Tuesday, 17 February, 2009

100வது பதிவும்--பட்டாம்பூச்சி விருதும்--- சில விசயங்களும்


அப்படி, இப்படினு ஒரு வழியா 100வது பதிவை எழுதியாச்சு..... இந்த நேரத்துல நண்பர் கடையம் ஆனந்த் பட்டாம் பூச்சி விருதை வேறு கொடுத்துவிட்டார்... அந்தபட்டாம்பூச்சி விருதை 3 பேருக்கு கொடுக்கனுமாம்/.......கொடுத்திடலாம்,,,..காசா..பணமா?........... என்னையும் நம்பி என் பதிவை பாலோ செய்யும் சக பதிவர்களுகு நன்றி.....என்ன பதிவு போட்டாலும் படிச்சி பின்னூட்டமிட்டு ஆதரவு தரும் தாமிரா, கடையம் ஆனந்த்,கார்க்கி, பாபு,கேபிள் சங்கர், முரளி கண்ணன்,கமல்,ஜமால்,செய்யது,ரம்யா,வனம் ராஜராஜன்,அதிஷா,நசரேயன்,வடகரை அண்ணாச்சி, உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.....கடந்த ஒரு மாதமாக பதிவு எழுதமுடியவில்லை.... சில எதிர்பார்த்த விசயங்களில் ஏமாற்றம் அடைந்ததால்....... மறுபடியும் முயற்சிக்கிறேன்..... அடுத்த மாதம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில்...............
பட்டாம் பூச்சி விருதை எனது தலைங்களுக்கும் சகாகளுக்கும் கொடுக்கிறேன்.
1. கேபிள் சங்கர் ( அண்ணே இப்ப ஏ ஜோக் மேலயும், தமன்னா மேலயும் ரொம்ப இதுவா இருக்கார்... இவருடைய சிறுகதைகளுக்கு நான் அடிமை)2. நர்சிம் ( சகா வழி தனி வழி....... மாற வர்மன் என்ன ஆச்சு)
3. முரளி கண்ணன்( நடமாடும் சினிமா நூலகம்)
4. கார்க்கி( சகாவுக்கு மாசத்துல ஒரு தடவ காதல் சோகக்கதை பதிவிடலனா தூக்கம் வராது)
5.பாபு( ஒன்னுமே புரியல)

அரசுத்துறையில் வேலை பார்க்கும் பெண்கள்
ஒரு சில அனுபவங்கள் அரசுத்துறையில் வேலை பார்க்கும் பெண்கள் மேல் கோபம் கொள்ள வைக்கிறது...
அனுபவம் 1
இடம் தாம்பரம் மண்டல அலுவலகம் கடந்த ஜனவரி மாதம் ரேஷன் கார்டு விலாசம் மாற்றம் தொடர்பாக தாம்பரம் அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். விண்ணப்பம் கொடுப்பதற்கு ஒரு கவுன்டர் மட்டும் தான். வரிசை அலுவலகத்திற்கு வெளியே ரோடு வரைக்கும் இருந்தாது.. வரிசையில் உள்ளோரில் ஒரு சிலரை தவிர மீதி அனைவருமே 50 வயதை தாண்டியவர்களாக தெரிந்தனர். வரிசை மெதுவாக நகர்ந்து கொண்டிஉருந்தது.. பாடாவதி இன்னும் பழைய மெத்தடுல தான் இன்னும் எழுதிக்கிட்டு இருக்காங்க... ஒரு வயதான பெண்மணி தான் கொண்டு வந்திருந்த விண்ணப்பத்தை கவுன்டரில் இருந்த பெண் ஊழியரிடம் கொடுத்தார்.

