜீரணிக்க முடியாமல் ஒப்பாரி வைக்கும் அறிக்கைகள் தான் அம்மாவிடம் இருந்தும்,டாக்டர் ஐயாவிடம் இருந்தும் அறிக்கை காமெடிகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.


ஓட்டு எந்திரத்தில் தில்லுமுல்லு செஞ்சிட்டாங்களாம்... தேர்தல் ஆணயம் நடுநிலையாக செயல்பட்டாலும் அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவா செயல்பட்டதனால் தோல்வியாம்...அதனால் வரும் தேர்தலில் வாக்கு சீட்டு முறையை கொண்டு வரணுமாம். தேமுதிக ஒரு படி மேலே போய் வருகின்ற சட்டமன்ற இடைத்தெர்தலில் வாக்கு சீட்டு முறையைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். ஆனால் மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம் என்று சொல்ல மட்டும் அவர்களால் முடியவில்லை...
 
அதிமுக தோற்க முக்கிய காரணங்கள்
 

1.எடுபடாத பிரச்சார யுக்தி... முக்கிய பிரச்சினைகளான மின்வெட்டு,விலைவாசி உயர்வு பற்றி மக்களிடம் கொண்டு செல்லாதது.
2. ஈழப்பிரச்சினையில் திடீர் பிதாமகனாக மாறியது
3.முக்கியமாக களப்பணிகள்...இதில்தான் அதிமுக முற்றிலும் தோற்றுவிட்டது....தெளிவில்லாத களப்பணிகள்....


திமுக கூட்டணி ஜெயிக்க காரணங்கள்


1.தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்தியது.
2.கிலோ அரிசி 1ரூபாய், இலவச டிவி,கேஸ் அடுப்பு
3.மிகத்திறமையான களப்பணிகள்........


தோல்விக்கான உன்மையான காரணங்களை ஆராயாமல் சும்மா ஒப்புக்கு புலம்புவது எதிர்க்கட்சிகளுக்கு அழகல்ல


டிஸ்கி:செயலலிதா பழையமுறையான வாக்கு சீட்டை கொண்டுவரச்சொல்லுவதற்கு கலைஞரும் ஒரு காரணம்... ஏன்னு கேட்டிங்கன்னா என்னதான் தகவல் அனுப்புவதற்கு ஈமெயில்,எஸ் எம் எஸ் வசதிகள் இருந்தாலும் இன்னும் பழைய முறையைத்தானே அவர் பின் பற்றுகிறார்........அதான்....
 
 
 
 

Sunday, 24 May, 2009

ப்ளாஸ் நியூஸ்: திமுகவில் கேபினெட் பதவி யாருக்கு????

ஒரு வழியாக காங்கிரசு திமுகவுக்கு இடையே ஏற்பட்ட அமைச்சர் பதவி பேரம் முடிவுக்கு வந்துவிட்டது... ஒரு வார காலமாக நடைபெற்ற இந்த இழுபறி பிரதமரின் தலையீட்டால் 3 கேபினெட் பதவிக்கு திமுக ஓகே சொல்லிவிட்டது...அழகிரி,தயாநிதிமாறன் மற்றும் ராஜாவுக்கு கேபினெட் பதவி என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.... டி.ஆர்.பாலுக்கு கேபினெட் அந்தஸ்து உடைய அமைச்சர் பதவி இல்லை...  டிஆர் பாலு மேல் பிரதமர் அதிருப்தியில் உள்ளர்தாக எழுந்த தகவல் ஓரளவுக்கு உண்மையாகியுள்ளது........

Saturday, 23 May, 2009

சேட்டர்டே --- ரெண்டு மேட்டர்

சனிக்கிழமை என்றாலே பலபேருக்கு சந்தோசம்தான்...ஏன்னா ஞாயிற்றுக்கிழமை லீவு... ஆனா என்ன மதிரி ஷிப்டுகளில் வொர்க் பண்றவங்களுக்கு வார விடுமுறை எப்போது என்றே தெரியாது..என்னுடைய டேமேஜர் ஒவ்வொருவாரமும் வெவ்வேறு கிழமைகளில் வார விடுமுறை தருகிறார்......... ஆனாலும் இந்த சனி ,ஞாயிறுகளில் வேலை செய்வது ரொம்ப பிடிக்கும்.. காரணம் இந்த நாட்களில் டேமேஜர்,மேலதிகாரி யாரும் இருக்க மாட்டார்கள்... இருக்குற வேலய செஞ்சிட்டு பொழுதை போக்க வேண்டியதுதான்....என்ன பண்றது இப்பவெல்லாம் ஞாயிறு விடுமுறை அப்படினாலே மண்டை காயிது.......... பழக்க தோசம்.......... சும்மாவா ஞாயிறு விடுமுறை எடுத்து பத்து வருசமாவுதே....................

சரி மேட்டருக்கு வருவோம். முதல் மேட்டர் தங்கமணி-ரங்கமணி விவகாரம் பற்றி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சொன்னது.பொதுவா குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் ஏதாவது பிரச்சினை என்றால் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் புத்திமதி சொலவது வழக்கம். அதிலும் கணவனுக்கு புத்திமதிகள் கொஞ்சம் அதிகமா விழும்.அதே மாதிரிதான் நம்ம சுப்ரீம் கோர்ட் சொல்லியிருக்கு.


சண்டிகரில் விமானப்படை அதிகாரிக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் புகார் கொடுத்து விவகாரம் ஹைகோர்ட் வரைக்கும் வந்துவிட்டது. ஹைகோர்ட் இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது. ஆனால் இந்த முடிவை எதிர்த்து அந்த அதிகாரியின் மனைவி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் கணவன்மார்களுக்கு பல புத்திமதிகள் சொல்லியிருக்காங்க."உங்கள் மனைவி என்ன சொல்கிறாரோ அதையே செய்ங்க. அப்படி செய்யாமல் இருந்தீங்கன்னா அதனால் வரும் விளைவுகளுக்கு நீங்கதான் பொறுப்பு....உங்க மனைவி இடது பக்கம் பாக்க சொன்னா இடது பக்கம் பாருங்க. வலது பக்கம் பாக்க சொன்ன வலது பக்கம் பாருங்க.... ஏனென்றால் நாமெல்லாம் பாதிக்கப்பட்டவர்கள்...அதனால் மனைவி பேச்சை கேளுங்க" அப்படினு சொல்லியிருக்காங்க...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் எவ்ளோதான் விட்டுக்கொடுப்பது......... அடப்போங்கப்பா.
 
