Sunday, 21 September, 2008

லக்கி லுக்- உண்மைத்தமிழன் -விடுதலைப்புலிகள்-தேமுதிக--கம்யூனிஸ்ட்

லக்கிலுக்

லக்கிலுக் நேற்று ஊனமுற்றோர் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில் ஊனமுற்றோர்க்கு அரசு அதிகாரிகள் இன்முகத்துடன் உதவுவதாக எழுதியிருந்தார். இரு வருடங்களுக்கு முன்னால் சுய தொழில் தொடங்குவதற்காக கிண்டியில் உள்ள ஊனமுற்றோர் நல அமைப்பை அணுகினேன். அங்குள்ள அறிவிப்பு பலகையில் வங்கி கடன் வாங்கி தர உதவப்படும் என்பதை நம்பி அங்குள்ள அதிகாரியை அணுகினேன். நான் கேட்ட உதவிக்கு அவருடைய பார்வையிலே பதில் தந்துவிட்டார். ஏதோ ஜந்துவை பார்ப்பது போல் வங்கி கடன் நீங்கள்தான் உங்கள் சுய முயற்சியில் வாங்கிக் கொள்ளவேண்டும் என்று கறாரக கூறி வெளியே அனுப்பிவிட்டார். மிஞ்சி போனால் இரு நிமிடம்தான் என்னிடம் பேசினார்.அதற்கு மேல் அவருக்கு நேரமில்லை போலும்.இந்த மாதிரியான அரசு அதிகாரிகள் இருந்தால் ஊனமுற்றோர் நல அமைப்புகள் மிக நன்றாகவேம் செயல்படும்!!!!!!!!. அரசே பல கோடி ரூபாய் செலவழித்தாலும் அதன் பயன் சிறு அளவே. லக்கிலுக் சொன்னது போல் உள்ள அரசு அதிகாரிகள் மிகவும் அபூர்வம்.


உண்மைத்தமிழன்


உண்மைத்தமிழனின் ராமன் தேடிய சீதை விமர்சனம் கல்யாண விருந்தை ரசித்து ருசித்து சாப்பிடுவதுபோல் அருமையாக இருந்தது. படத்தை பார்க்கலாம் என்றிருக்கிறேன்.


விடுதலைப்புலிகள்

விடுதலைப்புலிகள்---- ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு என்பது தமிழ்நாட்டுக்கட்சிகளுக்கு அல்வா சாப்பிடுவதுபோல். வேண்டும் என்றால் சாப்பிடுவார்கள் இல்லையென்றால் தூக்கி எறிவார்கள்.


திமுகவின் நிலை

தற்போது காங்கிரசுடன் கூட்டணி என்பதால் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு கிடையாது. ஆனால் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு. இது என்ன விந்தை???????????????. தன் வாரிசுக்கு மந்திரி பதவி வேண்டும் என்றால் நேரடியாக டெல்லிக்கு காவடி தூக்கும் இவர்கள், தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்றால் வெறும் கடிதத்தோடு நின்று விடுவார்கள்.அதிமுகவின் நிலை

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு கிடையாது. ஆனால் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு. விடுதலைப்புலிகள் என்ன செய்தார்கள்? தமிழ்நாட்டில் குண்டு வைத்தார்களா? இல்லை நாச வேலைகளில் ஈடுபட்டார்களா?.அவர்கள் செய்த ஒரே தவறு ராஜீவ் காந்தி விசயம் மட்டும் தான்.


அதையும் ராஜீவ் காந்தி குடும்பத்தினர் மன்னித்துவிட்டனர்!!!!.
 
 
விடுதலைப்புலிகள் விசயத்தில் தெளிவாக முடிவெடுத்து தங்கள் நிலையில் மாறாமல் இருப்பவர்கள் நெடுமாறன் அவர்களும், வைகோ அவர்களும் மட்டுமே. மற்றவர்கள் இவ்விசயத்தில் காட்டுவது தங்களுடைய போலி முகத்தை மட்டும்தான்.

10 comments:

Bleachingpowder said...

லக்கி எழுதினதையெல்லாம் இங்கே யாருமே சீரியஸா எடுத்துக்க மாட்டாங்க. இப்போ ஜெயலலிதா ஆட்சியில் இருந்தால் அவர் இந்த பதிவை எழுதியிருப்பாரா? வெறும் விளம்பரத்திற்காகவும், ஹிட்ஸ் கிடைக்கனும் என்பதற்காக மட்டுமே இப்படி எழுதுகிறார்கள்.

அறிவாலையம் காலால் இட்ட பணியை தலையால் செய்வது மட்டுமே இந்த அடிமை கூட்டத்தினரின் பணி. அதை அவர்கள் செய்வன செய்கிறார்கள்.

இப்ப பாருங்க நீங்க விளம்பரத்திற்காக லக்கி பேர உபயோக்கிறீர்கள் என்று பதில் அறிக்கை வரும். எதோ அவர் பேர வச்சு பதிவு எழுதுனா நம்ம வீட்டுல ஒரு மாசம் அடுப்பெரியும்னு நினைச்சிட்டிருக்காரு

இவ்வளவு வருசமா எழுதி அவருக்கே இப்போ தான் ஒரு க்ராம் தங்கம் கிடைச்சிருக்கு.

அப்புறம் விடுதலை புலிகளை பற்றி உங்களுடைய கருத்தில் எனக்கு அவ்வளவா உடன்பாடு இல்லை. ராஜிவ் காந்தி குடும்பத்தினர் மண்ணித்தால் நாமும் அச்சம்மவத்தை மறந்து விடலாம்னு சொல்றது அவ்வளவு சரியா படல.

எவ்வளவு செய்திருப்போம் அவர்களுக்கு.

