Sunday, 23 November, 2008

என் சந்தேகங்கள்... கவித... இன்னும்...........

முதன்முறையா மொக்கை போடபோறேன். ஆதரவு குடுங்கோ.

முதல்ல என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கடே.

1.கலைஞரும் ,மாறனும் மாத்தி மாத்தி அறிக்கை வுட்டு திட்டிக்கிறாங்க, ஆனா ஏன் இவரும் கட்சியவுட்டு தூக்கமாட்டுக்காரு, அவரும் வெளிய போமாட்டுக்காரே ஏன்??????


2.எதோ கச்சா எண்ணையாமே விலை ரொம்ப குறைஞ்சிச்சாம். ஏன் பெட்ரோல் விலையை குறைக்கல????


3. கம்யூனிஸ்ட் காரவுக அம்மா கூட கூட்டணி சேரப்போறாங்களாம். அப்போ விசயகாந்தும்,பிஜேபியும் என்னலே பண்ணுவாங்க??????


4.அதிமுககாரவுக இனிமே யாரையும் புகழ்ந்து பேசக்குடாதுன்னு அம்ம சொல்லிருச்சே, இனிமே அதிமுக காரவுக பேசுரதுக்கு என்ன பண்ணுவாங்க??

மேலே கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிடனும். சொன்னா திருநெல்வேலி அல்வா தருவேன்.


இல்லைனா திருநெல்வேலி அருவா வரும்... சொல்லிட்டேன்கவித

உன்னைப் பார்த்த நாள் முதல்
உன் நட்புக்கு ஆசைப்பட்டேன்
பின்பு காதலிக்க ஆரம்பித்தேன்
உன்னை அல்ல
உன் நட்பை!!!!!!!!!!

( உபயம்: வெளச்சேரி டூ பீச் புகைவண்டி)


ஜோக்

கலைஞரும், ஜெயலலிதாவும் லவ் பண்ணினால் ஜெயா கலைஞரைப் பாத்து என்ன பாடல் பாடுவார்?????

.

." உன் தலை முடி உதிவதைக்கூட தாங்க முடியாது அன்பே."...........

17 comments:

கார்க்கி said...

புரிஞ்சிடுச்சு.. நீங்க ஆஃபீஸ் போக ஆட்டோ வேணும். அதுக்குத்தானே தொடர்ந்து ட்ரை பண்றீங்க.. நடத்துங்க.. மொக்கைனு சொன்ன ஒரே கரணத்துக்காக என்னுடைய நிபந்தனையற்ற ஆதரவு உண்டு சகா

முரளிகண்ணன் said...

அத்திரி, கடைசி ஜோக் அட்டகாசம்.

அத்திரி said...

நன்றி முரளி.


//நீங்க ஆஃபீஸ் போக ஆட்டோ வேணும். அதுக்குத்தானே தொடர்ந்து ட்ரை பண்றீங்க.. நடத்துங்க.//

ஆபிஸ்க்கு பஸ்ல போயி ரொம்ப போரடிச்சிருச்சி. அதான் சகா

ரெண்டு பேரும் என் கேள்விக்கு பதில் சொல்லலியே???????

இராகவன், நைஜிரியா said...

நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில்கள்.

1. நீர் அடிச்சு நீர் விலகாது.. பாசப்பிணைப்பு அதனால் தான் இன்னமும் இது மாதிரி நடந்து கொண்டு இருக்கின்றார்கள்.

2. இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை அல்லது அதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. தெரிந்தவுடன் விலை குறைக்கப்படும்.

3. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் கிடையாது.. இது அரசியலின் பால பாடம்.. இப்போ இந்த கேள்விக்கான அவசரம் என்ன நைனா?

4. அம்மா புகழ் பாடலாம் என் அதற்கு அர்த்தம். முகமது பின் துக்ளக் படத்தில் அவரை கல்லால் அடித்து கொல்லாதீர்கள் என்பார், அதற்கான அர்த்தம் என்ன என்பது உங்களுக்கு புரியாதா, அது மாதிரிதான் இதுவும்.

ஓட்டு போட்டாச்சு, எல்லா கேள்விகளுக்கும் பதிலும் சொல்லியாச்சு, இப்போ சந்தோஷம் தானே...
இராகவன், நைஜிரியா

அத்திரி said...

