பொதுவாக தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களை ரசிப்பது கிடையாது.. அப்படியே அடுத்த சேனலுக்கு தாவி விடுவேன் என் கையில் ரிமோட் இருந்தால்... பெரும்பான்மையான நேரங்களில் தங்க மணி கையில் ரிமோட் இருப்பதால் தற்போது விளம்பரங்களையும் ரசிக்க ஆரம்பித்திருக்கிறேன்... என்னைக்கவர்ந்த இரண்டு விளம்பரங்கள்.
1.த்ரீ ரோஸஸ் மைண்ட் ஷார்ப் டீ
த்ரீ ரோஸஸ் மைண்ட் ஷார்ப் டீயைக் குடிக்கும் ரங்கமணி தன்னுடைய தங்க மணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறுகிறார்... ஆனால் தங்கமணியோ தன்னுடைய பிறந்த நாள் அடுத்த மாதம் என்கிறார்.. அடுத்த சீனில் தங்கமணி தான் கட்டியிருக்கும் புடவையை காண்பித்து நல்லா இருக்கா என் கேட்க, ரங்கமணி போன வாரம் உங்க அம்மா வீட்ல கட்டினது நல்லா இருந்தது என சொல்ல ரொமான்ஸாகிறார் தங்கமணி.
2.புரு காபி
தஙமணி கொஞ்சம் டென்சனாக காபி குடிக்கிறார் ரங்க மணிக்கு..அதை புரிந்து கொண்ட ரங்கமணி உடனே ரேடியோவில் தன்னுடைய தங்கமணிக்காக பாடல் போட சொல்கிறார்... அந்த பாடலை கேட்டு தங்க மணி நார்மல் மூடுக்கு வருகிறார்.
இந்த இரண்டு விளம்பரங்களும் என்ன சொல்ல வருகின்றன??....ரங்கமணிகளே உஷாரா இருங்க உங்க தங்கமணிய இந்த மாதிரி சின்ன விசயத்துக்கெல்லாம் டென்சன் ஆக்காதிங்க அப்படின்றாங்க...யார்யார்தான் ரங்கமணிகளுக்கு அட்வைஸ் பண்ணுவது என்ற வரைமுறை இல்லாம போயிடிச்சி.... ஆங்......
யோகி இணைய ஒலி 24x7
14 years ago
22 comments:
நல்ல ஆய்வு. தொடரவும். ஆனா அந்த திரி ரோசஸ் விளம்பரத்திலே ஒரு சூட்சுமம் இருக்கு
நான் அந்த விளம்பரத்த பார்க்கலை நண்பா.. ஆனா உங்க பீலிங்க்ஸ் புரியுது.. எல்லாம் அவரவர் வாங்கி வந்த வரம்.. விடுங்க..
எனக்கு 3 ரோஸ் தான் பிடிக்கும்
டீ பிடிக்காது
நான் காப்பி கலர் ல தான் குடிக்கிறேன், அது காபியான்னு தெரியலை
இந்த இரண்டு விளம்பரங்களும் என்ன சொல்ல வருகின்றன??....ரங்கமணிகளே உஷாரா இருங்க உங்க தங்கமணிய இந்த மாதிரி சின்ன விசயத்துக்கெல்லாம் டென்சன் ஆக்காதிங்க அப்படின்றாங்க...யார்யார்தான் ரங்கமணிகளுக்கு அட்வைஸ் பண்ணுவது என்ற வரைமுறை இல்லாம போயிடிச்சி.... ஆங்......//
சித்தப்பு...என்ன கேள்வியும் நீங்களே??? பதிலும் நீங்களோ??
நல்லாத் தான் இருக்கு தங்கமணி பகிடி....
விளம்பரம் படுத்தும் பாடு நண்பா? இதுக்கு தான் நான் விளம்பரமே பார்க்கிறது இல்ல. ஹி...ஹி...ஹி.
நானும் அந்த விளம்ப்ரமெல்லாம் பார்க்கலை!!!
ஒரு விளம்ப்ரத்தில் களைப்பாக இருக்கும் மனைவிக்கு கால் பிடித்து விடுவாரே!!! அது என்ன விளம்ப்ரமென்று தெரியவில்லை! அது எனக்குப் பிடித்திருந்தது!
தங்கமணி ஊர்ல இல்லையோ.. இல்ல இப்பத்தான் ஊர்லேர்ந்து வந்திருக்காங்களா.. ஒரே ரொமான்ஸா இருக்கு.
இப்படி எல்லாம் கூட விளம்பரம் வருதா? அத்திரி சார்
டி.வி.யா அப்படின்னா இன்னாது அண்ணே.
நம்ம காசை கேபிளுக்கு கொடுத்து, அவன் போடற விளம்பரத்தையும் பாக்கற நாமல்லாம்....
சரி ரொம்ப யோசிச்சிருக்கீங்க.
நல்ல விஷயந்தான்.
பொதுவாவே விளம்பரங்களின் உளவியல் பேசப்பட வேண்டிய விஷயம்தான். குழந்தைகள், மனைவி, பெற்றோர், நண்பர், ஆண், பெண், கல்லூரி, ஆண்மை, பெண்மை, தோழி, காதலி, விலங்குகள், பொருட்கள், இடம், சூழல் என விளம்பரங்களில் சித்தரிக்கப்படுபவை பின்னியங்கும் உள்ளரசியல் என்ன...
சண்டேன்னா ரெண்டு
புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா
லேட்டா வந்தா...
