Saturday, October 25, 2008

கலைஞர் டிவியின் டுபாக்கூர் அறிவிப்பு !!!!!!!!!

அஜீத்தின் பில்லா திரைப்படம் தீப ஒளித்திருநாளில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.!!!!!!!!???.



இப்படத்திற்கான அறிவிப்பில் கீழ்க்கண்டவாறு சொல்லப்படுகிறது.

""தமிழ்த்திரையுலகில் பெரும் திருப்பத்தை???!!!! ஏற்படுத்திய திரைப்படம்""

இதில்தான் எனது சந்தேகம் பெரும் திருப்பத்தை???!!!! எந்த திருப்பத்தை ஏற்படுத்தியது என்பதை கொஞம் சொல்லுங்க.!!!!!!!!

சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் நேரத்தை ஏன் சொல்லலை?????

13 comments:

Anonymous said...

ama tamil cinemavin miga periya thirupathai kodutha padam ajith oda billa, ena antha padathila than nayanthara bikini pottu vanthanga athai paarthu tamil makkal kaluthu ellam thirumbikichu atham miga periya thirupathai thantha padam ena dubakoor kalaingar tv solluthu

Anonymous said...

//எந்த திருப்பத்தை ஏற்படுத்தியது என்பதை கொஞம் சொல்லுங்க.!!!!!!!!
//

நயன்ஸின் ஆடைப் புரட்சி?

யோசிப்பவர் said...

Ha Ha Ha

அத்திரி said...

//நயன்ஸின் ஆடைப் புரட்சி?//

ஆஹா இதை நான் மறந்துட்டேனே

நன்றி பெயரில்லாதவரே

அத்திரி said...

வருகைக்கு நன்றி யோசிப்பவரே

Unknown said...

தீபாவளியே இல்லை என்று சொல்லும் இவர்களுக்கு ஏன் அன்று சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பி வசூலை வாரி குவிக்கின்றனர். தைரியம் இருந்தால் எங்களுக்கு இந்து ஓட்டே தேவை இல்லை என்று சொல்லி பார்க்கட்டுமே.

இதை விட மானங்கெட்ட பிழைப்பு வேறு எதுவும் இல்லை. நாண்டுகிட்டு போகலாம்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கலைஞர் டி.வி யும் தீபாவளியைக் கொண்டாடுகிறதா?

கலைஞர், டி.வி க்கு தீபாவளி வாழ்த்துக்கள்!

Anonymous said...

இலங்கையின் இறையாண்மைக்கு உலைவைக்கும் தமிழக அரசியல்!

- இந்திரஜித்

அண்மையில் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி விடுத்த ஒரு அறிக்கையில, இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில், இந்திய மத்திய அரசு 1971ல் பங்களாதேஷ் பிரிவினையின்போது செயற்பட்டதுபோல நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். தமிழ்நாட்டில் வை.கோபாலசாமி, ப.நெடுமாறன், தொல்.திருமாவளவன், எஸ்.ராமதாஸ் போன்றவர்கள் மட்டுமல்ல கருணாநிதியும் இலங்கையில் பிரிவினைவாதத்தை ஆதரிக்கிறார் என்பதுதான் இதன் அர்த்தம். இந்திய மத்திய அரசில் ஒரு பிரதான பங்காளியாகவும், ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகவும், நீண்டகால அரசியல் அனுபவம் உள்ளவராகவும் உள்ள கருணாநிதி, இன்னொரு சுதந்திரமும் இறைமையும் உள்ள நாட்டின்மீது இந்தியா வன்முறையை பிரயோகித்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என கூறுவது, அப்பட்டமான ஜனநாயக விரோத நிலைப்பாடு என்பதுடன், மிகவும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதுமாகும். இதன் மூலம் கருணாநிதி இலங்கையின் இறையாண்மைக்கு சவால் விட்டதுமல்லாமல், இந்தியா 1955ல் பாண்டுங் மாநாட்டில் ஒப்புக்கொண்டு பின்பற்றி வருவதாகச் சொல்லிக் கொள்ளும் பஞ்சசீலக் கொள்கையையும் கேலிக்கூத்தாக்கியுள்ளார். அதுமட்டுமல்ல சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேரு 1929ல் எழுதிய கட்டுரை ஒன்றையும் கருணாநிதி சுட்டிக்காட்டி, இந்தியா இலங்கையில் தலையிட வேண்டிய நேரம் வந்துவிட்டது எனவும் வலியுறுத்தியுள்ளார். நேருவின் கட்டுரையில் அவர் இந்தியா பலவீனமாக இருப்பதனால் (அப்பொழுது பிரிட்டிஸ் ஆட்சியின் கீழ் இருந்துது) அயல்நாடுகளில் உள்ள தனது பிரஜகளை பாதுகாக்க முடியாமல் இருக்கிறது என்றும், இந்தியா பலம் பெறும் காலம் வரும், அப்பொழுது அது தனது பிரஜைகளை பாதுகாக்கும் எனவும் கூறியிருந்தார். இதை மேற்கோள் காட்டிய கருணாநிதி, இப்பொழுது இந்தியா பலம் பெற்றுள்ளதால், அது இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

