Monday, April 27, 2009

கலைஞரை காப்பாற்றிய இலங்கை அரசுக்கு நன்றி

ஒரு வழியாக உலகத்தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தமிழின தலைவர் கலைஞரின் உண்ணாவிரதம் முடிந்துவிட்டது... போன ஜூனியர் விகடன் இதழில் கலைஞர் தனது கடேசி ஆயுதமாக இந்த முடிவை எடுப்பார் என்று சொல்லியிருந்தார்கள்... அதே போல் நடந்துமுடிந்துவிட்டது. எல்லாத்துக்கும் அந்த அம்மாவும் கலைஞரும் தான் காரணம்.. இந்த தேர்தலில் ஈழப்பிரச்சினை எடுபடாது என்ற கருத்தை தன் முதல் நாள் பிரச்சாரத்திலேயே முறியடித்து கலைஞருக்கு செக் வைக்க ஆரம்பித்தார்....இது கொஞ்சம் வேலை செய்ய ஆரம்பித்தவுடன் எல்லா பிரச்சாரக்கூட்டத்திலும் கலைஞரை காய்ச்சி எடுக்க ஆரம்பித்தார் அம்மா.... மத்திய அரசு சிங்கள ராணுவத்துக்கு அளித்து வரும் ராணுவ உதவிகள் குறித்து கலைஞர் முதல் காங்கிரசு பெருந்தலைகள் மவுனம் சாதித்தது எல்லாமே தமிழகத்தில் திமுக கூட்டணியை கொஞ்சம் அசைச்சு பார்க்க ஆரம்பித்தது.முதல் ஆயுதத்தை கையில் எடுத்தார் கலைஞர்.. வேலை நிறுத்தம்..ஆனால் கலைஞர் எதிர்பார்த்த அளவுக்கு வேலை நிறுத்தம் வேலை செய்யவில்லை மாறாக எதிர் விளைவுகளை ஏற்படுத்தியது...முக்கியமா அன்னைக்கு எல்லா அத்தியாவசியக்கடைகளும் மூடியிருக்க டாஸ்மாக் கடைகள் மட்டும் திறந்து வியாபாரத்தில் சக்கை போடு போட்டது தமிழக வேலை நிறுத்த வரலாற்றில் ஒரு மைல் கல்.

பந்திற்கு பிறகு மத்திய அரசின் சார்பாக சிறப்பு தூதுவர்களாக அனுப்பப்பட்ட மேனனும்,நாராயணனும் இலங்கை போய் என்னத்த பேசினாங்க என்ற விவரம் இன்று வரை யாருக்கும் தெரியவில்லை... மத்திய அமைச்சர் சிதம்பரமும் கலைஞரை சந்தித்து இலங்கை நிலவரம் குறித்து பேசும்போது இன்னும் சில நாட்களில் போர் நிறுத்தம் ஏற்படலாம் என்று கூறினார்.அந்த நாள் வரைக்கும் காத்திருந்த கலைஞர் இன்று காலை யாரு எதிர்பாராத வகையில் போர் நிறுத்தம் வேண்டி உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார்.... அனைத்து தமிழ் சேனல்களும் நேரடி ஒளிபரப்பு செய்ய ஆரம்பித்தது.. யாரும் உண்ணவிரதம் இருக்கவேண்டாம் என்ற கலைஞரின் அன்பான வேண்டுகோளை ஏற்று அனைத்து மாவட்டங்களிலும் கழக முண்ணனியினர் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தனர்... ஒரு வழியாக இலைங்கை அரசு போர் நிறுத்தம் அறிவித்து விட்டதாக கூறி உண்ணாவிரதமும் முடித்து வைக்கப்பட்டது....போர் பகுதிகளில் குண்டு போட்டால் புல் பூண்டுகளுக்கு இனிமேல் சேதாரம் வந்துவிடும் என்ற நல்ல எண்ணத்தில் இலங்கை அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்குமோ???

யாருக்காக இந்த உண்ணாவிரதம்....எல்லாத்துக்கும் மத்தியில் ஆளும் காங்கிரசு அரசுதான் காரணம் என்று எல்லோருக்கும் தெரியும் ஒரு பக்கம் இலங்கைக்கு ராணுவ உதவி அளித்துவிட்டு மறுபுறம் இலங்கை தமிழருக்கு ஆதரவாக என்ற காங்கிரசின் நிலைமையால்தான் இன்று தமிழினத்தலைவர் இந்த முடிவுக்கு வந்தார்...காங்கிரசு அரசு நினைத்திருந்தால் போரை எப்போதோ முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம்... அதையும் செய்யலை.... மதியம் போர் நிறுத்தம் என்ற செய்தி வந்த பிறகு மாலை இலங்கை அரசின் ராணுவத்தளபதி போர் நிறுத்தம் குறித்து எதுவும் முடிவு எடுக்கப்படவில்லை என்று சொல்கிறார் ........... எது உண்மை....

"கனரக ஆயுதங்களையும், பேரழிவு தரும் ஆயுதங்களையும், விமானப்படையையும் பயன்படுத்தமாட்டோம்....தற்காப்புக்காக சிறு தாக்குதல் தொடுப்போம்". இதுதான் இலங்கை அரசின் போர் குறித்த உறுதி மொழி..... இதுக்கு பெயர்தான் போர் நிறுத்தமா???........... இன்று நடந்த எல்லா நிகழ்வுகளும் முன்கூட்டியே ஒத்திகை பார்க்கப்பட்ட நாடகம் தானோ? என்ற சந்தேகத்தை உண்டாக்கிவிட்டது.....எது எப்படியோ கலைஞரை உண்ணாவிரதத்திலிருந்து காப்பாற்றிய இலங்கை அரசு வாழ்க.....

ஹிஹிஹி தேர்தல் வந்திருச்சி வேற ஒன்னும் இல்லை.......



குழப்பத்தில் அப்பாவித்தமிழன்.........