Sunday, December 7, 2008

என் சந்தேகங்கள்- ஏய் இந்த பசங்க-- இன்னும் பல கேள்விகள்

போன வாரத்துல நல்ல காமெடி நாடகமெல்லாம் நடந்திச்சி. முத்தமிழ் அறிஞரும் மாறன் சகோதரர்களும் மீன்டும் தமிழ்நாட்டின் நன்மைக்காக??!@!!! இணைஞ்சிட்டாங்க போல.இந்த இணைப்புக்கு பின்னால ஏகப்பட்ட மேட்டர் இருக்குதாம்.


போன புதன்கிழமை மதியம் விஜய நகர் பஸ் ஸ்டாப்புல பஸ்க்கு காத்திருக்கும் போது


5பள்ளிக்கூட பசங்க அரட்ட அடிச்சிட்டு இருந்தாங்கோ. திடீர்ன்னு அதுல ஒருத்தன் கொஞ்சம் அதிகமா சவுன்டு குடுத்தான். என்னன்னு பாத்தா ரெண்டு புள்ளைங்க வந்திட்டு இருந்திச்சிங்க. புன்னகையோட வந்திட்டு இருந்தாங்கோ. அந்த பையன் கலாய்ச்சிட்டே இருந்தான். இவங்களும் பதிலுக்கு. ரென்டு புள்ளைங்களும் பஸ்ல ஏறிட்டாங்க. பசங்க அதுக்கு முன்னாடியுள்ள பஸ்ல ஏற்ரதுக்கு போனாங்க. ரெண்டு புள்ளைங்கள்ல் ஒன்னு சொல்லிச்சி"ஏய் இப்ப பாரேன் அந்த பசங்க இங்க வருவாங்க" ந்னு சொல்லிச்சி. அதே மாதிரி பசங்களும் இந்த புள்ளைங்க ஏறின பஸ்ல ஏறிட்டானுக.இதே ஒரு பத்து வருஷம் முன்னாடி ஒரு பொண்ணு கிட்ட பேசனும்னாலே அவ்ளோதான்.


" எங்க அப்பா கிட்ட சொல்லிடுவேன்"
" இனிமே என் பின்னாடி வராதிங்க"
" அண்ணன் கிட்ட சொல்லிடுவேன்"


சொல்லிடுவாங்களோன்னு பயந்து எஸ்கேப் ஆனதும்,பின் அதேபெண்ணை வழிக்கு கொண்டு வந்ததும் நினைவுல வந்திச்சிப்பா.எந்த விசயத்துல பசங்களும்,பொண்ணுகளும் தெளிவா இருக்காங்களோ இல்லையோ இந்த விசயத்துல தெளிவா இருக்காங்க.


ஏதொ ஒரு பெயருக்கு பெட்ரோல் டீசல் விலைய கொஞ்சம் கம்மி பண்ணியிருக்கு மத்திய அரசு. ஆனா இப்படி கம்மி பண்ணியும் எண்ணெய் நிறுவங்களுக்கு லிட்டருக்கு 10ரூபா லாபம் கிடைக்குதாம். அரசுக்கு வரி விதிப்பின் மூலமா 25ரூபா லாபம் கிடைக்குதாம்.


என்னத்த சொல்ல.


கேள்விக்கு பதில் சொல்லுங்கடே
1.பிஜேபி நிலைமை என்னவாகும் தமிழ்நாட்டில்?
2.விசயகாந்தை இன்னும் காணோமே?
3.தேர்தலுக்கு அப்பறமும் அதிமுக கம்யூனிஸ்ட் கூட்டணி இருக்குமா?
4.ஆற்காட்டார் இனி என்ன செய்வார்?


இந்த பதிவு எழுதிக்கிட்டு இருக்கும் போது மத்திய அரசு வரியெல்லாம் கம்மி பண்ணியிருக்காங்கன்னு செய்தி வருது.. பின்னாடியே தேர்தல் வருதுப்பா>>>>>


ஜோக்


"டாக்டர் என் பையன் சரியா வளரமாட்டுக்கான் என்ன செய்ய"
"விலைவாசின்னு பேர் வைங்க அப்புறம் பாருங்க"


ஏகப்பட்ட மேட்டர் வச்சிருந்தேன். தாமிரா பதிவுல போய் கும்மி அடிச்சதுல மறந்துபோய்டிச்சு.

