Saturday, March 21, 2009

ரேஷன்-சீனி, கோதுமை அரிசி -ரெயில்வேயின் ஆன் லைன் ரிசர்வேசன் யாருக்காக....

அப்படி இப்படினு பள்ளிக்கரணை முகவரிக்கே ரேஷன் கார்டை மாற்றிவிட்டேன். இந்த மாதம் ரேஷனில் பொருள் வாங்கனும் என்பதால் போன புதன் கிழமை ரேஷன் கடைக்கு சென்றிருந்தேன்.. கூட்டம் சற்று அதிகமாவே இருந்தது. என்னன்னு கேட்டா இன்னைக்குத்தான் அரிசி போடுறாங்களாம்.. ஆண்கள் வரிசையைவிட பெண்கள் வரிசை நீண்டிருந்தது..கடைக்காரர் ரொம்ப டென்சனா பில் போட்டுக்கிட்டு இருந்தார். அவரின் உருவமும் உயரமும் நடிகர் செந்திலை போன்று இருந்ததாலோ என்னவோ பெண்கள் வரிசையில் இருந்து அவரை பற்றி ஒரே கமெண்ட். ஆண்கள் வரிசை மிக அமைதியாக பெண்கல் வரிசை தள்ளுமுள்ள்விலும், சண்டையிலும் கடைக்காரர் டென்சன் ஆகிட்டார்.

"ஏம்மா இப்படி சத்தம் போட்டுக்கிட்டு இருந்தா நான் பில் போடமாட்டேன்.."

"அது எப்படி நான் பக்கத்தில் வந்ததும் பில் போடாம இருக்கீங்க இவரு எப்பவுமே இப்படித்தான்.. "நமட்டு சிரிப்புடன் நடுத்தர வய்து பெண்மணி

'ஆம்பிளைங்க எவ்ளோ அமைதியா நிக்காங்க... ஏம்மா இப்படி"

"என் அருகில் நின்றவர் நாங்கெல்லாம் தண்ணி உள்ள போற வரைக்கும் தான் அமைதி... அதுக்கப்புறம்"

"நானும் ஒவ்வொரு மாசமும் கவனிக்கிறேன் நீ வேற பொருள் எதுவும் வாங்க மாட்டேங்குற.. அட்த்த மாசம் எப்படி பொருள் வாங்குறன்னு பாக்குரேன்.".. இது கடைக்காரர் ஒரு பெருசுவிடம் காட்டமாக சொன்னது.

என் முறை வந்தது "என்ன சார் வேணும்?"

"சீனி, கோதுமை அரிசி பாமாயில்"

"வேற ஏதும் ?"

"கடுகு இருக்கா?"

"இல்லை"

"மிளகு?"

"இல்லை"

"அப்ப எதுவும் வேணாம்."

"வேற ஏதாவது வாங்கனும் முதல் தடவ வாங்குறீங்க"

"அதான் பாமாயில் வாங்கிட்டேனே.."...

இல்ல சார் இந்தாங்க என்று கோல்கேட் பற்பசையை கையில் வலுக்கட்டாயமாக திணித்தார்

வலுக்கட்டாயமாக இதை வாங்கித்தான் ஆகனும் என்பது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அறிவுரையோ என்னவோ????.... வீட்ல வந்து வாங்கி கட்டிக்கிட்டதுதான் மிச்சம் பற்பசை வாங்கியதுக்காக..

-----------------------*--------------------------*-------------------------------------*-------------------
ரெயில்வேயின் ஆன் லைன் ரிசர்வேசன் யாருக்காக....


ஒவ்வொருவாட்டியும் ஊருக்கு போறதுக்கு டிக்கெட் ரிசர்வேசன் பண்ணுவதற்கு வரிசையில் நின்னு மண்டை காய்வதாலும், சர்டிபிகேட்ல அது சொத்தை இது சொத்தன்னு அது வேற டென்சன் படுத்துவதாலும் இந்த முறை ஆன்லைன் ரிசர்வேசன் பண்ணலாம் அப்படினு நெட் ஓப்பன் பண்ணி உள்ள போனா ஜெனரல் ,சீனியர் சிட்டிசன் கோட்டா இருந்தது.. ஆனா உடல் ஊனமுற்றோருக்கான கோட்டா எதுவும் அந்த ரிசர்வேசன் பக்கத்தில் இல்லை..... ரெயில்வே கால் சென்டருக்கு போன் பண்ணி கேட்டா சரியான பதில் இல்லை.


நீங்களே சொல்லுங்க அப்ப என்ன இதுக்கு ஆன் லைன் ரிசர்வேசன் இருக்கு? அது யாருக்காக...

20 comments:

நட்புடன் ஜமால் said...

\\வீட்ல வந்து வாங்கி கட்டிக்கிட்டதுதான் மிச்சம் பற்பசை வாங்கியதுக்காக..\\

ஹா ஹா ஹா

அத்திரி said...