அருமையாக பதில் சொன்ன நைஜீரியா ராகவனுக்கு ரெண்டு கிலோ அல்வா பார்சல் பன்னுங்கப்பு.

நன்றி ராகவன்

Anonymous said...

அத்திரி ஆரம்பமே படு அமர்க்களமா இருக்கே?

அத்திரி said...

வாங்க ஆனந்த். ஏதோ நம்மால முடிஞ்சது. கேள்விக்கு பதில் எங்கே?

இராகவன், நைஜிரியா said...

//அருமையாக பதில் சொன்ன நைஜீரியா ராகவனுக்கு ரெண்டு கிலோ அல்வா பார்சல் பன்னுங்கப்பு.//

நல்ல வேலை .. ஆட்டோ
அனுப்பவில்லை.. நன்றி அத்திரி .. அல்வா எப்போ அனுப்ப போறீங்கன்னு விவரமா பதில் போடுங்கப்பூ... அல்வா சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு.. வெயிலின் அருமை நிழலில் தெரியும் அது மாதிரி அல்வா சாப்பிடாம இருக்கின்ற எங்களுக்குத்தான் அந்த அருமை தெரியமப்பு.. இராகவன், நைஜிரியா

அத்திரி said...

நல்ல வேலை .. ஆட்டோ
அனுப்பவில்லை.. நன்றி அத்திரி

பெட்ரோல் விக்கிற விலையில பக்கத்து ஏரியாவுக்கே ஆட்டோ அனுப்புறது கஷ்டம். இதுல நைஜீரியாவுக்கு வேர அனுப்பனுமா/,

அல்வா எப்போ அனுப்ப போறீங்கன்னு விவரமா பதில் போடுங்கப்பூ... அல்வா சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு..

சென்னைக்கு எப்ப வருவீங்கன்னு சொல்லுங்க அருவாவோட!!!!! இல்லை அல்வாவோட காத்துகிட்டு இருப்பேன்

இராகவன், நைஜிரியா said...

//சென்னைக்கு எப்ப வருவீங்கன்னு சொல்லுங்க அருவாவோட!!!!! இல்லை அல்வாவோட காத்துகிட்டு இருப்பேன் //

ராகவனுக்கு ரெண்டு கிலோ அல்வா பார்சல் பன்னுங்கப்புன்னு சொல்லிப்புட்டு, இப்போ சென்னை வரும் போது, அருவா.. இல்ல .. அல்வா தரேன்னு சொல்றதுதான்.. ஒரிஜினல் அல்வா.. இப்படியெல்லாம் ஏமாத்தக்கூடாது.. ரொம்ப தப்பு..அழுகுணி ஆட்டம்.. இதை கேட்க யாருமே இல்லையா ...அவ்..அவ்..வ்...வ்....இராகவன், நைஜிரியா

அத்திரி said...

உங்க வருகைக்காக "அல்வா" காத்துக்கிட்டே இருக்கு ராகவன்

பாபு said...

வீட்டுல எதுவும் பிரச்னை பண்ண மாட்டேங்கறாங்க ,அதான் இப்படி எண்ணெய்,அம்மா,கலைஞர் என்று ரொம்ப பெரிய பேச்சு எல்லாம் பேசறீங்க

அத்திரி said...

//வீட்டுல எதுவும் பிரச்னை பண்ண மாட்டேங்கறாங்க//

வாங்க பாபு

ஆஹா கிளம்பிட்டாங்கய்யா.........

பிரச்சினையெல்லாம் ஒரு சைடு ஓடிக்கிட்டு இருக்கும்

கேள்விக்கு பதில் எங்கே?

அதிரை ஜமால் said...

\\ஜோக்

கலைஞரும், ஜெயலலிதாவும் லவ் பண்ணினால் ஜெயா கலைஞரைப் பாத்து என்ன பாடல் பாடுவார்?????\\

ஹி ஹி ஹி

அத்திரி said...

வருகைக்கு நன்றி அதிரை ஜமால்

தமிழ்ப்பறவை said...

ஆஹா... அத்திரி நீங்களும் ஆரம்பிச்சுட்டீங்களா...?! வாழ்த்துக்கள்...
எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில் "காலம் பதில் சொல்லும்"...
ஜோக் சூப்பர்...

அத்திரி said...

வருகைக்கு நன்றி தமிழ்ப்பறவை