Wednesday, December 24, 2008

2008ன் சிறந்த திரைப்படங்கள்-- என் பார்வையில்

இந்த வருடத்தில் கிட்டத்தட்ட 100 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இதில் வெற்றியடைந்த படங்கள் மிகக்குறைவே. ஒரு சில படங்கள் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்து சக்கை போடு போட்டன.அப்படி வெற்றியடைந்த படங்களில் சிலவற்றை வரிசைப்படுத்தியுள்ளேன்

சுப்ரமணியபுரம்.


எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெற்றியடைந்தப்படம். டைரக்-ஷன், இசை, நடிகர்கள் அனைவருமே புதுமுகங்களாக இருந்தாலும், தெளிவான திரைக்கதையின் மூலம் வெற்றிக்கொடியை நாட்டிய படம். 1980களில் இருந்த கிராமத்து சம்பவங்களை அப்படியே கொண்டுவந்து நம் கண் முன்னால் நிறுத்தியவிதம் அருமை. வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் அரசியல் செல்வாக்குக்கு ஆசைப்படும் வில்லன் சொல் கேட்டு பாதை மாறுவது தான் கதை. ஒவ்வொரு கதாப்பத்திரத்தையும் மிக அழகாக செதுக்கி இருந்தார் டைரக்டர் சசிகுமார்.ஜேம்ஸ் வசந்தனின் இசையில் கண்கள் இரண்டால் பாடலும் சரி, அது படமாக்கப்பட்ட விதமும் சூப்பர்.

அஞ்சாதே


மிஷ்கின் டைரக்ஷனில் இரண்டாவது படம். எதிர்ப்பார்ப்போடு வந்து வெற்றியடைந்த படம்.இரு நண்பர்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை தன்னுடைய திரைக்கதை மூலம் அழகாக சொல்லியிருந்தார் மிஷ்கின். அஜ்மல்,நரேன்,பிரசன்னா,பாண்டிய ராஜன் கதாப்பாத்திரங்கள் படத்துக்கு கூடுதல் பலம். காவல்துறையின் தெரியாத சில பக்கங்களை நன்கு காட்டியிருந்தார்கள். கத்தாழைக்கண்ணால குத்தாத,கண்ணதாசன் காரைக்குடி பாடல்கள் தாளம் போடவைத்தன.
 
தசாவதாரம்



நம்ம பதிவுலக மக்களால் அதிகம் பேசப்பட்ட திரைப்படம். படத்தின் பலம் மற்றும் பலவீனம் இரண்டும் கமலஹாசன் தான்.கதையை இரண்டு வரியில் சொல்லிவிடலாம்.ஆனால் கதை சொல்லிய விதத்தில் அசத்தியிருந்தார்கள். நம்பி, பல்ராம் கதாப்பாத்திரங்கள் மூலம் படம் தப்பியது. இந்தப்படத்தின் மிகப்பெரிய பலம் ஆரம்பக்காட்சிகளும், இறுதிக்காட்சிகளும்.கமலின் நடிப்பு கிரீடத்தில் இந்தப்படம் ஒரு வைரக்கல்.

சந்தோஷ் சுப்ரமணியம்



ரீமேக் நாயகன் டைரக்டர் ராஜாவுக்கு 4வது வெற்றி தந்த படம். அப்பா மகன் பாசத்துக்கிடையே காதலையும் சேர்த்து சொன்ன படம். படத்துக்கு ஹாசினி கேரக்டர் தான் பலம். நிஜத்துலையும் இந்த மாதிரி பொண்ணுங்க கெடைச்சா பசங்களுக்கு சந்தோசம்தான். பிரகாஷ்ராஜ் வழக்கம் போல் கலக்கி இருப்பார். மொத்ததில் இளமையும்,குடும்ப சென்டிமென்டும் சேர்ந்து கலக்கிய படம்.
 
யாரடி நீ மோகினி



இதுவும் ரீமேக் படம்தான். வழக்கம் போல் அப்பாவை மதிக்காத தனுஷ்,வித்தியாசமான அப்பாவாக ரகுவரன், எப்போதும் டென்சனில் இருக்கும் நயந்தாரா இவர்களை சுற்றி வரும் கதை. முதல் பாதி நகைச்சுவையிலும், இரண்டாம் பாதி சென்டிமென்டிலும் போட்டுத்தாக்கி இருப்பாங்கோ. யுவனின் இசையில் அனைத்துப்பாடல்களும் அருமையாக இருந்தது.

இந்த மாதம் ரிலீசான படத்தையெல்லாம் கணக்கில் எடுக்கலை. இந்த சிறந்த படங்கள் வரிசையில் விடுபட்டிருக்கும் மற்றபடங்களை பற்றி அண்ணன் முரளி கண்ணன் எழுதுவார். ரொம்ப நாளா அவரைக்காணோம்.