ரெண்டாவது மேட்டர் நம்ம முதல்வரை பற்றிதான்.அகில இந்திய அளவில் காங்கிரசே எதிர்பார்க்காத அளவில் சென்ற தேர்தலைவிட இப்ப அதிகமான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்... அதனால இந்த வாட்டி கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் பதவி ஒதுக்குவதில் கொஞ்சம் கறாராக இருக்காங்க போல... என்னதான் இருந்தாலும் இந்த காங்கிரசுக்காரவுக கொஞ்சம் யோசிக்கனும்.... எவ்ளோ இடர்பாடுகள் வந்தாலும் நம்ம முதல்வர் போன அஞ்சு வருசமா காங்கிரசு கூடத்தான் இருந்தாரு. அதையெல்லாம் நெனைச்சி பாருங்கப்பா... எதுக்காக இப்படி அடம் பிடிச்சி சீட் கேட்கிறார்.... எல்லாம் தம் மக்களின் அய்யய்யோ எழுத்து பிழையாகிருச்சே. எல்லாம் தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு தானே............. கொடுங்களேன்பா.

Tuesday, 19 May, 2009

விடை தெரியாத மர்மங்கள்

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மரணம் உறுதிப்படுத்தபட்டுவிட்டதாக இலங்கை அரசு அறிவிப்பு செய்து அதற்கு ஆதாரமாக வீடியோ படத்தையும் வெளியிட்டுள்ளது.... பின்தலை முற்றிலும் சேதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதுதான் பிரபாகரன் உடல் என அடித்து சொல்கிறது இலங்கை அரசு..... இலங்கை அரசு செய்தி வெளியிட்டதில் ஒரு சில சந்தேகங்கள் கேள்விகள் எழுகின்றன


1.நேற்று அவர் இலங்கை ராணுவத்துடன் போரிட்டு இறந்ததாக இலங்கை ராணுவ செய்திக்குறிப்பு சொல்கிறது. ஆனால் அவர் தப்பிச்செல்ல முயன்றபோது சுட்டுக்கொன்றுவிட்டதாக இலங்கை அரசு சொல்கிறது..... ஏன் இந்த முரண்பாடு?


2.25ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை ராணுவத்தால் நெருங்க முடியாத பிரபாகரனை இப்போது சரியாக குறி வைத்து கொல்ல முடிந்தது?


3.இலங்கை அரசின் கூற்றுப்படி புலிகள் தலைவர் தப்பி சென்றிருந்தால் சீருடை அணிந்தா சென்றிருப்பார்?


4.இலங்கை அரசு காண்பித்த உடல் பிரபாகனைப்போலே வேறொரு உருவமாக இருக்கலாமே...?


5.டி என் ஏ டெஸ்ட் முடிவு எப்படி உடனடியாக கிடைத்தது?


6.தப்பி செல்லும் ஒருவர் எப்படி அவருடைய அடையாள அட்டையையுமா எடுத்து செல்வார்?

Monday, 18 May, 2009

சொன்னதை செய்த மத்திய மாநில அரசுகள்

ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாக எப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்தன..இந்த போராட்டங்களை அடக்குவதில் மத்திய மாநில அரசுகள் பெரும் முனைப்பு காட்டின..... தூண்டிவிட்ட அகல் விளக்கு ஒளிர்வது போல் போராட்டத்தின் தீவிரம் அதிகமாகியது.... அம்மா ஒரு படி மேலே போய் தனி ஈழம் அமைக்க பாடுபடுவேன் என்றார்.. கலைஞரும் சாகும் வரும் வரை உண்ணாவிரதம் இருந்தார்.


இந்த நிகழ்வுகளுக்கு அடுத்து நம்ம மத்திய அரசும் மாநில அரசும் தேர்தலுக்கு பிறகு இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட தீவிரமாக பாடுபடுவோம் என்றார்கள். இன்று அவர்கள் சொன்னதை செய்துவிட்டார்கள்.... நேற்று முதல் இலங்கையில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துவிட்டது...... பிரபாகரன் மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தியும் வருகிறது.


இந்த விசயத்தில் தான் நம்ம அரசுகள் சொன்னதை செய்துவிட்டது...இனி ஈழ மக்களின் நிலை எப்படி இருக்கும்............???????????????

தமிழகத்தில் தவிர்க்க இயலாத கட்சியா தேமுதிக?-- ஒரு பார்வை

தேமுதிக தமிழகத்தில் தவிர்க்க முடியாத கட்சியா??.. இந்த மக்களவை தேர்தல் முடிவை வைத்து ஒரு கணக்கு போட்டிருக்கிறேன். ஆனால் இந்த மாதிரி கணக்கெல்லாம் இனி எடுபடாது என மக்களே தீர்ப்பு சொல்லிட்டாங்க ( பாமகவுக்கு மக்கள் கொடுத்த அல்வா).... இந்த தேர்தலுக்கும் முன் கூட்டணி குறித்து தேமுதிகவில் ஒரு குழப்ப நிலையே நீடித்தது.... ஒரு புறம் அதிமுகவுடனும், மறுபுறம் காங்கிரசுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.கடைசியில் தேமுதிக தலைவர் மக்களுடனும்,தெய்வத்துடனும் தான் கூட்டணி என்று சொல்லி தப்பித்துவிட்டார்.. (காங்கிரசு யோசனைப்ப்டி தனித்து நிற்க பொட்டி கைமாறியதாக கேள்வி).....இன்றைக்கு திமுக அரசாங்கம் மைனாரிட்டி ஆக இருப்பதற்கும் தேமுதிகவே காரணம்...கடந்த சட்டமன்றதேர்தல் முடிவுகளே இதற்கு சாட்சி. தமிழ்நாட்டு தொகுதிகளில் கிட்டத்தட்ட 25ல் வெற்றியை நிர்ணயிக்கும் கட்சியாக உள்ளது.... 1லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெஇத்த தொகுதிகளை கணக்கில் எடுக்கவில்லை...1லட்சத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்ற தொகுதிகளில் தேமுதிகவாலேயே தோற்றுள்ளன கட்சிகள்.

