Sunday, December 7, 2008

என் சந்தேகங்கள்- ஏய் இந்த பசங்க-- இன்னும் பல கேள்விகள்

போன வாரத்துல நல்ல காமெடி நாடகமெல்லாம் நடந்திச்சி. முத்தமிழ் அறிஞரும் மாறன் சகோதரர்களும் மீன்டும் தமிழ்நாட்டின் நன்மைக்காக??!@!!! இணைஞ்சிட்டாங்க போல.இந்த இணைப்புக்கு பின்னால ஏகப்பட்ட மேட்டர் இருக்குதாம்.


போன புதன்கிழமை மதியம் விஜய நகர் பஸ் ஸ்டாப்புல பஸ்க்கு காத்திருக்கும் போது


5பள்ளிக்கூட பசங்க அரட்ட அடிச்சிட்டு இருந்தாங்கோ. திடீர்ன்னு அதுல ஒருத்தன் கொஞ்சம் அதிகமா சவுன்டு குடுத்தான். என்னன்னு பாத்தா ரெண்டு புள்ளைங்க வந்திட்டு இருந்திச்சிங்க. புன்னகையோட வந்திட்டு இருந்தாங்கோ. அந்த பையன் கலாய்ச்சிட்டே இருந்தான். இவங்களும் பதிலுக்கு. ரென்டு புள்ளைங்களும் பஸ்ல ஏறிட்டாங்க. பசங்க அதுக்கு முன்னாடியுள்ள பஸ்ல ஏற்ரதுக்கு போனாங்க. ரெண்டு புள்ளைங்கள்ல் ஒன்னு சொல்லிச்சி"ஏய் இப்ப பாரேன் அந்த பசங்க இங்க வருவாங்க" ந்னு சொல்லிச்சி. அதே மாதிரி பசங்களும் இந்த புள்ளைங்க ஏறின பஸ்ல ஏறிட்டானுக.இதே ஒரு பத்து வருஷம் முன்னாடி ஒரு பொண்ணு கிட்ட பேசனும்னாலே அவ்ளோதான்.


" எங்க அப்பா கிட்ட சொல்லிடுவேன்"
" இனிமே என் பின்னாடி வராதிங்க"
" அண்ணன் கிட்ட சொல்லிடுவேன்"


சொல்லிடுவாங்களோன்னு பயந்து எஸ்கேப் ஆனதும்,பின் அதேபெண்ணை வழிக்கு கொண்டு வந்ததும் நினைவுல வந்திச்சிப்பா.எந்த விசயத்துல பசங்களும்,பொண்ணுகளும் தெளிவா இருக்காங்களோ இல்லையோ இந்த விசயத்துல தெளிவா இருக்காங்க.


ஏதொ ஒரு பெயருக்கு பெட்ரோல் டீசல் விலைய கொஞ்சம் கம்மி பண்ணியிருக்கு மத்திய அரசு. ஆனா இப்படி கம்மி பண்ணியும் எண்ணெய் நிறுவங்களுக்கு லிட்டருக்கு 10ரூபா லாபம் கிடைக்குதாம். அரசுக்கு வரி விதிப்பின் மூலமா 25ரூபா லாபம் கிடைக்குதாம்.


என்னத்த சொல்ல.


கேள்விக்கு பதில் சொல்லுங்கடே
1.பிஜேபி நிலைமை என்னவாகும் தமிழ்நாட்டில்?
2.விசயகாந்தை இன்னும் காணோமே?
3.தேர்தலுக்கு அப்பறமும் அதிமுக கம்யூனிஸ்ட் கூட்டணி இருக்குமா?
4.ஆற்காட்டார் இனி என்ன செய்வார்?


இந்த பதிவு எழுதிக்கிட்டு இருக்கும் போது மத்திய அரசு வரியெல்லாம் கம்மி பண்ணியிருக்காங்கன்னு செய்தி வருது.. பின்னாடியே தேர்தல் வருதுப்பா>>>>>


ஜோக்


"டாக்டர் என் பையன் சரியா வளரமாட்டுக்கான் என்ன செய்ய"
"விலைவாசின்னு பேர் வைங்க அப்புறம் பாருங்க"


ஏகப்பட்ட மேட்டர் வச்சிருந்தேன். தாமிரா பதிவுல போய் கும்மி அடிச்சதுல மறந்துபோய்டிச்சு.