Friday, April 10, 2009

தயாநிதி மாறனின் வெற்றியை சுலபமாக்கிய அதிமுக

அதிமுகவில் வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் மத்திய சென்னை வேட்பாளரின் பெயரை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்தேன்... காரணம் கடந்த முறை மத்திய சென்னையில் அதிமுக சார்பில் திரு. பாலகங்கா நிறுத்தப்பட்டார்.... போட்டி கடுமையாக இருந்தது.. ஆளும்கட்சிக்கு எதிரான அலையால் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திரு.தயாநிதி மாறன் வெற்றி பெற்றார். கடந்த முறை போலவே இம்முறையும் அதிமுக சார்பில் பலமான வேட்பாளர் போட்டி யிடுவார் என்று எதிர்பார்த்தால் அம்மாவுக்கு என்ன ஆச்சு? எஸ்.எஸ். சந்திரனை நிறுத்தி தயாநிதி மாறனின் வெற்றியை சுலபமாக்கிவிட்டார்.



2006 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் கோட்டையான தலைநகர் சென்னையிலுள்ள 14தொகுதிகளில் கிட்டத்தட்ட பாதி தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று திமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.அப்படி இருந்தும் அம்மா மத்திய சென்னையில் ஏன் எஸ்.எஸ். சந்திரனை நிறுத்தினார்/// ஒருவேளை கண்கள் பணித்து இதயம் இனிக்கும் முன் ஆளும் கட்சிக்கு எதிராக கிட்டத்தட்ட அதிமுகவுக்கு ஆதரவாக சன் குழுமம் செயல்பட்டதாலும், தேனியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தை நேரடி ஒளிபரப்பு செஞ்சதாலும் அம்மா ஏதாவது செய்யனும்னு நினைச்சு இதை செஞ்சாரோ???



எது எப்படியோ மதுரையும், மத்திய சென்னையும் திமுகவுக்கு இரண்டு தொகுதிகள் உறுதி......

28 comments:

ரொம்ப நல்லவன் said...

வழிமொழிகிறேன்.

பழூர் கார்த்தி said...

எனக்கும் ஆச்சரியம்தான்.. சந்திரன் எந்த அடிப்படையில், தகுதியில் நிறுத்தப்பட்டார் என்பது ஜெயலலிதாவுக்குத்தான் வெளிச்சம்!!

Anonymous said...

எனக்கு என்னமோ அவர் ஜெயிப்பது கஷ்டம் போல தான் தெரிகிறது. எதிர்த்து போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை நினைத்து நான் சொல்லவில்லை.

இந்த தொகுதியை பொறுத்தமட்டில் இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசிக்கிறhர்கள். அவர்கள் தான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியும்.

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த மனித நே மக்கள் கட்சி தற்போது வெளியேறி விட்டது. இந்த கட்சிக்கு இந்த தொகுதியில் பெருவாரியான வாக்கு வங்கி இருக்கிறது.

இதை வைத்து கணக்கீடும் போது ஓட்டுக்கள் பிரியலாம். இதனால் வேறு ஒருவர் வெற்றி பெறலாம்.

இல்லையென்றhல் தயாநிதி மாறன் குறைந்த ஓட்டுக்கள் வித்தியாசலத்திலே வெற்றி பெற முடியும்.
எது எப்படியோ மே 16 தெரிந்து விடும்.

ஆதவா said...

நீங்க அரசியல்ல இருக்கீங்கள்லா???
(பெரிய ஆளா??)

இருந்தா சொல்லுங்க... ஏதாச்சும் ஆதாயம் கிடைக்கும்!!!ஹ் அஹாஹா!!

ஸ்ட்ரெய்டா சொல்லுங்க... யார் ஜெயிப்பாங்க...

Anonymous said...

மனித நேய மக்கள் கட்சியின் தாக்கம் கண்டிப்பாக இருக்கும் . தயாநிதி மாறன் குறைந்த ஓட்டுக்கள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற முடியும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

எனது தேங்காய்..மாங்காய்...பதிவில் கடைசி ஜோக்கைப்பார்க்கவும்...

Anonymous said...

சூட்சுமம் தெரியாம இருக்கீர்,எஸ் எஸ் சந்திரன் ஜெயித்தால் எப்படி விமர்சனம் இருக்கும் பாருங்க

Thamira said...

அப்படியே இந்த இரண்டுடன் அண்ணன் JKR ஐயும் சேர்த்துக்கொண்டால் மூன்று இடம் கன்பர்ம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

விடுங்க நண்பா.. எஸ். எஸ். சந்திரன் ஒரு காமெடி பீசு.. அதைபோய் ரொம்ப சீரியசா பேசிக்கிட்டு..