தேமுதிகவால் அதிமுக கூட்டணி தோற்ற தொகுதிகள்

1. மத்திய சென்னை       8.சிவகங்கை

 திமுக -- 285783                   காங்கிரசு--334348
அதிமுக -- 252329               அதிமுக --330994
 தேமுதிக -- 38959               தேமுதிக --60084  


2.காஞ்சிபுரம்                     9.தேனி                                        
 காங்கிரசு -- 330237           காங்கிரசு--340575
 அதிமுக -- 317134             அதிமுக--334273
 தேமுதிக-- 103580             தேமுதிக--70908

3.கிருஷ்ணகிரி           10.நெல்லை 
திமுக -- 335977        காங்கிரசு  --274932                       
அதிமுக -- 259379    அதிமுக -- 253629
 தேமுதிக -- 97546     தேமுதிக-- 94562

4.திண்டுக்கல்                  11.திருப்பெரும்புதூர்
 காங்கிரசு -- 361545             திமுக -- 352641

அதிமுக --  307198               பாமக -- 327605
தேமுதிக-- 100788                தேமுதிக-- 110442

5.கடலூர்                             12.   கள்ளக்குறிச்சி                         

   காங்கிரசு-- 319881                திமுக -- 363601
 அதிமுக -- 296745                   பாமக -- 254993

 தேமுதிக -- 93161                  தேமுதிக--132223

6.வட சென்னை                     13.நாகை
  திமுக -- 281055                      திமுக--369915
 கம்யூனிஸ்ட் -- 261902         கம்யூனிஸ்ட்--321953
 தேமுதிக -- 66375                   தேமுதிக -- 51376

7.விருதுநகர்
  காங்கிரசு -- 307187
  மதிமுக -- 291423
 தேமுதிக -- 125229


தேமுதிகவால் திமுக கூட்டணி தோற்ற தொகுதிகள்

1.திருவள்ளூர்                5.தென்சென்னை
 அதிமுக -- 368294            அதிமுக-- 308567
 திமுக -- 336621                 திமுக -- 275632

 தேமுதிக -- 110442           தேமுதிக -- 67291

2.கரூர்                                  6. திருச்சி
 அதிமுக -- 380461          அதிமுக -- 298710
 திமுக ---  331312              காங்கிரசு -- 294375

தேமுதிக -- 51163              தேமுதிக -- 61742


3.தென்காசி                          7. மயிலாடுதுறை
 கம்யூனிஸ்ட் -- 281174       அதிமுக-- 364089
 காங்கிரசு -- 246497                காங்கிரசு-- 327235
 பு.த             -- 116685                  தேமுதிக --44754
தேமுதிக -- 75741

4.சேலம்                                     8.விழுப்புரம்      
 அதிமுக -- 380460                  அதிமுக  --306826      
 காங்கிரசு -- 333969                வி.சி --  304029
 தேமுதிக -- 120325               தேமுதிக--127476

தமிழகத்தின் மேற்கு மண்டல தொகுதிகளான ஈரோடு,திருப்பூர்,கோவை, பொள்ளாச்சியில் கொங்கு முன்னேற்ற பேரவை கணிசமான வாக்குகள் பெற்று ஆளும் கூட்டணியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தேமுதிக பெற்ற வாக்குகளின் அடிப்படையில் பார்த்தால் 2011 சட்டமன்ற தேர்தலில் தவிர்க்க இயலாத சக்தியாக இருக்கும் என்பதையே காட்டுகிறது....

Sunday, 17 May, 2009

மே 16ல் அசத்திய கிழட்டு (இளம்) சிறுத்தைகள்

நேற்று மே 16 இரன்டு பேர் அசத்திக்காட்டிடாங்க... என்ன ரெண்டு பேர்ல ஒருத்தர் ரிட்டயர் ஆகி ரொம்ப நாளானாளும் இன்னும் அசத்திக்கொண்டிருக்கிறார். இன்னொருவர் சமீபத்தில் தான் ரிட்டயர்டு ஆனார்.... இருவரும் வெவேறு துறைகள் என்றாலும் இன்னும் கலக்கி கொண்டுதான் இருக்கிறார்கள்.. ஒருவர் சென்னை சூப்பர் கிங்ஸின் மேத்யூஹைடன்...இதுவரைக்கும் 12 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடியுள்ளது. 7 போட்டிகளில் ஜெயித்துள்ளது. இந்த அணி ஜெயிப்பதற்கு முதற்காரணம் ஹைடன் தான்... தன்னுடைய அசாதரணமான பேட்டிங் மூலம் பல மேட்ச்கள் வெற்றி பெற்றுள்ளது.. நேற்றும் அப்படித்தான். முதலில் ஆடிய மும்பை இந்தியன் அணி 147 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி ,,, முதல் பந்திலேயே பார்த்திவ் படேல் அவுட் ஆக அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் நடையை கட்ட கடைசி வரைக்கும் களத்தில் நின்று அணியை வெற்றி பெற வைத்து ஆட்ட நாயகன் விருதும் பெற்றார் மேத்யூஹைடன்.....


இரண்டாமவர் நம்ம முதல்வர் கலைஞர்தான்.... அவரின் அரசியல் வாழ்க்கையில் பிரச்சாரம் பண்ணாத ஒரே தேர்தல் இதுதான்..... திருச்சி, சென்னையில் மட்டுமே பிரச்சாரத்தில் கலந்துகொண்டார்...அவர் பிரச்சாரம் பண்ணாதது அம்மாவுக்கு கொஞ்சம் வசதியா போச்சி.... கலைஞரின் உடல்நிலையை சுட்டிக்காட்டி பிரச்சாரத்தின் போது எவ்வளவு பேச முடியுமோ அவ்வளவு பேசினார் அம்மா..... ஆனாலும் இந்த 85 வயது சிறுத்தை தளரவில்லை..... முக்கியமா இலங்கைப்பிரச்சினையை வைத்து எதிரணியினர் போட்ட கணக்கை மக்கள் தீர்ப்பின் மூலம் பதில் சொல்லிவிட்டார் இந்த85 வயது இளைஞன்...... 1ரூபாய்க்கு கிலோ அரிசி, இலவச தொலைக்காட்சி பெட்டி போன்ற திட்டங்கள் தான் இவரை கரையேற்றியது என்றால் மிகையாகாது......... மொத்தத்தில் இந்த வயதிலும் அசத்தி காட்டிவிட்டார் கலைஞர்....... போன மக்களவைத்தேர்தலைவிட வெற்றி பெற்ற வாக்குகள் வித்தியாசத்தை மனதில் வைத்து ஆட்சி செய்தால் நலமாக இருக்கும்.
 

