Sunday, June 13, 2010

இவ்ளோ நாள் புடுங்கவா போயிருந்தீங்க..................

போபால் விஷ வாயு விபத்து நடந்து 25 ஆண்டுகள் முடிந்த நிலையில் போனவாரம் தீர்ப்பு அளித்தாகிவிட்டது........வழக்கம்போல் தீர்ப்பு வெளியானவுடன் இன்னைக்குத்தான் தூக்கத்திலிருந்து எழுந்தவன் மாதிரி செய்தி ஊடகங்கள் கூப்பாடு போட ஆரம்பித்திருக்கின்றன... முக்கிய குற்றவாளியான ஆண்டர்செனை யார் தப்பிக்கவிட்டது என்பதிலிருந்து இப்ப அவர் எங்க இருக்கார் என்பது வரை சூட்டோடு சூடாக செய்திகளை அள்ளி தெளித்து தங்களுடைய டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்த முயற்சித்து கொண்டிருக்கின்றன.....

பிரபல் தமிழ் நாளிதளில் இரண்டு நாட்களுக்கு முன்பாக இந்த வழக்கு தொடர்பாக ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது... அதில் போபால் விஷ வாயு வழக்கில் இந்த தண்டணை கொடுத்ததே அதிகபட்சம் என்று சொல்லியிருக்கிறார்கள்.. காரணம் வழக்கு போடப்பட்டதேஅந்த மாதிரியான செக்சன்களை தேடி போட்டிருக்கிறார்கள்......... அப்பொழுதில் இருந்தே அமெரிக்காவின் அடிவருடியாக இருந்துள்ளது மத்திய அரசு. இந்த லட்சணத்துல ஆண்டரசனை தப்பிக்க விட்டது யார் என்பது பற்றி காங்கிரசுக்குள்ளே ஒரு பெரிய பட்டி மன்றம் நடந்து கொண்டிருக்கிறது.

ஊடகங்களுக்கு தெரியாதா இந்த வழக்கில் ஆண்டர்சென் முதன்மை குற்ற வாளி என்று..என்னமோ இன்னைக்குத்தான் கண்டுபிடிச்ச மாதிரி கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கின்றன.......... அரசும் வாய்மூடி மவுனியாக இருக்கிறது.........போன உசுருகள் எல்லாம் என்ன  கோமான்களா என்ன நடவடிக்கை எடுக்க................ சாதாரண மக்கள் தானே....................

நடக்கிற சம்பவங்களையெல்லாம் பார்க்கும்போது நாமெல்லாம் இந்தியாவில் வசிக்க தகுதியற்றவர்களோ என எண்ணத்தோன்றுகிறது.........ஆம் இந்தியாவுல அரசியல்வியாதிகள்,பன்னாட்டுக்கோமான்கள்,அரசியல் புரோக்கர்கள்,
அம்பானி மாதிரியான தொழில் அதிபர்கள் தான் வாழனும் போல...அவங்களுக்குக்காகத்தான் மத்திய அரசு இருக்கு...............நமக்கெல்லாம் கிடையாது............

வாழுக மன்மோகன் சோனியா
வாழுக இந்திய சனநாயகம்...