அத்திரி said...

விளம்பரத்திற்காக லக்கி லுக் பெயரை பயன்படுத்தவில்லை. எனது கருத்தை சொன்னேன். எனக்கும் ராஜீவ்கந்தி விசயத்தில் உடன்பாடு கிடையாது. ஆனால் இதையே காரனமாக சொல்பவர்களை என்ன செய்வது.

Bleachingpowder said...

//எனக்கும் ராஜீவ்கந்தி விசயத்தில் உடன்பாடு கிடையாது. ஆனால் இதையே காரனமாக சொல்பவர்களை என்ன செய்வது.//

இன்னமும் இலங்கையில் ரயில் நிலையம், பஸ் ஸ்டாண்ட் போன்ற இடங்களில் குண்டு வெடித்து அப்பாவி பொது மக்கள் பலியாகி கொண்டு தானே இருக்கிறார்கள். சிங்கள ராணுவம் அப்பாவி தமிழில மக்கள் மீது தாக்குதல் நடத்துவதால் பதிலுக்கு விடுதலை புலிகள் அப்பாவி சிங்கள மக்களை கொன்று குவிப்பத எந்த வகையிலும் நியாயமில்லை.

இலங்கை அரசும், விடுதலை புலிகளும் அப்பாவி பொது மக்கள் மீது நடத்தும் தாக்குதலை நிறுத்தும் வரையில் இந்தியா மட்டுமல்ல எந்த ஒரு நாடும் இவர்களுக்கு உதவ முன் வராது.

Anonymous said...

விடுதலைப் புலிகள் தமிழக அரசியல்வாதிகளுக்கு அல்வா இல்லை. பந்து. அடிப்பார்கள், உதைப்பார்கள். விரும்பினால் நெஞ்சில் அணைத்தபடி வலம்வருவார்கள்.
பாவம் ஈழத்தமிழர்கள்.

கலைஞர்: உடைந்த வாள் என்றாலும் ஒருவாள் கொடு என வசனம் எழுதிய கலைஞர்
நிஜமாகப் போர் நடக்கும்போது மௌனம் சாதிப்பது கொடுமை.

ஜெ ஜெ: சொல்ல என்ன இருக்கிறது? புலியை விட்டுவிடுங்கள். ஈழத்தமிழர் படும் துன்பத்தை அறிக்கையில்கூட வெளிக்காட்டாத தாயுள்ளம் படைத்தவர்.

மன்மோகன்; எஜமானியின் விசுவாசமான குரல்

சுரேஷ் ஜீவானந்தம் said...

// இலங்கை அரசும், விடுதலை புலிகளும் அப்பாவி பொது மக்கள் மீது நடத்தும் தாக்குதலை நிறுத்தும் வரையில் இந்தியா மட்டுமல்ல எந்த ஒரு நாடும் இவர்களுக்கு உதவ முன் வராது. //
இரண்டின் அளவுகளும் வேறு வேறு. அப்படி இருந்தாலும், இலங்கை அரசை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்காதது ஏன்?

தீப்பொறி said...

விடுதலைக்கு நாங்கள் மட்டுமே சொந்தக்காரர் என்று 1986ஆம் ஆண்டு உரிமை கொண்டாடப்புறப்பட்டனர் விடுதலைப் புலிகள். விடுதலைக்காகப் போராடிய ஏனைய இயக்கங்களையும் அதன் தலைவர்களையும் மிகவும் கொடூரமாகக் கொலை செய்து அதன் மூலம் புலிகள் என்றால் படுபயங்கரமானவர்கள் என்ற தீங்குப்பெயரை வலிந்து கட்டிப் பெற்றுக்கொண்டனர்.

விடுதலைக்குப் பின்னர் பங்காளிச் சண்டை வந்துவிடக்கூடாது என்ற தூரப்பார்வை அன்ரன் பாலசிங்கத்துக்குத் தோன்ற விடுதலைக்கு முன்னரே ஏனையோரைத் தீர்த்துக்கட்டிவிட்டனர் புலிகள். ஒரு தேசிய இனம், பிறிதொரு அடையாளமுள்ள இனத்தை(முஸ்லீம்) அடிமைப்படுத்தி விரட்டுவதென்பது யாரும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இப்படியொரு எளியச்செயலைச் செய்த புளிகளின் நிலை, இப்போது கிளி இலவம் காய்க்கு ஆசைப்பட்ட கதையாகிவிட்டது.

அனைத்து இயக்கச் சகோதரர்களைக் கொல்லும் போது, அவர்களுக்கு துரோகிப்பட்டம் சூட்டி படுகொலை செய்து தங்களை மட்டுமே தியாகிகள் ஆக்கிக் காண்பித்தனர் புலிகள். இந்தச் செயலை நம்பவைப்பதற்காக அவர்கள் பலதரப்பட்ட பிரசாரங்களையும் மேற்கொண்டனர். இவ்வாறான பிரசாரத்தை தமிழர்களில் ஒருபகுதி மக்கள் நம்பினர். புலிகளுக்கு ஊக்கமும் கொடுத்தனர். பலமுள்ள பக்கம் சாய்வதுதானே பெரும்பகுதியான மக்களின் இயல்பாகும். எங்கள் தமிழ் மக்களும் இந்த நியதிக்கு உட்பட்டனர்.

புலிகள் துரோகி துரோகி என்று கூறிக் கூறிப் படுகொலை செய்ய, பாதுகாப்புக்காக இலங்கை அரசிடம் சென்றவர்கள் உண்மையிலேயே துரோகிகள் ஆகிவிட்டனர். உதாரணத்துக்கு அமைச்சர். டக்கிளஸ் தேவானந்தா, திரு. ஆனந்தசங்கரி, கருணா, பிள்ளையான் போன்றோரை வெளிப்படையாகக் கூறலாம்.

