Wednesday, 24 December, 2008

2008ன் சிறந்த திரைப்படங்கள்-- என் பார்வையில்

இந்த வருடத்தில் கிட்டத்தட்ட 100 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இதில் வெற்றியடைந்த படங்கள் மிகக்குறைவே. ஒரு சில படங்கள் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்து சக்கை போடு போட்டன.அப்படி வெற்றியடைந்த படங்களில் சிலவற்றை வரிசைப்படுத்தியுள்ளேன்

சுப்ரமணியபுரம்.


எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெற்றியடைந்தப்படம். டைரக்-ஷன், இசை, நடிகர்கள் அனைவருமே புதுமுகங்களாக இருந்தாலும், தெளிவான திரைக்கதையின் மூலம் வெற்றிக்கொடியை நாட்டிய படம். 1980களில் இருந்த கிராமத்து சம்பவங்களை அப்படியே கொண்டுவந்து நம் கண் முன்னால் நிறுத்தியவிதம் அருமை. வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் அரசியல் செல்வாக்குக்கு ஆசைப்படும் வில்லன் சொல் கேட்டு பாதை மாறுவது தான் கதை. ஒவ்வொரு கதாப்பத்திரத்தையும் மிக அழகாக செதுக்கி இருந்தார் டைரக்டர் சசிகுமார்.ஜேம்ஸ் வசந்தனின் இசையில் கண்கள் இரண்டால் பாடலும் சரி, அது படமாக்கப்பட்ட விதமும் சூப்பர்.

அஞ்சாதே


மிஷ்கின் டைரக்ஷனில் இரண்டாவது படம். எதிர்ப்பார்ப்போடு வந்து வெற்றியடைந்த படம்.இரு நண்பர்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை தன்னுடைய திரைக்கதை மூலம் அழகாக சொல்லியிருந்தார் மிஷ்கின். அஜ்மல்,நரேன்,பிரசன்னா,பாண்டிய ராஜன் கதாப்பாத்திரங்கள் படத்துக்கு கூடுதல் பலம். காவல்துறையின் தெரியாத சில பக்கங்களை நன்கு காட்டியிருந்தார்கள். கத்தாழைக்கண்ணால குத்தாத,கண்ணதாசன் காரைக்குடி பாடல்கள் தாளம் போடவைத்தன.
 
தசாவதாரம்நம்ம பதிவுலக மக்களால் அதிகம் பேசப்பட்ட திரைப்படம். படத்தின் பலம் மற்றும் பலவீனம் இரண்டும் கமலஹாசன் தான்.கதையை இரண்டு வரியில் சொல்லிவிடலாம்.ஆனால் கதை சொல்லிய விதத்தில் அசத்தியிருந்தார்கள். நம்பி, பல்ராம் கதாப்பாத்திரங்கள் மூலம் படம் தப்பியது. இந்தப்படத்தின் மிகப்பெரிய பலம் ஆரம்பக்காட்சிகளும், இறுதிக்காட்சிகளும்.கமலின் நடிப்பு கிரீடத்தில் இந்தப்படம் ஒரு வைரக்கல்.

சந்தோஷ் சுப்ரமணியம்ரீமேக் நாயகன் டைரக்டர் ராஜாவுக்கு 4வது வெற்றி தந்த படம். அப்பா மகன் பாசத்துக்கிடையே காதலையும் சேர்த்து சொன்ன படம். படத்துக்கு ஹாசினி கேரக்டர் தான் பலம். நிஜத்துலையும் இந்த மாதிரி பொண்ணுங்க கெடைச்சா பசங்களுக்கு சந்தோசம்தான். பிரகாஷ்ராஜ் வழக்கம் போல் கலக்கி இருப்பார். மொத்ததில் இளமையும்,குடும்ப சென்டிமென்டும் சேர்ந்து கலக்கிய படம்.
 
யாரடி நீ மோகினிஇதுவும் ரீமேக் படம்தான். வழக்கம் போல் அப்பாவை மதிக்காத தனுஷ்,வித்தியாசமான அப்பாவாக ரகுவரன், எப்போதும் டென்சனில் இருக்கும் நயந்தாரா இவர்களை சுற்றி வரும் கதை. முதல் பாதி நகைச்சுவையிலும், இரண்டாம் பாதி சென்டிமென்டிலும் போட்டுத்தாக்கி இருப்பாங்கோ. யுவனின் இசையில் அனைத்துப்பாடல்களும் அருமையாக இருந்தது.

இந்த மாதம் ரிலீசான படத்தையெல்லாம் கணக்கில் எடுக்கலை. இந்த சிறந்த படங்கள் வரிசையில் விடுபட்டிருக்கும் மற்றபடங்களை பற்றி அண்ணன் முரளி கண்ணன் எழுதுவார். ரொம்ப நாளா அவரைக்காணோம்.டிஸ்கி: பதிவ படிக்கிற பயலுவ ஓட்டயும் குத்திட்டு போங்கப்பு... அடுத்த பதிவு 2008ல் சிறந்த மொக்கைப்படங்களை பற்றி