Cable சங்கர் said...

ஏற்கனவே அவர்களுக்குள் ஒரு உள் உறவு இருப்பது, தினகரனிலும், தமிழ் முரசுவில் அதிமுக விளம்பரம் வந்த போதே தெரிந்தது தானே.

தராசு said...

//@ Cable Sankar said...
ஏற்கனவே அவர்களுக்குள் ஒரு உள் உறவு இருப்பது, தினகரனிலும், தமிழ் முரசுவில் அதிமுக விளம்பரம் வந்த போதே தெரிந்தது தானே.//

இங்க பார்றா, இப்படி எல்லாமா, கோக்கு மாக்கா கோத்திவுடுவாங்க

அத்திரி said...

//jchat said...
வழிமொழிகிறேன்.//

நன்றி jchat

//பழூர் கார்த்தி said...
எனக்கும் ஆச்சரியம்தான்.. சந்திரன் எந்த அடிப்படையில், தகுதியில் நிறுத்தப்பட்டார் என்பது ஜெயலலிதாவுக்குத்தான் வெளிச்சம்!!//

எல்லாம் அம்மாவுக்கே வெளிச்சம் இன்னைக்குக்கூட இரண்டு தொகுதி வேட்பாளரை மாற்றியிருக்கிறார்.. நன்றி கார்த்தி

அத்திரி said...

கடையம் ஆனந்த் said...
//இந்த தொகுதியை பொறுத்தமட்டில் இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசிக்கிறhர்கள். அவர்கள் தான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியும்.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த மனித நே மக்கள் கட்சி தற்போது வெளியேறி விட்டது. இந்த கட்சிக்கு இந்த தொகுதியில் பெருவாரியான வாக்கு வங்கி இருக்கிறது. //

கண்டிப்பாக வாக்குகள் பிரியலாம்...ஆனால் வெற்றி உறுதி...மத்திய அமைச்சரவையிலே சுறுசுறுப்பானவர் என்று பெயர் எடுத்தவர் ஆயிற்றே......... முஸ்லிம்கள் எப்பவும் திமுக பக்கம் தானே
..

அத்திரி said...

//ஆதவா said...
நீங்க அரசியல்ல இருக்கீங்கள்லா???
(பெரிய ஆளா??)
இருந்தா சொல்லுங்க... ஏதாச்சும் ஆதாயம் கிடைக்கும்!!!ஹ் அஹாஹா!!//

அரசியலுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை..... ஏதோ எனக்கு தெரிஞ்சத எழுதுறேன்

//ஸ்ட்ரெய்டா சொல்லுங்க... யார் ஜெயிப்பாங்க...//

மே 16ஆம் தேதி சொல்கிறேன். நன்றி ஆதவா

அத்திரி said...

//Anonymous said...
மனித நேய மக்கள் கட்சியின் தாக்கம் கண்டிப்பாக இருக்கும் . தயாநிதி மாறன் குறைந்த ஓட்டுக்கள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற முடியும்.//


யோசிக்க வேண்டிய விசயம்தான்........ பாக்கலாம் நன்றி பெயரில்லாதவரே

அத்திரி said...

//T.V.Radhakrishnan said...
எனது தேங்காய்..மாங்காய்...பதிவில் கடைசி ஜோக்கைப்பார்க்கவும்//

ஐயா ஜோக் டாப்பு டக்கர்....... அரசியல்வாதிங்க டவுசர கிழிச்சிட்டிங்க....நன்றி

//Anonymous said...
சூட்சுமம் தெரியாம இருக்கீர்,எஸ் எஸ் சந்திரன் ஜெயித்தால் எப்படி விமர்சனம் இருக்கும் பாருங்க//

ஜெயிச்சாத்தானே....நன்றி பெயரில்லாதவரே

அத்திரி said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
அப்படியே இந்த இரண்டுடன் அண்ணன் JKR ஐயும் சேர்த்துக்கொண்டால் மூன்று இடம் கன்பர்ம்..//

அண்ணன் ஜேகேஆர் ஜெயிப்பது கஷ்டம்... தென் மாவட்டங்களில் தேர்தல்னாலே நம்ம மக்களுக்கு ரெட்ட இலைதான் ஞாபகத்துக்கு வரும்........ ஏதாவது அலை அடிச்சாத்தான் திமுக ஜெயிக்கும்........ எதிரணிவேட்பாளர் கொஞ்சம் ஸ்ட்ராங்க்..நன்றி அண்ணே

அத்திரி said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
விடுங்க நண்பா.. எஸ். எஸ். சந்திரன் ஒரு காமெடி பீசு.. அதைபோய் ரொம்ப சீரியசா பேசிக்கிட்டு..//

விட்டுட்டா போச்சி....... நன்றி நண்பா

அத்திரி said...