ஏனைய இயக்க உறுப்பினர்களை கடந்த இருபது ஆண்டுகளாக வேட்டையாடி படுகொலை செய்த புலிகள் எங்கள் இனத்துக்கான நாட்டை மீட்டுவிட்டார்களா? என்று பார்த்தால், இருந்த இடங்களையும் இழந்து நிற்பதைக் காணலாம்! விடுதலைக்காக மக்கள் கொடுத்தப் பணத்தை, எதிர்காலத்தில் பங்குச் சண்டை வராமல் தடுக்க சகோதரர்களைப் படுகொலை செய்தனர். இவையே புலிகளுக்குக் கிடைத்த பயன்.

ஒரு இனம் விடுதலை அடைய அந்த இனத்தின் மீது பிற நாடுகளுக்கு அனுதாபம் ஏற்பட வேண்டும். போராட்டம் நியாயமானதாக இருக்க வேண்டும். விடுதலைக்கான காரணங்களும் நியாயமானதாக இருக்க வேண்டும்.

1983ல் அப்படியான அனுதாபம்தான் உலகம் ழுழுவதும் இருந்தது! எங்கள் இனம் அந்த அனுதாபத்தைப் பயன்படுத்தி விடுதலையை வென்றெடுக்கத் தவறிவிட்டது! குறிப்பாக திரு.பிரபாகரன் அவர்களது விடுதலைப் புலிகள் இயக்கம்தான் ஒற்றுமைக்கும், தீர்வுக்கும் முட்டுக்கட்டையாக செயற்பட்டது என்ற குற்றச்சாட்டை அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மறுப்பார்கள். ஆனால் அதுதான் உண்மை.

1983ஆம் ஆண்டு எங்கள் இனப்பிரச்சினை உலகறிய ஆரம்பித்ததும், அண்டை நாடான இந்தியாவுக்கு எங்கள் மக்கள் அகதிகளாக பாதுகாப்புத் தேடி ஓடிச்சென்ற வேளை எங்கள் இனத்தின் அரசியல் தலைவர்கள் என்று இருந்தவர்களும் எந்த வழிகளில் எங்கள் விடுதலையை வென்றெடுக்கலாம் என்ற திட்டத்தினை வகுக்காது தங்கள் பொறுப்புகளிலிருந்து தவறிவிட்டனர்.

குறிப்பாக தலைவர் திரு. அமிர்தலிங்கம் அவர்களைக் குறிப்பிடலாம். அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம் என்ற அழைப்பை இயக்கங்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்த திரு. அமிர்தலிங்கம் அவர்கள் தனது மகனை முன்நிலைப் படுத்தி இயக்கம் ஒன்றினை ஆரம்பித்து அதன் மூலம் விடுதலையை வென்றெடுக்கலாம் என்று ஒரு தவறான முடிவினை எடுத்து செயற்படுத்த முற்பட்டார்.

திரு. அமிர்தலிங்கம் அவர்களது மகன் ஒரு போராளி அல்ல. பொதுக்கூட்டங்கள் போடும்போது என்றால் அவரது மகனைத் தலைவராக்கலாம் ஆயுதம் ஏந்திப் போராட இயற்கையாகவே தன்னை அர்ப்பணிக்கும் தியாக உணர்வு பொருந்த வேண்டும். தனது மகனை உருவாக்க முற்பட்டு அமிர்தலிங்கம் அவர்கள் தோல்வி கண்டார்.

இருந்த ஒரு தலைமையும் இவ்விதம் தோல்வி கண்டு ஒதுங்கியதும், கருவிகளாலும், பணத்தாலும் வலுப்பெற்றிருந்த திரு. பிரபாகரன் அவர்களது தலைமையிலான இயக்கம் பயங்கரவாத நடவடிக்கை மூலம் தன்னை தலைமைக்கு நிறுத்தியது,

"எதிர்ப்பவன், ஏற்றுக் கொள்ளாதவன் அனைவரையும் போட்டுத் தள்ளு" என்று அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தனது இயற்கையான மதி மயக்க நிலையில் அறிவுரை கூற இன்று எங்கள் இனம் கேட்பார் அற்று நடுத் தெருவில் நிற்கிறது என்றால் அது மிகையல்ல!

இறந்தவர்கள் இனிமேல் மீண்டும் வரப்போவதில்லை. ஆனால் இழந்த மண்ணை மீட்கலாம். எஞ்சியிருப்பவர்களை ஒன்றிணைத்து எங்கள் இனத்தின் உரிமைகளை மீட்டெடுக்கலாம். ஆனால் புலிகள் அப்படி ஓர் நல்ல முடிவுக்கு வரமாட்டார்கள் என்று இலங்கை அரசாங்கம் மிகவும் உறுதியாக நம்புகிறது. நாடோ உரிமையோ கிடைத்தால் தங்களுக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் இல்லையெனில் அது யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற புனிதமான கொள்கையுடன் புலிகள் இருக்கும் வரை எங்கள் இனத்துக்கு அது வெற்றியை ஈட்டித் தரும் என்று சிங்கள இனம் நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது.

இலங்கை அரசு வான்வழியாக குண்டுகளை வீசிவரும் இந்நாட்களில் எந்த வழியாக இதனைத் தடுத்து நிறுத்தலாம் என்ற புலிகளின் சிந்தனையில் உதித்ததுதான் பழைய வை.கோ அவர்களும், நெடுமாறன் அவர்களுமாகும். காலத்துக்குக் காலம் காணாமல் போகும் இவர்கள் பணத்தைக் கண்டால் மட்டும் பதறிக்கொண்டு முன்னுக்கு வருவர். சிலகாலம், திரு. திருமாவளவன் அவர்களும், டைரக்டர். சீமான் அவர்களும் முன்னிலைப் படுத்தப்பட்டனர். அவர்கள் பின்வாங்க இப்போ வை.கோ. அவர்கள் முன்னேறியுள்ளார்.

