Sunday, April 19, 2009

கருணநிதிக்கு கட்சிப்பதவி ஒரு கேடா?... தூத்துக்குடியில் அம்மா ஆவேசம் + ஈழப்பிரச்சினையில் விசயகாந்தின் காமெடி..

அம்மா நேற்று நாகர்கோவிலில் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்து நெல்லை,சங்கரன் கோவிலில் பிரச்சரத்தை முடித்து தற்போது தூத்துக்குடியில் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்... இந்த நான்கு இடங்களிலும் தன்னுடைய மேடை பேச்சில் ஒரே மாதிரியான விசயங்களை மட்டுமே பேசினார்... அந்தந்த தொகுதியின் உள்ளூர் பிரச்சினைகளை பற்றி அம்மா பேசவில்லை... மிகப்பெரிய ஆச்சரியம் ஈழப்பிரச்சினை பற்றி பேசியதுதான்...... தமிழ்நாட்டில் இந்த தேர்தலில் ஈழப்பிரச்சினை அவ்வளவாக எடுபடாது என்ற கலைஞர் மற்றும் காங்கிரஸின் எண்ணத்தை தவிடு பொடியாக்கும் நோக்கத்தில் அம்மா ஈழ பிரச்சினையை கையில் எடுத்திருப்பாரோ?....

நேற்று சென்னையில் நடந்த திமுக கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய கலைஞர் அந்த மேடையில் உதய சூரியன் சின்னம் மட்டும் இருந்ததாகவும், கைச்சின்னத்தையும் அதில் வைக்குமாறு மாவட்ட செயளாலரிடம் சொன்னதாகவும் கூறினார்.. கடைசி வரைக்கும் கைச்சின்னம் மேடையில் வைக்கப்படவில்லை.... இன்று இதுகுறித்து தூத்துக்குடியில் பேசிய அம்மா "தன்னுடைய கட்சியின் மாவட்ட செயளாலரை கட்டுப்படுத்த முடியாத கருணாநிதிக்கு கட்சிப்பதவி ஒரு கேடா."....என ஆவேசமாக கேட்டார்.....தன்னுடைய பேச்சில் எல்லா இடங்களிலும் ஆளும் கட்சி தோற்ற மக்கள் பிரச்சினையை பற்றி பேசாமல் வழக்கம் போல் மைனாரிட்டி திமுக அரசு, குடும்ப ஆட்சி போன்றவைகள்தான் அதிகம் இருந்தது...... ஏற்கனவே திருமங்கலத்தில் குடும்ப ஆட்சி பற்றி பேசி தேர்தலில் தோற்றதை மறந்து விட்டாரோ...... யாராவது சொல்லுங்கப்பா கருணாநிதியை திட்டுவதைவிட மக்கள் பிரச்சினையை பற்றி கொஞ்சம் அதிகம் பேச சொல்லுங்கப்பா...

அப்புறம் நம்ம கேப்டன் ஈழப்பிரச்சினை பற்றி நேற்று நீலகிரியில் பிரச்சாரம் பண்ணும் போது திருவாய் மலர்ந்திருக்கிறார் அது என்னவென்றால்"ஈழ மக்களை காப்பாற்ற இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பவேண்டும்" கூறுகிறார்..... ஆமா நம்ம கேப்டன் இவ்ளோ நாள் எங்க இருந்தார்.........? இலங்கையில் இன்று வரைக்கும் தமிழ் இனத்தை அழிக்கும் பணியில் சிங்கள ராணுவத்தின் மூளையாக செயல்படுவது அவருக்கு தெரியாதோ?,.......... அவருக்கு எப்படித்தெரியும் அதிமுகவின் ஓட்டு வங்கியை தகர்க்கனும் அப்படின்றதுக்காகவே காங்கிரசுக்கிட்ட பொட்டி வாங்கியதும் மறந்து போச்சு போல......... யப்பா யாரவது அவருக்கு சொல்லுங்கப்பா... இந்திய ராணுவம் அங்கதான் இருக்கு ராஜபக்ஷேவின் அடிப்பொடியா வேலை செஞ்சிட்டு இருக்குன்னு .............

22 comments:

Anonymous said...

தமிழ்நாட்டில் இந்த தேர்தலில் ஈழப்பிரச்சினை அவ்வளவாக எடுபடாது என்ற கலைஞர் மற்றும் காங்கிரஸின் எண்ணத்தை தவிடு பொடியாக்கும் நோக்கத்தில் அம்மா ஈழ பிரச்சினையை கையில் எடுத்திருப்பாரோ?....
//

உண்மை தான். நானும் அப்படி தான் நினைக்கிறேன்.