//Cable Sankar said...
ஏற்கனவே அவர்களுக்குள் ஒரு உள் உறவு இருப்பது, தினகரனிலும், தமிழ் முரசுவில் அதிமுக விளம்பரம் வந்த போதே தெரிந்தது தானே.//


ம்ம்ம்....கரெக்டா சொன்னீங்க அண்ணே நன்றி

அத்திரி said...

/தராசு said...
//@ Cable Sankar said...
ஏற்கனவே அவர்களுக்குள் ஒரு உள் உறவு இருப்பது, தினகரனிலும், தமிழ் முரசுவில் அதிமுக விளம்பரம் வந்த போதே தெரிந்தது தானே.//

இங்க பார்றா, இப்படி எல்லாமா, கோக்கு மாக்கா கோத்திவுடுவாங்க//

கோக்கு மாக்கா கோத்து உடுறதுதானே நம்ம வேலை.... அப்புறம் போட்டோவுல ரொம்ப இளமையா இருக்கீங்க...... 30 வருசம் முன்னாடி எடுத்ததா??

Anonymous said...

அத்திரி said...
முஸ்லிம்கள் எப்பவும் திமுக பக்கம் தானே
//
அப்படியெல்லாம் சொல்ல முடியாது நண்பா. ஓட்டு போடுகிற வரைக்கும் யாருடைய மனநிலையையும் சரியாக சொல்ல முடியாது. பார்க்கலாம் யார் வெல்கிறhர்கள் என்று.

அத்திரி said...

// கடையம் ஆனந்த் said...
அப்படியெல்லாம் சொல்ல முடியாது நண்பா. ஓட்டு போடுகிற வரைக்கும் யாருடைய மனநிலையையும் சரியாக சொல்ல முடியாது. பார்க்கலாம் யார் வெல்கிறhர்கள் என்று.
//

மாப்ளே நீ சொன்னா சரியாத்தான் இருக்கும்

ttpian said...

அவசர அறிவிப்பு
பெரியார் மடம்,வீரமனி சுவாமிகளின்,சிறப்பு பூஜை...
சொனிஅ குடும்பத்தினர் ந்லம் வேண்டி...
சிறப்பு அழைப்பு...கருனனிதி குருக்கல்...
அனைவரும் வருக....அருல் ஆசி பெறுக....
கட்டளை விசாரனை
பெரியார் திடல்...பூஜை சங்க நிர்வாகிகல்!

அத்திரி said...

//ttpian said...
அவசர அறிவிப்பு
பெரியார் மடம்,வீரமனி சுவாமிகளின்,சிறப்பு பூஜை...
சொனிஅ குடும்பத்தினர் ந்லம் வேண்டி...
சிறப்பு அழைப்பு...கருனனிதி குருக்கல்...
அனைவரும் வருக....அருல் ஆசி பெறுக....
கட்டளை விசாரனை
பெரியார் திடல்...பூஜை சங்க நிர்வாகிகல்!//


ஆஹா நல்லாவே சொல்லியிருக்கீங்க. நன்றி ttpian

தமிழ் மதுரம் said...

என்ன தேர்தலிலை பிசியோ??? உங்கடை நையாண்டிப் பதிவுகளைக் காணமுடியவில்லையே??? எப்ப வரும்??

அத்திரி said...

//கமல் said...
என்ன தேர்தலிலை பிசியோ??? உங்கடை நையாண்டிப் பதிவுகளைக் காணமுடியவில்லையே??? எப்ப வரும்??//

எனக்கு கொஞ்சம் தேர்தல் ஜுரம் அதிகமா இருக்கு அதான்.......... நன்றி கமல்

தராசு said...

//கோக்கு மாக்கா கோத்து உடுறதுதானே நம்ம வேலை.... அப்புறம் போட்டோவுல ரொம்ப இளமையா இருக்கீங்க...... 30 வருசம் முன்னாடி எடுத்ததா??//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்,

இப்படி உசுப்பேத்தி, உசுப்பேத்தியே.....!!!!!!!

அத்திரி said...

// தராசு said...
//கோக்கு மாக்கா கோத்து உடுறதுதானே நம்ம வேலை.... அப்புறம் போட்டோவுல ரொம்ப இளமையா இருக்கீங்க...... 30 வருசம் முன்னாடி எடுத்ததா??//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்,
இப்படி உசுப்பேத்தி, உசுப்பேத்தியே.....!!!!!!!//

உணமைய சொல்றேன் போட்டோவுல நீங்க ரொம்ப இளமையா இருக்கீங்க அண்ணே