விண்ணப்பத்தை பார்த்த பெண் ஊழியர் " என்னம்மா உன் மகன் பெயருக்கு கார்டு கேட்டிருக்க சரி, ஆனா உன் மருமகள் பெயர் நீக்குன சான்றிதழ் இதுல இல்லையே.. அதை வாங்கிட்டு வா." என்று சொல்லி அந்த விண்ணப்பத்தை கையில் கூட கொடுக்காமல் அப்படியே கீழே போட்டார் அந்த பெண் ஊழியர். வயதான பெண்மணி " கொஞ்சம் வெவரமா சொன்னா நல்லாயிருக்கும்.. நானும் 10நாளா அலையுறேன்". என்னத்த வெவரமா சொல்ல சொல்லுற... போயி அந்த சர்டிபிகேட்டை வாங்கிட்டு வா... என உச்சஸ்தியில் கோபத்தில் கத்த ஆரம்பித்துவிட்டார் அந்த பெண் ஊழியர்... ஏன் அந்த பெண் ஊழியர் கோபப்பட வேண்டும்?.பெரும்பாலும் இந்த மாதிரி ரேசன் கார்டு சம்பந்தப்பட்ட சந்தேகங்கங்களை நிவர்த்தி செய்ய தனி அதிகாரியை நியமிக்கலாம்... செய்வார்களா?...

அனுபவம் 2

இடம் மாம்பலம் ரிசர்வேசன் கவுன்டர். எனக்கு ரெயில் பயண கட்டண சலுகை உண்டென்பதால் அதற்கான சான்றிதழுடன் விண்ணப்பத்தைக்கொடுத்தேன்... ( இங்கேயும் பெண் ஊழியர்தான்) "டாக்டர் சான்றிதழில் சீல் சரியாத் தெரியல"( டாக்டர் சீல் பச்சை கலரில் இருந்ததால் ஜெராக்ஸில் சரியாக தெரியவில்லை) இல்ல மேடம் 1 மணி நேரமா வரிசையில நிக்கிறேன்" அப்ப சூப்பர்வைசர் உள்ள இருக்கார் அவர்கிட்ட கையெழுத்து வாங்கிட்டு வாங்க" சூப்பர்வைசரை பார்க்க ஒரு அரை மணி நேரம் .... ஒரு வழியா டிக்கெட் வாங்கிட்டேன்.. " அடுத்த வாட்டி இந்த சர்டிபிகேட் கொண்டு வந்தீங்கன்னா டிக்கெட் தரமாட்டேன்"

அடுத்த வாட்டி போகும் பொழுது புது சர்டிபிகேட்டுடன் சென்றேன். சர்டிபிகேட்டை சரி பார்த்த பெண் ஊழியர் " வயசு சரியா எழுதலியே.. மேலே ஒரு கோடு மாதிரி இருக்கு எந்த டாக்டர் கிட்ட வாங்கினீங்களோ அவர் கையெழுத்தை இதுக்கு பக்கத்துல வாங்கிட்டு வாங்க" என்று மிக அலட்சியமாக சர்டிபிகேட்டை என்னைடம் கொடுத்தார்.. நானும் அப்போதுதான் கவனித்தேன்.. வயது 31 என்பதில் 3க்கு மேல் லைட்டா ஒரு கோடு .." மேடம் டாக்டருங்க கையெழுத்து அப்படித்தான் இருக்கும் உங்களுக்கே தெரியும்"." அதெல்லாம் முடியாது வேணும்னா நார்மல் டிக்கெட் வாங்கிக்கிடுங்க".. கோபமாக சொல்லிவிட்டார்... கொஞ்ச நேரம் காத்திருந்து பிறகு ஆண் ஊழியரிடம் சர்டிபிகேடை காண்பித்தேன்... டிக்கெட் கிடைத்தது...

ஒரு பெண் ஊழியருக்கு தவறு எனப்பட்ட சர்டிபிகேட் ஆண் ஊழியருக்கு எப்படி சரியென்று பட்டது...?ஏன் இப்படி கோபப்படுகிறார்கள் பெண் ஊழியர்கள்.......... என்ன காரணமாக இருக்கும்... சொல்லுங்க மக்கா

39 comments:

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

சில எதிர்பார்த்த விசயங்களில் ஏமாற்றம் அடைந்ததால்\\

எல்லாம் சரியாகும்.

அத்திரி said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜமால்

Cable Sankar said...

//ஒரு பெண் ஊழியருக்கு தவறு எனப்பட்ட சர்டிபிகேட் ஆண் ஊழியருக்கு எப்படி சரியென்று பட்டது...?ஏன் இப்படி கோபப்படுகிறார்கள் பெண் ஊழியர்கள்.......... என்ன காரணமாக இருக்கும்... சொல்லுங்க மக்கா//

ஒரு வேளை என்னுடய் ஏ ஜோக் படிச்சிட்டு அதே மூடுல போயிட்டீங்களோ..?
சும்மா ஜோக்கு...

