மறந்திடிச்சிப்பா இது என்னோட 75 வது பதிவு
போன வாரம் மழை, மும்பையின்னு ரொம்ப சூடாவே இருந்தது.
மும்பை தீவிரவாதம் பற்றி நமது பதிவர்கள் கொதித்து எழுதியிருந்தார்கள். அதில் பதிவர் அருவை பாஸ்கர் சொல்லியிருந்த கருத்து சற்று வித்தியாசமா இருந்துச்சி. கீழே படியுங்க
//மேலும் பல வெளிநாட்டு வெள்ளைக்காரர்களும் கொல்ல பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .இனிமேல் எங்கள் நாட்டு அரசியல் வாதிகளை வெள்ளைக்காரர்கள் சும்மா விட மாட்டார்கள் . அதற்க்காகவாது எங்கள் நாட்டு அரசாங்கம் நிச்சயம் உங்களை ஒடுக்க பார்க்கும் .
நாங்களும் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடுவோம் .வெள்ளைக்காரர்கள் உயிர் என்ன இந்தியனின் உயிரை போல கேட்பார் இல்லாதது என்று நினைத்தீர்களா ?//
இந்நேரத்தில் தேசியாபாதுகாப்பு படைவீரர்கள், ராணுவ வீரர்கள், மும்பை பொலீஸ்க்கு ஸ்பெஷலா வணக்கம் வைங்கப்பா.
இந்த விசயத்திலையும் அரசியல் பண்ணும் அரசியல்வியாதிகளை தூக்கிப்போட்டு மிதிக்கவும்.
மழையிலும் கட்டிங் பார்த்த பள்ளிக்கரணை பேரூராட்சி.
இந்த வாரம் ரொம்பவே படுத்திடிச்சிப்பா நிஷா.வியாழக்கிழமை காலையில் 27.11.08 பாலாஜி பல் மருத்துவமனை தாண்டி தண்ணீர் அதிகமாக தேங்கியிருந்தது.பஸ் எல்லாம் போய்ட்டுதான் இருந்தது.பக்கத்துல இருக்க பெட்ரோல் பல்க் சொல்லிச்சின்னு பேரூராட்சி நிர்வாகம் நல்லா இருந்த ரோட்டுல பள்ளம் தொண்டி குழாய பதிச்சு நாசம் பண்ணிட்டாங்க. அப்படியே விட்டிருந்தா கூட அன்னைக்கு நைட்டே தண்ணி வடிந்திருக்கும்.கட்டிங்க்கு ஆசைப்பட்டு,ரோட்டை நாசம் செஞ்சு இப்ப 3 நாளா பஸ் போக்குவரத்தே கிடையாது. ஆட்டோ, ஷேர் ஆட்டோ காட்டுல அடைமழை.வேளச்சேரி போகனும்னா மேடவாக்கம் கூட்ரோடுவரவேண்டியிருக்குப்பா. மாநகர போக்குவரத்து கழகமாவது பள்ளிக்கரணைக்கு ஒரு கட் சர்வீசாவது விடலாம்.அட போங்கப்பு
இந்தபதிவு எழுதிக்கிட்டேயிருக்கும் போது ஷிவ்ராஜ் பாட்டீல் ராஜிநாமானு நியுஸ்ல சொன்னாங்க. இப்பவாவது மனுசருக்கு ரோஷம் வந்துதே...
கேள்விக்கு பதில் சொல்லுங்கடே
1.அம்மாவை பற்றி நல்லா தெரிஞ்சும் கம்யுனிஸ்ட்காரவுக ஏன் இப்படி பண்றாக.
2.காடு வெட்டி குரு வுக்கு ஜாமீன் கிடைச்சிருச்சே எப்படிடே?
3.விசயகாந்து எங்கே இருக்கார்?
இந்த வார காமெடி
சுப்பிரமணிய சாமி சொன்னது
" கருணாநிதியை நீங்களெல்லாம் தமிழர் என்று தானே நினைத்துக்கொண்டிருக்கிறீகள்?அவருடைய அப்பா முத்து வேலருடைய மூதாதையர்கள் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்கள்.""
பதிவை படிச்சிட்டு பிடிக்குதோ இல்லையோ கருத்தை சொல்லிட்டு போங்கப்பா.
அப்படியே ஓட்டையும் குத்திட்டு போங்க.
யோகி இணைய ஒலி 24x7
14 years ago
16 comments:
அத்திரி அசத்துங்க
ரொம்ப நன்றி முரளி
மெல்போர்ன் கமல் said...
அத்திரி said...
தங்களின் உணர்வுகளின் வலியை புரிந்துணர்கிறேண்
தங்களின் வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி அத்திரி! மானாட மயிலாட சிரித்துக் கொண்டிருந்த தமிழகம் இப்போதுதான் எங்களுக்காகா மனம் விட்டுப் பேதம் விட்டுப் பேச ஆரம்பித்திருக்கிறது எனும் போது மிக்க மகிழ்ச்சி நண்பா!
அத்திரி said...
தங்களின் உணர்வுகளின் வலியை புரிந்துணர்கிறேண்
தங்களின் வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி அத்திரி! மானாட மயிலாட சிரித்துக் கொண்டிருந்த தமிழகம் இப்போதுதான் எங்களுக்காகா மனம் விட்டுப் பேதம் விட்டுப் பேச ஆரம்பித்திருக்கிறது எனும் போது மிக்க மகிழ்ச்சி நண்பா!
வருகைக்கு நன்றி கமல்
முதலில் வாழ்த்துக்கள் அத்திரி.. சதம் அடிக்க முன்கூட்டிய வாழ்த்துக்கள்.. (உங்களுக்கு முன் நான் சதம் அடிச்சுருவன் இல்ல )
உங்கள் உணர்வுகள் பாராட்டக் கூடியவை..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. லோஷன்
ரொம்பப் பழசா இருக்கே..
//ரொம்பப் பழசா இருக்கே..//
எதுங்க பழசா இருக்கு ஆட்காட்டி
நன்றி
இதுகள் எல்லாமே? புதுசா ஏதாவது சொல்லி இருக்கலாம். இன்னும் எத்தனை நாள்களுக்குத் தான் இதையே ஓட்டுறது?
நன்றி ஆட்காட்டி
மூனு நாளா இனையத்துல மேய முடியல சகா.. வாழ்த்துகள்.. சீக்கிரம் சதமடிங்க
நன்றி சகா
வாழ்த்துக்கள் அத்திரி... நல்லா சூடா இருக்கு உங்க பதிவுகள்...
இந்த வார காமடியும், கேள்விகளும் நச்...
வாழ்த்துகள் அத்திரி, சீக்கிரமே சதம் அடிங்க.
நன்றி தமிழ்பறவை
நன்றி பதிவு
Post a Comment