கருணாநிதியின் கூற்றின்படி, இலங்கையின் வடகிழக்கில் வாழுகின்ற தமிழர்களும் இந்தியப் பிரஜைகள் என்றே அர்த்தமாகிறது. இது இலங்கையின் சுதந்திரத்தையும் இறைமையையும் மட்டுமின்றி, இலங்கை தமிழர்களின் தனித்துவத்தையும்மதிக்காத, தமிழக, தமிழ் பேரினவாத சக்திகளின் ஆணவப்போக்காகும். இது ஒருபுறமிருக்க, இன்னொரு தமிழக இனவெறியரான ப.நெடுமாறன், இந்திய அரசாங்கம் கேட்டுக்கொண்டும்கூட,வன்னியில் இலங்கை அரசாங்கம் புலிகளுக்கு எதிராக மேற்கொண்டுள்ள யுத்தத்தை நிறுத்தமுடியாதென, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் கூறியிருப்பது, இந்தியாவின் இறைமையை மீறும் செயலென அறிக்கை விடுத்துள்ளார். இதன்பொருள் இலங்கை என்பது இந்தியாவின் ஒருபகுதி என்ற கருத்தை உள்ளடக்கி நிற்கிறது. இந்த அறிக்கையின் மூலம், கருணாநிதியைப்போலவே நெடுமாறனும் இலங்கையின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் அப்பட்டமாக மீறி நிற்கின்றார். தமிழக இனவெறி அரசியல்வாதிகளின் இத்தகைய உரைகளும் அறிக்கைகளும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை சீர்குலைப்பதை மட்டும் நோக்கமாகக் கொண்டவை மட்டுமல்ல. தமிழகத்திலும் தமிழ் இனவாதத்தை தூண்டி, அங்கும் ஒரு பிரிவினைப் போக்கை வளர்க்கும் நோக்கம் கொண்டவை. இந்திய அரசு இதை முளையிலேயே கிள்ளியெறிய தவறினால், தமிழ்நாடும் ஒரு காஸ்மீராக, காலிஸ்தானாக, நாகலாந்தாக,அசாமாக மாறக்கூடிய நிலை வெகுதூரத்தில் இல்லை.