நிஜமா என்ன்னனா.. பெண் ஊழியர்கள் சாதாரணமா ரொம்பவே உசார் பார்டிங்க.. அவங்களுக்கு எல்லாம் கரெக்டா இருந்தாலே, குத்தம் சொல்வாஙக்.. அவஙக் வேணாம்னு சொல்லி, வேற ஒரு ஆண் ஊழியர் பார்த்து, சரின்னு சொல்லி, உங்களுக்கு டிக்கெட் கொடுத்துட்டா பின்னாடி ஏதாவது பிரச்சனை வந்தாலும், நான அப்பவே சொன்னேன், சார் தான் கொடுக்க சொன்னார்ன்னு சொல்லிடுவாங்க.

T.V.Radhakrishnan said...

எனக்கும் இதுபோல அனுபவங்கள் உண்டு..என்ன செய்வது அத்திரி...நாம் பொறுமைசாலிகள் ஆயிற்றே!

தமிழ்நெஞ்சம் said...

Congrats

அ.மு.செய்யது said...

100 ஆவது பதிவுக்கும் பட்டாம் பூச்சி விருது பெற்றமைக்கும்
வாழ்த்துகள் அத்திரி !!!!!!

வலைப்பூ தலைப்ப மாத்திட்டீங்களா என்ன ?

திகழ்மிளிர் said...

வாழ்த்துகள்

கார்க்கி said...

மீண்டும் எழுதியதில் மகிழ்ச்சி

எனக்கு விருது கொடுத்ததிலும் மகிழ்ச்சி. நன்றி சகா

பெண் ஊழியர்களைப் பற்றி சொன்னதும் மகிழ்...ஆவ்.. அவசரப்பட்டுட்டேனோ?

:))))))))))

கார்த்திகைப் பாண்டியன் said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.. நானும் பார்த்த வரை ஆண்கள் என்றாலே பெண் ஊழியர்கள் கொஞ்சம் கடுமையாகத்தான் நடந்து கொள்கிறார்கள்.. காரணம்.. அவர்களுக்குத்தான் வெளிச்சம்..

பாபு said...

100 பதிவுக்கு வாழ்த்துக்கள்
ஐந்து பேர்ல நாலு பேர பத்தி எழுதிட்டு ,நம்மல பத்தி எதுவும் சொல்லாம போனா,எல்லோரும் என்ன நினைச்சுப்பாங்க ,எழுத எதுவும் இல்லை அப்படின்னு தப்பா நினைக்க மாட்டாங்க.பொய்யாவது ஏதாவது சொல்லியிருக்கலாம் இல்ல .

எம்.எம்.அப்துல்லா said...

செஞ்சுரிக்கு வாழ்த்துகள் அண்ணே

//ஏன் இப்படி கோபப்படுகிறார்கள் பெண் ஊழியர்கள்.......... என்ன காரணமாக இருக்கும்... //

அண்ணே மனைவியும் வேலைக்குப் போகனும்னு இன்னைக்கு பெரும்பாலான ஆண்கள் நினைக்கிறோம்.ஆனா வீட்ல மனைவிகள் வேலையை இன்றும் மனைவிகள்தான் செய்யிறாங்க. மனசாட்சியோட சொல்லுங்க அவங்க துணிய துவைக்கிறது இருக்கட்டும் ,நம்ப துணிய நம்ப துவைக்கிறோமா???

அலுவலகம் வீடு என அவர்கள் படும் அல்லல் வார்த்தைகளில் சொல்ல முடியாது.அவங்க நிலையை நாம் அவர்கள் இடத்தில் இருந்து யோசித்தால் புரியும். பெரும்பாலான பெண்கள் பணியிஅத்தில் கடுகடுவென இருப்பதற்கு காரணம் இந்த டிப்ரஷன் தான்.

முரளிகண்ணன் said...

அத்திரி மிக்க நன்றி.


வேலைக்கு பெண்ணை அனுப்பும் ஆண்கள் வீட்டு வேலைகளில் அதிகம் பங்கெடுக்காமல் இருப்பது அவர்களின் சிடுசிடுப்புக்கு காரணமாய் இருக்குமோ?

ஆ அப்துல்லா இங்கயும் முந்திட்டாரே?

Cable Sankar said...

அத்திரி உஙக் அன்புக்கும், விருதுக்கும் நன்றி தலைவரே..

