Tuesday, January 6, 2009

ரிலையன்ஸ்பிரஷும் நானும்.........

ராமாபுரத்திலிருந்து பள்ளிக்கரணை வந்து 6 மாதம் ஆகிறது. ராமாபுரத்தில் இருந்த வரைக்கும் மளிகை சாமான் வாங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை. அங்க திருவள்ளுவர் சாலையில் உள்ள அய்யனார் சூப்பர் மார்க்கெட்டில் எல்லா சாமான்களும் முக்கியமா மளிகை சாமான்கள் நல்ல குறைந்த விலையிலும் தரமானதாவும் இருக்கும். ஒன்னும் பிரச்சினையில்லாம இருந்தது. இன்னும் பள்ளிக்கரணையில ஒரு கடை கூட செட் ஆகல... எல்லா கடையிலுமே விலை ஜாஸ்தியா இருக்கு. மேடவாக்கம் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள முருகன் ஸ்டோரில் இரண்டு மாதங்கள் மளிகை வாங்கினேன். அதுலயும் பிரச்சினை வந்தது. லிஸ்ட் கொடுத்திட்டு வந்திடனும் டோர் டெலிவரி பண்ணிடுவாங்க. ஆனா ஒரு சில பொருட்கள் நாம கேட்ட கம்பெனி அயிட்டம் இருக்காது. பக்கத்துல புட் வேல்டு சூப்பர் மார்க்கெட் இருக்குதுன்னு ஒரு நாள் தெரியாத்தனமா உள்ள நுழைஞ்சிட்டேன்.உள்ள போனா மளிகை சாமான்களைவிட மற்ற பொருட்கள் தான் அதிகம் இருந்தது. சரி அப்படியே வாங்கலாம்னு பொருட்களை பாத்தா விலை இரண்டு மடங்கு ஜாஸ்தி.. அப்படியே ஒன் ஸ்டெப் பேக்..........




தி.நகர் சரவனாஸ்டோரில் மளிகை பொருட்கள் வாங்கலாம்னு போனால் அங்கேயும் புட் வேல்டு கதைதான்... ஆனா சரியான விலை. பொருட்கள் கம்மி. எதுக்கு தி.நகர் அலையனும் எங்க தெருவில் உள்ள  கடையில் 1 மாதம் சாமான் வாங்கினேன். அந்த மாசம் எனக்கு செலவு கிட்டதட்ட 500 ரூபாய் அதிகமாகியது... உதாரணத்துக்கு பள்ளிக்கரணை மெயின் ரோட்டில் உள்ள கடையில் ஒரு பினாயில் பாட்டில் விலை 15ரூபாய் என்றால் எங்க தெருவில் உள்ள  கடையில் அதே பினாயில் விலை 25ரூபாய்....இந்த ஒரு சாமானே இப்படினா மத்த விலையெல்லாம்!!!!!!!!!!!!!!


மீண்டும் தி.நகர் இந்த வாட்டி சரவணா மளிகை ஸ்டோரில் கடந்த 3 மாதங்களாக வாங்கிகொண்டிருக்கிறேன். இதுக்காக தி.நகர் போகும்பொழுது பிளஸ்டிக் சாமான் எடுக்கனும், அது எடுக்கனும், இது எடுக்கனும்னு சொல்லி என்னோட பட்ஜெட் மறுபடியும் எகிற ஆரம்பமாச்சு. என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை இருக்கு... என்னுடைய தம்பி சொன்னான்"ரிலையன்ஸ் பிரெஷில் எல்லாம் விலை கம்மியா இருக்குடான்னு.... என் வீட்டுலயும் ரிலையன்ஸ் பிரெஷ்க்கு போகனும் அப்படினு.....