டிஸ்கி: அசத்திய சிங்கம் என்றுதான் போடலாம் என்றிருந்தேன்... ஆனால் சிங்கம் சோம்பேறி மிருகமாம்,... அதனாலதான் இந்த தலைப்பு
 
 

Saturday, 16 May, 2009

மாப்பு வச்சிட்டாங்கய்யா ஆப்பு.....

இந்தப்பதிவின் தலைப்பு யாருக்கு சரியா இருக்கோ இல்லையோ நம்ம டாக்டர் ஐயா கட்சிக்கும், தமிழக காங்கிரசு முண்ணனி தலைவர்களுக்கும் பொருந்தும். ஒவ்வொரு முறையும் தேர்தல் தேதி அறிவித்தவுடன் நம்ம டாக்டர் ஐயா பிலிம் காட்ட ஆரம்பிப்பார்... நாடாளுமன்றத்தேர்தலில் ஒரு கூட்டணி, சட்டமன்றத்தேர்தலில் ஒரு கூட்டணி அப்படி இப்படினு அரசியல் வியாபார கணக்கு போட்டு திராவிடக்கட்சிகளுக்கு அல்வா கொடுப்பதுதான் இவர் வேலை.ஒவ்வொரு தடவையும் இவர் போடும் கணக்கு சரியாக இருந்ததால் நாங்கள் எப்பவும் வெற்றி கூட்டணிதான்... பாமக ஒரு தவிர்க்க இயலாத கட்சி அப்படினு ஒரு இறுமாப்பு. இதையே சாக்காக வைத்து கூட்டணி வைக்கும் கட்சிகளிடம் பேரம் பேசி தலைவலியை ஏற்படுத்துவதே டாக்டர் ஐயாவின் பொழுது போக்கு... இநத நாடாளுமன்றத்தேர்தலுக்கு முன் திமுக கூட்டணியில் இருந்த பாமக வழக்கம் போல் அவரின் அரசியல் வியாபார கணக்கின் படி எல்லோரும் எதிர்பார்த்தது போல் அதிமுகவில் ஐக்கியமானார்...


இன்றைக்கு வந்த முடிவின் படி பாமக வை மக்கள் அது போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் புறந்தள்ளிவிட்டனர்.... டாக்டர் ஐயாவின் நிலையை நினைச்சா..........ஹிஹிஹி....பாமகவின் வருங்கால அரசியல் நிலை..இனிமேல் இந்த பேரம் பேசுவது உட்பட எல்லாமே.......ஊஊஊஊஊஊ இருந்தா ஒரே கூட்டணியில் இருங்கடா... இல்லைனா பாமகவின் நிலைதான் உங்களுக்கு என்று மக்கள் தெளிவா சொல்லிட்டாங்க.........

முத்துக்குமாரா யாரு அதுன்னு கேள்விகேட்ட அமைச்சர் இளங்கோவனை ஈரோட்டில் மக்கள் குப்ப்ற படுக்க வச்சிட்டாங்க.... இவரின் தோல்விக்கு கொங்குநாடு அமைப்பும் ஒரு காரணம்.. அந்த அமைப்பு கிட்டத்தட்ட 1லட்சம் வாக்குகளைப்பெற்றுள்ளது..மதிமுக 47,343 வாக்குகள் வித்தியாசத்தில் இங்கு வெற்றி பெற்றிருக்கிறது.நம்ம தொங்கபாலு தினசரி அறிக்கையின் மூலம் பிரபலமானவர்.... இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி செய்வதில்லை என்று சத்தியம் பண்ணாத குறையா அறிக்கைவிட்டவர். லோக்கல் பிரச்சினையான கள் இறக்குவதை கண்மூடித்தனமா எதிர்த்தவர்.... இவருக்கும் ஆப்பு வச்சிட்டாங்க என்னா பேச்சு பேசினார் தொங்கபாலு... 46491 வாக்குகள் வித்தியாசத்தில் மண்ணை கவ்விட்டார்.


மயிலாடுதுறையில் மணிசங்கர் அய்யர் 36000வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துவிட்டார். விலைவாசி ஏற்றதுக்கு ஏற்ப மக்கள் தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும் அப்படினு புதுசா ஒரு ஐடியாவை சொன்ன முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் நிலைமை திரிசங்கு நிலைதான்...கடேசில ஒருவழியா ஜெயிச்சிட்டார்... இந்த வெற்றி அவருக்கு ஒரு பாடமாக அமையட்டும்...


விருது நகர்ல இன்னும் கண்ணைகட்டிக்கிட்டு இருக்கு.... காங்கிரஸ் வெற்றி பெற்றதாக அறிவிப்பு வந்தாலும் அங்கே பதிவான வாக்குகளைவிட எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக ஒரு தகவல்............ புயல் கரையை கடக்குமா??


அப்புறம் ஈழம் ஈழம் அப்படினு சொன்னாங்க...அது என்னவாகப்போவுதோ........அய்யோ...

Wednesday, 13 May, 2009

யாருக்கும் மெஜாரிட்டி கிடையாது....

தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு

டைம்ஸ் நொவ் சேனல் கருத்துக்கணிப்பின் படி

காங்கிரசு கூட்டணி --- 199 இடங்கள்
பாரதீய ஜனதா கூட்டணி --- 183 இடங்கள்
கம்யூனிஸ்ட் --- 38 இடங்கள்
மற்ற கட்சிகள் -- 123 இடங்கள்

தமிழ்நாடு + புதுச்சேரி

அதிமுக கூட்டணி --- 24 இடங்கள்
திமுக கூட்டணி --- 16 இடங்கள்


ஹெட்லைன்ஸ் டுடே கருத்துகணிப்பு

காங்கிரசு கூட்டணி --- 191 இடங்கள்
பாரதீய ஜனதா கூட்டணி --- 180இடங்கள்
கம்யூனிஸ்ட் --- 38 இடங்கள்
மற்ற கட்சிகள் -- 134 இடங்கள்

தமிழ்நாடு + புதுச்சேரி

அதிமுக கூட்டணி --- 29இடங்கள்
திமுக கூட்டணி --- 11 இடங்கள்
 
 
9x நியூஸ் சேனல் கருத்துக்கணிப்பு


காங்கிரசு கூட்டணி --- 202 இடங்கள்
பாரதீய ஜனதா கூட்டணி --- 193இடங்கள்
கம்யூனிஸ்ட் கூட்டணி --- 101 இடங்கள்
மற்ற கட்சிகள் -- 43இடங்கள்

தமிழ்நாடு + புதுச்சேரி

அதிமுக கூட்டணி --- 14இடங்கள்
திமுக கூட்டணி --- 26இடங்கள்

கடைசி கட்டத்தில் அதிரடியான ஓட்டு வியாபாரங்கள்

வடிவேலு ஒரு படத்துல சொல்லுவார்'நல்லாத்தான போய்க்கிட்டு இருந்தது'.. அது மாதிரிதான் பிரச்சாரம் முடிந்தும் நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்தது.நேற்று மாலைஇலங்கை சிடி விவகாரத்தில் ஒன்றும் பிரச்சினையில்லை, அதை வெளியிடலாம்,பொது மக்களுக்கு போட்டுக்காட்டலாம் என்ற தீர்ப்பு வந்தவுடன் சூட்டோடு சூடாக மக்கள் டிவி செய்திகள் என்ற பெயரில் மாலை ஆறு மணியில் இருந்து ஒளிபரப்ப ஆரம்பித்தது...

கிரிகெட்டில் கடைசிக்கட்ட ஓவரில் அடித்து ஆடுவது போல் மக்கள் டிவி சரியான நேரத்தில் ஒளிபரப்பிக்கொன்டிருந்தது... சரியா நேற்று 7 மணியிலிருந்து சென்னை முக்கிய ஏரியாக்களில் மின்சாரம் தடைப்பட்டது.. 8 மணியளவில் கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பகுதிகளில் மின்சாரம் முற்றிலும் தடைப்பட்டது.... என்ன ஏதுன்னு ஒன்னும் புரியல,.. அப்புறமா ஆரம்பிச்சது நம்ம தமிழ் தொலைக்காட்சிகளின் ப்ளாஸ் நியூஸ் திருவிளையாடல். முதலில் கலைஞர் டிவியில்" ஆளும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த மின்சாரத்தை துண்டித்து சதி வேலைகள் நடப்பதாக" ப்ளாஸ் நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது....


அப்ப்டியே அம்மா டிவிய பாத்தா " மின்தடையை ஏற்படுத்தி திமுகவினர் வாகாளர்களுக்கு பணம் பட்டுவாடா பண்ணுவதாக ப்ளாஸ் நியூஸ் ஓடுது.... மக்கள் டிவில பாத்தா " மக்கள் தொலைக்காட்சிக்கு மிரட்டல், போலிஸ் கமிஷன்ர், தலைமைத்தேர்தல் ஆணையருக்கு மக்கள் டிவி சார்பா பாதுகாப்பு கேட்டு மனு. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கேபிள் டிவியில் மக்கள் டிவி தெரியக்கூடாது என ஆளும் கட்சி மிரட்டுவதாக ப்ளாஸ் நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது. அதே வேளையில் அந்த இலங்கை சிடி காட்சிகள் திரும்ப திரும்ப எனக்கு தெரிந்து நள்ளிரவு ஒரு மணிவரைக்கும் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.....

கடைசி நேரத்தில் மின் வெட்டும்,ஈழ விசயமும் ஓட்டு வியாபாரமாகி போனதுதான் வேதனை.... ஏதாவது ஒரு விசயம் பிடிபடாதா..அதை வச்சி என்னென்ன பண்ணலாம் எனக்காத்து கிடக்கும் அரசியல் கட்சிகளை என்ன சொலவது.?.... தனி ஈழம் என்ற மகத்தான ஒன்றை கூவி விக்கும் அரசியல்வாதிகளே..... உங்க வியாபாரம் எப்படினு 16ஆம் தேதி தெரியும்....

மின் தடையை ஏற்படுத்திய புண்ணியவான்களே..நீங்க செத்தா கண்டிப்பா உங்களுக்கு நரகம்தான்........உங்களையெல்லாம்.................


முக்கிய செய்தி


தமிழகத்தில் சுமார் 60 முதல் 65 சதவீத வாகுகள் பதிவாகியிருக்கிறதாம்.... பாண்டிச்சேரியில் 76 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருக்குதாம்.....

Monday, 11 May, 2009

பாண்டிச்சேரியில் சீறிப்பாய்ந்த சுனாமி

கடைசிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் தமிழகத்தில் முடிந்துவிட்டது.. கலைஞர் டிவியும் ஜெயாடிவியும் போட்டிப்போட்டு முட்டிக்கொண்டன..... இன்று பிற்பக பாண்டிச்சேரியில் சீறிப்பாய்ந்த சுனாமியாய் இருந்தது இயக்குனர் சீமானின் பேச்சு.அலுவலகத்தில் இருந்ததால் குறிப்பு எடுக்கமுடியவில்லை அவரின் பேச்சை. கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் தன்னுடைய கனல் தெரித்த பேச்சால் காங்கிரசை பின்னி பெடல் எடுத்துவிட்டார்.... அவர் பேச்சின் சில பகுதிகளை தருகிறேன்....

 விடுதலைப்புலிகளிடம் இருந்து கிளிநொச்சி வீழ்ந்து இவ்வளவு நாளாகியும் ஏன் மக்களை அங்கு வாழ விடவில்லை?