Anonymous said...

100-வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா. விரைவில் 200-வது பதிவை தொட அட்வான்ஸ் வாழ்த்துக்கள். சரியான நேரத்தில் சரியான பதிவு.

Anonymous said...

start 1

Anonymous said...

2

Anonymous said...

3

Anonymous said...

4

Anonymous said...

5

Anonymous said...

6

Anonymous said...

7

Anonymous said...

8

Anonymous said...

9

Anonymous said...

25-யை தொட்டாச்சு. அப்புறம் வர்ரேன்.

அத்திரி said...

//நிஜமா என்ன்னனா.. பெண் ஊழியர்கள் சாதாரணமா ரொம்பவே உசார் பார்டிங்க.. அவங்களுக்கு எல்லாம் கரெக்டா இருந்தாலே, குத்தம் சொல்வாஙக்.. அவஙக் வேணாம்னு சொல்லி, வேற ஒரு ஆண் ஊழியர் பார்த்து, சரின்னு சொல்லி, உங்களுக்கு டிக்கெட் கொடுத்துட்டா பின்னாடி ஏதாவது பிரச்சனை வந்தாலும், நான அப்பவே சொன்னேன், சார் தான் கொடுக்க சொன்னார்ன்னு சொல்லிடுவாங்க.//

உண்மை என்னன்னா சர்டிபிகேட்டை செக் பண்றதுக்கு ரெண்டு பேரும் ஒரே டைம் தான் எடுத்துக்கிறாங்க.....
என்னமோ?? நன்றி கேபிள் அண்ணே

//எனக்கும் இதுபோல அனுபவங்கள் உண்டு..என்ன செய்வது அத்திரி...நாம் பொறுமைசாலிகள் ஆயிற்றே!//

நன்றி டி.வி.ஆர்.கே ஐயா


//Congrats//

நன்றி தமிழ்நெஞ்சம்

அத்திரி said...

//அ.மு.செய்யது கூறியது...
100 ஆவது பதிவுக்கும் பட்டாம் பூச்சி விருது பெற்றமைக்கும்
வாழ்த்துகள் அத்திரி !!!!!!
வலைப்பூ தலைப்ப மாத்திட்டீங்களா என்ன ?//
தலைப்பு மாற்றிவிட்டேன் செய்யது. நன்றி

//திகழ்மிளிர் கூறியது...
வாழ்த்துகள்//

நன்றி திகழ்மிளிர்

//கார்க்கி கூறியது...
மீண்டும் எழுதியதில் மகிழ்ச்சி
எனக்கு விருது கொடுத்ததிலும் மகிழ்ச்சி. நன்றி சகா
பெண் ஊழியர்களைப் பற்றி சொன்னதும் மகிழ்...ஆவ்.. அவசரப்பட்டுட்டேனோ?
:))))))))))//

வாங்க சகா. ஏற்கனவே ஒரு பதிவு எழுதி வாங்கி கட்டிக்கிட்டு இருக்க......அமைதி

Anonymous said...

வாழ்த்துக்கள், விருதுக்கும் 100வது பதிவுக்கும்

அத்திரி said...

//கார்த்திகைப் பாண்டியன் கூறியது...
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.. நானும் பார்த்த வரை ஆண்கள் என்றாலே பெண் ஊழியர்கள் கொஞ்சம் கடுமையாகத்தான் நடந்து கொள்கிறார்கள்.. காரணம்.. அவர்களுக்குத்தான் வெளிச்சம்..//

நன்றி கார்த்திகை பாண்டியன்.. ஒரு வேளை வீட்டில் உள்ள கோபத்தை இங்க வந்து காண்பிக்கிறாங்களோ.. நன்றி

//பாபு கூறியது...
100 பதிவுக்கு வாழ்த்துக்கள்
ஐந்து பேர்ல நாலு பேர பத்தி எழுதிட்டு ,நம்மல பத்தி எதுவும் சொல்லாம போனா,எல்லோரும் என்ன நினைச்சுப்பாங்க ,எழுத எதுவும் இல்லை அப்படின்னு தப்பா நினைக்க மாட்டாங்க.பொய்யாவது ஏதாவது சொல்லியிருக்கலாம் இல்ல//