கடந்த ஞாயிறு காலை ரிலையன்ஸ்க்கு போனேன்.. உள்ள நுழைவதற்கு முன்னால் தங்கமணியிடம் எல்லா பொருட்களின் விலையை பாத்துட்டுதான் வாங்கனும் சொல்லித்தான் உள்ள போனேன். காய்கறிகலையெல்லாம் நல்லாவே பேக் பண்ணி வச்சிருந்தாங்க. கூட்டத்துக்கும் குறைவில்லை...ஒரு ஆள் 2000ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினார் அப்படி என்ன வாங்கினார்னு பாத்தா கெலாக்ஸ்,லேய்ஸ், ஓட்ச் அப்படின்னு வாயில நுழையா பெயர் கொண்ட எல்லாத்தையும் வாங்கி போட்டிருந்தார்...... அங்க ஆப்பிள் மட்டும்தான் நல்லா இருந்திச்சி.. மத்ததெல்லாம்


உதாரணத்திற்கு 1லிட்டர் கோல்டுவின்னர் விலை ரூபாய் 71
இதே கோல்டுவின்னர் விலை சரவணா மளிகை ஸ்டோரில் விலை ரூபாய் 65..


நீங்களே சொல்லுங்க...............????????????????

டிஸ்கி: நான் பக்கா மிடில் கிளாஸ்ங்க......

35 comments:

கார்க்கிபவா said...

அட ஆனந்த விகடனே சரவணா ஸ்டோர்ஸீல் 14 ரூபாய்தன்..

Anonymous said...

என்ன அத்திரி பட்ஜெட் போட்டு கலக்கறீங்க...
சிதம்பரம் சாரிடம் ஐடியா கேட்கலாமே? இது எப்படியிருக்கு?

ஷாஜி said...

bangalore-ல மளிகை சாமான் வாங்குர கொடுமை இதை விட அதிகமுங்க... (நானும் மிடில் class தான் மாப்ள...)

முரளிகண்ணன் said...

தலைவா இங்கயும் அதே கதைதான். வேளச்சேரியில இரண்டு மூணு கடையில எம் ஆர் பி ய விட ஒண்ணு ரெண்டு ரூபா குறைச்சு தர்றாங்க. டோர் டெலிவரியும் உண்டு. அதனால இப்ப வண்டி ஓடுது

அத்திரி said...

//அட ஆனந்த விகடனே சரவணா ஸ்டோர்ஸீல் 14 ரூபாய்தன்..//

தகவலுக்கு நன்றி சகா

//என்ன அத்திரி பட்ஜெட் போட்டு கலக்கறீங்க...
சிதம்பரம் சாரிடம் ஐடியா கேட்கலாமே? இது எப்படியிருக்கு?//

பட்ஜெட் கழுத்த நெரிக்குதில்ல அதான்.. நன்றி ஆனந்த்

//bangalore-ல மளிகை சாமான் வாங்குர கொடுமை இதை விட அதிகமுங்க... (நானும் மிடில் class தான் மாப்ள...)//


சென்னையில நாங்க பரவாயில்ல போல

நன்றி ஷாஜி

அத்திரி said...

//தலைவா இங்கயும் அதே கதைதான். வேளச்சேரியில இரண்டு மூணு கடையில எம் ஆர் பி ய விட ஒண்ணு ரெண்டு ரூபா குறைச்சு தர்றாங்க. டோர் டெலிவரியும் உண்டு. அதனால இப்ப வண்டி ஓடுது//

நானும் வேளச்சேரி வெங்கடேஷ்வரா சூப்பர் மார்க்கெட் போயிருந்தேன் அங்கேயும் இதே கதைதான்

நன்றி தலைவா

சரவணகுமரன் said...

கலக்குறீங்க சார்....

அ.மு.செய்யது said...

உண்மை தான்..இந்த மாதிரி நிறைய பேர் கிளம்பிர்காங்க !! இன்னும் வால்மார்ட் எல்லாம் வருவதாக தகவல்கள்.

நசரேயன் said...

எல்லாத்தையும் குறிச்சு வச்சுகிறேன், நானும் மிடில் கிளாஸ் தான்

நட்புடன் ஜமால் said...