தமிழகத்துக்கு வந்த ராகுல் காந்தி ஈழதமிழ் மக்கள் தன்னுடைய உள்ளத்தில் இருப்பதாக சொல்லியுள்ளார்..உங்கள் இதயத்தில் இருந்து தூக்கி எறியுங்கள்....அந்த பாவப்பட்ட இடம் வேண்டாம்...


எம் தமிழ் இனம் இலங்கையில் தினம் படும் துயரம் கண்டு இழவு வீட்டில் இருப்பது போல் இருக்கிறோம் எப்படி ஐயா உங்களால் இப்படி சிரித்துக்கொண்டே ஓட்டு கேட்க வருகிறீர்கள்?


இப்போது எதற்கெடுத்தாலும் இறையாண்மை என்று பேசுகிறீர்களே..ராஜீவ் காந்தி அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பும் போது அவரிடம் சொல்லியிருக்கலாமே அது அடுத்த நாடு.. எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் தமிழ் தேசிய ராணுவத்துக்கு கட்டமைப்புக்கு உதவி செய்தாரே?.. அப்போது யாராவது இந்திரா காந்தியிடம் அடுத்த நாட்டின் போராளி குழுக்களுக்கு எப்படி அனுமதியளிக்கலாம் என்று சொல்லியிருக்கலாமே? இல்லையே..ஏன்...


இந்திய ராணுவத்தில் தமிழன்,மலையாளி,கன்னடன் பஞ்சாபி என அனைத்து இன மக்களும் இருக்கிறார்கள்.. ஆனால் இலங்கை ராணுவத்தில் எம் இன மக்கள் இருந்திருந்தால் இந்த கஷ்டங்கள் எம் மக்களுக்கு ஏற்பட்டிருக்குமா?..... மத பயங்கரவாத நாடு இலங்கை அரசு...


இலங்கை பாதுகாப்பு வளையத்திற்குள் தமிழ் மக்கள் தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம் மகன்,மகள் ஒரு பக்கம் என சிங்களத்தினர் பிரித்துவைக்கின்றனரே?? ஏன்...


எதற்கெடுத்தாலும் இந்தியா சனநாயகநாடு சனநாயகநாடுன்னு சொல்றாங்க.... எது சனநாயகம்... ஈழத்தமிழனுக்காக மாணவர் போராட்டம் என்ற உடனே கல்லூரிகள், கல்லூரி விடுதிகள் கால வரையின்றி மூடப்படுகிறது ... இதுவா சனநாயகம்..வக்கீல்கள் போராட்டம் என்ற உடனே.... போலிஸ் மூலம் கலவரம் மூட்டப்படுகிறது...இதுவா சனநாயகம்


இப்போது நடக்க இருக்கும் தேர்தல் பணத்துக்கும் தமிழ் இனத்துக்கும் இடையே நடக்கின்ற தேர்தல்... இதில் தமிழ் இனம்தான் வெற்றி பெறவேண்டும்....

காவிரி,முல்லை பெரியாறு, பாலாறு ஒகேனெக்கல் பிரச்சினையை தீர்க்க முடியாதவர்கள் எப்படி எப்படி இலங்கையில் அதிகாரப்பகிர்வையும், போர் நிறுத்தத்தையும் ஏற்படுத்துவார்கள்?


இதுவரைக்கும் காவிரி பிரச்சினை, பெரியாறு பிரச்சினை, தன் சாதி, தன் மதம் என் பார்த்து ஓட்டுப் போட்ட தமிழன் இந்த ஒருமுறை மட்டும் தன் இனத்திற்காக, தன் மானத்திற்காக, தன் சொந்தங்களுக்காக ஓட்டுப்போடுங்கள்.. காங்கிரசை விரட்டி அடியுங்கள்....

பசங்க----விமர்சனம்--கலக்கிட்டீங்கடே

பெரிய ஹீரோ, ஹீரோயின்
ஹீரோவின் பஞ்ச் டயலாக்
குத்துப்பாட்டு, குத்து டான்ஸ்


மேற்சொன்ன எதுவுமே இப்படத்தில் கிடையாது.. ஆனாலும் புதுமுக இயக்குனர் பாண்டிராஜ் தன்னுடைய நேர்த்தியான, இயல்பான திரைக்கதை மூலம் இரண்டரை மணிநேரம் நம்மை கட்டிப்போட்டுவிடுகிறார். தமிழில் குழந்தைகளுக்கான படம் என்றால் விரல் விட்டு எண்னிவிடலாம்...அஞ்சலி, மழலைப்பட்டாளம்..... இந்தப்படத்தில் எல்லாம் குழந்தைகளின் செயல் இயல்புக்கு மீறியதாக இருக்கும்.... இந்தப்படத்தில் அந்த மாதிரியான காட்சிகள் எதுவும் கிடையாது.
 
  சிறிய டவுனில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஒரு ஆண்டுக்குள் நடக்கும் நிகழ்வுகள் தான் கதை..அந்த பள்ளியில் 6வது படிகும் ஜீவாவுக்கும், அதே வகுப்புக்கு புது மாணவனாக வரும் அன்புக்கும் இடையே நடக்கும் மோதல்.... இல்லை குறும்புத்தனமான சேட்டைகள் தான் கடைசிவரைக்கும்.. இருவரும் நண்பர்கள்  ஆனார்களா என்பதுதான் கதை...இந்த கதைக்கிடையே அன்புவின் சித்தப்பாவுக்கும், ஜீவாவின் அக்காவுக்கும் இடையே மலரும் காதல்.


''ஜீவாவுக்கு இப்ப கோபம் வரும், இப்ப பாரேன் கைய முறுக்குவான், நெஞ்சு வெடைக்கும் பாருனு'' பக்கடாவும் குள்ள மணியும் ஏத்திவிடும் காட்சிகள் அருமை...படம் முழுக்க காட்சிக்கு காட்சி மெல்லிய நகைச்சுவை இழையோடுகிறது... சின்ன வயது குறும்புத்தனமான காட்சிகள்  அதிகம்... குறிப்பா சாக்பீஸை ஒளித்துவைப்பது, பென்சிலை கூர்மயாக சீவி குத்துவது, கருநாக்கு வாயன் சொன்னால் நடக்கும் என்று நம்புவது,அதிகாலையில் எழுந்து போட்டி போட்டு படிப்பது.... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.. அதிலும் புஜ்ஜியாக வரும் சிறுவனின் லூட்டிகள் சிரித்தே வயிறு புண்ணாகிவிட்டது.ஜீவாவின் அத்தை மகளிடம் அன்பு பேசும் போது ஜீவா கோப்படும் இடம் அருமை.