திரு. வை.கோ. அவர்கள் தி.மு.க. கட்சியுடன் இணைந்திருந்தார். கலைஞர் அவர்கள் ஒரு எம்.எல்.ஏ. ஆசனம் அதிகமாகக் கொடுக்கவில்லை என்று கூறிக்கொண்டு, அ.இ.அ.தி.மு.க. கட்சிக்கு மாறியவர். அப்படியாயின் இவரது கொள்கை என்ன?. இப்போது திரு.எல்.கணேசன் அவர்களும், திரு. செஞ்சி இராமச்சந்திரன் அவர்களும் இவரது கட்சியை விட்டு விலகிவிட்டார்கள். மீண்டும் அரசியலில் ஜொலிக்க வேண்டும் என்றால் தன்னை மாவீரனாகக் காண்பிக்கவேண்டும். ஒரேவழி இலங்கைப் பிரச்சினையில் நுழைவதுதான். எனவே மீண்டும் புலிகள் வழியில் நுழைந்துள்ளார். இதுதான் வை.கோ. அவர்களின் தந்திரம்.

இந்நிலையில், மேற்கு நாடுகளுக்கு விஜயம் செய்த வை.கோ. அவர்கள் அங்கு தொண்டை கிழியக் கத்திவிட்டு டெல்கிக்குச் சென்று பிரதமரையும், வெளிவிவகார அமைச்சரையும் சந்தித்து பழைய கோரிக்கையை முன்வைத்துவிட்டு சென்னை திரும்பிவிட்டார்.

இப்போது மீண்டும் திரு. நெடுமாறன் அவர்கள் சுற்ற ஆரம்பித்துவிட்டார். இப்படி தெருமுனையில் நின்று கொடிபிடித்து கூச்சல் போடும் நபர்களை நம்பி எங்கள் இனத்துக்குத் தீர்வு பெற்றுத்தர முயற்சிக்கின்றனர் புலிகள்.

இந்தியாவின் பங்கு இல்லாமல் தமிழ் மக்கள் விடுதலை காண்பது அல்லது உரிமைகள் பெறுவது என்பது கடினமானது.

இதனை உலக நாடுகள் அறிந்துள்ளன. சிறிலங்காவும் அறிந்துள்ளது. ஆனால், புலிகள் அறிந்துகொள்ளவில்லை. வை.கோ, திருமாவளவன், நெடுமாறன் போன்றோரை புலிகள் இயக்கம் பயன்படுத்தும் வரை இந்திய மத்திய அரசு தமிழர்களின், குறிப்பாக புலிகளுக்கான உதவிகள் எதனையும் செய்யமுன்வரமாட்டாது.

புலிகள் நல்லவர்கள், வல்லவர்கள் என்று யாரும் மத்திய அரசிடம் விளக்கம் கொடுக்க மாட்டார்கள். தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் அவர்கள் மீது இராணுவத்தினர் குண்டு போடுகிறார்கள், அவர்களைக் காப்பாற்ற வேண்டும். சிங்கள இராணுவத்துக்கு உதவி செய்ய வேண்டாம். இப்படியான கோரிக்கையைத்தான் யார் டெல்கிக்குச் சென்றாலும் முன்வைப்பார்கள். ஏன்?

புலிகள் பாவம், அவர்கள் தனியாக நின்று சண்டைபோட்டு தமிழ் இனத்தைக் காப்பாற்றுகிறார்கள். ஆகவே, அவர்களுக்கு ஆயுதம் வழங்குங்கள், உணவு கொடுங்கள் என்று வை.கோ அல்லது நெடுமாறன் அவர்கள் டெல்கிக்குச் சென்று கேட்க முடியுமா? ஏன்?

புலிகள் செய்துவிட்ட படுகொலைகளை யாரும் மறந்துவிட முடியாது. ஆனால் புலிகளின் வசதிக்காக அவர்கள் மறக்கலாம். ஒரு நாட்டின் பிரதமரை பறிகொடுத்த அந்த அரசும் மக்களும் எப்படி மறப்பார்கள். எனவே புலிகளுக்கு உதவி செய்யுங்கள் என்று மேற்சொன்னவர்கள் யாரும் கேட்கமாட்டார்கள். அடுத்து புலிகள் தனியாகத்தான் போராடவேண்டும் என்று தமிழ் மக்களா கூறினார்கள். அப்படியான ஓர் நிலையை படுகொலைகள் மூலம் ஏற்படுத்தியவர்கள் புலிகள்தான் என்பதை உலகம் அறியும், இந்திய அரசும் அறியும்.

இலங்கை அரசு தொடர்ந்து குண்டுகள் வீசி தமிழ் மக்களை அழிக்கின்றது. இந்த நேரத்தில் இந்தியா பார்த்துக் கொண்டு சும்மா இருக்கின்றது. என்ன அனியாயம் இது என்று சிலர் கோபம் தலைக்கேற தங்கள் வாய்க்கு வந்தபடி பேசுகின்றனர். அறிக்கைகள் விடுகின்றனர். விவாதம் நடத்துகின்றனர். கனடா போன்ற நாடுகளில் வாழும் விசயம் தெரியாத சிலர் இந்தியாவை வம்புக்கு இழுத்து அறிக்கைகள் விடுகின்றனர்.