நல்ல அளசல்

நல்ல தகவல்

நன்றி ...

சதங்கா (Sathanga) said...

நல்ல அலசல். கடைக்கு கடை இவ்வளவு வித்தியாசம் இருக்கிறதா ?

துளசி கோபால் said...

நானும் மிடில் ஆஃப் த க்ளாஸ்தான்.

எங்க ஊரில் இப்போ சாப்பாட்டுச் சாமான்கள் எல்லாம்மே 25- 40 சதவீதம் கூடி இருக்கு.

வழக்கமா இருக்கும் சூப்பர் மார்கெட்டுகள்தான் இப்போ டூப்பரா மாறிப்போச்சு(-:

தராசு said...

அய்யய்யோ,

ரிலையன்ஸ் பக்கம் போயிராதேங்க, அதுக்கு பதிலா பொடிநடையா போய் கன்யாகுமரியிலிருந்து வேண்ணாலும் வாங்கிக்கங்க.

இவுனுங்க எல்லாம் அந்த 2000 ரூபாய் ஆளுக்குத்தான் சரிப்படுவாங்க.

Cable சங்கர் said...

தலைவா.. ரிலையன்ஸ்ல அநியாய விலை.. உங்க ஏரியா பக்கம் கிரேஸ்னு ஒரு கடை இருக்கான்னு பாருங்க.. செம சீப்.. எல்லா செயின் ஸ்டோர்ஸும் முதலில் வாடிக்கையாளர்களை இழுக்க, விலை குறைவு, அது இதுன்னு கூப்பிடும். பழகிட்டோம்னா.. அவ்வள்வுதான். வெளி விலை தெரியாம போயிடும்.

Cable சங்கர் said...

அது சரி எங்க நம்ம பக்கம் ஆளையே காணோம்..?

குடந்தை அன்புமணி said...

இப்படித்தான் நாங்களும் அல்லாடுறோம். எங்க விலை குறைவுன்னு எல்லா கடையிலேயே ஏறிப்பார்த்துட்டோம் அப்பு. ஆனாலும் முழு திருப்தி வரலையே. ஏதோ வண்டி ஓடுது.

அத்திரி said...

//கலக்குறீங்க சார்....//

நன்றி சரவணகுமரன்

//உண்மை தான்..இந்த மாதிரி நிறைய பேர் கிளம்பிர்காங்க !! இன்னும் வால்மார்ட் எல்லாம் வருவதாக தகவல்கள்.//

இந்த கொடுமையில வால்மார்ட் வேறயா? நன்றி செய்யது.....

//எல்லாத்தையும் குறிச்சு வச்சுகிறேன், நானும் மிடில் கிளாஸ் தான்//

மிடில் கிளாஸ் அமேரிக்கவுலயா இல்ல புளியங்குடியிலா ?நன்றி நசரேயன் அண்ணாச்சி

அத்திரி said...

//நல்ல அளசல்
நல்ல தகவல்
நன்றி ...//

நன்றி ஜமால்

//நானும் மிடில் ஆஃப் த க்ளாஸ்தான்.
எங்க ஊரில் இப்போ சாப்பாட்டுச் சாமான்கள் எல்லாம்மே 25- 40 சதவீதம் கூடி இருக்கு.
வழக்கமா இருக்கும் சூப்பர் மார்கெட்டுகள்தான் இப்போ டூப்பரா மாறிப்போச்சு(-://

சரியாச்சொன்னீங்க..நன்றி துளசி கோபால்



//அய்யய்யோ,
ரிலையன்ஸ் பக்கம் போயிராதேங்க, அதுக்கு பதிலா பொடிநடையா போய் கன்யாகுமரியிலிருந்து வேண்ணாலும் வாங்கிக்கங்க.
இவுனுங்க எல்லாம் அந்த 2000 ரூபாய் ஆளுக்குத்தான் சரிப்படுவாங்க.//

நன்றி தராசு ஐயா

அத்திரி said...