இந்த சின்னப்புள்ளைங்க கதைக்கிடையே வரும் மீனாட்சி ஸோப்பிக்கண்ணுவின் காதல் காட்சிகள் கலகல... அதுவும் செல்போனை வைத்து விளையாடும் காட்சிகள் புதுசு. சோப்பிக்கண்ணுவிடம் பாலிசி போட்டுக்கோ ..''உங்கிட்ட பழகுனதுல அது ஒன்னு மிச்சம் நினைச்சிக்கிறேன்னு'' மீனாட்சி சொல்லுமிடம்... தியேட்டரே சிரித்தது. இவர்களின் காதல் காட்சிகளில் பிண்ணனியில் ஒலிக்கும் பாடல் கலக்கல்.பெற்றோர்களுக்கிடையே நடக்கும் சண்டையால் பிள்ளைகள் பாதிக்கப்படுவது போன்ற காட்சிகள் நல்ல படிப்பினை... பாடல்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை... ஆனால் பாடல்களில் வரும் காட்சிகள் அருமை.....குடும்ப வாழ்க்கையில் ஆண்கள்தான் விட்டுக்கொடுக்கனுமாம் அப்படினு படத்துல சொல்றாங்க.... எவ்ளோதான் விட்டுக் கொடுக்க முடியும்,... ஆதி அண்ணே நீங்களே சொல்லுங்க அவ்வ்வ்வ்வ்வ்


படம் ஆரம்பித்து பத்து நிமிசத்துக்கு அப்புறம் நான் தியேட்டரில் இல்லை சிவசைலம் அத்திரி கலா நிலைய பள்ளிக்கூடத்திற்கே சென்றுவிட்டேன்.....


பசங்க-- பள்ளிக்காலநினைவுகள்


மொத்தத்தில் பசங்க கலக்கிட்டாங்க

Wednesday, 6 May, 2009

வரும்ம்ம்ம்ம்ம்..........ஆனா வராது.........

தமிழகத்தேர்தல் களம் இந்த மாதம் ஆரம்பித்த அக்னி வெயிலைவிடவும் ரொம்ப சூடா போய்க்கிட்டு இருக்கு...நமது முதல்வர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இருப்பதால் திமுகவில் பிரச்சாரத்தில் தொய்வு காணப்பட்டாலும் அதை அமைச்சர் அன்பழகனும்,தளபதி ஸ்டாலினும் அதை ஈடுக்கட்டும் வகையில் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர். அதிமுக தலைவி இந்த முறை ரொம்பவும் சுறுசுறுப்பா ஆரம்பிச்சி முடிக்கும் தருவாயில் உள்ளார்..... தேமுதிக தலைவர் கிட்டத்தட்ட முடித்துவிட்டார் என்றே சொல்லலாம்.


முன்பிருந்த மாதிரி சுவர் விளம்பரங்களை காண முடிவதில்லை... அதை ஈடுகட்டும் வகையில் டிஜிட்டல் போர்டுகளின் ஆக்கிரமிப்பு இருக்கிறது. தொலைக்காட்சியின் மூலம் தேர்தல் விளம்பரங்கள் தான் இன்றைக்கு முதலிடத்தில் இருக்கிறது.. ஆளுங்கட்சி தன்னுடைய சாதனைகளை சொல்லியும், எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியின் குறைகளை சுட்டிக்காட்டியும் வரும் விளம்பரங்கள் செம சூடு..... இப்போது அப்படி வந்த விளம்பரங்கள் சில


முதலில்ஆளும்கூட்டணியின்விளம்பரங்கள்...காங்கிரசுக்கட்சியின்வலிமையான பாரதம் விளம்பரம்... இதுல சொல்லிக்கிற மாதிரி எதுவும் இல்லை.ஆளும் திமுக தனது ஆட்சியின் சாதனைகளாக இலவச கேஸ் அடுப்பு, இலவச தொலைக்காட்சி,மருத்துவ காப்பீடு திட்டம், சத்துணவில் முட்டை போன்றவைகள் விளம்பரங்களாக வருகின்றன..இதில் மருத்துவ காப்பீடு விளம்பரத்தை முதலில் பார்க்கும் போது நகைக்கடை விளம்பரமோ என்று தோன்றியது..நல்லாவே செலவு செஞ்சிருக்காங்க இந்த விளம்பரங்களுக்காக...... இந்த விளம்பரங்கள் எந்த அளவுக்கு எடுபடும்?? பாக்கலாம்.


எதிர்க்கட்சியான அதிமுகவின் விளம்பரங்கள் திமுக ஆட்சியின் குறைபாடுகளை நக்கல் நையாண்டியோடு வருகிறது..... இலவச நிலம், மின்வெட்டு,ஒகேனெக்கல் திட்டம், விலைவாசி உயர்வு........ இவற்றில் இலவச நிலம் தொடர்பான விளம்பரம் கொஞ்சம் ஓவரா தெரியுது..... இதில் நக்கல் நையாண்டியில் டாப்பாக இருப்பது ஒகேனெக்கல் விளம்பரம்தான்....... இந்த விளம்பரத்துக்கு அவ்வளவு செலவெல்லாம் கிடையாது... ஒன்லி கட்டிங் மற்றும் ஒட்டிங் தான்........ முதலில் நம் முதல்வர் எப்பாடுபட்டாவது இந்த திட்டத்தை நிறைவேற்றுவேன் எனக்கூறியது முதல் காட்சியாகவும், கர்நாடக தேர்தலுக்கப்புறம் ஒரு நல்ல முடிவெடுக்கப்படும் எனக்கூறியது இரண்டாவது காட்சியாகவும் வ்ருகிறது....... இதற்கு அடுத்த காட்சியாக திரையில் பாதி கலைஞர் கூறியதும்,அடுத்த பாதி தொட்டால் பூ மலரும் படத்தில் வடிவேலுவும்,என்னத்த கண்ணையாவும் பேசும் காமெடிக்காட்சியான வரும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... ஆனா வராது என்ற வசனமும் சேர்ந்து கிண்டலும் நக்கலுமா..சிரிச்சி வயிறுதான் வலிக்குது.. யாராவது சொல்லுங்கப்பா..ஒகேனெக்கல் திட்டம் எந்த லெவலில் இருக்குதுன்னு.


