Saturday, April 18, 2009

கேள்வியும் நானே-- பதிலும் நானே ---- தொடர்பதிவு

இந்த தொடர்பதிவுக்கு என்னை மாட்டி விட்ட மாப்பிள்ளை கடையம் ஆனந்த நல்லா இருடே.. படிக்கும்போது எக்ஸாமுல மொத்தமா ஒரு 15 கேள்விக்கு பதில் எழுதுறதுக்குள்ளே தாவு தீந்துரும்... இங்க என்னடான்னா 30 கேள்வியாம்.... இதுக்கு பதில் எழுத தினசரி மிரட்டல் வேறு மாப்ளே நீ எங்கிருந்தாலும் வாழ்க....

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

அத்திரி இது நான் படித்த பள்ளியின் பெயர்( ஒன்னாப்புல இருந்து எட்டாப்பு வரைக்கும் படிச்ச பள்ளி).. எனக்கு இந்த பெயர் பிடிச்சிருக்கு

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

இதையெல்லாம் சொல்லவா முடியும்?. தினசரி அடி வாங்கிட்டு இருக்கேன்....( என் பையனிடம்)அதனால தினசரி அழுற மாதிரி நடிக்க வேண்டியிருக்கு..

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

என் கையெழுத்து பிடிக்கும்.... ஆனால என் கையெழுத்தைவிட என் தம்பியின் கையெழுத்து மிக அழகாக இருக்கும்........ அதனால என் தம்பியின் கையெழுத்து எனக்கு ரொம்ப பிடிக்கும்

4).பிடித்த மதிய உணவு என்ன?

தக்காளி ரசம் தொட்டுக்க பருப்பு குழம்பு  + அப்பளம்

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

யாரிடமும் மிக எளிதில் பழகுவது கிடையாது.... கொஞ்சம் டைம் எடுத்துக்கிறது என் ஸ்டைல்

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

எங்க ஊர் கடனா அணைக்கு மேல் தோணியாறு அணையில் வந்து கலக்குமிடம் மிக அழகாக இருக்கும்... அங்கு குளிப்பதுனாலே செம குஷிதான்....... அருவின்னா குற்றால அருவியவிட அகஸ்தியர் அருவிதான் பெஸ்ட்

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முதலில் முகத்தைதான் பார்ப்பேன்... அதுதான் என் பழக்கம்

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

என்கிட்ட உள்ள எல்லா விசயமும் எனக்கு பிடிக்கும்...

பிடிக்காதது என்னுடைய முன் கோபம்... அதையும் முடிந்த அளவுக்கு தவிர்க்க முயல்கிறேன். காரணம் என் பையன்

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்த விசயம்: என் வரவுக்குள் செலவு செய்கிற பெரும் குணம்


பிடிக்காத விசயம்: தொன தொனன்னு கேள்வி கேக்குறது

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

சொந்த ஊரை விட்டு வெளியூரில் இருப்பதுதான் என்ன பண்றது???

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

மரூன் கலர் சட்டை,சிமெண்ட் கலர் பேண்ட்

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

டென் ஸ்போர்ட்ஸ் சேனல் பார்த்துக்கொண்டிருக்கிறேன் ஆஸ்திரேலியா 196/3... 33வது ஓவர்

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

மெல்லிய ரோஸ் கலர்

14.பிடித்த மணம்?

நெல் அறுவடை நேரங்களில் வயலில் உள்ள மணம்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

1. தாமிரா: தங்கமணி நையாண்டி பதிவானாலும், காதல் ரசம் சொட்டும் கவிதையானாலும் கலந்து கட்டி அடிப்பவர்


2. கேபிள் சங்கர்: நானும் இவரும் ஒரே துறையில் பணியாற்றுபவர்கள் என்றாலும் அண்ணனின் கதைகள் பட்டய கிளப்பும்.... சிறந்த உழைப்பாளர்

3.கார்த்திகை பாண்டியன்: புதுவரவு என்றாலும் மதுரைக்கே உரிய குசும்புடன் கலக்கி வருபவர்

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?

கடையம் ஆனந்த் எந்த பதிவு எழுதினாலும் மென்மையான் போக்கிலேயே எழ்துவாரு.... ஆனாலும் மாப்பிள்ளைக்கு கவிதையும் வரும் என்பதற்கு இந்த பதிவுதான் சூப்பர்ப்...http://manam-anandrey.blogspot.com/2009/03/blog-post_13.html

17. பிடித்த விளையாட்டு?