"நாங்கள் இந்த நாட்டின் சகோதரர்கள். நாங்கள் அடித்துக்கொள்ளுவோம், பின்னர் ஒன்றுபடுவோம். எங்கள் பிரச்சினையை நாங்களே தீர்த்துக்கொள்வோம். முதலில் நீ வெளியேறு" என்று தமிழர்களுக்கு யார் பிரதான எதிரியோ அவர்களுடன் அதாவது சிங்கள அரசுடன் கூட்டுச்சேர்ந்து அன்று இந்தியாவை சர்வதேசத்தின் முன் தலைகுனியவைத்தவர்கள் புலிகள். இன்று எந்த முகத்துடன் தரகர்களை அனுப்பி நியாயம் கேட்பது அல்லது உதவி கேட்பது?

சகோதரர்களை துப்பாக்கியால் தீர்த்துக்கட்டி, உதவிக்கு வந்தவர்களையும் துப்பாக்கியால் தீர்த்துக்கட்டி தமிழரின் வலுவைக் குறைத்தது புலிகள் இயக்கம்தான் என்பதை மறந்து சிலர் உதவி கேட்கின்றனர். கிடைக்கவில்லை என்றதும் எச்சரிக்கை விடுகின்றனர். ஆலோசனையும் அறிவுரையும் கூறுகின்றனர்.

ஒரு பிரச்சினையை பல வழிகளிலும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இப்போது இந்தியாவின் பக்கம் இருந்து நாம் ஆராய்ந்து பார்ப்போம். இலங்கைத் தமிழர்கள் மீது வடமாராட்சியில் சிங்கள இராணுவம் படை எடுத்து யாழ்ப்பாணத்தை நோக்கி முன்னேறிய வேளையில் அந்த முன்னேற்றத்தைத் தடுக்க இந்தயா தனது விமானங்கள் மூலம் உணவுப் பொட்டலங்களை போட்டு தடுத்து நிறுத்தியது. அதனால் புலிகளுக்கு வரவிருந்த பெரும் ஆபத்தும் விலகியது.

முன்னாள் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவை பணிய வைத்து ஒப்பந்தம் போட்டது. ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டபோது சிங்கள சிப்பாய் ஒருவன் இந்திய பிரதமர் அமரர் திரு. இராஜீவ்காந்தி அவர்களை துப்பாக்கியால் தாக்கிக் கொலை செய்ய முற்பட்டான். உலகம் முழுவதுமுள்ள மக்கள் அந்தத் தாக்குதலைப் பார்த்து ஆச்சரியப்பட்டு இப்படிப்பட்ட இனமா சிங்கள இனம் என்று வியந்து வேதனை அடைந்தனர்.

தமிழர்களுக்கு ஆதரவாக இந்திய பிரதமர் செயல்படுகிறார் என்ற காரணத்தினால்தான் அவர் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவத்துக்குப்பிறகு உண்மையில் இந்திய பிரதமர் சிங்களவருக்கு உதவவேண்டும் என்று எண்ணியிருப்பாரா? உண்மையில் தமிழ் மக்களை அவர்களிடத்திலிருந்து காப்பாற்றவேண்டும் என்று அவர் தீர்மானித்திருப்பாரா? இந்தியாவும் அதனைத்தான் தீர்மானித்திருந்தது. தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று.

* 13 பேரை விசம் கொடுத்து தற்கொலை செய்யும்படி கூறிவிட்டு அவர்களது இறப்பைப் பயன்படுத்தி ஏதோ இந்திய அமைதிப்படைதான் அவர்களைக் கொன்றது போன்ற உணர்வினைத் தூண்டிவிட்டு யாழ்ப்பாணத் தெருக்களில் குடையும், ரோர்ச் லைட்டும் வாங்கிக் கொண்டிருந்த இந்தியச் சிப்பாய்களைக் கண்மூடித்தனமாகச் சுட்டுக்கொன்று இந்தியா கொடுத்த ஆயுதங்களையே அவர்களுக்கு எதிராகத் திருப்பியதை இந்தியர்கள் மறந்துவிட முடியுமா?

* இந்தியா சிங்கள ஆட்சியாளரைப் பணியவைத்து தமிழர்களுக்கு ஆதரவாக இலங்கைக்கு வந்தது. அப்படி வந்த இந்திய அமைதிப்படையினரின் தலைகளை வெட்டி எடுத்து அவற்றைக் கைகளில் தூக்கிநின்று படம் எடுத்து வெளியிட்டதை எந்த இந்தியனாவது மறப்பானா?

* தமிழர்களின் பொது எதிரியான இலங்கை ஜனாதிபதி பிரேமதாசாவுடன் கூட்டுச்சேர்ந்து அவரிடத்திருந்து ஆயுதங்கள் வாங்கி அதனைக் கொண்டு தமிழர்களுக்கு உதிவி செய்ய வந்த இந்திய அமைதிப்படையைக் கொலை செய்ததை எந்த இந்தியனாவது மறப்பானா?

* திரு. இராஜீவ்காந்தி அவர்கள் பதவியிலில்லை. தேர்தல் வந்தால் மீண்டும் பிரதமர் பதவிக்கு வந்துவிடுவார். எனவே ஒரு வழியில் அவருடன் சமரசம் செய்வது போன்று காட்டுவதற்காக, காத்தமுத்து சிவானந்தனை (காசி ஆனந்தன்) அனுப்பி அவரை ஏமாற்றி பலத்த பாதுகாப்பு இல்லாமல் தமிழகம் வரவைத்து மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்ததை எந்த நாட்டவர்களும்தான் மறப்பார்களா? அல்லது மன்னிப்பார்களா?

