Sunday, 8 November, 2009

பதிவர் சந்திப்பு தள்ளிப்போக காரணம்............??????

நேற்று சென்னையில் நடபெறவிருந்த பதிவர் சந்திப்பு மழையை காரணம் காட்டி தள்ளி வைப்பதாக கேபிள் அண்ணனும், சகாவும் சொல்லியிருந்தார்கள். இதில் சகா பதிவை படித்தீர்களானால் மழை மட்டும் காரணமல்ல என்பது உங்களுக்கு புரியும். கேபிள் அண்ணே உங்க பேச்சு வீட்டுக்கு வெளிய மட்டும்தான் போல......ஹும்

வழக்கம் போல் தங்கமணி பதிவுகள் சூடாகியிருக்கின்றன.ஆதி அண்ணன் எழுதிய இந்த பதிவில் ஆணாதிக்கமே அதிகம் இருப்பதாக கூறி வேலன் அண்ணாச்சி ஒரு பதிவு போட்டிருக்கார்..ஆனா இதுல பெண்ணாதிக்கம் கொஞ்சம் அதிகமா இருக்கு...கல்யாணம் செஞ்சுக்க போற யூத்துகளே ரெண்டு பதிவையும் படிச்சிட்டு ஒரு முடிவுக்கு வாங்க.என்னை கேட்டா நாணல் மாதிரி இருக்கனும். பிரச்சினை எனும் வெள்ளம் வரும்போது நாணல் எப்படி வளையுதோ அதே மாதிரி வளைஞ்சு கொடுத்திட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்..

நேற்று அலுவலகத்தில் என் ஜூனியரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.அவன் அதிதீவிர விஜய் ரசிகன்..2012 எனும் ஆங்கில படத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தான்...இன்னும் மூணு வருசத்துல உலகம் அழியப்போவுதாம்..நாசாவுல ஆராய்ச்சி பண்ணி சொல்லிட்டாங்க அப்படின்னு சொல்லிட்டிருந்தான்..... நான் அதற்கு டேய் உலகம் இன்னும் மூனு வருசத்துல அழிய போவுது..ஆனா தமிழ்நாடு அடுத்த மாசம் அழிஞ்சிடும் போல டிசெம்பர் 18ஆம் தேதி என்று சொன்னவுடன் பையன் அப்படியே டெரர் ஆகிட்டான்........(விஜய் கொடுத்த ஷாஜகான் அடி இன்னும் மறக்கலை.அவ்வ்வ்வ்வ்வ்வ்.)

Saturday, 7 November, 2009

பேச்சிலர் தீபாவளி--2009

அடுத்த தீபாவளி வருவதற்குள் இந்த தொடர் பதிவ எழுதிடுங்கப்பா என்று நம்ம புரொபசர் கேட்டுக்கொண்டதால் ஐயோ பாவம் எழுதிடுறேன்.......

1) உங்களைப் பற்றி சிறு குறிப்பு ?
என்னப்பா இது பரீட்சை கேள்வி மாதிரி இருக்கு???....... என்னத்த சொல்ல......பத்து வருசத்துக்கு முன்னாடி வரைக்கும் நெல்லைவாசி. இப்ப சென்னைவாசி.

2)தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம்?
ஊர் தூங்கும் நேரத்தில் பஸ்ஸே போகாத மெயின் ரோட்டில் நடு இரவு 12மணிக்கு ஆட்டம் பாம் போட்டு எல்லோரையும் எழுப்புவது ( தீபவளிக்கு முந்தின நாள்).....இதேலாம் சென்னை வருவதற்கு முன்னாடி...............இப்ப ஒன்னும் இல்லை சொல்வதற்கு...

3)2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

சென்னையில் தான்......

4)த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?
என்னதான் விலைவாசி ஏறினாலும் இந்த கொண்டாட்டங்களுக்கு சென்னையில் குறைவில்லை..... காலையில 7மணிக்கு கூட பத்தடிக்கு முன்னாடி போறவன் முகம் கூட தெரியல அந்த அளவுக்கு புகை மூட்டம்

5)புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?
ரெடிமேடும் உண்டு..தைத்து போடுவதும் உண்டு....... ஆனா தீபாவளி பர்சேஸ் எனக்கு ஆடிக்கழிவிலே முடிந்துவிடும்...( கிரேட் சரவணா ஸ்டோர்ஸில்)

6)உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

இந்த வருடம் பேச்சிலராக இருந்து தனியாக தீபாவளி கொண்டாடியதால் பதில் கிடையாது.(ஓசியில் கிடைத்த B.L தான் இந்த வருச ஸ்பெசல் தீபாவளியா போச்சு)


7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?
முடிந்த அளவுக்கு அலைபேசியில்(பேலன்ஸை பொறுத்து).... இல்லைனா எஸ் எம் எஸ்.