12 comments:

மங்களூர் சிவா said...

/

"டாக்டர் என் பையன் சரியா வளரமாட்டுக்கான் என்ன செய்ய"
"விலைவாசின்னு பேர் வைங்க அப்புறம் பாருங்க"
/

:)))

அருமை!

அத்திரி said...

நன்றி சிவா.

முரளிகண்ணன் said...

\\.பிஜேபி நிலைமை என்னவாகும் தமிழ்நாட்டில்?
2.விசயகாந்தை இன்னும் காணோமே?
3.தேர்தலுக்கு அப்பறமும் அதிமுக கம்யூனிஸ்ட் கூட்டணி இருக்குமா?
4.ஆற்காட்டார் இனி என்ன செய்வார்?
\\

இந்த கேள்விக்கான பதில்களையும் நீங்களே போடலாமே?

RAMYA said...

//
சொல்லிடுவாங்களோன்னு பயந்து எஸ்கேப் ஆனதும்,பின் அதேபெண்ணை வழிக்கு கொண்டு வந்ததும் நினைவுல வந்திச்சிப்பா.எந்த விசயத்துல பசங்களும்,பொண்ணுகளும் தெளிவா இருக்காங்களோ இல்லையோ இந்த விசயத்துல தெளிவா இருக்காங்க.
//

மெய்யாலுமா? அப்படியா பண்ணினீங்க?

RAMYA said...

1.பிஜேபி நிலைமை என்னவாகும் தமிழ்நாட்டில்?

ஒவ்வொரு கச்சியா முயற்சி பண்ணிகிட்டே இருப்பாங்க. எதுக்கு கூட்டு சேரத்தான்.
ஒரே குழப்பதுலே இருக்காங்கப்பா

2.விசயகாந்தை இன்னும் காணோமே?

புலி பதுங்குவது பாயத்தான். வேலு அலம்பலில் கொஞ்சம் என்னா செய்யலாம்ன்னு யோசிக்கிறார் போல

3.தேர்தலுக்கு அப்பறமும் அதிமுக கம்யூனிஸ்ட் கூட்டணி இருக்குமா?

கொஞ்ச நாள் போகட்டும்.

4.ஆற்காட்டார் இனி என்ன செய்வார்?

பாட்டு பாடறாராம், உலகே மாயம் வாழ்வே மாயம்.
பாட்டு காதுலே விழவில்லையா ?

Anonymous said...

நல்லா இருக்கு. கடைசி ஜோக் சூப்பர்.

சிவக்குமரன் said...

/

"டாக்டர் என் பையன் சரியா வளரமாட்டுக்கான் என்ன செய்ய"
"விலைவாசின்னு பேர் வைங்க அப்புறம் பாருங்க"
/

வளரமாட்டுக்கான்? meaning?

அத்திரி said...

//இந்த கேள்விக்கான பதில்களையும் நீங்களே போடலாமே?//

அடுத்த பதிவுல பதிலும் போடுகிறேன். நன்றி முரளி

//மெய்யாலுமா? அப்படியா பண்ணினீங்க?//

??????????!!!!!!!!!!!!! நன்றி ரம்யா

அத்திரி said...

//நல்லா இருக்கு. கடைசி ஜோக் சூப்பர்.//

நன்றி அண்ணாச்சி

அத்திரி said...

/வளரமாட்டுக்கான்? meaning?//


தமிழ் தெரியுமா சிவா மும்பை போனதும் மறந்திருச்சோ..........

நன்றி சிவா

அத்திரி said...

எல்லா கேள்விக்கும் நல்லா பதில் சொல்லியிருக்கீங்க ரம்யா நன்றி

ஆதவன் said...

வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.

http://www.thamizhstudio.com/

Add a Gadget - ல் இதை பயன்படுத்துக

வழி --> Add a Gadget --> select HTML/JavaScript

Title : தமிழ் ஸ்டுடியோ.காம்

Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>