Friday, 24 October, 2008

சினிமா,சினிமா,சினிமா,சினிமா

இந்த சினிமாத் தொடர் பதிவுக்கு என்னை அழைத்த தாமிராவுக்கு நன்றி. ஈழப்பிரச்சினை பதிவுலகில் சூடாக உலவிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் இது தேவையா? என்ற கேள்வியும் எழுகிறது. இருந்தாலும் சொந்தமாக பதிவு எழுதி ரொம்ப நாளாச்சு.கேள்விகளுக்கு போகிறேன்.

எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

வயது ஞாபகமில்லை. சின்ன வயதில் சினிமாதியேட்டர் செலவது என்றால் கொஞ்சம் கடினம். காரணம் ஊரில் பஸ் வசதி கிடையாது. அப்ப்டியே சென்றாலும் அம்பாசமுத்திரம்,கடையம்,தென்காசின்னு ரொம்ப தூரம் போகனும். கடையம்தான் பக்கத்தில். முதலில் பார்த்த சினிமா உறவைக் காத்த கிளி என்று நினைக்கிறேன். அப்போதெல்லாம் எங்க ஊர்ல ஒரே ஒருத்தர் வீட்டில்தான் டிவி உண்டு.அதுக்கப்புறம் காது கேளாதோர் பள்ளியில் ஒரு டிவி உண்டு. இந்தப் பள்ளியில் வாரம் ஒரு படம் டெக்கில் போடுவார்கள். அங்குதான் இந்தப்படம் பார்த்தேன். அடங்கொப்ப மவனே என்ற பாடல் மட்டும் நினைவில் உள்ளது.

என்ன உணர்ந்தீர்கள்?

படம் எப்ப முடியும் போய் துங்கனும்னு ஞாபகத்திலே துங்கிவிட்டேன்.
நன்றாக நினைவு தெரிந்து பார்த்த திரைப்படம் என்றால் அம்பை கல்யாணி தியேட்டரில் அக்னி நட்சத்திரம் பார்த்ததுதான். கார்த்திக், பிரபு நடிப்பு நல்லாவே இருந்திச்சி.

கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

எஸ் எஸ் ஆர் பங்கஜத்தில் தாமிர பரணி சென்ற வருடம் பார்த்தது. சண்டக்கோழி மாதிரி இருக்கும்னு நம்பிப் போய் கடசியில மெகா சீரியல பார்த்த திருப்தியுடன் வெளியே வந்தேன் ?????!!!!

கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

டிவிடியின் புண்ணியத்தில் சந்தோஷ் சுப்ரமணியம் & குருவி. சந்தோஷ் சுப்ரமணியம் நல்ல படம். ஹாசினி கதாப்பாத்திரம் நல்ல கற்பனை. குருவி மசாலா படம்னு எல்லாத்தையும் அதிகமா அரைத்து தலையில தடவிட்டாங்க கடப்பா மேட்டர் மட்டும் இல்லைனா படம் டப்பா.

மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

அன்பே சிவம், முதல் மரியாதை.
நடிகர் திலகத்தின் இயல்பான நடிப்பு, பாடல்கள் என அசரடித்தப் படம். வெட்டி வேரு வாசம் இன்னும் மனதில் நிற்கிறது. கம்யூனிசத்தை புதுமையாக சொன்னது அன்பே சிவம். ஆம்புலென்ஸில் மாதவன் சிறுவனிடம் பேசுமிடம், மாதவன், கமல் கிளைமாஸில் பேசுமிடம், நானும் கடவுள் என மாதவனிடம் விவாதம் செய்யுமிடம் என படம் முழுமைக்கும் ஒரு தாக்கதை ஏற்படுத்தியது

உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?

நேற்று வந்த விசயகாந்த் முதல் இன்று முளைத்த ரித்தீஸ் வரைக்கும் முதலமைச்சர் கனவில் மிதப்பதுதான் செம காமெடி.

தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

வாரமலர், குமுதம் ,விகடன். தற்போது முரளி கண்ணன்


தமிழ் சினிமா இசை?

இசையென்றால் இளையராஜாதான். பூங்கதவே தாள் திறவாய் இன்னும் இப்பாடலுக்கு அடிமையாயிருக்கிறேன் படிக்கும் வயதில் கேசட்டில் பாடல் பதியனும்னா 5 கிலோமீட்டர் தூரமுள்ள பொட்டல் புதூருக்கு சென்று வரவேண்டும். முதல் நாள் கொடுத்தால் மறு நாள் தான் கேசட் தருவார்கள். அனைத்து பாடல்களுமே மெலோடி பாடல்கள்தான். இதற்காக வீட்டில் நிறைய அடியும் வாங்கியிருக்கேன். தற்போது உதடு முனுமுனுக்கும் பாடல் கண்கள் இரண்டால், இதில் வரும் காட்சிகள் பல என்னுடைய செமஸ்டர் விடுமுறை காலத்தை நினைக்க வைக்கிறது.

தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

தாழையூத்தில் பாலிடெக்னிக் படிக்கும் போதுதான் ஆங்கில மற்றும் ஹிந்தி படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். முதலில் பார்த்த ஆங்கில படம் தி ரிபெல். ஜெட்லி நடித்தது என்பதை விட அவர் அடித்தது என்று சொல்லலாம். ஈவில் டெட் படம் பாத்துட்டு ஒரு வாரம் இரவில் தனியாக பாத் ரூம் செல்லவே பயந்தேன். ஹாஸ்டல் கலாட்டா அப்படி இருந்தது. முதலில் பார்த்த ஹிந்தி படம் ஹம் ஆப்கே ஹெயின் கோன்.பாடல்களுக்காகவே பலமுறை நெல்லை சென்ட்ரல் தியேட்டரில் பாத்து தாக்கிய படம்.
ஹிந்தியில் பிடித்த ப்டம் என்றால் சக்தே இந்தியா. ஆங்கிலத்தில் ரொம்ப பிடித்தப்படம் தி பீஸ்ட் ஆப்கானை சுற்றி வளைத்த ரஷ்ய ராணுவத்தை பற்றிய படம். திறமை குறைவான ராணுவ வீரனை பற்றிய படம்.
சமீபத்தில் ரசித்த மங்கோலிய படம் தி பிளையிங் வாரியர்ஸ். ( உபயம் வேல்டு மூவிஸ் சேனல்) இப்படத்திலிருந்து ஒரு காட்சியை அப்படியே குசேலனில் காப்பி அடித்திருந்தார்கள் .

தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
எதுவுமே கிடையாது. அப்படி ஒரு நல்ல காரியம் நடக்கலை....!!!!!

தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தாமிரா :சிறப்பாக ஒன்றுமில்லை. இப்போது போலவே பத்து பேரரசுவும், ஒற்றை அமீரும் எப்போதும் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.// ரிப்பீட்டு

அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

சினிமா கிடையாதா ? தமிழர்களின் மூச்சு கொஞ்சம் கஷ்டப்பட்டு சுவாசிக்கும். டப்பிங் ப்டங்கள் அதிகமாக வெளியாகும். தொலைக்காட்சிகள்தான் பாவம். இப்போதைக்கு பதிவுலகில் இருப்பதால் ஒரு வருடம் ஓடிவிடும்.

இந்த தொடருக்கு நான் அழைப்பது

1. கடையம் ஆனந்த்
2. சுரேஸ் கண்ணன்
3. பாபு
4. தமிழ் பறவை

5 comments:

Anonymous said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள். நம் ஊரை பற்றியும் சொல்லி அசத்தி இருக்கிறீர்கள்.
நான் தீபாவளிக்கு இன்று முதல் செல்ல இருக்கிறேன். 3-ந் தேதி வாக்கில் சென்னை வருவேன்.
அப்போது உங்கள் வேண்டுகோளை ஏற்று சினிமா பதிவு எழுகிறேன் நண்பா.
உங்கள் மேலான அழைப்புக்கு நன்றி.

முரளிகண்ணன் said...

\\ஈவில் டெட் படம் பாத்துட்டு ஒரு வாரம் இரவில் தனியாக பாத் ரூம் செல்லவே பயந்தேன்\\

same blood.

மிக இயல்பாக எழுதியிருக்கிறீர்கள் அத்திரி.

அத்திரி said...

\\ஈவில் டெட் படம் பாத்துட்டு ஒரு வாரம் இரவில் தனியாக பாத் ரூம் செல்லவே பயந்தேன்\\

//same blood.//


ஆஹா அங்கேயுமா?

நன்றி முரளி கண்ணன்

அத்திரி said...

நல்லபடியா ஊருக்கு போய்ட்டு வாங்க ஆனந்த். நன்றி

தமிழ்ப்பறவை said...

// பூங்கதவே தாள் திறவாய் இன்னும் இப்பாடலுக்கு அடிமையாயிருக்கிறேன் //
சேம்....அதுல வர்றா பி.ஜி.எம்ஸ் அடாடா...எக்ஸலண்ட் சாங்...
//எஸ் எஸ் ஆர் பங்கஜத்தில் தாமிர பரணி சென்ற வருடம் பார்த்தது. சண்டக்கோழி மாதிரி இருக்கும்னு நம்பிப் போய் கடசியில மெகா சீரியல பார்த்த திருப்தியுடன் வெளியே வந்தேன் ?????!!!!//
என்ன பண்றது பானுவுக்காகப் படம் பார்த்தேன்...ரசித்தேன்...
தொடர்பதிவுக்கு அழைத்ததை இப்போதுதான் பார்க்கிறேன் அத்திரி... மன்னிக்கவும்...ஆனால் பதிவு போட்டுவிட்டேன்...