* இந்தியா ஏற்படுத்திய ஒப்பந்தத்தை ஆதரித்தவர்கள் என்பதற்காக சென்னையில் வைத்து ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத் தலைவர் இந்திய நாட்டின் பெண்ணைத் திருமணம் செய்ததினால் இந்தியாவின் மருமகன் என்று இந்தியர்களால் அழைக்கப்பட்ட திரு. பத்மநாபா அவர்கள் உட்பட13 போராளிகளான தமிழ்ச் சகோதரர்களை துப்பாக்கியால் படுகொலை செய்ததனை இந்தியர்கள் மறந்துவிடுவார்களா?

இவ்வளவையும் செய்துவிட்டு, இனி ஒரு தடவை இந்தியா தவறு செய்யக் கூடாது என்று புலிகள் தலைவர் அறிக்கை விடுவதை இந்தியர் யாராவது சகித்துக்கொள்வார்களா? ஆனால், உண்மையில் புலிகள் விடயத்தில் இந்தியா இனி ஒரு தடவை தவறு செய்யாது. அது வேறு விடயம்!

இப்படியான நியாயங்கள் இந்தியாவின் பக்கம் இருக்கின்றன. இப்படியான நிலையில் உதவி தேவை, சுதந்திரம் தேவை என்றால் யார் இறங்கி வரவேண்டும்?

தமழ் மக்களது அழிவில் இந்தியாவுக்கு இரக்கம் ஏற்பட்டு அதன் மூலமாக இந்தியா உதவி செய்ய வேண்டும். இதுதான் இவர்களது கொள்கை என்றால் எத்தனை ஆயிரம் தமிழர்களை சிங்கள இராணுவம் கொலை செய்ய வேண்டும்? முன்பு இந்தியா தலையிட்டதற்கும் இரக்கம்தான் காரணம். இப்போது வை.கோ. குழுவின் பிரசாரம் மூலம் இரக்கம் ஏற்படும் என்று எண்ணுவது தவறு.

வை.கோ. அவர்கள் தமிழக அரசியலில் காலூன்ற பெரு முயற்சி செய்கிறார். எங்கள் இனத்தின் பிரச்சினையில் அவர் சவாரி செய்து கரை சேர வகுத்த திட்டமே மீண்டும் இந்தத் தலைக்காட்டுதல். ஐ.நா.செல்கிறேன், அமெரிக்கா செல்கிறேன் என்பதெல்லாம் அவரது அரசியலுக்கு தமிழ் நாட்டில் எதிர்காலத்தைத் தேடும் வழிவகைகளே!

எங்கள் இனத்தின் பிரச்சினைக்களுக்குத் தீர்வு உண்டு. எங்கள் இனம் மொத்தமாக அழிக்கப்படுவதற்கு முன்னர் தீர்வினைக் கண்டாகவேண்டும். இவற்றுக்கு முட்டுக்கட்டையாக நிற்பது புலிகள் இயக்கமே என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

வறட்டு கௌரவங்களைக் கையிலேந்தி நிற்கும் வரை தீர்வு எட்டுவதில் சிரமம்தான் ஏற்படும். யாருடைய உதவியுமில்லாமல் சண்டையிட்டு நாங்களே தமிழீத்தை மீட்டுவிடுவோம் என்ற நம்பிக்கையில் ஏனைய அனைவரையும் கொன்று தீர்த்தாகிவிட்டது. அதன்பலன்தான் இப்போது கிழக்குக் கைவிட்டுப் போனதாகும்.!

உங்களால் மட்டுமே முடியும் என்றால் எதற்காக இந்தியாவிடம் உதவி கேட்டு பிரமுகர்களை அனுப்ப வேண்டும்? உள்ளுக்குள் ஒன்றும் வெளியில் ஒன்றுமாக நடந்துக்கொள்ளக் கூடாது. முதலில் உங்களால் எங்கள் இனம் பலதரப்பட்ட இன்னல்களை அனுபவித்து வருகிறது என்பதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இலங்கைக்கு இந்தியா இராணுவ உதவிகளைச் செய்யாமல் விட்டால் நீங்கள் (புலிகள்) இலங்கை அரசை ஆயுதத்தால் வீழ்த்தி விடுவீர்களா? புலிகளது முகவர்கள் தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். தெருமுனைகளில் நின்று கொடிபிடித்து கூச்சல் போட்டு மத்திய அரசுக்கும் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்தியாவும் தளவாடங்களைக் குறைத்துக்கொண்டது. இதனால் மகிந்த ராஜபக்சே சீனாவிடமிருந்தும் பாகிஸ்தானிடமிருந்தும் வீரியமிக்க நவீன ரக கருவிகளைப் பெற்றுவந்துள்ளார். எனவே புலிகளின் முகவர்களை சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அனுப்பி அங்கே ஆர்ப்பாட்டம் செய்யும்படி கூறி உத்தரவிட வேண்டியதுதானே! அங்கே சென்றால் நையப் புடைத்து அனுப்பிவைப்பார்கள். இந்திய ஜனநாயகம் இவர்களுக்கு இடம் பொடுப்பதால் கூச்சல் இடுகின்றனர். இதுவல்ல தீர்வுக்கு வழி.

தீர்வு இந்தியாவின் கைகளில் இருக்கிறது. சரியான முறையில் அணுகி உரியவர்களை முடிவு எடுக்கும் அதிகாரமுடையவர்களைச் சந்தித்து தீர்வுக்கான வழிவகைகளைக் கண்டறிய வேண்டும்.

