Monday, June 22, 2009

கட்ட வண்டி ..... ??? எக்ஸ்பிரஸ் வண்டி....??

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் முதல் விருப்பம் ரெயில் பயணம்,ரென்டாவது தனியார் டிராவல்ஸ், கடேசி சாய்ஸ்தான் அரசுப்பேருந்து பயணம்.தென் மாவட்டங்களுக்கு அரசுப்பேருந்தில் பயணம் என்றால் சகிப்புத்தன்மையுடன் கூடிய ஒரு பெரிய மனசு வேண்டும்.. நம்ம வடகரை வேலன் அண்ணாச்சி எழுதிய பதிவில் சொன்ன நேரத்திற்கு சரியாக வந்த ஓட்டுனர்க்கு நன்றி சொன்னதாக எழுதியிருந்தார்... சொன்ன நேரத்திற்கு கொண்டு வந்து சேர்க்கும் ஓட்டுனர்கள் தெய்வத்தின் தெய்வத்திற்கு சமமானவர்கள். அந்த மாதிரி ஓட்டுனர்களுக்கு கோயிலே கட்டலாம்.....

ஒரே ஒரு முறை சென்னையில் இருந்து மதுரைக்கோ நெல்லைக்கோ
தென்காசிக்கோ அல்லது கன்னியாகுமரிக்கோ அரசு விரைவுப்பேரூந்தில் சென்றால்தான் நமக்கு எவ்ளோ பெரிய மனசு இருக்கும்னு தெரியும்.

என்னுடைய அனுபவத்தை சொல்லுகிறேன் ...

\1. சென்னையிலிருந்து தென்காசி செல்ல இரவு 8 மணிக்கு அரசு விரைவுப்பேருந்தில் ஏறினேன்.. நடத்துனரிடம் எத்தனை மணிக்கு அண்ணே தென்காசிக்கு போகும்ணே கேடதற்கு சிரிப்புடன் அதெல்லாம் டயத்துக்கு போயிடும் அப்படினார். இரவு 8மணிக்கு சென்னையில் இருந்தி கிளம்பிய பேருந்து மறுநாள் காலை 6 மணிக்குத்தான் திருச்சிக்கே வந்தது.... ஓட்டுனர் மாற்றம் என்று 30 நிமிடம் அங்கேயே நின்றது... அதுக்கப்புறம் வந்த ஓட்டுனர்  மதியம் 12 மணிக்கு தென்காசி கொண்டு வந்து சேர்த்துவிட்டார்.... 13 மணிநேரத்தில் தென்காசிக்கு செல்ல வேண்டிய பேருந்து சென்னை-திருச்சி ஓட்டுனரின் திறமையால் 16 மணி நேரம் ஆகியது.

2. அவசர வேலை காரணமாக ஊருக்கு போக வேண்டியிருந்ததால் மறுபடியும் மதுரை செல்லும் அரசு விரைவுப்பேருந்தில் பயணம்...... மதியம் 2மணிக்கு சென்னையில் கிளம்பிய பேருந்து மறுநாள் காலை 3 மணிக்கு மதுரையை வந்தடைந்தது........ மதுரைக்கே 13 மணி நேரம்னா அதுக்கப்புறம் தென்காசிக்கு அதுக்கப்புறம் எங்க ஊருக்கு கணக்கு போட்டுப்பாருங்க.............

பேருந்து நடத்துனரிடம் இது பற்றி கேட்டால்.நமக்குதான் மண்ட காயும்..... 1லிட்டர் டீசலுக்கு 5 கிலோமீட்டர், ஒரு டிரிப்புக்கு அதிகாரிகள் சொல்லும் கலெக்சன், ஆள் பற்றாக்குறை........ 1 லிட்டர் டீசலுக்கு 5கிலோமீட்டர் மைலேஜ் வேண்டும் என்றால் 40கிலோமீட்டர் வேகத்திற்கு போனால்தான் கிடைக்கும்....... டீசல் சிக்கனமும் வேணும் கலெக்சனும் வேணும் அதிகாரிங்க ரொம்பத்தான் ஆசைப்படுறாங்க....... சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசு விரைவுப்பேருந்துகளில் இரண்டு ஓட்டுனர்கள் ஒரு நடத்துனர் அல்லது இரண்டு ஓட்டுனர்கள் மட்டும் ஒருவர் நடத்துனராகவும் இருப்பார் இருந்ததுண்டு.. இப்பவெல்லாம் நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில் மதுரை வரை செல்லும் வழித்தட பேருந்துகளுக்கு திண்டிவனத்தில் ஓட்டுனர் நடத்துனர் மாறுவார்கள்.... மதுரை தாண்டி செல்லும் பேருந்துகளுக்கு திருச்சியில் மாறுவார்கள்...பயண நேரம் அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