இதுபோல நிறைய இருக்கு,
இதப்பத்தி ஒரு விரிவான பதிவ போடுங்க நண்பா.
//யார்யார்தான் ரங்கமணிகளுக்கு அட்வைஸ் பண்ணுவது என்ற வரைமுறை இல்லாம போயிடிச்சி//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//யார்யார்தான் ரங்கமணிகளுக்கு அட்வைஸ் பண்ணுவது என்ற வரைமுறை இல்லாம போயிடிச்சி.... //
ஹாஹாஹா.. ஆதி இன்னும் வரலையா?
//நையாண்டி நைனா said...
நல்ல ஆய்வு. தொடரவும். ஆனா அந்த திரி ரோசஸ் விளம்பரத்திலே ஒரு சூட்சுமம் இருக்கு//
அது என்ன சூட்சுமம் அண்ணே// நன்றி நைனா
//கார்த்திகைப் பாண்டியன் said...
நான் அந்த விளம்பரத்த பார்க்கலை நண்பா.. ஆனா உங்க பீலிங்க்ஸ் புரியுது.. எல்லாம் அவரவர் வாங்கி வந்த வரம்.. விடுங்க..//
இது எனக்கு மட்டும் அல்ல.... நீயும் ஒரு நாள் சங்கத்துல சேரும் போது தெரியும்..நன்றி நண்பா
// நட்புடன் ஜமால் said...
எனக்கு 3 ரோஸ் தான் பிடிக்கும்
டீ பிடிக்காது
//
அப்படியா?? நன்றி ஜமால்.
//நசரேயன் said...
நான் காப்பி கலர் ல தான் குடிக்கிறேன், அது காபியான்னு தெரியலை//
இந்த லொள்ளுக்குத்தான் அது இன்னான்னே புரிய மாட்டேங்குது.. நன்றி அண்ணாச்சி
// கமல் said...
சித்தப்பு...என்ன கேள்வியும் நீங்களே??? பதிலும் நீங்களோ??
நல்லாத் தான் இருக்கு தங்கமணி பகிடி....//
நல்லாத்தான் இருக்கும் கமல்........ நன்றி
//கடையம் ஆனந்த் said...
விளம்பரம் படுத்தும் பாடு நண்பா? இதுக்கு தான் நான் விளம்பரமே பார்க்கிறது இல்ல. ஹி...ஹி...ஹி//
என்ன மாப்ளே எப்படி இருக்க........ சீரியல் சினிமாவைவிட விளம்பரங்கள் எவ்வளவோ பெட்டர்
// T.V.Radhakrishnan said...
:-))))
//
நன்றி ஐயா
//நானும் அந்த விளம்ப்ரமெல்லாம் பார்க்கலை!!!ஒரு விளம்ப்ரத்தில் களைப்பாக இருக்கும் மனைவிக்கு கால் பிடித்து விடுவாரே!!! அது என்ன விளம்ப்ரமென்று தெரியவில்லை! அது எனக்குப் பிடித்திருந்தது!//
உங்க ரசனையோ ரசனை...... நன்றி ஆதவா
//Cable Sankar said...
தங்கமணி ஊர்ல இல்லையோ.. இல்ல இப்பத்தான் ஊர்லேர்ந்து வந்திருக்காங்களா.. ஒரே ரொமான்ஸா இருக்கு.//
ஏன் நான் ரொமான்ஸா இருக்க கூடாதா??........நன்றி அண்ணே
// jackiesekar said...
இப்படி எல்லாம் கூட விளம்பரம் வருதா? அத்திரி சார்//
இப்படி சொல்வதை நம்பமுடியலையே... நன்றி ஜாக்கி
//அகநாழிகை said...
பொதுவாவே விளம்பரங்களின் உளவியல் பேசப்பட வேண்டிய விஷயம்தான். குழந்தைகள், மனைவி, பெற்றோர், நண்பர், ஆண், பெண், கல்லூரி, ஆண்மை, பெண்மை, தோழி, காதலி, விலங்குகள், பொருட்கள், இடம், சூழல் என விளம்பரங்களில் சித்தரிக்கப்படுபவை பின்னியங்கும் உள்ளரசியல் என்ன...//
நல்லா சொன்னீங்க அண்ணே........ வருகைக்கு நன்றி
//தராசு said...
//யார்யார்தான் ரங்கமணிகளுக்கு அட்வைஸ் பண்ணுவது என்ற வரைமுறை இல்லாம போயிடிச்சி//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
அழாதீங்க அண்ணே..... உங்க பீலிங் எனக்கு புரியுது.அவ்வ்வ்வ்வ்வ்
// கார்க்கி said...
//யார்யார்தான் ரங்கமணிகளுக்கு அட்வைஸ் பண்ணுவது என்ற வரைமுறை இல்லாம போயிடிச்சி.... //
ஹாஹாஹா.. ஆதி இன்னும் வரலையா?//
அவரு ரொம்ப பிசி கார்க்கி நன்றி
இப்படி சொன்ன எப்படிங்க ......
என்னை இந்த கல்யாணமான அங்கிள் ஸ் எல்லாம் சேர்ந்து பயம் காட்டுறாங்க .....
//MayVee said...
இப்படி சொன்ன எப்படிங்க ......
என்னை இந்த கல்யாணமான அங்கிள் ஸ் எல்லாம் சேர்ந்து பயம் காட்டுறாங்க .....//
அப்படியா. சரி கல்யாணம்தான் பண்ணிப்பாருங்களேன்....
Post a Comment