இந்தியா இதுவரையில் சந்தித்த அனைவருக்கும் கீழ்கண்டவாறு கூறிவருகிறது. அதிலும் கடந்த 15 ஆண்டுகளாகக் கூறிவருகிறது. அது என்ன? "வன்முறையாலும் இராணுவத்தாலும் இலங்கையில் பிரச்சினைகளைத் தீர்க்க இந்தியா அனுமதிக்காது, தமிழர்களது உரிமைகள் வழங்கப்பட வேண்டும், சமாதான வழியில் காணப்படும் தீர்வே சரியானது, இந்தியா அனைத்தையும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது, ஆவன செய்யப்படும் " இந்த வாக்கியங்களைத்தான் இந்தியா திரும்ப திரும்ப சொல்லிவருகிறது.

இந்தியா எதனையும் செய்யாமல் இவற்றை எதற்காகச் சொல்லி வர வேண்டும்? சமாதானவழியில் தீர்வு என்றால் யாரை அழைத்து வைத்து சமாதானம் பேசுவது. புலிகள் வன்முறைக் கொள்கையைக் கடைபிடிப்பவர்கள். புலிகளை அழைத்துவைத்து சமாதானம் பேச இந்திய மக்கள் அனுமதிப்பார்களா? பிரபாகரன் அவர்களும் பொட்டு அம்மானும் இந்திய அரசினால் தேடப்படும் குற்றவாளிகள். அவர்களை எப்படி அழைத்து வந்து பேசுவது. அந்த இயக்கத்தின் தலைவர்கள் அவர்கள். சட்டமும் மக்களும் அனுமதிக்கமாட்டார்கள்.

இந்திய மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்படவேண்டும். இந்திய மக்கள் என்பது தமிழ் நாட்டு மக்களின் மனங்களிலல்ல. ஏனைய மக்களின் மனங்களிலாகும். அவர்களின் மனங்களில் மாற்றம்வரவேண்டும் என்றால் முதலில் புலிகளின் கொள்கை மற்றும் மனங்களில் மாற்றம் வரவேண்டும்.

புலிகள் முன்னரைப் போன்று அல்ல திருந்திவிட்டார்கள். அனைவரையும் அணைத்துச் சென்று தீர்வுகாண முற்படுகிறார்கள், பழிவாங்குவது, வரவிருக்கும் பதவிகளுக்காக படுகொலை செய்வது, நாங்கள் மட்டும்தான் என்ற வறட்டுப் பிடிவாதத்திலிருந்து விடுபடுவது, குறிப்பாக இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுவது, ஆலோசனை வழங்குவது இவை போன்றவற்றில் மாற்றமும், திருத்தமும் ஏற்பட்டால் அருகில் இருக்கும் மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்படும்.

இதற்கு புலிகள் செயற்வடிவத்தில் தங்களை நரூபிக்கவேண்டும். இந்திய மக்களின் மனங்களில் ஏற்படும் மாற்றம்தான் எங்கள் இனத்தின் விடிவுக்கு துணைநிற்கும். இழந்த கிழக்கை மீட்பதானால் இந்தியாவின் உதவி கண்டிப்பாக வேண்டும்.

அமரர். இராஜீவ்காந்தி அவர்களின் கொலையாளிகளில் குற்றஞ்சாட்டப்பட்ட நளினியை இழப்புக்கு உள்ளான பிரியங்கா நேரடியாகச் சென்று பார்த்துள்ளார். நளினியுடன் பிரியங்கா என்ன அரசியலா பேசியிருப்பார்! மனிதாபிமான அடிப்படையில் நடந்த சந்திப்புத்தான். புலிகளின் பயங்கரவாதத்துக்குக் கிடைத்த வெற்றி என்று எண்ணினால் அதனைப் போன்ற மடமைத்தனம் வேறிருக்க முடியாது. நளினி இந்தியாவுக்கு சேவை செய்து சிறைசெல்ல வில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

எனவே, புலிகள் வறட்டுத்தன புகழ்ச்சியைக் கைவிட்டு, இந்தியாவிடம் மன்னிப்பும், வருத்தமும் தெரிவிக்க வேண்டும். எழுபதுகளிலும், எண்பதுகளிலும் இலங்கை பொலிசும் இராணுவமும் விரட்டும் போதெல்லாம் இந்தியாவுக்கு ஓடிச்சென்று மறைந்து வாழ்ந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும். ஏறிவந்த ஏணியை உதைத்து வீழ்த்தியவர்கள் என்ற பெயரை இல்லாதொழிக்க அவர்கள்தான் முயற்சிக்க வேண்டும். தமிழ் மக்களை அழிவிலிருந்து காப்பாற்ற இதனைச் செய்யவில்லை என்றால் இவர்கள் இன விடுதலைக்கான போராளிகள் இல்லை. வேறு வருவாய்க்கான சண்டைக்காரர்கள் என்றுதான் எண்ணவேண்டும்.

தீப்பொறி!

Anonymous said...

இலங்கையில் விடுதலைப் புலிகள் மட்டும் தானா குண்டு வைக்கிறார்கள்? அரசாங்கமே ஆங்காங்கே குண்டு வைத்துவிட்டு விடுதலை புலிகளை சாட்டி, உலக அரங்கில் பரபரப்பை தேடி, அவர்கள் தமிழருக்கு சொய்யும் கொடூரங்களால் அவ்வப்போது மனம்மாறி அறிக்கை விடும் உலக நாடுகளை தங்கள் பக்கம் வைப்பதற்காய் போடும் நாடகம் என்பது அங்குள்ள தமிழருக்கெல்லாம் தெரிந்த வெட்ட வெளிச்சம். இந்து, தினமலரிலிருந்து செய்திகளை
எடுப்பதை விட்டு, உண்மையைப் பார்த்தால் நல்லது!
அண்மையில் கொழும்பில் குண்டு ஒன்றை வெடிக்க வைத்து தன் இனமக்களையே காயப்படுத்திவிட்டு, இதைச் சாக்காய் காட்டி தமிழர்களை அங்கிருந்து வெளியேற்ற எடுத்த முயற்சி எல்லாருக்கும் தெரிந்தது. சொந்தச் சகோதரன் அங்கே கொல்லப் படுகிறன் அதைக் கேட்கத் துப்பில்லாது
வந்துவிட்டார்கள் பெரிய தகவல் தெரிந்த மாதிரி.. அரைகுறைச் செய்திகளுடன் வலைப்பதிவுகளில் ஈழத்தமிழரை,அவர்கள் போராட்டத்தை பற்றிப் பேசுவபர்களை பார்க்க பாவமாய்த் தானிருக்கிறது!