வாங்க பாபு...அதான் உங்க பேருக்கு பக்கத்திலே ஒன்னுமே புரியலன்னு எழுதியிருக்கேன்....பாக்கலையா நன்றி


//எம்.எம்.அப்துல்லா கூறியது...
செஞ்சுரிக்கு வாழ்த்துகள் அண்ணே
அலுவலகம் வீடு என அவர்கள் படும் அல்லல் வார்த்தைகளில் சொல்ல முடியாது.அவங்க நிலையை நாம் அவர்கள் இடத்தில் இருந்து யோசித்தால் புரியும். பெரும்பாலான பெண்கள் பணியிஅத்தில் கடுகடுவென இருப்பதற்கு காரணம் இந்த டிப்ரஷன் தான்.//

வாங்க அண்ணே.. நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்...ஆனாவேலை நேரம் முழுக்க கோபப்படுவது என்பது..........

அத்திரி said...

//எம்.எம்.அப்துல்லா கூறியது...
ஆனா வீட்ல மனைவிகள் வேலையை இன்றும் மனைவிகள்தான் செய்யிறாங்க. மனசாட்சியோட சொல்லுங்க அவங்க துணிய துவைக்கிறது இருக்கட்டும் ,நம்ப துணிய நம்ப துவைக்கிறோமா???//

என்ன இப்படி சொல்லிட்டீங்க.. எங்க வீட்ல எல்லாம்........ அய்யய்யோ உணர்ச்சிவசப்படுறேனே>>>>>>>>>>>>>>>>

//அத்திரி மிக்க நன்றி.
வேலைக்கு பெண்ணை அனுப்பும் ஆண்கள் வீட்டு வேலைகளில் அதிகம் பங்கெடுக்காமல் இருப்பது அவர்களின் சிடுசிடுப்புக்கு காரணமாய் இருக்குமோ?
ஆ அப்துல்லா இங்கயும் முந்திட்டாரே?//

வாங்க தல....... அப்துல்லா அண்ணே எப்பவும் ஸ்பீடுதான்.. நன்றி தல

//Cable Sankar கூறியது...
அத்திரி உஙக் அன்புக்கும், விருதுக்கும் நன்றி தலைவரே..//

நன்றி Cableஅண்ணே

அத்திரி said...

//கடையம் ஆனந்த் கூறியது...
100-வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா. விரைவில் 200-வது பதிவை தொட அட்வான்ஸ் வாழ்த்துக்கள். சரியான நேரத்தில் சரியான பதிவு.//

ரொம்ப நன்றி நண்பா...ஊருக்குப்போன கதை நல்லா போய்க்கிட்டு இருக்கு போல

அத்திரி said...

// கடையம் ஆனந்த் கூறியது...
25-யை தொட்டாச்சு. அப்புறம் வர்ரேன்.//


25 அடிச்சதுக்கு நன்றி

நசரேயன் said...

வாழ்த்துக்கள்,100 பட்டாம் பூச்சி விருதுக்கு.

அடுத்த முறை எம்.எல்.எ டிக்கெட் கேளுங்க, கிடைத்தாலும் கிடைக்கும்

நசரேயன் said...

ஆண்பிள்ளை மனசு ஆண்பிள்ளைக்கு தானே தெரியும்

narsim said...

100க்கு வாழ்த்துக்கள் சகா.. நன்றி

அத்திரி said...

// நசரேயன் கூறியது...
வாழ்த்துக்கள்,100 பட்டாம் பூச்சி விருதுக்கு.
அடுத்த முறை எம்.எல்.எ டிக்கெட் கேளுங்க, கிடைத்தாலும் கிடைக்கும்//

அண்ணாச்சி நான் புலம்புறது உங்களுக்கு நக்கலா இருக்கு.ஆங்.....

//ஆண்பிள்ளை மனசு ஆண்பிள்ளைக்கு தானே தெரியும்//

இது சரியாத்தான் இருக்கும்... நன்றி புளியங்குடியாரே

அத்திரி said...

// narsim கூறியது...
100க்கு வாழ்த்துக்கள் சகா.. நன்றி//


நன்றி சகா

தாமிரா said...

நூறுக்கு வாழ்த்துகள் அத்திரி.! இதிலும் சமூக விஷயங்களை பகிர்ந்துகொண்டுள்ளது.. சிறப்பு.!

அத்திரி said...

நன்றி தாமிரா அண்ணே