 இப்பவெல்லாம் அரசு விரைவுப்பேருந்துகளில் மறந்தும் கால் வைப்பதில்லை..... ஊருக்கு அவசரமாக போக வேண்டும் என்றால் சென்னையில் இருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் திருச்சிக்கு, அப்புறம் அங்கிருந்து தென்காசிக்கு காலை 5மணிக்குள் சென்றுவிடுவேன்.................

Monday, June 8, 2009

கலைஞரை காப்பாத்தும் டான்ஸ் -- சன்னை காப்பாத்தும்(அம்மா) ஆத்தா

ரெண்டு வருசம் முன்னாடி வரைக்கும் சன்னுக்கு எந்த குழப்பமும் கிடையாது....எப்ப கலைஞர் வந்ததோ அப்பொழுதில் இருந்து ஆரம்பித்தது சன்னுக்கு தலைவலி....இதயம் இனித்த பிறகும் இது தொடர்வதுதான் ஒரு உள்குத்து..

கலைஞர் டிவி வருவதற்கு முன்னாடி வரைக்கும் சன் டிவி வார இறுதி புரோகிராமுக்கு இந்த அளவுக்கு மண்டை காய்ந்தது கிடையாது..முதலில் விஜய் டிவி ஜோடி நம்பர் மற்றும் கலக்கப்போவது யாரு மூலமாக வார இறுதி நாட்களில் சன்னை பின்னுக்குத்தள்ள ஆரம்பித்தது.... இந்த சூழ்நிலையில் கலைஞர் டிவி ஆரம்பிக்கப்பட்டது. கிட்டத்தட்ட சன் டிவியின் ஜெராக்ஸ் போல் அனைத்து நிகழ்ச்சிகளும் ஆரம்பிக்கப்பட்டது கலைஞரில்.....முதலில் சன்னுக்கு ஆப்பு வைத்த கலைஞர் டிவியின் மானாட மயிலாட....... சன்னும் அதற்கேற்றார்போல் மஸ்தானா மஸ்தானா வை போட்டிக்கு கொண்டு வந்தது............... ஆனால் மானாட மயிலாடவில் இருந்த சரக்கு மஸ்தானாவில் இல்லை..

தாமதித்து விழித்துக்கொண்ட சன் டிவி ஹாலிவுட் திரைப்படங்கள் மூலம் மானாடவிற்கு சரியான போட்டியை கொடுத்தது.... ஆனால் மானாட மயிலாட நிகழ்ச்சி கிட்டத்தட்ட 3மணி நேரம் ஒளிபரப்பாகியது சன்னுக்கு கொஞ்சம் பின்னடைவு...ஹாலிவுட் படம்னாலே ஒன்றரை மணி நேரம்தான்......... மீதி உள்ள நேரத்திற்கு?????..................யோசித்து பார்த்து கடைசியில் அம்மாவே சன்னுக்கு கைகொடுக்க ஆரம்பித்துவிட்டாள்...

சன்னின் எல்லா நெடுந்தொடர்களுக்கும் கடும் போட்டியை கொடுத்த கலைஞர் டிவியின் ஒரு சில நெடுந்தொடர்கள் காணாமல் போய்விட்டன... மீண்டும் கலைஞர் டிவி டான்ஸே சரணம் என்ற வழியில் சனி இரவு ஓடிவிளையாடு பாப்பா நிகழ்ச்சியை ஆரம்பித்து ஓட்டிக்கொண்டிருக்கிறது...சன் டிவியிலோ அதிரடி சிங்கர் முடிந்ததும் மீண்டும் அம்மாவே சரணம் என்கின்ற வழியில் சனி இரவு அம்மன் நெடுந்தொடரை ஆரம்பித்து விட்டார்கள்.