//தலைவா.. ரிலையன்ஸ்ல அநியாய விலை.. உங்க ஏரியா பக்கம் கிரேஸ்னு ஒரு கடை இருக்கான்னு பாருங்க.. செம சீப்.. எல்லா செயின் ஸ்டோர்ஸும் முதலில் வாடிக்கையாளர்களை இழுக்க, விலை குறைவு, அது இதுன்னு கூப்பிடும். பழகிட்டோம்னா.. அவ்வள்வுதான். வெளி விலை தெரியாம போயிடும்.//

நாங்க தான் அவ்ளோ சீக்கிரத்துல பழக மாட்டோம்ல... நன்றி கேபிள் சார்.

//அது சரி எங்க நம்ம பக்கம் ஆளையே காணோம்..?//

நேற்று வார விடுமுறை அதான்... நன்றி கேபிள் சார்

//இப்படித்தான் நாங்களும் அல்லாடுறோம். எங்க விலை குறைவுன்னு எல்லா கடையிலேயே ஏறிப்பார்த்துட்டோம் அப்பு. ஆனாலும் முழு திருப்தி வரலையே. ஏதோ வண்டி ஓடுது.//

ஏதோ வண்டி ஓடுது...ம்ம்ம்ம்ம்ம் ஓடுது நன்றி அன்புமணி

தமிழ் மதுரம் said...

அடப் பாவிங்களா??? இப்படியா உங்க பொழைப்பு போயிட்டிருக்கு???? நல்லா விலை எகிறுதா??? அப்ப ஒன்னு பண்ணுங்க..... இனி தேர்தல் வரும் போது விலை கொறைச்சால் தான் ஓட்டு என்று சொல்லிடுங்க....

RAMYA said...

உங்களுக்கு ஆனாலும் அறிவு கொஞ்சம் அதிகம்

எவ்வளவு கடையிலே எதெல்லாம்
விலை குரைவுன்னு தெரிஞ்சி வச்சி இருக்கீங்க

சரியான அலசல் , சரியான முடிவு எடுக்கும் திறன்

அத்திரி நீங்க எங்கோயோ போய்ட்டிங்க போங்க

RAMYA said...

//
மெல்போர்ன் கமல் கூறியது...
அடப் பாவிங்களா??? இப்படியா உங்க பொழைப்பு போயிட்டிருக்கு???? நல்லா விலை எகிறுதா??? அப்ப ஒன்னு பண்ணுங்க..... இனி தேர்தல் வரும் போது விலை கொறைச்சால் தான் ஓட்டு என்று சொல்லிடுங்க....

//

இது கூட ஏற்று கொள்ளும்படியா தானே இருக்கு முயற்சி பண்ணி பாக்கலாம்

RAMYA said...

//
தராசு கூறியது...
அய்யய்யோ,

ரிலையன்ஸ் பக்கம் போயிராதேங்க, அதுக்கு பதிலா பொடிநடையா போய் கன்யாகுமரியிலிருந்து வேண்ணாலும் வாங்கிக்கங்க.

இவுனுங்க எல்லாம் அந்த 2000 ரூபாய் ஆளுக்குத்தான் சரிப்படுவாங்க.

//

Repeettuuuuuuuuu

RAMYA said...

//
முரளிகண்ணன் கூறியது...
தலைவா இங்கயும் அதே கதைதான். வேளச்சேரியில இரண்டு மூணு கடையில எம் ஆர் பி ய விட ஒண்ணு ரெண்டு ரூபா குறைச்சு தர்றாங்க. டோர் டெலிவரியும் உண்டு. அதனால இப்ப வண்டி ஓடுது
//

ஒரு பதிவு போட்டு எல்லாரோட உள்ள குமுறல்களையும் வெளியே கொண்டு வந்துட்டீங்க

சபாஷ் அத்திரி!!!

அத்திரி said...

