Friday, 27 March, 2009

கபடி ,கபடி,கபடி,கபடி (வெண்ணிலா கபடிக் குழு)

என்னடா இது படம் வந்து ரொம்ப நாளாச்சே இப்ப விமர்சனமா? அப்படியெல்லாம் கேட்கக்கூடாது.இன்றைக்குத்தான் வெண்ணிலா கபடி குழு படம் பார்த்தேன்.... பருத்தி வீரன், சுப்ரமணியபுரம் படங்களின் வரிசையில் கிரமத்து நிகழ்வுகளை கண் முன்னே கொண்டுவந்திருக்கும் படம் இந்த கபடி படம். முன்னிரண்டு படங்களும் கிராம வன்முறையையும், காதலையும் சொல்லிய படங்கள்.இவற்றிலிருந்து வேறுபட்டு முழுக்க முழுக்க கபடியை மையமாக வைத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர்.இயக்குனர் சுசீந்திரன் காட்சியமைப்புகளுக்கும் வசனத்திற்கும் மெனக்கெடவில்லை. ஒரு கிராமத்தில் பொங்கல் பண்டிகை நடந்தால் என்ன நிகழ்வுகள் இருக்குமோ அதை அப்படியே கொண்டு வந்திருப்பதில் அவரது சாமர்த்தியம் பலே.... புதுமுகம் விஷ்ணு கிராமத்து இளைஞனாக நடிப்பில் பாஸாகிவிட்டார்... கதாநாயகியிடம் பேசும் போது வெட்கப்படுவது முதற்கொண்டு எல்லாக்காட்சியிலும் அசத்துகிறார்...அவரின் தோழர்களாக வரும் அனைவரின் நடிப்பும் நம்மை கட்டிப்போடுகிறது.. அதுவும் பழனி மேட்சில் ஒரு பாயிண்டில் ஜெயித்ததாக குண்டு இளைஞன் கூறுமிடம்...அதற்கு அந்த தாத்தா நான் சாகிறதுக்குள்ள நீங்க கப்பு வாங்கிடுவீங்களா??? நக்கலாக கேட்பது.. உரியடி திருவிழாவில் மாமியாரின் ம்னண்டையை பிளக்கும் காட்சி, முக்கியமா பரோட்டா சாப்பிடும் போட்டி காட்சி என படம் முழுக்க கதையோடு ஒட்டிய நகைச்சுவை காட்சிகள் படத்திற்கு பலம்...

இந்த படத்திற்கு கதாநாயகி தேவையா?? என்ற கேள்வி எழுந்தாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறார் சரண்யா...அந்த குட்டி கிராமத்தில் கேமரா சும்மா பூந்து விளையாடுது... பயிற்சியாளராக வரும் கிஷோர் இருகிய முகத்துடன் அருமையாக நடித்திருக்கிறார்... மதுரையில் போட்டி நட்க்கும் காட்சியில் ஆரம்பிக்கும் வேகம் கிளைமாக்ஸ் வரை பறக்கிறது... சாதி வெறிக்கு சவுக்கடி கொடுக்கும் இடங்களில் வட்டார மொழி பின்னி பெடலெடுக்குது.சைக்கிளில் செல்லும் ஹீரோவுக்கு வழி கொடுக்கும் பஸ் டிரைவர்... தூரத்து சொந்தம் என சொல்லும் நடுத்தர வயதுக்காரர்... அவருடைய மகள் என ஒவ்வொரு கேரக்டரும் மனதில் நிற்கிறது... கபடி போட்டி காட்சிகள் தான் படத்தின் மிகப்பெரிய ஹைலைட். ஒவ்வொரு போட்டிக்கும் சுவாரஸ்யம் கூடுகிறது... படத்தில் ஒட்டாதது கிளைமாக்ஸ் மட்டுமே.. இந்த படத்திற்கு இந்த கிளைமாக்ஸ் தேவையா என்ற கேள்வியும் எழுகிறாது.... ஒரு வேளை கிளைமாக்ஸ் மட்டும் பருத்தி வீரன்,சுப்ரமணியபுரம் படங்களின் சென்டிமென்டோ என்னவோ??


மொத்தத்தில் விழுந்து கிடக்கும் கபடி விளையட்டுக்கு ஒரு ஆக்ஸிஜன் இந்தப் படம்....


டிஸ்கி: நான் எழுதும் முதல் திரைவிமர்சனம் இதுதான்... ஓட்டு போட்டு பதிவ சூடாக்கிருங்க...