டிஸ்கி: பதிவ படிக்கிற பயலுவ ஓட்டயும் குத்திட்டு போங்கப்பு... அடுத்த பதிவு 2008ல் சிறந்த மொக்கைப்படங்களை பற்றி

36 comments:

நட்புடன் ஜமால் said...

இந்த வரிசைகள் எனக்கும் பிடிக்கும்.

ஆனால் இப்படி எழுதத்தான் தெரியாது.

கார்க்கிபவா said...

நாயகன் லிஸ்ட்ல காணோம்?

அத்திரி said...

//இந்த வரிசைகள் எனக்கும் பிடிக்கும்.

ஆனால் இப்படி எழுதத்தான் தெரியாது.//


பதிவை வெளியிடுவதற்குள் பின்னூட்டமா>>>
நீங்க ரொம்ப Fast

நன்றி ஜமால்

அத்திரி said...

//நாயகன் லிஸ்ட்ல காணோம்?//

சகா உங்க ஆசை அடுத்த பதிவில் நிறைவேற்றப்படும்

நட்புடன் ஜமால் said...

\\டிஸ்கி: பதிவ படிக்கிற பயலுவ ஓட்டயும் குத்திட்டு போங்கப்பு... அடுத்த பதிவு 2008ல் சிறந்த மொக்கைப்படங்களை பற்றி\\

குத்தியாச்சி அப்பு

நட்புடன் ஜமால் said...

\\பிளாகர் அத்திரி கூறியது...

//இந்த வரிசைகள் எனக்கும் பிடிக்கும்.

ஆனால் இப்படி எழுதத்தான் தெரியாது.//


பதிவை வெளியிடுவதற்குள் பின்னூட்டமா>>>
நீங்க ரொம்ப Fast

நன்றி ஜமால்\\

Fast-ஆ இல்லையான்னு தெரியாது

ஆனா நான்தாங்கோ first

பாபு said...

சரோஜா என்ன ஆச்சு???

வினோத் கெளதம் said...

//ரீமேக் நாயகன் டைரக்டர் ராஜாவுக்கு ஹாட்ரிக் வெற்றி தந்த படம்//

ராஜா 4 வெற்றி படங்கள் அல்லவா கொடுத்து உள்ளார்..

இருந்தாலும் ரொம்ப சரியான List .
சரோஜா Missing..

சினிமா ரசிகன் said...

சரோஜா missing???

Anonymous said...

சுப்பிரமணியபுரம் எனது சாய்ஸ்
சரோஜா? என்னாசுங்க?

narsim said...

கலக்கல்..

யாரடி மோகினி தவிர்த்து..

வெங்கட்ராமன் said...

அடுத்த பதிவு 2008ல் சிறந்த மொக்கைப்படங்களை பற்றி

சீக்கிரம் போடுங்க தலைவா?

Thamira said...

narsim சொன்னது…
கலக்கல்..

யாரடி மோகினி தவிர்த்து../// அவ்வ்வ்.. சேத்துக்குங்க‌ப்பா..! இவ்ளோ சிம்பிளா ப‌திவு போட்ருக்கிறியே.. இந்த‌ப்ப‌ட‌ங்க‌ளை தேர்வு செய்த‌து எந்த‌த் தேர்வுக்குழு?

அத்திரி said...

//Fast-ஆ இல்லையான்னு தெரியாது

ஆனா நான்தாங்கோ first//

மேலான ஆதரவுக்கு நன்றி ஜமால்

//சரோஜா என்ன ஆச்சு???//

சரோஜா பாக்கலை பாபு.. வருகைக்கு நன்றி

அத்திரி said...

//ராஜா 4 வெற்றி படங்கள் அல்லவா கொடுத்து உள்ளார்..//

மாற்றிவிட்டேன்

இருந்தாலும் ரொம்ப சரியான List .
சரோஜா Missing..//


சரோஜா பாக்கலை நன்றி வினோத்

அத்திரி said...

//சரோஜா missing???

நன்றி சினிமா ரசிகன்

சுப்பிரமணியபுரம் எனது சாய்ஸ்
சரோஜா? என்னாசுங்க?//

நன்றி கவின்

அத்திரி said...

//கலக்கல்..

யாரடி மோகினி தவிர்த்து..//


இன்றைக்கு சதமடித்த தலயே வருக... நன்றி நர்சிம்

//அடுத்த பதிவு 2008ல் சிறந்த மொக்கைப்படங்களை பற்றி

சீக்கிரம் போடுங்க தலைவா?//


போட்டிருவோம் தலைவா .நன்றி வெங்கட்ராமன்

அத்திரி said...

