Thursday, 18 December, 2008

அரசு கேபிளில் சன் குழும சேனல்கள் --திமுக அரசின் சோதனைகள்

அரசு கேபிளுக்கு சன் குழுமம் தனது சேனல்களை வழங்க ஒப்புக்கொண்டுவிட்டதாக ஹிந்து நாளிதழ் செய்தி வெளிவந்துள்ளது.அரசு கேபிளின் இயக்குனர் திரு உமா சங்கர் "டிடிசாட் ஆணைப்படி சன் குழுமம் தனது சேனல்களை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சன் சேனல்கள் இல்லாமல் இவ்வளவு நாளும் அரசு கேபிள் தள்ளாடிக்கொண்டிருக்கிறது.

வேலூரில் ஆரம்பிக்கப்பட்ட அரசு கேபிளின் சிக்னலை எந்த கேபிள் ஆப்பரேட்டரும் வாங்க வில்லை என்பது 100 சதவீத உண்மை. இவ்வளவுக்கும் வேலூர் மாவட்டத்தில் செயல் படும் கேபிள் நிறுவனம் திமுக எம் எல் ஏவினுடையது... . நெல்லையில் ஒரு சில ஆப்பரேட்டர்கள் மட்டும் அரசு கேபிள் சிக்னலை பயன்படுத்துகின்றனர். அரசு கேபிளில் சன் குழும சேனல்கள் இல்லையென்ற ஒரே காரணத்திற்காகத்தான் ஆப்பரேட்டர்கள் வாங்க மறுத்துள்ளனர். இனிமேல் அரசு கேபிள் காட்டில் மழைதான்...


சென்னையில் ஜனவரி மாதம் தொடங்கப்போவதாக அரசு கேபிள் அறிவித்துள்ளது. இப்போது சென்னையில் கேபிள் சேவையை வழங்கி வரும் எஸ் சி வி மற்றும் ஹாத்வே நிறுவனங்கள் எப்படி எதிர்கொள்ளப்போகின்றனவோ??


திமுக அரசின் சாதனைகளை நண்பர் செந்தழல் ரவி அவருடைய பதிவில் ஆதாரங்களோடு சொல்லியிருந்தார்..உண்மையிலே பலவித அரசியல் சூழ்நிலைகளுக்கிடையே இது கலைஞரின் சாதனைதான். ஆனனல் சென்ற வாரம் கலைஞர் தந்து பேட்டியில் மின்வெட்டை சமாளிக்க மத்திய அரசு மேலும் 1000மெகாவாட் மின்சாரத்தை தருவதாக ஒப்புக்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.மின்வெட்டு இன்னும் தமிழ்நாட்டில் அமலில் இருக்கு.. அன்னா இப்போதைக்கு அதை பத்தி யாரும் கண்டுக்கிறதில்லை..ஏன்னா அந்த விசயத்தை மூழ்கடிச்சி ஏகப்பட்ட விசயம் முன்னாடி நிக்குது.

செந்தழல் ரவி அவருடைய பதிவில் டாக்டர் புருனோ " நகர மக்களின் மத்தியில் தான் திமுக ஆட்சியின் செல்வாக்கு குறைந்துள்ளதாகவும், கிராமங்களில் செல்வாக்கு அப்படியே உள்ளதாகவும்" கூறியுள்ளார். இதில் எனக்கு உடன்பாடு கிடையாது. எப்படினா நகர்ப்புறபகுதிகளில் மின் வெட்டு 2மணி நேரமாக இருக்கும்போது கிராமங்களில் 12மணி நேரத்திற்கும் அதிகமாக அமல்படுத்தப்பட்டது.நகர்புறத்தில் மின்வெட்டு என்று அலறிய மீடியாக்கள், கிராமங்களில் அமல்படுத்திய மின்வெட்டை ஒரு தலைபட்சமாகவே சொல்லி வந்தன..அதாவது மின்வெட்டின் காரணமா கிராம மக்கள் சாலை மறியல் மாதிரியான போராட்டம் நடத்திய உடன் தான் மீடியாக்கள் வேறு வழியில்லாமல் அந்த செய்திகளை வெளிக்கொண்டு வந்தன.