26 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

படத்த ரசிச்சு பார்த்து இருக்கீங்க நண்பா. எனக்கு இந்த வருஷம் வந்ததுலயே பிடிச்ச படம்..

நட்புடன் ஜமால் said...

முதல் விமர்சணம் என்றாலும்

நல்லாயிருக்கு அண்ணே

கார்த்திகைப் பாண்டியன் said...

அந்த க்ளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் ஒரு மாதிரி.. ஆனா அதுவும் நல்லாத்தான் இருந்தது..

கார்த்திகைப் பாண்டியன் said...

அய்யா .. ஜமால நான் முந்திட்டேன்..

கார்க்கி said...

நான் இன்னும் பார்க்கல சகா

அத்திரி said...

// கார்த்திகைப் பாண்டியன் said...
படத்த ரசிச்சு பார்த்து இருக்கீங்க நண்பா. எனக்கு இந்த வருஷம் வந்ததுலயே பிடிச்ச படம்..//ஒவ்வொரு காட்சியும் ரசிக்கக்கூடிய வகையில் இருக்கு நண்பா....

அத்திரி said...

// நட்புடன் ஜமால் said...
முதல் விமர்சணம் என்றாலும்

நல்லாயிருக்கு அண்ணே//


நன்றி ஜமால் .... ஆனாலும் பத்து வரி கவிதை..முடியல ஜமால்

அத்திரி said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
அந்த க்ளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் ஒரு மாதிரி.. ஆனா அதுவும் நல்லாத்தான் இருந்தது..//

கிளைமாக்ஸ் சுத்தமா படத்தோட ஒட்டவேயில்லை....... ஹீரோ மேல் என்ன கோபமோ இயக்குனருக்கு/// நன்றி நண்பா

//கார்த்திகைப் பாண்டியன் said...
அய்யா .. ஜமால நான் முந்திட்டேன்..//

உங்க பதிவுல நான் முந்திட்டேனே////

அத்திரி said...

//கார்க்கி said...
நான் இன்னும் பார்க்கல சகா//

இன்னும் பாக்கலையா??? நானே பாத்துட்டேன்....... நல்ல படம் சகா... நன்றி

புருனோ Bruno said...

உங்கள் இடுகையை எனது பதிவில் சேர்த்திருக்கிறேன்

புருனோ Bruno said...

மீண்டும் படம் பார்த்த உணர்வை தந்த விமர்சணம். ரசித்து எழுதியிருக்கிறீர்கள்.

அத்திரி said...

// புருனோ Bruno said...
உங்கள் இடுகையை எனது பதிவில் சேர்த்திருக்கிறேன்.மீண்டும் படம் பார்த்த உணர்வை தந்த விமர்சணம். ரசித்து எழுதியிருக்கிறீர்கள்//


இணைப்புக்கும் வருகைக்கும் நன்றி டாக்டர்

ஆதவா said...

நல்லா இருக்குனு சொன்னாங்க... பார்க்கணும்!!!! பார்ப்போம்...

நல்ல விமர்சனம்.. கதநாயகி வேணுமான்னு கேக்கறீங்களே... படம் கொஞ்சமாவது ஓடவேண்டாமா?

வெங்கட்ராமன் said...


மொத்தத்தில் விழுந்து கிடக்கும் கபடி விளையட்டுக்கு ஒரு ஆக்ஸிஜன் இந்தப் படம்....


விழுந்து எழ முயற்சி செய்து கொண்டிருக்கும் தமிழ் சினிமாவுக்கும் ஒரு ஆக்சிஜன் என்றே சொல்லலாம்

Anonymous said...

முதல் திரைவிமர்சனமா? அசத்தல் தல. இன்னும் நிறைய படம் பார்த்து நிறைய எழுதுங்க.

தொடர் பதிவை எழுதுங்கய்யா? நாங்க வெயிட் பண்றேhம் இல்ல...!ஹி...ஹி...உங்க தண்டவாளத்தை நாங்க தெரிச்சிங்க வேண்டமா?

அப்புறம் அம்பாசமுத்திரத்தில ரெயில்வே தண்டவாளத்தை பிரிச்சு போட்டாச்சு...! ரெயில் விட முடியாது. அதனால நீங்க பதிவுல ரெயில் விடலாம் இஷ்டத்துக்கு...! அப்பாடா வந்த வேலை முடிச்சுது! நான் வரட்டா...

நசரேயன் said...

கண்டிப்பா பார்க்கிறேன்

வருங்கால முதல்வர் said...

நல்ல படம், நான் முதல்வரா வந்து கபடிக்கு ஊக்கம் கொடுக்கலாம்னு இருக்கேன்.