படிக்கும் வயதில் செல்லாங்குச்சி(கில்லி), கபடி விளையாட பிடிக்கும்... இப்போது கிரிக்கெட்டும் கால்பந்தும் பார்ப்பதற்கு பிடிக்கும்

18.கண்ணாடி அணிபவரா?

அப்படின்னா...

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

கதை எப்படியோ ஆனால் திரையில் கதை சொல்லும் விதம் அழகாக சும்மா விருவிருனு போகக்கூடிய படங்கள் பிடிக்கும்...

20.கடைசியாகப் பார்த்த படம்?

சன் டிவியில் பொல்லாதவன்...... படம் நல்லா இருந்தது.

21.பிடித்த பருவ காலம் எது?

இளவேனிற்காலம்

22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

புத்தகம் படிச்சி ரொம்ப நாளாவுது....

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

எப்போதாவது மாற்றுவேன்

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம்: மெல்லிய காற்றில் அசையும் மரங்களின் சத்தம்
பிடிக்காத சத்தம்: நகர வாழ்வின் எல்லா சத்தங்களும்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

சிவசைலம் டூ மும்பை

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்.

ஒரு வேலையும் தெரியாமல் ,செய்யாமல் மற்றவர்களை போட்டுக்கொடுத்து முன்னேறும் ஜென்மங்கள்

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

வேற என்ன மனசுதான்

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

இயற்கை அழகுள்ள எல்லா இடங்களும் எனக்கு சுற்றுலாஸ்தலம் தான்

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

தானுண்டு தன் வேலையுண்டு --- இப்படித்தான் இருக்கனும் அப்படின்றது என் ஆசை... இதுலயும் ஏகப்பட்ட சிரமங்கள்.... சமாளிச்சிட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

பெரும்பான்மையான ரங்கமணிகள் என்ன செய்வாங்களோ அதைத்தான் நானும் செய்வேன்...... யப்பா எஸ்கேப்..

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ்க்கை வாழ்வதற்கே

இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது

1. தாமிரா
2. கேபிள் சங்கர்
3.கார்த்திகை பாண்டியன்

25 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

எல்லாக் கேள்விக்கும் நல்லாதானே விடை சொல்லிக்கிட்டு வந்தீங்க.. கடைசியில ஏன்னே என்னை மாட்டி விட்டீங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிடித்த விசயம்: என் வரவுக்குள் செலவு செய்கிற பெரும் குணம்
பிடிக்காத விசயம்: தொன தொனன்னு கேள்வி கேக்குறது//

பார்த்தீங்களா.. அதுதான் மொத்தமா ஆனந்த் உங்ககிட்ட முப்பது கேள்வி கேட்டு மாட்டி விட்டுட்டாரு.. ஐயோ ஐயோ..

Cable சங்கர் said...

யாருப்பா அது அத்திரி.. யாருன்னே தெரியல்.. ஏதோ கேள்வி , கேள்வின்னுட்டு சொல்லியிருக்காரு.. ஒரே *&^%$^&*((*&^%^%% தெரியுதே.. சரியா டைப் பண்ணுங்க அத்திரி.. அதிலேயும் கடைசி வரிகள் ஒண்ணுமே &&&&&##@@$%%#%^^&&&***(^&^%%^$^*&*&&*( ந்னுத்தான் தெரியுது..

மீறான் அன்வர் said...

//இந்த தொடர்பதிவுக்கு என்னை மாட்டி விட்ட மாப்பிள்ளை கடையம் ஆனந்த நல்லா இருடே.. எங்கிருந்தாலும் வாழ்க....//
ஆமா ஆனந்த் அண்ணே கடையத்துல இருந்தாலும் பக்கத்துல முதலியார்பட்டியில இருந்தாலும் நல்லா இருங்க :)

//அத்திரி இது நான் படித்த பள்ளியின் பெயர்( ஒன்னாப்புல இருந்து எட்டாப்பு வரைக்கும் படிச்ச பள்ளி).. எனக்கு இந்த பெயர் பிடிச்சிருக்கு//

அத்திரிகலா நடுநிலைப்பள்ளி ல கலா வ மட்டும் ஏன் விட்டுட்டீங்க கலாவுக்கும் உங்களுக்கும் ஏதும் பிரச்சனையா ? :))