//அடப் பாவிங்களா??? இப்படியா உங்க பொழைப்பு போயிட்டிருக்கு???? நல்லா விலை எகிறுதா??? அப்ப ஒன்னு பண்ணுங்க..... இனி தேர்தல் வரும் போது விலை கொறைச்சால் தான் ஓட்டு என்று சொல்லிடுங்க....//

கருத்துக்கு நன்றி கமல். ஆனா ஓட்டுன்னு வந்துட்டா யார் காசு அதிகமா கொடுக்காங்களோ அவஙகளுக்குத்தான் எங்க ஓட்டு ஏன்னா நாங்கெல்லாம் டமிலனுங்கோ

அத்திரி said...

//எவ்வளவு கடையிலே எதெல்லாம்
விலை குரைவுன்னு தெரிஞ்சி வச்சி இருக்கீங்க //


நானெல்லாம் நல்ல குடும்ப இஸ்திரிங்கோ நன்றி ரம்யா

அத்திரி said...

//ஒரு பதிவு போட்டு எல்லாரோட உள்ள குமுறல்களையும் வெளியே கொண்டு வந்துட்டீங்க

சபாஷ் அத்திரி!!!//

!!!!!!!!!!!!!!!!!!!!

Thamira said...

பயனுள்ள உருப்படியான பதிவு அத்திரி.. என் கதை பெரும்பாலும் பக்கத்து மளிகைக்கடையிலதான் போயிகிட்டிருக்குது. நல்லதில்லைங்கறீங்களா?

Thamira said...

பள்ளிக்கரணைங்கிறீங்க.. பக்கத்துலதானே.. ஒரு எட்டு வந்துட்டு போறது?

Thamira said...

அப்படியே மீ த 30.!

KarthigaVasudevan said...

மாச சம்பளம்னா எப்பவும் மிடில் கிளாஸ் தான்ன்னு யாரோ காத்துவாக்குல சொன்னாங்க ,சரியாத்தான் இருக்கும்போல,நானும் மிடில் கிளாஸ் தானுங்க, பேசாம வேலைய ராஜினாமா பண்ணிட்டு ஊர்ல போய் விவசாயத்தைப் பார்த்தாக்கூட காய்கறில இருந்து மளிகை வரைக்கும் நாமளே உற்பத்தி பண்ணிரலாம் போல,எவங்கிட்டயோ கை கட்டி சேவகம் பண்ணிட்டு மாசமான மளிகை செலவைப் பாத்து ஒவ்வொரு தடவையும் பயந்து நடுங்க வேண்டாம்ல?!

அத்திரி said...

//பயனுள்ள உருப்படியான பதிவு அத்திரி.. என் கதை பெரும்பாலும் பக்கத்து மளிகைக்கடையிலதான் போயிகிட்டிருக்குது. நல்லதில்லைங்கறீங்களா?//

மளிகைக்கடையில மூனு விதமா கொடுப்பாங்க.

1.தினசரி காசு கொடுத்து வாங்குபவர்களுக்கு ஒரு விலை
2.பற்று வைத்து வாங்குபவர்களுக்கு ஒரு விலை
3.பேச்சிலர்களுக்கு தனி விலை

நீங்களே முடிவு பண்ணிக்கிடுங்க.

//பள்ளிக்கரணைங்கிறீங்க.. பக்கத்துலதானே.. ஒரு எட்டு வந்துட்டு போறது?//

வந்திடுவோம்...

நன்றி தாமிரா அண்ணே

அத்திரி said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மிஸஸ் டவுட்

Anonymous said...

அத்திரி, எங்கள் ஊரில் (சேலம்) ஒரு கடையில் பி.எஸ்.என்.எல் பிரி பெய்ட் கார்டின் MRP யை விட குறைந்த விலையில் தருவார்கள். பெரு நகரங்களுக்கு இம்மதிர்யான கடைகளை எங்கே தேடி பிடிப்பது?

அத்திரி said...

வருகைக்கு நன்றி பதிவு