அன்னை சோனியாவின் பிரச்சாரக்கூட்டம் முதல்வரின் உடல்நிலையை காட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது... பிரச்சார தேதியை அறிவிக்கும் போது முதல் மருத்துவமனையில் தான் இருந்தார்..... இடையில் என்ன நடந்ததோ....


நம்ம புரச்சி தலைவி அம்மா கலைஞரின் உடல்நிலையை கிண்டலடித்து பேசியிருக்கிறார். மக்களை சந்திக்க பயந்து மருத்துவமனையில் போய் படுத்துக்கொண்டதாக சொல்கிறார்.........நாளைக்கு தனக்கும் வயதாகும் இப்படி ஒரு நிலைமை வருமே யோசித்திருப்பாரா அம்மையார்.......

Saturday, 2 May, 2009

முழுப்பூசணியை சோற்றில் மறைக்கும் அமைச்சர் நேருவின் அறிக்கை

பஸ் கட்டண குறைப்பு குறைப்பு பற்றி நம்ம அமைச்சர் நேரு கொடுத்த அறிக்கையை படிச்சா சிரிக்கவா அழவான்னு தெரியல... வழக்கம் போல் அம்மா ஆட்சியில இருந்த மாதிரிதான் இப்ப இருக்குறதாவும் திமுக ஆட்சியில் பஸ் கட்டண உயர்வே இல்லைனு அடிச்சி சொல்லியிருக்கார்...
.
அவரின் அறிக்கையும் எனது பதிலும்.

அமைச்சரின் அறிக்கை::திமுக ஆட்சி 2006ல் அமைந்த பிறகு பேருந்து கட்டணங்கள் உயர்த்தப் படவும் இல்லை, குறைக்கப்படவும் இல்லை.

கலர் கலரா பேருந்துகளின் நிறத்தை மாற்றி சாதாரண பேருந்துகளில் M போர்டு போட்டு 2ரூபாய் டிக்கெட்டை 3 ரூபாயா உசத்துனது இந்த ஆட்சியில் தானே... இது கட்டண குறைவா இல்லை உயர்வா//

அமைச்சரின் அறிக்கை:1.5.2006  திமுக பொறுப்புக்கு வந்தபோது சென்னை மாநகரத்தில் மட்டும் உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டால் சாதாரணப் பேருந்துகள் 1095ம், எல்எஸ்எஸ் பேருந்துகள் 1043ம், எக்ஸ்பிரஸ் பேருந்துகள் 169ம், டீலக்ஸ் பேருந்துகள் 11ம், எம் சர்வீஸ் பேருந்துகள் 235ம் ஓடிக் கொண்டிருந்தன. இதில் ஒவ்வொரு விதமான பேருந்துகளுக்கும் ஒவ்வொரு விதமான கட்டணங்கள் அதிமுக ஆட்சியிலே விதிக்கப்பட்ட கட்டணங்கள் அப்படியே நடைமுறையில் இருந்து வந்தன.

அம்மையார் ஆட்சியில் மணிக்கொரு முறை வந்து கொண்டிருந்த M சர்வீஸை நிமிடத்திற்கு ஒரு முறை மாற்றியது எந்த அரசுங்கோ?..... அதே மாதிரி எல்.எஸ்.எஸ் சர்வீசை குறைத்து விரைவுப்பேருந்துகளையும், டீலக்ஸ் பேருந்துகளையும் அதிகமாக்கியது எந்த ஆட்சியில்... குறிப்பா நெரிசல் நேரங்களில் விரைவுப்பேருந்துகளையும், டீலக்ஸ் பேருதுகளின் எண்ணிக்கையை அதிகரித்து மக்களின் டவுசரை உருவியது எந்த ஆட்சி?

அம்மையார் போட்ட கோடுல நீங்க ரோடே போட்டுட்டீங்க,.


 அமைச்சரின் அறிக்கை:அவ்வப்போது எழுகின்ற கோரிக்கை களின் அடிப்படையில் பேருந்து களின் தரம்மாற்றப்படுவது உண்டே தவிர கட்டணங்கள் அதிமுக ஆட்சிக் காலத்தில் விதிக்கப்பட்டது தான் இப்÷õதும் தொடருகிறதே தவிர, தேர்தல் விதிமுறைகளை மீறி கட்டண உயர்வோ, கட்டணக் குறைப்போ எதுவும் செய்யப்பட வில்லை என்பதுதான் உண்மை.

அம்மையார் ஆட்சியில் சாதாரணப்பேருந்துகளில் மினிமம் டிக்கெட் இரண்டு ரூபாய்... விரைவுப்பேருந்தில் மினிமம் டிக்கெட் மூன்று ரூபாய்.... எல்லாம் சரி ஆனா இப்ப விரைவுப்பேருந்திலயும் மினிமம் டிக்கெட் இரண்டு ரூபாயாக மாற்றியதற்கு என்ன அர்த்தம்......
.
மொத்தத்தில் மக்களின் விருப்பம் என்பது தேர்தல் வந்த பிறகுதான் நம்ம அமைச்சருக்கு ஞாபகம் வந்திருக்கு... இதை ஒரு ஆறு மாதம் முன்னாடி செஞ்சிருந்தீங்கன்னா சரியா இருந்திருக்கும்.... இன்னைக்கு மக்கள் நமட்டு சிரிப்புடன் டிக்கெட் வாங்குவதை பார்த்தால் ஒரு முடிவோடத்தான் இருக்காங்க.

  இந்த விசயத்தில் மூன்று ஆண்டுகளாக மக்களின் டவுசரை உருவிட்டு இப்ப போட சொல்றிங்க.......... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் போட்டுக்குறோம்

 மேலும் இதை பற்றி தேதல் ஆணையம் மவுனமாக இருப்பது ஏனோ??