// தினசரி அடி வாங்கிட்டு இருக்கேன்....( என் பையனிடம்)//

எங்கிட்டோ உதைக்குதே :)


//யாரிடமும் மிக எளிதில் பழகுவது கிடையாது.... கொஞ்சம் டைம் எடுத்துக்கிறது என் ஸ்டைல்//

என்கிட்ட அப்படி எடுத்துக்கிட்டமாதிரி தெரியலயே :)


//எங்க ஊர் கடனா அணைக்கு மேல் தோணியாறு அணையில் வந்து கலக்குமிடம் மிக அழகாக இருக்கும்... அங்கு குளிப்பதுனாலே செம குஷிதான்....... அருவின்னா குற்றால அருவியவிட அகஸ்தியர் அருவிதான் பெஸ்ட்//

அப்படி போடுங்க சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர போலாகுமா ??

//முதலில் முகத்தைதான் பார்ப்பேன்... அதுதான் என் பழக்கம்//

நல்லவேளை நீங்க என்னை இன்னும் பார்க்கல :)

//என்கிட்ட உள்ள எல்லா விசயமும் எனக்கு பிடிக்கும்...//

வெரிகுட்.

//பிடிக்காதது என்னுடைய முன் கோபம்... //

மோசமானதாச்சே :(

//பிடித்த விசயம்: என் வரவுக்குள் செலவு செய்கிற பெரும் குணம்//

குடுத்து வசவுக

//பிடிக்காத விசயம்: தொன தொனன்னு கேள்வி கேக்குறது//

அது இல்லாம எப்படி தங்கமணியா இருக்குறதாம்:)



//ஒரு வேலையும் தெரியாமல் ,செய்யாமல் மற்றவர்களை போட்டுக்கொடுத்து முன்னேறும் ஜென்மங்கள்//

இவிங்களால ரொம்ப அடிவாங்கியிருக்கீங்க போல :)



//1. தாமிரா
2. கேபிள் சங்கர்
3.கார்த்திகை பாண்டியன்//

இவுகளுக்கு என் வாழ்த்துக்கள்.

நல்ல பதிவுண்ணே வாழ்த்துக்கள் ஆனந்து அண்ணனுக்கும்.

Thamira said...

இவ்வளவு வெரசலா ஒரு காரியத்தையும் நான் இதுவரை பண்ணியதில்லை.. வெய்யக்காலத்துல மழை வரப்போவுது. தொடர் பதிவு போட்டாச்சு..

கார்க்கிபவா said...

ரைட்டு..ஜூட்டு

Kumky said...

கேள்வி எல்லோக்கும் பொருந்தறமாதிரிதானிருக்கு.
ஆனா 5 பேருக்குதானா....

Anonymous said...

அப்பா தேர் நிலைக்கு வந்திருச்சு... எழுதுப்பா எழுதுங்கப்பா என்று சொல்லி சொல்லி ஒரு வழியா முடிச்சுடிங்க நண்பா. நிச்சயம் உங்களுக்கு பாஸ் மார்க் தான்.

Anonymous said...

எப்படி இருக்கணும்னு ஆசை?

தானுண்டு தன் வேலையுண்டு --- இப்படித்தான் இருக்கனும் அப்படின்றது என் ஆசை... இதுலயும் ஏகப்பட்ட சிரமங்கள்.... சமாளிச்சிட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்
//
சேம் பிளட்

Anonymous said...

நீங்கள் அழைத்த உங்கள் என்னுடைய நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

அத்திரிகலா நடுநிலைப்பள்ளி ல கலா வ மட்டும் ஏன் விட்டுட்டீங்க கலாவுக்கும் உங்களுக்கும் ஏதும் பிரச்சனையா ? :))
//

அப்படியா? இந்த வேலையெல்லாம் நடந்திருக்கா? சொல்லவேயில்லை.

அ.மு.செய்யது said...

சுவாரஸியமான கேள்வி பதில் அத்திரி ..

Anonymous said...

http://www.youtube.com/watch?v=p4BeBYXGHaI&eurl=http%3A%2F%2F

அத்திரி said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
எல்லாக் கேள்விக்கும் நல்லாதானே விடை சொல்லிக்கிட்டு வந்தீங்க.. கடைசியில ஏன்னே என்னை மாட்டி விட்டீங்க..//


பதிவரசியல்ல இதெல்லாம் சகஜம் நண்பா

அத்திரி said...