Cable Sankar said...

விமர்சனம் நல்லாத்தான் இருக்கு.. ஆனா டிவிடில பார்த்து எழுதாதீங்க..:):)

எம்.எம்.அப்துல்லா said...

என்னாது...காந்திய சுட்டுட்டாங்களா???

சும்மா லூலூலாய்க்குச் சொன்னேன். இனி அடிக்கடி சூட்டோட சூடா விமர்சனம் எழுதுங்க. :)

தராசு said...

தல,

நீங்களுமா!!!

இருந்தாலும் நல்லா எழுதி இருக்ககீங்க.

ஆமா, இந்த அப்துல்லா அண்ணன் சும்மாவே இருக்க மாட்டாரா!!!

எதையாவது எடக்கு மடக்கா பேசிகிட்டு

அத்திரி said...

//ஆதவா said...
நல்லா இருக்குனு சொன்னாங்க... பார்க்கணும்!!!! பார்ப்போம்...
நல்ல விமர்சனம்.. கதநாயகி வேணுமான்னு கேக்கறீங்களே... படம் கொஞ்சமாவது ஓடவேண்டாமா?//

நன்றி ஆதவா...


//வெங்கட்ராமன் said...
மொத்தத்தில் விழுந்து கிடக்கும் கபடி விளையட்டுக்கு ஒரு ஆக்ஸிஜன் இந்தப் படம்....விழுந்து எழ முயற்சி செய்து கொண்டிருக்கும் தமிழ் சினிமாவுக்கும் ஒரு ஆக்சிஜன் என்றே சொல்லலாம்//

நன்றி வெங்கட்ராமன்

அத்திரி said...

//கடையம் ஆனந்த் said...
முதல் திரைவிமர்சனமா? அசத்தல் தல. இன்னும் நிறைய படம் பார்த்து நிறைய எழுதுங்க.தொடர் பதிவை எழுதுங்கய்யா? நாங்க வெயிட் பண்றேhம் இல்ல...!ஹி...ஹி...உங்க தண்டவாளத்தை நாங்க தெரிச்சிங்க வேண்டமா?
அப்புறம் அம்பாசமுத்திரத்தில ரெயில்வே தண்டவாளத்தை பிரிச்சு போட்டாச்சு...! ரெயில் விட முடியாது. அதனால நீங்க பதிவுல ரெயில் விடலாம் இஷ்டத்துக்கு...! அப்பாடா வந்த வேலை முடிச்சுது! நான் வரட்டா...//

கடையம் டூ பாவூர்ச்சத்திரம் ஒரு தொடர் எழுதலாம் என்றிருக்கிறேன்... எப்படி நண்பா???

// நசரேயன் said...
கண்டிப்பா பார்க்கிறேன்//

வாங்க அண்ணாச்சி

அத்திரி said...

//வருங்கால முதல்வர் said...
நல்ல படம், நான் முதல்வரா வந்து கபடிக்கு ஊக்கம் கொடுக்கலாம்னு இருக்கேன்.//

வாங்க முதல்வரே வணக்கம்


//Cable Sankar said...
விமர்சனம் நல்லாத்தான் இருக்கு.. ஆனா டிவிடில பார்த்து எழுதாதீங்க..:):)//

டிவிடினா என்னது அண்ணே???

அத்திரி said...

//எம்.எம்.அப்துல்லா said...
என்னாது...காந்திய சுட்டுட்டாங்களா???
சும்மா லூலூலாய்க்குச் சொன்னேன். இனி அடிக்கடி சூட்டோட சூடா விமர்சனம் எழுதுங்க. :)//

காந்திய நான் சுடல அண்ணே.....நன்றி

அத்திரி said...

//தராசு said...
தல,

நீங்களுமா!!!இருந்தாலும் நல்லா எழுதி இருக்ககீங்க.ஆமா, இந்த அப்துல்லா அண்ணன் சும்மாவே இருக்க மாட்டாரா!!!

எதையாவது எடக்கு மடக்கா பேசிகிட்டு//

அப்துல்லா அண்ணனுக்கு எப்பவுமே குசும்புதான்.... வருகைக்கு நன்றி அண்ணே...

ஆதிமூலகிருஷ்ணன் said...

நல்ல படம்னு எல்லோரும் சொல்றீங்க.. நாந்தான் இன்னும் பாக்கல.. பதிவு போடவே நேரமில்ல.. ஆப்பிஸ்ல பிடுங்கல் ஜாஸ்தி பிரதர்..