Anonymous said...

ரொம்ப அலசியிருக்கீங்க போல... பேசாம ஒரு கட்சி ஆரம்பிங்க...

Cable சங்கர் said...

//திருமங்கலத்தில் குடும்ப ஆட்சி பற்றி பேசி தேர்தலில் தோற்றதை மறந்து விட்டாரோ...... யாராவது சொல்லுங்கப்பா கருணாநிதியை திட்டுவதைவிட மக்கள் பிரச்சினையை பற்றி கொஞ்சம் அதிகம் பேச சொல்லுங்கப்பா...

//

சூப்பர்.. நல்ல பதிவு... தொடரட்டும் உங்கள் ஜெ ஆதரவு..???

உண்மைத்தமிழன் said...

அம்மாவுக்கு ஈழத்து மக்கள் அவர் மீது கொண்டிருக்கும் கோபத்தைக் குறைக்க வேண்டிய கட்டாயம். அதனால் பேசுகிறார்.

ஐயாவுக்கு எப்பாடுபட்டாவது தான்தான் உலகத் தமிழர்களின் தலைவர் என்ற பெயரை கைவிட்டுவிடக் கூடாது என்ற பயம்.

கேப்டனுக்கு ஈழத்துப் பிரச்சினையில் தான் எதுவும் பேசவில்லை என்பதற்காக கிடைக்கப் போகும் ஆயிரம் ஓட்டுக்களின் ஒன்றிரண்டு குறையக் கூடாதே என்று ஆசை..

என்ன அத்திரி ராசா.. கரீக்ட்டா..?

Thamira said...

ரெண்டாவது பகுதிக்கு அழவா? சிரிக்கவா? தெரியவில்லை..

செம்ம ஹாட்..

தராசு said...

சரி, சரி, அம்மா ஆதரவாளரா மறிட்டு வர்றீங்க.

கேப்டன் மேல ஏன் இப்படி ஒரு காண்டு?????

கார்த்திகைப் பாண்டியன் said...

எல்லாரை பத்தியும் உண்மையை சொல்லி இருக்கீங்க நண்பா.. ஒரு சில நேரத்துல விசயகாந்து தானா வாயக் கொடுத்து வாங்கி கட்டிகிராரோன்னு தோனுது..

butterfly Surya said...

என் தலைவன் உண்மைத்தமிழனை வழி மொழிகிறேன்.

நையாண்டி நைனா said...

நீங்க அம்மாவை பாலோ பண்ணும் "பிளாக்" கேட்டா??? ('blog' cat).

priyamudanprabu said...

அய்யா தமிழகத்து தேர்தலில் ஈழபிரச்சனை ஒன்னும் பெரிதாக பாதிக்காது
நாங்களெல்லாம் வயிற்று பிரச்சனையான காவேரி பிரச்சனையே மறந்திடுவோம் அப்புறம் ஈழபிரச்சனை எந்த மூலை

ஈழபிரச்சனை பற்றி படிந்தவர்களுக்கே முழுதாக தெரியாது அப்படியிருக்க பாமரர்கள் நிரம்பிய தமிழகத்தில் சொல்லதேவையே இல்லை

ஈழபிரச்சனையை தமிழ் அரசியல் கட்சிகள் பேசுவது சும்மா அரசியல் நாடகம் எவனுக்கும் அதில் அக்கறையில்லை
காவேரி ,முல்லையாறு பிரச்சனையை தீர்க்க வக்கில்லா தமிழனா ஈழதமிழனை காக்க போகிறான் ???
நல்ல காமெடி

அத்திரி said...

//கடையம் ஆனந்த் said...
தமிழ்நாட்டில் இந்த தேர்தலில் ஈழப்பிரச்சினை அவ்வளவாக எடுபடாது என்ற கலைஞர் மற்றும் காங்கிரஸின் எண்ணத்தை தவிடு பொடியாக்கும் நோக்கத்தில் அம்மா ஈழ பிரச்சினையை கையில் எடுத்திருப்பாரோ?....
//உண்மை தான். நானும் அப்படி தான் நினைக்கிறேன்.//

நன்றி மாப்ளே

//கடையம் ஆனந்த் said...
ரொம்ப அலசியிருக்கீங்க போல... பேசாம ஒரு கட்சி ஆரம்பிங்க...//

நான் நல்லா இருக்குறது உனக்கு பிடிக்கலையா???

அத்திரி said...