வாங்க ஜமால் ........... நன்றி சிரிப்புக்கு

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

//நீங்களே சொல்லுங்க அப்ப என்ன இதுக்கு ஆன் லைன் ரிசர்வேசன் இருக்கு? அது யாருக்காக...//
அப்படியே லல்லுவுக்கு ஒரு போன் போடுங்க.
ரொம்ப நல்லாயிருக்கு.

அத்திரி said...

//நவநீதன் கூறியது...
//நீங்களே சொல்லுங்க அப்ப என்ன இதுக்கு ஆன் லைன் ரிசர்வேசன் இருக்கு? அது யாருக்காக...//
அப்படியே லல்லுவுக்கு ஒரு போன் போடுங்க.
ரொம்ப நல்லாயிருக்கு.//

போன் நம்பர் தெரியாது...நம்பர் குடுங்களேன்... நன்றி நவநீதன்

Anbu said...

அண்ணா I.R.C.T.C NUMBER:-
011-23345500 / 23344787 / 23344773 / 23345800 / 23340000 [24 Hrs customer support]தைரியமாக கூப்பிடுங்கள்

Anbu said...

நன்றாக இருக்கிறது அண்ணா!!பலமுறை நானும் அனுபவப்பட்டிருக்கிறேன்

தமிழ் மதுரம் said...

"என் அருகில் நின்றவர் நாங்கெல்லாம் தண்ணி உள்ள போற வரைக்கும் தான் அமைதி... அதுக்கப்புறம்"//

இது உண்மையாயிருக்குமோ??

நான் நினைச்சன் நீங்கள் பெட்டிப் பாம்பாக அடங்கிடுவீங்கள் என்று???

நசரேயன் said...

//
"என் அருகில் நின்றவர் நாங்கெல்லாம் தண்ணி உள்ள போற வரைக்கும் தான் அமைதி... அதுக்கப்புறம்"
//

ஆமா..ஆமா.. அதுக்கு அப்புறம் நிச்சயம் அவருக்கு ஏழரை தான்

உண்மைத்தமிழன் said...

தம்பீ..

ரேஷன் கடைக்கெல்லாம் போற அளவுக்கு நல்ல பிள்ளையா நீங்க..? நல்லாயிருங்க.. தொடருங்க..

இப்பல்லாம் ஒண்ணு வாங்கினாத்தான் இன்னொன்றதுலகூட நம்மளை மொட்டையடிக்கிறாங்க.. என்னதான் செய்யறது? சொல்றது.?

வேணும்னா வாங்கு.. இல்லாட்டி போய்க்கிட்டே இரும்பாங்க.. இதுதான் அரசுகளின் லட்சணம்..

உடல் ஊனமுற்றோர் ஆன்லைனில் பதிவு செய்ய முடியாமை எனக்கும் ஆச்சரியம்தான்..

நான் இதுவரையில் டிரெயினுக்காக டிக்கெட் ரிசர்வேஷன் செய்யாததால் எனக்குத் தெரியாது.. அந்தத் தொலைபேசி எண்ணுக்கு போன் செய்து புகார் செய்யுங்கள். நானும் செய்கிறேன்..

ஊருக்கு உதவிகரமான விஷயங்களை எழுதியிருக்கிறீர்கள்.. நன்றி..

தராசு said...

//வீட்ல வந்து வாங்கி கட்டிக்கிட்டதுதான் மிச்சம் பற்பசை வாங்கியதுக்காக.. //

உங்க வீட்லயுமா....


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அகநாழிகை said...

கோபால் பல்பொடி தந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

// ரெயில்வேயின் ஆன் லைன் ரிசர்வேசன் யாருக்காக....//

இதுபோன்ற அரக்கத்தனங்களை செய்யும் அரசு இயந்திரங்கள் மீது, இந்த பதிவோடு நிறுத்திவிடாமல் தொடர்ந்து மேல்நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். பதிவர்கள் அனைவரும் இணைந்து மின்னஞ்சல் கூட அனுப்பலாம்.

- பொன்.வாசுதேவன்

அத்திரி said...

//Anbu கூறியது...
நன்றாக இருக்கிறது அண்ணா!!பலமுறை நானும் அனுபவப்பட்டிருக்கிறேன்//

நன்றி அன்பு தம்பி

//கமல் கூறியது...
"என் அருகில் நின்றவர் நாங்கெல்லாம் தண்ணி உள்ள போற வரைக்கும் தான் அமைதி... அதுக்கப்புறம்"//இது உண்மையாயிருக்குமோ??
நான் நினைச்சன் நீங்கள் பெட்டிப் பாம்பாக அடங்கிடுவீங்கள் என்று???//


நான் எப்பவுமே பெட்டி பாம்புதான்... நன்றி கமல்

அத்திரி said...

// நசரேயன் கூறியது...
//
"என் அருகில் நின்றவர் நாங்கெல்லாம் தண்ணி உள்ள போற வரைக்கும் தான் அமைதி... அதுக்கப்புறம்"
//ஆமா..ஆமா.. அதுக்கு அப்புறம் நிச்சயம் அவருக்கு ஏழரை தான்//

நன்றி அண்ணாச்சி

அத்திரி said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) கூறியது...
தம்பீ..