புலிகளின் இலக்கு பல முறை அரசியற் தலைகள், ராணுவம் என்றே இருந்திருக்கிறது. அவர்கள் தவறு செய்யாமல் இல்லை, செய்திருக்கிறார்கள், ஆனால் அதில்ருந்தும் பாடம் கற்று மீண்டி ருக்கிறார்கள். தென்னிலங்கை புயல் வெள்ளத்தால் அடிபட்ட போது, அரசே கவனியாது இருந்த போது
சிங்களருக்கு இரு லாரி நிறைய உணவு , பொருட்களைப் புலிகள் அனுப்பியது எல்லாம் கண்டதை உளறுபவர்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஜோசப் பால்ராஜ் said...

@ப்ளீச்சிங் பவுடர்
//அப்புறம் விடுதலை புலிகளை பற்றி உங்களுடைய கருத்தில் எனக்கு அவ்வளவா உடன்பாடு இல்லை. ராஜிவ் காந்தி குடும்பத்தினர் மண்ணித்தால் நாமும் அச்சம்மவத்தை மறந்து விடலாம்னு சொல்றது அவ்வளவு சரியா படல.

எவ்வளவு செய்திருப்போம் அவர்களுக்கு.//

நம்ம அமைதிப்படை போய் அங்க செஞ்சதையும் சேர்த்துதானே சொல்றீங்க?

//இன்னமும் இலங்கையில் ரயில் நிலையம், பஸ் ஸ்டாண்ட் போன்ற இடங்களில் குண்டு வெடித்து அப்பாவி பொது மக்கள் பலியாகி கொண்டு தானே இருக்கிறார்கள்.//

இலங்கையில எங்க குண்டு வெடிச்சாலும் புலிகள் தான் காரணம்னு சிங்கள அரசே நம்பல. பல குண்டு வெடிப்புகள் வேறு பல குழுக்களால் நடத்தப்படுகின்றன என அவர்களே சொல்லியிருக்கின்றார்கள். கட்டுநாயகா விமான படை தளத்தின் மீது புலிகளின் விமானங்கள் குண்டு வீசிய போது கொஞ்சம் தள்ளிப் போய் சிவில் விமான நிலையத்துலயும் குண்டு வீசியிருக்கலாமே, அவங்க அப்டி செய்யலையே.

//இலங்கை அரசும், விடுதலை புலிகளும் அப்பாவி பொது மக்கள் மீது நடத்தும் தாக்குதலை நிறுத்தும் வரையில் இந்தியா மட்டுமல்ல எந்த ஒரு நாடும் இவர்களுக்கு உதவ முன் வராது.//

உதவ முன்வரவில்லை என்பது உண்மையென்றால் அப்பாவிகளை கொன்று குவிக்கும் இருசாரருக்கும் இந்தியா உதவாமல் இருக்க வேண்டும். ஏன் இலங்கை அரசின் பயங்கரவாதத்திற்கு மட்டும் கொல்லை வாசல் வழியாய் உதவ வேண்டும்? இந்திய பொறியாளர்களை ஏன் அனுப்ப வேண்டும்? தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கொன்று குவிப்பதைக் கூட கண்டும் காணமல் இருக்க வேண்டுமா? ஒரு ராஜிவ் காந்திக்காக இன்னும் எத்தனை அப்பாவிகளின் உயிர்களின் அழிவை பார்த்துக் கொண்டு இருக்கப் போகிறோம்? இந்தியா செய்வதும் பயங்கரவாதம் தான் இராஜிவின் இரத்தத்திற்கு, நம் இந்தியர்களின் இரத்தத்தையும் குடிப்பதை என்னவென்று சொல்வது? விடுதலைபுலிகளுக்கு உதவுங்கள் உதவாது போங்கள், ஏன் இந்திய தமிழ் மீனவர்களை கொல்வதை கூட தடுக்க முடியாமல் சும்மா இருக்க வேண்டும்? தமிழக மீனவன் என்ன பாவம் செய்தான் ?

ARUVAI BASKAR said...

//அதையும் ராஜீவ் காந்தி குடும்பத்தினர் மன்னித்துவிட்டனர்!!!!.//
அவர்கள் ஏன் மன்னித்தார்கள் என்ற விவாதத்திற்குள் செல்ல விரும்பவில்லை .
ஆனால் அவர்கூட இறந்தார்களே பாதுகாப்பு படையினர் மற்றும் அப்பாவி பொதுமக்கள் , காயம் அடைந்த நூற்றுக்கணக்கானவர் , அவர்கள் மன்னித்தார்களா ?

அத்திரி said...

தீப்பொறி கூறியது தெள்ளத்தெளிவான உண்மை. ஆனால் பூனைக்கு மணி கட்டப் போவது யார்?.இன்னும் எத்தனை காலம்தான் ஈழ்த்தமிழர்கள் தாய் மண்ணில் இல்லாமல் பிற நாடுகளில் அகதிகளாய் வாழும் அவல நிலை மாறும்??????.