நெடுந்தொடர்கள் கலைஞர் டிவியில் எடுபடாத நிலையில் தற்போது வெள்ளிக்கிழமை இரவு அதிரடி திரைப்படங்கள் என்று அறிவித்திருக்கிறார்கள்....ஆனால் கலைஞர் டிவியில் ஒளிபரப்பபடும் புதிய திரைப்படங்கள் திரையரங்கில் நூறு நாட்கள் ஓடியதோ இல்லையோ நூறுதடவை தொலைக்காட்சியில் காண்பித்தாகிவிட்டது..........

எல்லாமே தமிழக மக்களுக்காகத்தான்......... நல்லா எஞ்சாய் பண்ணுங்க.......

Saturday, June 6, 2009

பிரபல பதிவர் கேபிளாரே... நாங்க என்ன மட்டமா??????

ரெண்டு மூனு நாளா 32 கேள்விகள் தொடர் பதிவை எல்லா "பிரபல" பதிவர்களும் எழுதியிருக்காங்க. இந்த தொடர் பதிவை நான் ஒரு மாதத்திற்கு முன்பே எழுதிவிட்டேன்...இந்த தொடர் பதிவை எழுதச்சொல்லி ரெண்டு "பிரபல"  பதிவர்களை அழைத்தேன்..அதில் ஒரு "பிரபல" பதிவர் என் அறிவுக்கும் ,திறமைக்கும் ஏத்த மாதிரி ஒரு கேள்வி கூட இதில் இல்லையே....இதப்போய் எழுதச்சொன்னா எப்படி? என்றார்....... இன்னொரு "பிரபல"  பதிவர் 32 கேள்வியா அதிகமா இருக்கேன்னார்... ஆனால் அவர் எழுதிய பதிவு இந்த தொடர் பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல் எழுதினார்.....


நான் சொன்ன முதல் "பிரபல"  பதிவர் நம்ம கேபிள் சங்கர்.இந்த கேள்வி பதில் தொடர் பதிவு அவருடைய ரேஞ்சுக்கு இல்லைன்னு சொன்னவர் ரெண்டு நாள் முன்னாடி ஜப்பான்ல ஜாகிசான் கூப்பிட்டாக,அமெரிக்காவுல ஜாக்சன் கூப்பிட்டாக அப்படின்ற கத மாதிரி எழுதி முடித்துவிட்டார்...... நான் கேட்கும்போதெல்லாம் எனக்கும் டைமே இல்லை அப்படி இப்படினு சொன்னவர்... ஒரு மாசமா டைமே கிடைக்காதவர்க்கு இப்பதான் டைம் கெடைச்சது போல..

அண்ணே கேபிள் அண்ணே நான் ஒருமாசமா கேட்டுக்கிட்டு இருந்தேன்.இதுதான் உங்க ...!!!!!!!ஒரு சாதாரண விசயத்துல இவ்ளோ நுண்ணரசியல் பண்றீங்களே.... இது நியாயமா??


ஒரு நாளைக்கு ரெண்டு மூனு சினிமா பதிவு போட மட்டும் டைம் கெடைக்குது..... நான் கூப்பிடும்போது எழுதாம இன்னைக்கு உங்களுக்கு சமமான பிரபல பதிவர்கள் கூப்பிட்ட உடனே எழுதுறீங்களே.... ஒரு குரூப்பாத்தான் இருக்கீங்க......................அரசியல் கட்சிக்குள்ளத்தான் கோஷ்டிகள் அதிகமா இருக்கும்..வலையுலகிலுமா.........
 
அதனால பிரபலமில்லாத பதிவர்களுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன் தொடர் பதிவுக்கு எல்லாம் உங்க ரேஞ்சுக்கு தகுந்த பதிவர்களை மட்டும் தொடர் பதிவு எழுத கூப்பிடுங்கப்பா...... அப்புறம் "பிரபல" பதிவர்களின் ரேஞ்சு என்னன்னு கேட்டு தெரிஞ்சிக்குங்க.....



இன்னும் ஒரு மேட்டர்... இன்னைக்கு ஒரு"பிரபல" பதிவர் அதே கேள்விகள் தொடரில் பிரபல பதிவர் கூப்பிட்டதனால எழுதியதாக குறிப்பிட்டுள்ளார்...ஆனால் இந்த பதிவரை இரண்டு மாதங்களுக்கு முன்பே கடையம் ஆனந்த் இந்த தொடரை எழுதச்சொல்லி அழைத்திருந்தார்........