Sunday, April 5, 2009

திருநெல்வேலி ---- தென்காசி பாராளுமன்றத்தொகுதி --- ஒரு அலசல்...

திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டு எம்பி தொகுதிகள் உள்ளது... ஒன்னு திருநெல்வேலி ரெண்டு தென்காசி ( தனி)


பொதுவாக தென்மாவட்டங்கள் என்றாலே அதிமுகவின் கோட்டை என்று சொல்வார்கள்.. அது உண்மைதான் என்பதற்கேற்ப பல தேர்தல்களில் அதிமுகவுக்கு ஆதரவாகத்தான் இருந்திருக்கிறது.... எதாவது ஒரு அலைஅடிச்சாத்தான் எங்க மாவட்டத்து மக்கள் திமுகவை ஜெயிக்க வைப்பாங்க........கடந்த நான்கு சட்டமன்ற தேர்தல்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஜெயித்த கட்சிகளின் விவரங்கள்


1.அம்பாசமுத்திரம்      2.சங்கரன்கோயில்  3.வாசுதேவநல்லூர்
1991 -- அதிமுக               1991 -- அதிமுக           1991 -- காங்கிரஸ்
1996 -- திமுக                   1996 -- அதிமுக            1996 -- தமாக
2001 -- அதிமுக               2001 -- அதிமுக            2001 -- அதிமுக
2006 -- திமுக                    2006 -- அதிமுக            2006 -- மதிமுக


4.கடையநல்லூர்          5.தென்காசி                6.ஆலங்குளம்
1991 -- அதிமுக             1991 -- காங்கிரஸ்     1991 -- காங்கிரஸ்
1996 -- திமுக                 1996 -- தமாக               1996 -- திமுக
2001 -- அதிமுக            2001 -- அதிமுக           2001 -- அதிமுக
2006 -- காங்கிரஸ்      2006 -- திமுக                2001 -- திமுக


7.திருநெல்வேலி    8.பாளையம்கோட்டை   9.சேரன்மகாதேவி
1991 -- அதிமுக         1991 -- அதிமுக                   1991 -- அதிமுக
1996 -- திமுக           1996 -- திமுக                          1996 -- தமாக
2001 --அதிமுக        2001 -- திமுக                         2001 -- அதிமுக
2006 -- திமுக          2006 -- திமுக                          2006 -- காங்கிரஸ்


10.ராதாபுரம்              11.நாங்குநேரி
1991 -- காங்கிரஸ்   1991 -- அதிமுக
1996 -- தமாக             1996 -- சிபிஐ
2001 -- சுயேட்சை    2001 -- அதிமுக
2006 -- திமுக            2006 -- காங்கிரஸ்


கடந்த மூன்று மக்களவைத்தேர்தலில் ஜெயித்தக் கட்சிகளின் விவரம்
1.திருநெல்வேலி  2.தென்காசி


1998 -- அதிமுக       1998 -- அதிமுக
1999 -- அதிமுக       1999 -- அதிமுக
2004 -- காங்கிரஸ் 2004 -- சிபிஐ


மேற்ச்சொன்ன தேர்தல்களில் 1991,1996 சட்டமன்றத்தேர்தலிலும்,2004 மக்களவைத்தேர்தலிலும் ஆண்டுகளில் ஆளுங்கட்சி எதிர்ப்பு அலை கண்கூடாக தெரிந்தது... இதனால் 2004 மக்களவைத்தேர்தலில் திமுக சுலமாக வெற்றிகனி பறித்தது.