//Cable Sankar said...
யாருப்பா அது அத்திரி.. யாருன்னே தெரியல்.. ஏதோ கேள்வி , கேள்வின்னுட்டு சொல்லியிருக்காரு.. ஒரே *&^%$^&*((*&^%^%% தெரியுதே.. சரியா டைப் பண்ணுங்க அத்திரி.. அதிலேயும் கடைசி வரிகள் ஒண்ணுமே &&&&&##@@$%%#%^^&&&***(^&^%%^$^*&*&&*( ந்னுத்தான் தெரியுது..//

கண்ணாடிய துடைச்சிட்டு நல்லா பாருங்க அண்ணே

அத்திரி said...

//மீறான் அன்வர் said...
அத்திரிகலா நடுநிலைப்பள்ளி ல கலா வ மட்டும் ஏன் விட்டுட்டீங்க கலாவுக்கும் உங்களுக்கும் ஏதும் பிரச்சனையா ? :))//

வரும்போதே பிரச்சினை பண்ணனும்தான் வருவியா தம்பி...... ஏன் தம்பி இவ்ளோ சின்னதா பின்னூட்டம் போட்டிருக்க

அத்திரி said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
இவ்வளவு வெரசலா ஒரு காரியத்தையும் நான் இதுவரை பண்ணியதில்லை.. வெய்யக்காலத்துல மழை வரப்போவுது. தொடர் பதிவு போட்டாச்சு//

இப்பவெல்லாம் ரொம்ப வெரசலா இருக்கீங்களெ என்ன ரகசியம் அண்ணே

அத்திரி said...

//கார்க்கி said...
ரைட்டு..ஜூட்டு//

வா சகா

//கும்க்கி said...
கேள்வி எல்லோக்கும் பொருந்தறமாதிரிதானிருக்கு.
ஆனா 5 பேருக்குதானா//

வா கும்க்கி..... உங்க ஊர் எப்படி இருக்கு?.......

அத்திரி said...

//கடையம் ஆனந்த் said...
அப்பா தேர் நிலைக்கு வந்திருச்சு... எழுதுப்பா எழுதுங்கப்பா என்று சொல்லி சொல்லி ஒரு வழியா முடிச்சுடிங்க நண்பா. நிச்சயம் உங்களுக்கு பாஸ் மார்க் தான்.//

இந்த பதிவ எழுதுறதுக்கு ரெண்டு நாளாச்சு..... கவனிச்சிடு மாப்ளே

அத்திரி said...

//கடையம் ஆனந்த் said...
எப்படி இருக்கணும்னு ஆசை?

தானுண்டு தன் வேலையுண்டு --- இப்படித்தான் இருக்கனும் அப்படின்றது என் ஆசை... இதுலயும் ஏகப்பட்ட சிரமங்கள்.... சமாளிச்சிட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்
//
சேம் பிளட்//


உனக்குமா?

அத்திரி said...

//கடையம் ஆனந்த் said...
அத்திரிகலா நடுநிலைப்பள்ளி ல கலா வ மட்டும் ஏன் விட்டுட்டீங்க கலாவுக்கும் உங்களுக்கும் ஏதும் பிரச்சனையா ? :))
//
அப்படியா? இந்த வேலையெல்லாம் நடந்திருக்கா? சொல்லவேயில்லை.//

அது ஒரு அழகிய நிலாக்காலம்....

அத்திரி said...

//அ.மு.செய்யது said...
சுவாரஸியமான கேள்வி பதில் அத்திரி ..
//


நன்றி செய்யது

தராசு said...

//முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முதலில் முகத்தைதான் பார்ப்பேன்... அதுதான் என் பழக்கம்//

நெஜமா, உண்மையா, கரெக்டா, சரியா, உள்ளதை உள்ளபடி சொல்லுங்கண்ணே?

மீறான் அன்வர் said...

//அது ஒரு அழகிய நிலாக்காலம்....//

கலா வ பத்தி கேட்டா நிலா வ பத்தி சொல்லிட்டு இருக்கீங்க :))

T.V.ராதாகிருஷ்ணன் said...

இதை முதல்லயே படிச்சிருந்தா..நல்லா பதில் சொல்லி இருப்பேனே