ரெயில்வே அணையத்தால் ஒப்புதல் வழங்கப்பட்ட தமிழ்நாட்டின் ஐந்து புதிய ரெயில்வே திட்டங்கள் தமிழக அரசின் அலட்சியத்தால் கேள்விகுறியாயிருக்கின்றன.காரணம் அதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய இயலாது என தமிழக அரசின் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுவிட்டது.
திண்டுக்கல்லில் இருந்து பெரியகுளம், தேனி வழியாக லோயர் கேம்ப் வரை
திருவண்ணாமலையிலிருந்து செங்கம் வழியாக ஜோலார்ப்பேட்டை வரை
நீடாமங்கலத்திலிருந்து மன்னார்குடி வழியாக பட்டுக்கோட்டை வரை
மொரப்பூரிலிருந்து தருமபுரி வரை
அரியலூரிலிருந்து திருவையாறு வழியாக தஞ்சாவூர் வரை.
மேற்சொன்ன புதிய வழித்தடங்களுக்குத்தான் ரெயில்வே ஆணையம் ஒப்புதல் அளித்து மொத்தச் செலவான 1500 கோடி ரூபாயில் பாதியை அதாவது 750கோடியை மாநில அரசு ஏற்றுக்கொண்டால் உடனடியாக வேலை ஆரம்பிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இந்த திட்டங்கள் குறித்து தமிழக அரசுக்கு ரெயில்வே ஆணையம் பல முறை கடிதங்கள் அனுப்பபட்டபோதிலும் பதில் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 24ம் தேதி த்மிழக அரசின் தலைமைச்செயலரிடம் இருந்து ரெயில்வே ஆணையத்திற்கு அனுப்பிய கடித்ததில் "ஏற்கனவே சென்னை பறக்கும் ரயில் திட்டத்திற்கு தமிழக அரசு நிதி அளித்துள்ளது. இனியும் ரெயில்வே திட்டங்களுக்கு நிதி அளித்தால் மாநில அரசின் நிதி நிலைமை மோசமாகிவிடும் என்றும், இந்த ஐந்து திட்டங்களும் போதிய வருமானத்தை ஈட்டக்கூடியவை அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது. தெற்கு ரெயில்வேயில் அதிக வருமானம் கிடைப்பதால் அந்த நிதியை வைத்து இந்த திட்டங்களை நிறைவேற்றலாம் என்ச் யோசனை வேறு கூறப்பட்டுள்ளது.
மற்ற மாநில அரசுகள் ரெயில்வே ஆணையம் சொன்ன பலத்திட்டங்களை அதன் பாதி நிதியை கொடுத்து பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. மேலும் ரெயில்வே திட்டங்கள் தங்கள் மாநிலத்திற்கு வந்தால் போதும் என்று போட்டி போடுகின்றன.
ஆனால் தமிழக அரசு தங்கள் மாநிலத்திற்கு வரும் ரெயில்வே திட்டங்களுகு நிதி ஒதுக்குவதற்கே தயக்கம் காட்டுகிறது.
தமிழ்நாட்டு அரசுக்கு இதைவிட பல முக்கிய வேலைகள் இருப்பதால்??????இதை தவிர்த்து விட்டதோ என்னவோ. முக்கிய வேலைகள் என்னவென்று உங்களுக்கு தெரியாதா என்ன?
இந்த திட்டங்களை பற்றி சம்பந்தப்பட்ட தொகுதி எம்பி,எம் எல் ஏ க்கு தெரியுமா??????
நன்றி தினமலர்
யோகி இணைய ஒலி 24x7
14 years ago
8 comments:
அரசாங்கத்துக்கு கலர் டி.வி கொடுக்கவே நிதி பத்தலே,இதுல இதுக்கு எல்லாம் எப்படி நிதி ஒதுக்கறது?
சரியாச் சொன்னீங்க பாபு. இதே மாதிரி இன்னும் ஏகப்பட்ட தெவையில்லத மேட்டருக்கெல்லாம் நிதி போகுது.
வருகைக்கு நன்றி பாபு
\\இந்த ஐந்து திட்டங்களும் போதிய வருமானத்தை ஈட்டக்கூடியவை அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது\\
லாபத்தைப் பற்றி கவலைப்பட இதென்ன சொந்த கம்பெனியா?. தனியார் தான் வழித்தடத்தில் வருமானமில்லை என மறுக்கலாம். ஆனால் அரசுகள் பொதுமக்களுக்கு அவசியமில்லையெனில் கைவிடலாம்.பணமில்லை என்பது தவறு
வாங்க முரளி. நல்லாச்சொன்னீங்க. ஒருவேளை இலங்கைப்பிரச்சினை,மின்வெட்டுன்னு ரொம்ப பிசியா இருக்கதுனால தள்ளிப்போட்டுடாங்களோ என்னவோ?
என்னமோ போங்க, அடுத்த மாநிலத்தைச் சேர்ந்தவங்க ரயில்வே துறை அமைச்சர் ஆனாங்கன்னா அவங்க அவங்க மாநிலத்துக்கு புது திட்டங்கள் கொண்டு வரதுல இருக்கற ஆர்வம் நம்ம அமைச்சருங்களுக்கு என் இருக்க மாட்டேங்குதோ. தமிழகத்துக்கு இந்த அமைச்சரால எதாவது நல்ல உருப்படியான திட்டம் எதாவது வந்து இருக்கா?
வாங்க பதிவு. பாலம் கட்டுறதுலதான் கமிஷன் அதிகம் கிடைக்கும் போல. ரெயில்வேல கம்மியா கிடைக்குதுன்னு ஒன்னும் செய்யாம இருக்காரோ என்னவோ.
Colour TV - about 70 lakh at Rs. 2500 per TV - Rs. 1750 crore. Rice at Re 1 - where is the money for projects. Instead of giving Rs. 2500 TV, create opportunities by spending on rail and road projects and make people earn 2500 and buy a TV.
கருத்துக்கு நன்றி Sriram.
Post a Comment