Thursday, September 25, 2008

புலிகள் கவர்ந்து சென்ற பொருள் என்ன??? --ரிப்போர்ட்டர்

ஹாட் டாபிக்

எங்கிருந்து வந்தார்கள்? எப்படி ஊடுருவினார்கள்? தாக்குதல் நடத்தினார்கள்?'' - வவுனியா விமானப்படை தளம் மீது கடந்த 9-ம்தேதி புலிகள் நடத்திய அந்த அதிர்ச்சித் தாக்குதலில் இருந்து இன்னும் மீளமுடியாமல் தவிக்கிறது இலங்கை அரசு. இதுபற்றி விசாரிக்க இரண்டு நாட்களுக்கு முன் ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

ஏழு டிவிஷன் ராணுவத்தினர், ஒரு விசேஷ படைப்பிரிவு, கமாண்டோ பிரிகேட் போன்றவை உள்ள கட்டுக்காவல் நிறைந்த இடம்தான் வவுனியா ராணுவ முகாம். அந்தப் பக்கம் விமானப்படைத் தளம். அங்கே 2 பட்டாலியன் அணிகள், ஒரு விசேஷ படைப்பிரிவு. இந்த 2 தளங்களுக்கும் இடையில் ஒரே ஒரு தெரு. இவ்வளவு கட்டுக்காவல் உள்ள இடத்துக்குள்தான் புகுந்து இலங்கை ராணுவத்தின் கண்ணில் விரலை விட்டு ஆட்டியிருக்கிறார்கள் புலிகள்.

இந்தத் தாக்குதல் எப்படி நடந்தேறியது என புலிகளின் ஆவணக் காப்பகத் தலைமையகம் தற்போது தகவல் வெளியிட்டிருக்கிறது. அந்தத் தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சி ரகம்.முன்பு கட்டுநாயகா விமானதளம், அனுராதபுரம் விமானதளங்கள் மீது புலிகள் வெற்றிகரமாகத் தாக்குதல் தொடுக்கக் காரணமாக இருந்தவர் கர்னல் சார்லஸ். புலிகளின் புலனாய்வுப் பிரிவு தளபதியான இவர், பள்ளமடுவில் நடந்த ஒரு கண்ணிவெடித் தாக்குதலில் உயிரிழந்து விட மகிழ்ச்சிக் கூத்தாடியது இலங்கை ராணுவம். அந்த நேரத்தில் சார்லஸ் இடத்துக்கு வந்தார் ரத்தினம் மாஸ்டர். `சார்லஸ் போனால் என்ன? நாங்கள் இருக்கிறோமே?' என்று உணர்த்த அவர் திட்டமிட்டு நடத்திய தாக்குதல்தான் வவுனியா விமானதளம் மீது விழுந்த அந்த பேயறை!

வவுனியா விமானதளத்திலுள்ள இரண்டு ரேடார்கள் புலிகளுக்கு பலவகையிலும் இடைஞ்சலாக இருந்ததால், அவற்றைத் `தூக்க' முடிவு செய்தார் ரத்தினம் மாஸ்டர். அதற்காகப் புலிகளின் தலைமையிடம் பேசி ஒப்புதல் வாங்கினார். அதையடுத்து 5 ஆண் கரும்புலிகளும், 5 பெண் கரும்புலிகளுமாக பத்துப் பேர் அவரிடம் வந்து சேர்ந்தார்கள். ரகசிய இடத்தில் நடந்த ஓர் ஒத்திகைக்குப் பின் அந்த பத்துப் பேர் படை இலங்கை ராணுவச் சீருடையுடன் வவுனியாவின் வடக்குப் பகுதிக்கு ஊடுருவியது. நெடுங்கேணி வெடிவைத்த கல்லு வழியாக, மணலாறு வந்து, அங்குள்ள சிங்கள கிராமங்களைக் கடந்து ஆசிக்குளம், சமனங்குளம் காட்டுப்பகுதிக்கு வந்து இரண்டு நாட்கள் தங்கியிருந்தது.