ரேஷன் கடைக்கெல்லாம் போற அளவுக்கு நல்ல பிள்ளையா நீங்க..? நல்லாயிருங்க.. தொடருங்க..

இப்பல்லாம் ஒண்ணு வாங்கினாத்தான் இன்னொன்றதுலகூட நம்மளை மொட்டையடிக்கிறாங்க.. என்னதான் செய்யறது? சொல்றது.?
வேணும்னா வாங்கு.. இல்லாட்டி போய்க்கிட்டே இரும்பாங்க.. இதுதான் அரசுகளின் லட்சணம்.. //

எதுக்கு இப்படி வலுக்கட்டாயம திணிக்காங்கன்னே தெரியல.... நான் வேண்டாம்னு சொல்ல அவர் கையில திணிக்க அசிங்கமா போச்சி... இன்னும் கொஞ்ச நேரம்னா சண்டை வந்திருக்கும்


//உடல் ஊனமுற்றோர் ஆன்லைனில் பதிவு செய்ய முடியாமை எனக்கும் ஆச்சரியம்தான்.. //

இந்த ஆன் லைன் ரிசர்வேசனால் பாதிக்கப்படுவதும் மக்கள் தான்.... வரிசையில போய் நின்னா 5 நிமிசத்துல சீட் புல் ஆயிடுது.. கேட்டா ஆன் லைன்ல பண்ணிட்டாங்க அப்படின்றாங்க... புக்கிங் ஏஜென்ட்டுக்கு மட்டும்தான் லாபம்... நன்றி அண்ணே

அத்திரி said...

//தராசு கூறியது...
//வீட்ல வந்து வாங்கி கட்டிக்கிட்டதுதான் மிச்சம் பற்பசை வாங்கியதுக்காக.. //

உங்க வீட்லயுமா....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

சீனியர் உங்களுக்கே அப்படினா ஜுனியர் நானெல்லாம் எம்மாத்திரம்.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நன்றி தராசு ஐயா

அத்திரி said...

//அகநாழிகை கூறியது...
கோபால் பல்பொடி தந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.//

இப்படியும் நடக்கலாம்... அவ்வ்வ்வ்வ்வ்

// ரெயில்வேயின் ஆன் லைன் ரிசர்வேசன் யாருக்காக....//இதுபோன்ற அரக்கத்தனங்களை செய்யும் அரசு இயந்திரங்கள் மீது, இந்த பதிவோடு நிறுத்திவிடாமல் தொடர்ந்து மேல்நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். பதிவர்கள் அனைவரும் இணைந்து மின்னஞ்சல் கூட அனுப்பலாம்.//

ஆன் லைன் ரிசர்வேசன்ல கண்டிப்பா இருக்கும்னு நினைச்சேன். முயற்சி செய்யலாம்... நன்றி அண்ணே

கார்த்திகைப் பாண்டியன் said...

// வலுக்கட்டாயமாக இதை வாங்கித்தான் ஆகனும் என்பது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அறிவுரையோ என்னவோ????....

உடல் ஊனமுற்றோருக்கான கோட்டா எதுவும் அந்த ரிசர்வேசன் பக்கத்தில் இல்லை..... ரெயில்வே கால் சென்டருக்கு போன் பண்ணி கேட்டா சரியான பதில் இல்லை.//

சொந்த அனுபவங்கள நல்லா எழுதி இருக்கீங்க நண்பா.. சமுதாயத்துல புரையோடி கிடக்கும் கேவலமான விஷயங்கள் இவை.. கால ஓட்டத்துல இதெல்லாம் மாறினா சரி..

அத்திரி said...

கார்த்திகைப் பாண்டியன் said...
//சொந்த அனுபவங்கள நல்லா எழுதி இருக்கீங்க நண்பா.. சமுதாயத்துல புரையோடி கிடக்கும் கேவலமான விஷயங்கள் இவை.. கால ஓட்டத்துல இதெல்லாம் மாறினா சரி.//.

எல்லாமே அரசாங்கத்தின் கைகளில் தான் இருக்கு பாக்கலாம்.. நன்றி நண்பா

Cable சங்கர் said...

ரேஷன்ல பேஸ்ட் எல்லாம் கூட கொடுக்கறாங்களா என்ன..? அத்திரி.. வீட்ல திட்டு வாங்குறது என்ன புதுசா..? இதையெல்லாம் வெளிய சொல்லிகிட்டு.... விடு..விடு.. ஃபிரியா விடு மாமே..

அத்திரி said...

//Cable Sankar said...
ரேஷன்ல பேஸ்ட் எல்லாம் கூட கொடுக்கறாங்களா என்ன..? அத்திரி.. வீட்ல திட்டு வாங்குறது என்ன புதுசா..? இதையெல்லாம் வெளிய சொல்லிகிட்டு.... விடு..விடு.. ஃபிரியா விடு மாமே..//

கோல்கேட் பற்பசை கொடுக்கிறாங்கோ... நன்றி அண்ணே