2006 சட்டமன்றத்தேர்தலை எடுத்துக்கொண்டால் திமுக கூட்டணி 9 இடங்களிலும் அதிமுக கூட்டணி இரண்டு இடங்களிலும் வென்றது. இதில் திருநெல்வேலியில் 606 ஓட்டு வித்தியாசத்தில்தான் திமுக ஜெயிக்க முடிந்தது.சேரன்மகாதேவியில் 6032 ஓட்டு வித்தியாசத்தில்தான் காங்கிரஸ் ஜெயித்தது. அம்பாசமுத்திரம் தொகுதியில் திமுக ஜெயித்ததுக்கு ஒரு காரணம் எர்ணாவூர் நாராயணன் சுமார் 15 ஆயிரம் ஓட்டுவாங்கியதுதான்..
..
  1998 மற்றும் 1999 மக்கள்வைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிளையும் அதிமுக கைப்பற்றியது.இதில் 1999 மக்களவைத்தேர்தலில் தென்காசி தொகுதியில் சுமார் 887 ஓட்டு வித்தியாசத்தில்தான் ஜெயித்தது.எந்த அலையும் இல்லாத தேர்தல்களில் எங்க மாவட்டத்துக்காரங்க அதிமுகவைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். 1998 தேர்தலில் இரட்டை இலை மாயத்தால் சரத் குமாரை கவிழ்த்திய பெருமை திருநெல்வேலிக்கு உண்டு( ஆனால் இதில் தூத்துக்குடி திமுக மாவட்ட செயளாலரின் பங்கும் சரத் தோற்க ஒரு காரணம்).. இப்போது தொகுதி மறு சீரமைப்பின் படி தென்காசி தொகுதியில் இருந்த அம்பாசமுத்திரம் மற்றும் திருச்செந்தூர் தொகுதியில் இருந்த ஆலங்குளம் தொகுதிகள் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது... அதேபோல் தென்காசி தொகுதியில் ராஜபாளையம் சேர்க்கப்பட்டுள்ளது...


இதன் மூலம் தெரிவது கடந்த கால தேர்தலை மனதில் வைத்து திமுக லாவகமாக இந்த இரு தொகுதிகளையும் காங்கிரஸிடம் கொடுத்துவிட்டது. திருநெல்வேலி தொகுதிக்காவது தனுஷ்கோடி ஆதித்தன், வசந்த்குமார் மற்றும் வாசன் ஆதரவாளர் சார்லஸ் என்பவரும் டிக்கெட் கேட்கிறார்கள். ஆனால் தென்காசி தொகுதியில்தான் காங்கிரஸ் சார்பா யார் போட்டியிடப்போகிறார்கள் என்பது மிகப்பெரிய சஸ்பென்ஸ்.. எனக்கு தெரிந்தவரைக்கும் காங்கிரஸில் இந்த தொகுதிக்கு போட்டி இடுவதற்கு ஆளை தேடுவதாக ஒரு கேள்வி.


எப்பவுமே கலைஞர் சொல்வார் "நெல்லை எங்கள் எல்லை குமரி எங்கள் தொல்லை" என்று.. இதை தகர்க்கவேண்டும் என்ற எண்ணத்துடந்தான் இப்பொது குமரியில் திமுக போயிடுகிறதோ என்னவோ... தூத்துக்குடியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் எஸ் ஆர் ஜெயதுரை புதுமுகமாம் தூத்துக்குடி தொகுதி திமுகவினருக்கு இவரை தெரியுமா........ சந்தேகம்தான்..


தேமுகதிகவெல்லாம் என்ன தைரியத்தில் எங்க மாவட்டத்துல போட்டி இடுறாங்கன்னே தெரியல... .2006 சட்டமன்றத்தேர்தலில் தேமுதிக குறைவான வாக்குகள் வாங்கியது இங்கதான் ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 2000 ஓட்டு தான் வாங்கியது...இந்த தேர்தலில் எந்த அலையும் தென்படாததால் இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக தான் ஜெயிக்கும் என்று நினைக்கிறேன்... ஏன்னா எங்க மாவட்டத்து மக்கள் ரெட்டை இலையை பாத்தாலே அதுல கண்ண மூடி குத்திடுவாங்க........... பொறுத்திருந்து பாக்கலாம்...

 குறிப்பு :தமிழ்நாடு உளவுத்துறை எடுத்த சர்வேயின்படி 14 தொகுதிகள்தான் திமுகவுக்கு ஆதரவா இருக்காம்..........