இன்னொருபுறம் `கிட்டு பீரங்கிப் படையணியின்' ஒரு பிரிவு, வவுனியா விமானதளம் மீது குண்டுமழை பொழிய வசதியாக, ஆர்டிலரி பீரங்கிகள் சகிதம் புளியங்குளம் பகுதியில் நிலைகொண்டிருந்தது. `ம்' என்றால் போதும், விமானதளத்தை நீண்டதொலைவில் இருந்தே பொரித்துவிடத் தயாராக இருந்தார்கள் அவர்கள்.

8-ம்தேதி நள்ளிரவு தாண்டி நிலா மறைந்த நேரம், ரத்தினம் மாஸ்டரின் உத்தரவு, வானலை வழியே மிதந்து வர, லெப். கர்னல் வினோதன், லெப். கர்னல் மதியழகி ஆகியோர் தலைமையில் தற்கொலைப்படையினர் பத்துப் பேரும் வவுனியா விமானதளத்தை நோக்கிப் பாய்ந்தார்கள். அவர்கள் கையில் டி-56, ஆர்.பி,ஜி., எம்.பி.எம்.ஜி., கிரனேட், ராக்கெட் லாஞ்சர்கள். கூடவே டொபி டோக், சார்ஜர் எனப்படும் தற்கொலைத் தாக்குதலுக்கான அங்கி.

இவர்களுடன் புலிகளின் சிறப்பு உளவுப்பிரிவைச் சேர்ந்த வழிகாட்டிகள், கண்ணிவெடி கண்டுபிடிப்பவர்கள் என நான்கு பேர். போதாக்குறைக்கு புலிகளின் வீடியோ படப்பிடிப்பாளர்கள் வேறு இவர்களுடன் சென்று கடைசிவரை அந்தத் தாக்குதலைப் படம் பிடித்திருக்கிறார்கள்(!).
விமானநிலையத்தைச் சுற்றியிருந்த முட்கம்பி வேலியை வெட்டி அகற்றிவிட்டு இவர்கள் உட்புகுந்தனர். இன்னும் 200 மீட்டா் தூரம் கடந்தால் விமானதளம். அந்த நேரம் பார்த்து எதிரே வந்த ஓர் இலங்கை ராணுவ வீரன் புலிகளின் அன்றைய சங்கேத வார்த்தையைக் கேட்டிருக்கிறான். ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொண்ட ராணுவ விமானப்படை முகாம்களில் வெளியாள் ஊடுருவி விடக்கூடாது என்பதற்காக தினமும் ஒரு சங்கேத வார்த்தையைப் பயன்படுத்துவது வழக்கம்.
சங்கேத வார்த்தை தெரியாத நிலையில் புலிகள் அந்த சிங்கள வீரனுக்கு துப்பாக்கிமூலம் பதில் சொல்லிவிட, அதிகாலை 3.05 மணியளவில் திட்டமிட்டதற்கு முன்பாகவே ஆரம்பமாகி விட்டது சண்டை. வழிமறித்த ஒரு தடையரண் மீது ஆர்.பி.ஜி. தாக்குதல் நடத்தினர் புலிகள். மறுபுறம் கட்டுப்பாட்டு கோபுரத்தைக் குறி வைத்தும் ராக்கெட்டுகள் பறந்தன. சிங்கள ராணுவம் சுற்றி வளைத்த நிலையில், தடையரணைத் தகர்ப்பதும் கடினமென்ற நிலையில் நவீன `ஐகாம்' வயர்லஸ் மூலம் தகவல் தந்தனர் புலிகள். அடுத்தநிமிடம் காற்றைக் கிழித்துக் கொண்டு வந்த ஷெல்கள் படைத்தளத்தை அதிர வைத்தன.

புளியங்குளத்தில் இருந்த கிட்டு பீரங்கிப்படை தந்த பரிசளிப்பு அது. அதில் விமான எதிர்ப்பு பீரங்கிகள் முடங்கிக்கொள்ள, சிங்கள ராணுவமும் பதுங்கிக் கொண்டது.