1987 ஆண்டில் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப்படைமீது, புலிகள் தொடுத்த வலிந்த தாக்குதல்களால் இந்திய அமைதிப்படை புலிகளுடன் யுத்தம் புரிய நேரிட்டது. அப்பொழுது இந்திய அமைதிப்படை தமிழர்களை கொல்வதாகக்கூறி, இந்திய மத்திய அரசையும் இந்திய அமைதிப்படையையும் கருணாநிதி கடுமையாக வசை பாடினார். புலிகளுடனான யுத்தத்தில் இந்திய இராணுவத்தினரில் 1255 பேர் கொல்லபட்டனர், பல ஆயிரக்கணக்கான காயமுற்றனர். இவ்வாறு பல இழப்புகளைச் சந்தித்த இந்திய அமைதிப்படை 1990 ஆண்டு இந்தியாவிற்கு திரும்பியபொழுது, இந்திய அமைதிப்படை தமிழர்களுடன் சண்டைபோட்டு விட்டதாகக்கூறி, கருணாநிதி இந்திய அமைதிப்படையை வரவேற்க மறுத்தார். இப்பொழுது அதே கருணாநிதி, 1971ல் பங்களாதேஷ் பிரிவினையின்போது இந்தியா நடந்து கொண்டதுபோல இந்திய மத்திய அரசு நடந்துகொள்ள வேண்டுமென புத்தி பேதலித்தமாதிரி பிதற்றுகிறார். 1960களில் இந்தியா பின்பற்றிய அயலுறவு கொள்கைகளின் விளைவாக, தன்னைச்சுற்றிவர இருந்த நாடுகளான சீனா, பாகிஸ்தான், பர்மா, நேபாளம், சிக்கிம்,பூட்டான், ஆப்கானிஸ்தான் என எல்லாநாடுகளுடனும் எல்லைப்பிரச்சினையை உருவாக்கிக்கொண்டது. சீனாவுடன் 1962ல் ஒரு தடவையும்,பாகிஸ்தானுடன் 1965லும் 1971லுமாக இருதடவைகளும் எல்லையுத்தத்திலும் ஈடுபட்டது. சிக்கிமை 1972ல் தனது நாட்டுடன் இணைத்தக் கொண்டது. ஆனால் இந்தியாவின் தெற்கு பக்கத்தில் உள்ள இலங்கையைப் பொறுத்தவரை,(முன்னைய காலங்களில் சோழப்பேரரசர்களின் படையெடுப்புகள் நடந்தபோதிலும்) இருநாடுகளுக்கிடையிலும் தரைத்தொடர்புகள் இல்லாததாலும், இலங்கையின் பண்டாரநாயக்க ஆட்சிகளின் புத்திசாதுரியத்தினாலும்,இந்தியாவுடன் பெரும் முரண்பாடுகள் எதுவும் வராமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. அத்துடன் இந்தியாவின் மத்திய அரசாங்கத்தில் காங்கிரஸ் கட்சியின் ஏகபோகம் தகர்ந்து, ஜனதாதளம், பாரதீயஜனதா போன்ற கட்சிகளின் அரசுகள் உருவான பின்னணியில், அயல்நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளும் மேம்படத் தொடங்கின. குறிப்பாக சீனாவுடனும் பாகிஸ்தானுடனுமான இந்தியாவின் உறவுகள் முன்னெப்போதையையும் விட இப்பொழுது சிறப்பாக உள்ளன. ஆனால் தரைத்தொடர்புகளும் இல்லாமல், இந்தியாவைவிட எழுபதில் ஒரு மடங்கு சிறியதுமான,இலங்கையுடனான இந்தியாவின் உறவுகளை,இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் உள்ள தமிழ்தேசிய வெறிபிடித்த சக்திகள் சீர்குலைத்துவிடக்கூடிய அபாயம் இப்பொழுது எழுந்துள்ளது. விடுதலைப்புலிகள் தலைமையிலான இலங்கை தமிழ் பாசிசசக்திகள்,இந்தியாவின் இறைமைக்கு சவால்விட்ட அளவுக்கு வேறு எந்த அயல்நாடும் அதற்கு சவால்விட்டது கிடையாது எனலாம். அதேபோல தமிழக தமிழ் இனவெறி சக்திகள் (முன்பு சோழமன்னர்களின் படையெடுப்புகளை விடுத்துப்பார்த்தால்) அளவுக்கு வேறு எந்தவொரு அந்நிய சக்தியும் இலங்கையின் இறைமைக்கு சவால்விடுத்ததும் கிடையாது. இந்த உண்மையை இந்திய அரசாங்கத்தின் தலைவர்களும் கொள்கை வகுப்பாளர்களும் கவனத்தில் எடுப்பது அவசியம்.