//narsim சொன்னது…
கலக்கல்..//
யாரடி மோகினி தவிர்த்து../// அவ்வ்வ்.. சேத்துக்குங்க‌ப்பா..! இவ்ளோ சிம்பிளா ப‌திவு போட்ருக்கிறியே.. இந்த‌ப்ப‌ட‌ங்க‌ளை தேர்வு செய்த‌து எந்த‌த் தேர்வுக்குழு?//


இன்னைக்கு போன் பண்ணலாம்னு நினைச்சேன். நீங்களே வந்துட்டீங்க. இதெல்லாம் என்னோட சாய்ஸ் அண்ணே.

Anonymous said...

2008 ன் சிதைந்த திரைப்படங்கள்http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4693:2008-12-24-07-58-02&catid=74:2008

Anonymous said...

கலக்கல்

அத்திரி said...

//கலக்கல்//

நன்றி ஆனந்த்

Poornima Saravana kumar said...

//கார்க்கி சொன்னது…
நாயகன் லிஸ்ட்ல காணோம்?

//

அது எந்த லிஸ்ட்ல வரும்னு உங்களுக்கு தெரியாத ??

Poornima Saravana kumar said...

// அத்திரி கூறியது...
//நாயகன் லிஸ்ட்ல காணோம்?//

சகா உங்க ஆசை அடுத்த பதிவில் நிறைவேற்றப்படும்

//

காதில ராஜ பாட்டு கேட்ட மாதிரி இருக்கு

Poornima Saravana kumar said...

super:))

Anonymous said...

:))

கானா பிரபா said...

அருமையான தொகுப்பு, சுப்ரமணியபுரம் ஒரு மைல்கல்

Cable சங்கர் said...

அருமை அத்திரி..

ஆளவந்தான் said...

நாயகன், குருவி, குசேலன் போன்ற படங்களை வேண்டுமென்ற தவிர்த்ததை ”தளபதி”களின் மன்றங்களின் சார்பாக கண்டிக்கிறேன்.

மீண்டும் இத்தவறு நடக்குமேயானா, ஆட்டோ அனுப்புவதை தவிர வேறு வழியில்லை

அத்திரி said...

//அது எந்த லிஸ்ட்ல வரும்னு உங்களுக்கு தெரியாத ??
காதில ராஜ பாட்டு கேட்ட மாதிரி இருக்கு
super:))//

வருகைக்கு நன்றி பூர்ணிமாசரண்

//:))//
நன்றி தூயா. அடிக்கடி நம்ம கட பக்கம் வாங்க

அத்திரி said...

//அருமையான தொகுப்பு, சுப்ரமணியபுரம் ஒரு மைல்கல்//

முதல் வருகைக்கு நன்றி கானா பிரபா

//You've a nicely done site with lots of effort and good updates. I would like to welcome you to submit your stories to www.surfurls.com and get that extra one way traffic to your site.//

நன்றி சினி மசாலா

//அருமை அத்திரி..//

நன்றி கேபிள் சார்.....

அத்திரி said...

//நாயகன், குருவி, குசேலன் போன்ற படங்களை வேண்டுமென்ற தவிர்த்ததை ”தளபதி”களின் மன்றங்களின் சார்பாக கண்டிக்கிறேன்.

மீண்டும் இத்தவறு நடக்குமேயானா, ஆட்டோ அனுப்புவதை தவிர வேறு வழியில்லை//

முதல் வருகைக்கு நன்றி ஆளவந்தான்.

டிஸ்கிய நீங்க படிக்கலையா//

ஆளவந்தான் said...

//முதல் வருகைக்கு நன்றி ஆளவந்தான்.
//
நன்றி!


//டிஸ்கிய நீங்க படிக்கலையா//

அதப்படிச்சுட்டு கொந்தளிச்சு போய் தான் இந்த பின்னூட்டமே...

முரளிகண்ணன் said...

சிறப்பாக எழுதியுள்ளீர்கள்

அத்திரி said...

//சிறப்பாக எழுதியுள்ளீர்கள்//

ரொம்ப நன்றி அண்ணே

நாடோடி இலக்கியன் said...

நல்ல தெரிவுகள்.
வேற ஒன்னும் தேறாது,கிட்டதட்ட இதே வரிசைதான் டிசம்பர் 31 எல்லா சேனல்களிலும் இடம்பெறும்.
ஆனாலும் சன் டீவியில் தெனாவட்டுக்கு முதலிடம் கொடுக்கப்படும்.

அத்திரி said...

//நல்ல தெரிவுகள்.
வேற ஒன்னும் தேறாது,கிட்டதட்ட இதே வரிசைதான் டிசம்பர் 31 எல்லா சேனல்களிலும் இடம்பெறும்.
ஆனாலும் சன் டீவியில் தெனாவட்டுக்கு முதலிடம் கொடுக்கப்படும்//

வருகைக்கு நன்றி நாடோடி