விமானப்படை தளத்தின் உள்ளே ஒரு பாறை மீதிருந்த ரேடார்களைக் குறிவைத்து முன்னேறினர் புலிகள். இன்னும் 75 மீட்டர் தூரம்தான். இந்தநேரத்தில் ரேடார் திரையில் ஒரு மர்மப்புள்ளி தெரிவதைக் கண்டு அதிர்ந்து போனார்கள் இலங்கை அதிகாரிகள். அது புலிகளின் விமானம்! உடனே கட்டுநாயகா விமானதளத்தில் இருந்த விங் கமாண்டர் சஞ்சயாவுக்குத் தகவல் பறந்தது. ஏர் வைஸ் மார்ஷல் ஷெரான் குணதிலகாவின் உத்தரவின்பேரில் `முதலை மூக்கு' எனப்படும் மிக்-27 விமானம், இரண்டு எப்-7 விமானங்கள் கட்டுநாயகாவிலிருந்து வவுனியாவை நோக்கி விரைந்தன. அப்போது அதிகாலை 3.34.

இதற்குள் 3.26-க்கு வந்த புலிகளின் முதல் விமானம் 3.31-க்கு 2 குண்டுகளை வீசியது. அடுத்த 2-வது நிமிடம் புலிகளின் 2-வது விமானமும் வந்து இரண்டு குண்டுகளை வீசிவிட்டுப் பறந்தது. பிறகு மீண்டும் வட்டமடித்து வந்து குண்டுவீசியது. புலிகளின் விமானங்கள் வீசிய மொத்த குண்டுகள் எட்டு. அந்த குண்டுகளில் ஒன்று விசேஷ படைப்பிரிவின் தளபதி கர்னல் நிர்மல் தர்மரத்னாவின் தங்குமிடம் அருகில் விழுந்தது. அன்று அவர் விடுமுறையில் போயிருந்ததால் தப்பினார்.தாக்குதல் முடிந்து புலிகளின் ஒரு விமானம் இரணைமடுவை நோக்கித் திரும்ப, மற்றொரு விமானம் புதுக்குடியிருப்பு நோக்கிப் பறக்கத் தொடங்கியது. அந்த விமானத்தை இலங்கை விமானப்படையின் எப்-7ஜி விமானம் ஒன்று, ஒன்றரை கி.மீ. தொலைவில் பின் தொடர்ந்தது. `சுட்டுவீழ்த்தவா?' என்று இலங்கை விமானி அனுமதி கேட்க, `சுடு!' என்ற அனுமதி தளபதியிடம் இருந்து வந்தது. இதன்பிறகு புலிகளின் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும் அது முள்ளியவளை காட்டுப் பகுதியில் விழுந்ததாகவும் பீற்றிக் கொண்டது இலங்கை விமானப்படை.

ஆனால் நடந்ததோ வேறு. இலங்கைப் போர் விமானம் நெருங்குவதை உணர்ந்து கொண்டதும் புலிகளின் விமானம் ஆகாயத்தில் ஓர் அந்தர்பல்டி அடித்து பலநூறு அடிகள் கீழே இறங்கி, பிறகு அதே வேகத்தில் வேறு திசையில் மேலெழுந்து `சுடுஎல்லையில்' இருந்து தப்பிவிட்டது என்பதே நிஜம் என்கிறார்கள் புலிகள்.