8)தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

தீபாவளிக்கு விடுமுறை கிடைப்பதே பெரிய விசயம்........ போன வருடம் கிடைத்தது........இந்த வருடம் என்னை ஆடாக்கிட்டாங்க......வழக்கம் போல் ஆபிஸில் முடிந்தது


9)இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

இதுவரைக்கும் அந்த பழக்கம் கிடையாது.வரும் காலங்களில் என்னால் முடிந்த அளவு...

10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?
எதுக்கு நான்கு பேர்..இருவர் போதும்.
1.கடையத்து இளவல் புதுமாப்பிள்ளை கடையம் ஆனந்த்--மனம்

2.புளியங்குடி அண்ணாச்சி நசரேயன்--என் கனவில் தென்பட்டது

Friday, 6 November, 2009

பதுங்கிய கலைஞர் & பொய் சொன்ன ஸ்டாலின்

ரொம்ப வருசத்துக்கு அப்புறம் நம்ம கலைஞர் ஐயாவுக்கு எப்படித்தான் இநத அளவுக்கு தைரியம் வந்ததோ??.. முல்லைப்பெரியாறு விவகாரத்தில் கேரள அரசும் மத்திய அரசும் அங்கு வரவிருக்கும் சட்டமன்றதேர்தலை மனதில் வைத்து தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வருகின்றன..... கேரள கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்கள் தேர்தலுக்காகத்தான் முல்லைப்பெரியாறு விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.. எங்கே இந்த விவகாரத்தில் தமிழகத்து பக்கம் சாஞ்சா கேரளாவில் மறுபடியும் ஆட்சியை பிடிக்க முடியாதே என்ற கணக்கில் மத்திய காங்கிரசு அரசும் கேரள அரசும் கூட்டு செர்ந்து கொண்டன.

தமிழகத்துக்கு முல்லை பெரியாறு விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் துரோகம் இழைத்துவிட்டதாக கூறி மதுரையில் அவருக்கு எதிராக கணடன கூட்டம் போடப்போவதாக நம்ம முதல்வர் வேங்கையாக சீறினார். ரொம்ப நாளைக்கப்புறம் நம்ம கலைஞர் இப்பவாவது பாய்கிறாரேன்னு பாத்தா.... திடீர்னு இந்த விசயத்துல பதுங்க ஆரம்பிச்சி மதுரை கூட்டத்தையே நிறுத்திவைத்துவிட்டார். காரணம் மறுபடியும் ஸ்பெக்ட்ரம் பூதம் கிளம்பிடிச்சி.


நீ எனக்கு எதிரா கூட்டம் போடுறியா....இருஇதுக்கு பதிலடியா ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை சிபிஐ மூலமா மறுபடியும் ஒரு ஸ்டண்ட் ஷோவை காட்டிடிச்சு மத்திய அரசு. நம்ம கலைஞரும் மத்திய அமைச்சர் பதவியா??? தமிழக மக்கள் நலனா?? வழக்கம் போல் தமிழக நலனுக்கு ஒரு நாமம்......... கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் ஒகேனெக்கல் திட்டம் நிறைவேற்றப்படும் அப்படினார்..இப்ப அங்க ஆட்சியே கவிழ்கிறமாதிரி இருக்கு..அப்ப ஒகேனெக்கல்...............???

போன வாரம் அரசு விழா ஒன்றில் பொருளாதார மந்த சூழ்நிலையிலும் திமுக ஆட்சியில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றார் துணைமுதல்வர். நேரடியாக உயர்த்தவில்லை என்று சொல்லியிருந்தால் சரியாக இருந்திருக்கும்.ஒரு வேளை அவர் தனியார் பேருந்துகளை மனதில் வைத்து சொல்லி இருப்பாரோ?....... அரசுப்பேருந்துகளில்தான் எம் சர்வீஸ், டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ், SFS,TSS,நான் ஸ்டாப்..அப்படினு வெறும் போர்டை மற்றும் மாட்டிட்டு கட்டணத்தை உயர்த்தி கொள்ளை அடிப்பது துணை முதல்வருக்கு தெரியாதோ?