இலங்கை இனப்பிரச்சினை என்பது தமிழ் இனவாதக் கண்ணோட்டத்தில் இருந்தோ அல்லது வெளிசக்திகளின் தலையீட்டினாலோ தீர்க்கப்படக்கூடிய ஒன்றல்ல. அது முற்றுமுழுதாக இலங்கையின் அனைத்து இனங்களினதும் இணக்கப்பாட்டின் மூலம் தீர்க்கப்படவேண்டிய ஒன்று. குறிப்பாக நாட்டின் சனத்தொகையில் 70 வீதத்தை வகிக்கும் சிங்களமக்களின் புரிந்துணர்வும் உடன்பாடும் அதற்குத்தேவை. இலங்கையின் 2500 வருட வரலாற்றில் தமிழகமன்னர்களின் பல படையெடுப்புகளின் காரணமாக, இந்தியா என்றால் ஒர் ஆக்கிரமிப்பு நாடு என்ற சிந்தனை சாதாரண சிங்களமக்களின் மனதில் ஊற்ப்போய் உள்ளது. அதுமட்டுமல்லாமல் இலங்கையைவிட்டால் தமக்கு வேறுநாடு கிடையாது என்ற கருத்தும் சிங்களமக்கள் மத்தியில் உண்டு. இலங்கை கௌதம புத்தரால் சிங்களமக்களுக்கென ஆசீர்வதிக்கப்பட்ட நாடு என்ற நம்பிக்கையும் சிங்களமக்களுக்கு உண்டு. மேலும் இந்த கருத்தோட்டங்களை அரசியல் ஆதாயம் தேடுவதற்காக சிங்கள இனவாதிகள் வளர்த்தும் வந்துள்ளார்கள். ஆனால் அதேநேரத்தில் சாதாரண சிங்களமக்கள், தமிழர் உட்பட ஏனைய சிறுபான்மை தேசிய இனங்களின் உரிமைகளை மறுப்பவர்கள் அல்ல. தீவிர இனவாதம் பேசிய சிங்கள அரசியல்வாதிகளை, இலங்கைச் சிங்கள மக்கள் எப்பொழுதும் நிராகரித்தே வந்துள்ளனர். இன்றுகூட இலங்கையில், இனங்களின் ஐக்கியத்தை விரும்பும் தமிழர்களின் விகிதாசாரத்தைவிட, அதை விரும்பும் சிங்களவர்களின் விகிதாசாரமே அதிகம். எனவே இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியா அனுசரணை வழங்குவதானால், அது தலையீடு அல்லது நிர்ப்பதித்தல் என்ற வகையில் இருக்குமானால்,அது பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். உள்நாட்டு அரசியல் தேவைகளுக்காக இந்திய மத்திய அரசாங்கம்,தமிழக இனவாத அரசியல்வாதிகளின் சொற்படி செயற்படுமானால்,அது இலங்கையின் ஸ்திரதன்மையை பாதிப்பதுடன் மாத்திரம் முற்றுப்பெறாது. இந்தியாவையும் அது கடுமையாக பாதிக்கும். ஏனெனில் சில தமிழக அரசியல்வாதிகள் அப்பாவித்தனமாக நம்புவது போல, புலிகள் சுயாதீனமான ஒரு தமிழ் தேசிய இயக்கமல்ல. அவர்களின் உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும் அனைத்து வேலைத்திட்டங்களிலும், அந்நிய வல்லாதிக்க சக்திகளின் கரங்கள் எப்போதுமே இருந்து வந்துள்ளன. அதில் முக்கியமானது இந்தியாவை சீர்குலைத்து, இந்திய உபகண்டத்தை யுத்தப்பிராந்தியமாக நிலை நிறுத்துவது. அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மகத்தான சுதந்திரப் போராட்டத்தை நடாத்திய இந்திய மக்கள்,தம்மீது அந்நிய –உள்நாட்டு நாசகார சக்திகளால் போடப்பட்டுள்ள சதி வலையை நிச்சயம் அறுத்தெறிவார்கள் என்று நம்பலாம்.

http://www.thenee.com/html/251008-3.html

அத்திரி said...

ஓட்டுக்கு மட்டும்தான் ஹிந்துக்கள் தேவை. மத்ததுக்கெல்லாம் தேவையில்லை.

நன்றி வணங்காமுடி

அத்திரி said...

//கலைஞர் டி.வி யும் தீபாவளியைக் கொண்டாடுகிறதா?//


எதுக்கு இந்த சந்தேகம், விநாயகர் சதுர்த்தியை விடுமுறை நாளாக கொண்டாடியவர்கள், இதையும் அப்படியே செய்வார்கள் என்று நினைத்தேன்.....வசூல் குறைந்துவிடுமே?????.

நன்றி ஜோதிபாரதி

அத்திரி said...

கருத்துக்கு நன்றி பெயரில்லாதவரே

Anonymous said...

உங்கள் வலைப்பூ படிக்க குப்பைமேடு போல் இருக்கிறது. எழுத எதுவும் இல்லாவிட்டால் எழுதவேண்டாம். எதையாவது எழுதியே ஆகவேண்டும் என்று யாரும் உங்களை தூக்கில் போட்டுவிட போவதில்லை.

ஒரு வாசகன்

அத்திரி said...

வாசகன் என்ற பெயரில்லாதவரே நன்றி. கலைஞர் டிவி யைபற்றி எழுதியதால் வந்த கோபம் என்றே நினைக்கிறேன். பெயரை தைரியமாக சொல்லலாமே.ஏன் குப்பைமேடையெல்லாம் கிளறுகிறீர்கள்.