//Cable Sankar said...
//திருமங்கலத்தில் குடும்ப ஆட்சி பற்றி பேசி தேர்தலில் தோற்றதை மறந்து விட்டாரோ...... யாராவது சொல்லுங்கப்பா கருணாநிதியை திட்டுவதைவிட மக்கள் பிரச்சினையை பற்றி கொஞ்சம் அதிகம் பேச சொல்லுங்கப்பா...

//சூப்பர்.. நல்ல பதிவு... தொடரட்டும் உங்கள் ஜெ ஆதரவு..???//

சூப்பர்.. நல்ல பதிவுன்னு சொல்லி கடேசில கவுத்திட்டீங்களே அண்ணே...

அத்திரி said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
அம்மாவுக்கு ஈழத்து மக்கள் அவர் மீது கொண்டிருக்கும் கோபத்தைக் குறைக்க வேண்டிய கட்டாயம். அதனால் பேசுகிறார்.
ஐயாவுக்கு எப்பாடுபட்டாவது தான்தான் உலகத் தமிழர்களின் தலைவர் என்ற பெயரை கைவிட்டுவிடக் கூடாது என்ற பயம்.
கேப்டனுக்கு ஈழத்துப் பிரச்சினையில் தான் எதுவும் பேசவில்லை என்பதற்காக கிடைக்கப் போகும் ஆயிரம் ஓட்டுக்களின் ஒன்றிரண்டு குறையக் கூடாதே என்று ஆசை..

என்ன அத்திரி ராசா.. கரீக்ட்டா..?//

சரியாச்சொன்னீங்க அண்ணே

அத்திரி said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
ரெண்டாவது பகுதிக்கு அழவா? சிரிக்கவா? தெரியவில்லை..

செம்ம ஹாட்..//

நன்றி அண்ணே

அத்திரி said...

//தராசு said...
சரி, சரி, அம்மா ஆதரவாளரா மறிட்டு வர்றீங்க.//

எதுக்கு அண்ணே இப்படி"?

//கேப்டன் மேல ஏன் இப்படி ஒரு காண்டு?????//

பின்ன என்ன அண்ணே ஒன்னுந்தெரியாத மாதிரியில்ல பேசியிருக்காரு.........

அத்திரி said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
எல்லாரை பத்தியும் உண்மையை சொல்லி இருக்கீங்க நண்பா.. ஒரு சில நேரத்துல விசயகாந்து தானா வாயக் கொடுத்து வாங்கி கட்டிகிராரோன்னு தோனுது..//

கரெக்ட்டு நண்பா.......

அத்திரி said...

//வண்ணத்துபூச்சியார் said...
என் தலைவன் உண்மைத்தமிழனை வழி மொழிகிறேன்.//

நன்றி வண்ணத்துப்பூச்சியாரே

//நையாண்டி நைனா said...
நீங்க அம்மாவை பாலோ பண்ணும் "பிளாக்" கேட்டா???// ('blog' cat).

நைனா இப்படியெல்லாம் சொன்னா நான் அழுதிடுவேன்....... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அத்திரி said...

//பிரியமுடன் பிரபு said...
அய்யா தமிழகத்து தேர்தலில் ஈழபிரச்சனை ஒன்னும் பெரிதாக பாதிக்காது
நாங்களெல்லாம் வயிற்று பிரச்சனையான காவேரி பிரச்சனையே மறந்திடுவோம் அப்புறம் ஈழபிரச்சனை எந்த மூலை//

ம்ம்ம்ம்..... சரிதான்

ஈழபிரச்சனை பற்றி படிந்தவர்களுக்கே முழுதாக தெரியாது அப்படியிருக்க பாமரர்கள் நிரம்பிய தமிழகத்தில் சொல்லதேவையே இல்லை

ஈழபிரச்சனையை தமிழ் அரசியல் கட்சிகள் பேசுவது சும்மா அரசியல் நாடகம் எவனுக்கும் அதில் அக்கறையில்லை
காவேரி ,முல்லையாறு பிரச்சனையை தீர்க்க வக்கில்லா தமிழனா ஈழதமிழனை காக்க போகிறான் ???
நல்ல காமெடி....//

நன்றி பிரபு

பாபு said...

அத்திரி சௌக்கியமா?

Suresh said...

நல்ல பதிவு

i liked ur blog and have become ur follower.

You can also visit my blog and if you like it u can be my follower :-)

Hope u like it

அத்திரி said...

//பாபு said...
அத்திரி சௌக்கியமா?//

நல்லா இருக்கேன் பாபு.. என்ன ரொம்ப நாளா ஆளைக்காணோம்????

அத்திரி said...

//Suresh said...
நல்ல பதிவுi liked ur blog and have become ur follower.You can also visit my blog and if you like it u can be my follower :-)Hope u like it
//

நன்றி சுரேஷ்