Sunday, 21 December, 2008

ம்ம்ம்... லக்கியின் கருத்தை ஆமோதிக்கிறேன்....

தமிழக அரசியல் களம் வரும் ஜனவரி முதல் சூடுபிடிக்க ஆரம்பித்துவிடும்.. முக்கியமா திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் தங்களுடைய பலம் என்ன என்பதை அரிய ஒரு வாய்ப்பாக இருப்பதை எண்ணுகின்றன..பிஜேபி போட்டி இடப்போவதில்லை என்று பெருந்தன்மையாக விலகிகொண்டது.?????. அதிமுக தங்களுடந்தான் கூட்டணி சேரும் என்ற எண்ணம் இலவு காத்த கிளி போல் ஆயிடிச்சி.இந்த அதிர்ச்சியில் இருந்து அவர்கள் இன்னும் மீளவே இல்லை.

கேபடன் வழக்கம் போல தனியாக போட்டியிடுகிறார். இந்த இடைத்தேர்தல்தான் தேமுதிக தனியாக போட்டியிடும் தேர்தலாக இருக்கும்.. கண்டிப்பா நாடாளுமன்ற தேர்தலில் ஏதாவது ஒரு கூட்டணியில் சேருவார். எவ்ளோ நாளுக்குத்தான் தனியா நிக்கிறேன்னு பிலிம் காட்டமுடியும்.


இரன்டு நாட்களுக்கு முன் சென்னை ராமாபுரத்தில் வெள்ள நிவாரணநிதி வழங்கப்பட்டது. முதல் நாள் கொஞ்சம் பிரச்சினை ஆச்சு. அன்று மதியமே கூட்டத்திற்கு தகுந்தவாறு கவுண்டர்கள் எண்ணிக்கையை அதிகமாக்கினார்கள்.ரேஷன் கார்டுகளுக்கு டோக்கன் நம்பர் கொடுப்பதிலிருந்து அனைத்து வேலைகளையும் உடன்பிறப்புகள் தான் செய்துகொண்டிருந்தனர்.மேலும் வெள்ள நிவாரண பட்டியலை வைத்துக்கொண்டு மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை பொறுமையாக விளக்கிக்கொண்டிருந்தனர்.அங்கிருந்த காவல்துறையினரும் சரி, அரசு அதிகாரிகளும் சரி மிக கச்சிதமாக த்ங்களுடைய வேலையை செய்தனர். இதையெல்லாம் பார்க்கும் போது மக்களவை தேர்தல் ஞாபகம் வந்தாலும்... இதை கண்டிப்பாக பாராட்டியே தீரவேண்டும்..

இது குறித்து லக்கி சொன்னதைப்பாருங்கள்.


///மின்வெட்டு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை இம்மாத வெள்ளம் அடித்துக் கொண்டு சென்றிருக்கிறது. பத்து கிலோ அரிசியும், இரண்டாயிரம் ரூபாய் பணமும் சாமானிய மக்களை மெகாசீரியலை கூட மறக்கச்செய்யும் என்பது கடந்தகாலம் உணர்த்திய பாடம். தமிழகமெங்கும் பாகுபாடின்றி வழங்கப்படும் வெள்ள நிவாரணம் திமுக பக்கமாக காற்றடிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. வரவிருக்கும் திருமங்கலம் இடைத்தேர்தல் முடிவும் திமுகவுக்கு சாதகமாகவே இருக்க வாய்ப்புகள் அதிகம். . இன்றைய நிலவரப்படி 40ல் 25 தொகுதிகளை சிரமமின்றி திமுக கூட்டணி வெல்லமுடியும்.////

நடப்பதையெல்லாம் பார்த்தால் லக்கி சொல்லுவதில் நூற்றுக்கு நூறு உண்மை என்றே படுகிறது.தினசரி ஆர்ப்பாட்டம் நடத்தினால் போதும் என்ற அதிமுகவின் எண்ணம் மிகுந்த பரிதாபத்துக்குரியது.. அரசின் எதிர்ப்புகளை மிக கவனமாக கையாண்டு மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும். ஆனால் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இந்த விசயத்தில் அவர்களாகவே முடிவெடுக்கிறார்கள். இதுவே ஆட்சியாளர்களுக்கு நிம்மதியை கொடுக்கும்...