என்னுடைய பார்வையில் திமுக அரசின் சோதனைகள்


1.மின்வெட்டில் முதலிடம்

2.டாஸ்மாக் விற்பனையில் முதலிடம்.
3.மறைமுக பஸ் கட்டண உயர்வில் முதலிடம்
4.சிறு,குறு தொழில்களை கைவிடுவதில் முதலிடம்.
5.இலவசங்களை வாரி வழங்குவதில் முதலிடம்.
6.அமவுண்ட் ரவுண்டா வாங்குவதில் முதலிடம்.
7. தம்முடைய வாரிசுகளை திருப்திபடுத்துவதில் முதலிடம் ( ஸ்டாலின் தவிர)

7 comments:

Cable Sankar said...

அமவுண்ட் ரவுண்டா வாங்குவதில் முதலிடம்.

super

அதிரை ஜமால் said...

me 1st

அத்திரி said...

//அமவுண்ட் ரவுண்டா வாங்குவதில் முதலிடம்.

super//.

நன்றி கேபிள் சார்.

நன்றி அதிரை ஜமால்

ஆ! இதழ்கள் said...

விலைவாசிய மறந்துராதீங்க... மறந்துராதீங்க...

அத்திரி said...

//விலைவாசிய மறந்துராதீங்க... மறந்துராதீங்க...//


ச்சீ... இப்பதான் சொன்னாங்க..இது மாநில அரசோட பிரச்சினைஇல்லையாம்.. மத்திய அரசோட பிரச்சினையாம்.

நன்றி ஆ இதழ்கள்

அவிச்ச கடலை‌‌ said...

டெண்டர் விடுவதில் முதலிடம்.விட்ட டெண்டர்களில் 25 சதவிகிதம் உடனடி கமிசன் பார்ப்பதில் முதலிடம்.மழை காலம் வரும் வரை டெண்டர் வேலைகளைத் தாமதமாக்குவதில் முதலிடம்.பிறகு அதிக தொகைக்கு மறு டெண்டர் பெறுவதிலும் அதிலும் கட்டிங் பார்ப்பதிலும் முதலிடம்.மணல்,கல் குவாரிகளில் உரிமம் பெறாமலேயே கள்ளத்தனமாக அள்ளுவதில் முதலிடம்.பொதுமக்களைக் காவல்துறைக்குச் செல்லவிடாமல் கட்டப் பஞ்சாயத்து செய்து காசு பார்ப்பதில் முதலிடம்.மொத்தத்தில் மக்களை மாங்கா மடையர்களாகவே தொடர்ந்து ஆக்கிக்கொண்டிருப்பதில் முதலிடம்.

அத்திரி said...

//டெண்டர் விடுவதில் முதலிடம்.விட்ட டெண்டர்களில் 25 சதவிகிதம் உடனடி கமிசன் பார்ப்பதில் முதலிடம்.மழை காலம் வரும் வரை டெண்டர் வேலைகளைத் தாமதமாக்குவதில் முதலிடம்.பிறகு அதிக தொகைக்கு மறு டெண்டர் பெறுவதிலும் அதிலும் கட்டிங் பார்ப்பதிலும் முதலிடம்.மணல்,கல் குவாரிகளில் உரிமம் பெறாமலேயே கள்ளத்தனமாக அள்ளுவதில் முதலிடம்.பொதுமக்களைக் காவல்துறைக்குச் செல்லவிடாமல் கட்டப் பஞ்சாயத்து செய்து காசு பார்ப்பதில் முதலிடம்.மொத்தத்தில் மக்களை மாங்கா மடையர்களாகவே தொடர்ந்து ஆக்கிக்கொண்டிருப்பதில் முதலிடம்.//


வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அவிச்ச கடலை