வவுனியா தாக்குதலில் இன்னும் சில மர்மங்களும் இருக்கின்றன. பிரபாகரனோடு சேர்ந்து படமெடுத்துக் கொண்டது பத்து கரும்புலிகள் மட்டும்தான். ஆனால் விமானப்படை தளத்தில் பதினோராவதாக ஒரு போராளியின் சடலம் ஒன்றை ராணுவத்தினர் கண்டெடுத்திருக்கிறார்கள். அவர் யார்? இந்தக் கேள்வி ஒருபக்கம் பரபரப்பை ஏற்படுத்த, மறுபக்கம், சண்டை நடந்த இடத்திலிருந்து ஒரு பிஸ்டலின் 16 ரவைகளை எடுத்திருக்கிறது ராணுவம். அந்த பிஸ்டலைப் பயன்படுத்திய போராளி, தாக்குதலுக்குப் பிறகு தப்பிச் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இதன்மூலம் புலிகளின் குறி வவுனியா படைத்தள ரேடார்கள் மட்டுமல்ல ஏதோ ஒரு முக்கிய ஆவணம் அல்லது பொருள்தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதை வெற்றிகரமாகக் கவர்ந்து கொண்டு புலிகளில் சிலர் தப்பிவிட்டதும் தெரிகிறது. புலிகள் கவர்ந்து சென்ற அந்தப் `பொருள்' என்ன? புலிகளின் அடுத்த தாக்குதலின் போது அது தெரிய வரலாம்.


நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்.

10 comments:

Unknown said...

WOW!!! Great!!!!
Thanks!!!

எங்கள் தலைவர் பிரபாகரன் (Our Leader Prabhakaran)

எங்கள் தாகம் தமிழீழம் (We Want Thamizh Eezham Now)

எங்களுக்கு வேண்டும் சுதந்திரம் (We Want Freedom)

ராஜபக்ச இனப்படுகொலையாளன் (Rajapakse Mass Killer)

http://www.puthinam.com/full.php?2b1VoAe0decYA0ecKA4K3b4U6Dh4d3f1e3cc2AmI2d434OO2a030Mt3e

அத்திரி said...

நன்றி சேவியர். இந்த நன்றிக்கு உரியவர் குமுதம் ரிப்போர்ட்டர் தான். புலிகளின் வான் தாக்குதல் பற்றி பத்திரிக்கைகளில் படித்தேன். ஆனால் சரியான் விவரங்கள் இல்லை.
இலங்கை செய்திகள் என்றாலே தமிழ்நாட்டு பத்திரிகைகள் பட்டும் படாமலும் இருக்கும். இதில் எனக்கு உடன்பாடு கிடையாது.

Unknown said...

வெல்லட்டும் தமிழர் படை.
வீழட்டும் சிங்களக் காடையர்..
பிறக்கட்டும் சுதந்திர தமிழீழம்..

உங்கள் பதிவினைப் படித்த போது நாமே நேரடியாகக் களத்தில் இறங்கிய உணர்வு பிறந்தது.கடைசித் தமிழன் இருக்கும் வரை போரில் தோல்வி என்பதே கிடையாது..


எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே..
- பாவேந்தர்

சுரேஷ் ஜீவானந்தம் said...

ஈழத் தமிழரின் சுதந்திரப் போராட்டம் வெல்லட்டும்.

அத்திரி said...

வாங்க சுரேஸ், எப்ப்டி இருக்கீங்க?

ஜோசப் பால்ராஜ் said...

மாவீரார்களாகி வெற்றியை உறுதி செய்ய போராடிய கரும்புலிகளுக்கு வீரவணக்கங்கள்.

கட்டாயம் தமிழீழம் மலரும்.

சுரேஷ் ஜீவானந்தம் said...

அத்திரி,
இந்தப் பதிவு சூடான இடுகைகளில் இருக்கிறது :)
தமிழன் மொக்கையல்லாதவற்றையும் சில நேரங்களில் படிப்பான் போலிருக்கிறது !?

சுரேஷ் ஜீவானந்தம் said...

அத்திரி,
நான் நல்லா இருக்கேன். நன்றி.

Anonymous said...

//புலிகள் கவர்ந்து சென்ற பொருள் என்ன???//

விமானம் ஒன்றை கவர்ந்து போனதாக கதை அடிபடுகிறது!!

அத்திரி said...

நன்றி வந்திய தேவன், சுரேஷ் பெங்களூரு எப்ப்டி இருக்கு?