Thursday, 23 April, 2009

திருடா திருடி-வெள்ளித்திரை-டாஸ்மாக்-- ஷேர் ஆட்டோ--தொங்க பாலு-தமிழக பந்த் அபார வெற்றி

இன்னும் சற்று நேரத்தில் தமிழினத்தலைவர் அவருடைய தொலைக்காட்சியில் கீழ்க்கண்டவாறு பேட்டியளிப்பார் " தமிழக மக்களின் ஒத்துழைப்போடு பந்த் அபார வெற்றி என்று"... நாமளும் அத கேட்டுக்கினு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்.. நேற்று நம்ம தலைமை செயலாளர் விட்ட அறிக்கை இவ்வளவு காமெடியா போவும்னு நினைக்கலை....

காலையில் சன் டிவியில் திருடா திருடி, மதியம் சரவணா .... கேடிவியில் காலையில் ஆயுதம்,மதியம் ஆனந்தம், கலைஞர் டிவியில் காலையில் முரட்டுக்காளை, மதியம் வெள்ளித்திரை... வழக்கம் போல் தமிழ் மியூசிக் சேனல்களில் தன் காதலிக்கோ பிரண்டுக்கோ பாட்டுக்கேட்கும் கூட்டம்.....எதையும் கண்டுகொள்ளாத எதிரணியிணரின் தொலைக்காட்சிகள்...... பணிமணைகளில் அழகாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப்பேருந்துகள்... அதற்கு காவலாக காவல் துறையினர்....முக்கிய சாலைகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தும்... தமிழ்நாட்டு மக்களின் குடிதாகத்தை மட்டும் எப்பவும் தீர்த்து வைக்கும் டாஸ்மாக் திறந்திருந்த காட்சிகள்....பிராய்லர் கடைகளில் ஞாயிற்றுக்கிழமையைவிட இன்று அதிக கூட்டம்.... அபார வசூல் செய்த ஷேர் ஆட்டோக்கள் மற்றும்ஆட்டோக்கள்...தொட்டுக்கொள்ள ஊறுகாயாக ஐபிஎல் போட்டிகள்இப்படி பொது மக்களின் ஒத்துழைப்போடு இந்த பந்த் அபார வெற்றி பெற்று விட்டது....

மொத்தத்தில் பந்த் என்ற பெயரில் தமிழ்நட்டு மக்களை ஒரு நாள் ஓய்வு எடுக்க வைத்த கலைஞரின் அன்புக்கு நான் அடிமை..........கடைசியா ஒரு கேள்வி இன்னைக்கு எதுக்கு பந்த் நடத்தினாங்க.........யாருக்காவது தெரியுமா ........... சொல்லுங்கப்பாதொங்க பாலு அளித்த பேட்டி இன்னும் டென்சனை கிளப்பியது.... இலங்கை பிரச்சினையில் மத்திய அரசும் மாநில அரசும் தலையிட்டு இருப்பதால்தான் அங்குள்ள நிகழ்வுகள் ஓரளவுக்கு கட்டுக்குள் இருக்கிறதாம்.... மேலும் இலங்கைக்கு உதவும் இஸ்ரேல் சீனா போன்ற நாடுகளின் ஆதிக்கத்தை நிறுத்த பன்னாட்டு அமைப்பிடம் மத்திய அரசு பேசுமாம்......... முடியல................ பேட்டி அளிக்கும் போது அந்த முகத்தை பாக்கனுமே... திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி..

25 comments:

ஆ.முத்துராமலிங்கம் said...

//மொத்தத்தில் பந்த் என்ற பெயரில் தமிழ்நட்டு மக்களை ஒரு நாள் ஓய்வு எடுக்க வைத்த கலைஞரின் அன்புக்கு நான் அடிமை..........//

உண்மங்க இது தான் நடந்தது.

ஆ.முத்துராமலிங்கம் said...

//பேசுமாம்......... முடியல................ பேட்டி அளிக்கும் போது அந்த முகத்தை பாக்கனுமே... திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி..//

சிரிப்ப அடக்க முடியல.

கோவி.கண்ணன் said...

இந்த பந்து வெற்றிகரமாக நடந்ததால் தமிழ் நாட்டில் தூமுக அலை வீசுவதாகவும், தங்கள் கூட்டணிக்கு 40 க்கு 40 கிடைக்கப் போவது உறுதியாகிவிட்டது என்று தொங்கபாலு தெரிவித்தார்

மாண்புமிகு பொதுஜனம் said...

அதென்னமோதெரியவில்லை.மொக்கைக்கும்,நையாண்டிக்கும்,ஜோசியத்துக்கும்வரிசையில் நின்று பின்னூட்டம் போடும் பதிவர்கள் தமிழக அரசு,நடுவணரசுகளின் கையாலாகாதத்தனத்தைக் கண்டித்து பின்னூட்டமே போடுவதில்லை.நமக்கேன் வம்பு?என்று நழுவுகிறார்களோ!

செத்துக்கொண்டிருப்பது நம் இனமய்யா.
‌ ‌

Anonymous said...

Nobody else can make fun of the people of tamilnadu than Karunanidhi.
1. Not achieved any thing by way of any of this stupid show of strength other than to consolidate his base
2. Bus service is non-essential service and so need not operate. but Tasmak is essential service and should be kept open. Then only people will stay drunk and become more numb to the reality

3. What ever be the opportunity, learn to make money out of it. By announcing a bundh, both Sun TV and KalaignarTV could keep their regular trash for some other day and come with fresh trash with more advertising revenue!

What is the way out of this? It is so painful to see the state of our state!
--anvarsha

அ.மு.செய்யது said...

//இலங்கைக்கு உதவும் இஸ்ரேல் சீனா போன்ற நாடுகளின் ஆதிக்கத்தை நிறுத்த பன்னாட்டு அமைப்பிடம் மத்திய அரசு பேசுமாம்.......//

விரக்திதான் மிஞ்சுகிறது.

வித்யா said...

ரெஸ்ட் எடுத்து எடுத்தே டயர்டா ஆகிடுவோம் போலிருக்கே. பையா ஒரு ஆபிள் ஜூஸ் கொண்டுவாப்பா. படம் பார்த்து ரொம்ப களைச்சு போய்ட்டேன்.

Anonymous said...

திமுக கூட்டணி கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் இருந்தனராமே. அவர்கள் ஓய்வே எடுக்கவில்லை. ஏன் இப்படி அபாண்டமாக பழி போடுகிறீர்கள்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

:-((

shortfilmindia.com said...

///கடைசியா ஒரு கேள்வி இன்னைக்கு எதுக்கு பந்த் நடத்தினாங்க.........யாருக்காவது தெரியுமா ........... சொல்லுங்கப்பா//

:(0)

Anonymous said...

கடைசியா ஒரு கேள்வி இன்னைக்கு எதுக்கு பந்த் நடத்தினாங்க.........யாருக்காவது தெரியுமா ........... சொல்லுங்கப்பா//
அதெல்லாம் வேண்டாங்க .இந்த திருட்டு பய தொங்கபாலுக்கும் விபசார புரோக்கர் சோனாவுக்கும் என்னங்க சம்பந்தம்.
கொஞ்சம் தெரிஞ்சவங்க சொல்லுங்க..ஒரு மான்சன் ல போர்டிகோ வுல தூங்கின ஆளுக்கு எப்படி ஆயிரம் கோடி ரூபாய் சொத்து.போங்க ஒன்னு காங்கிரஸ் ல சேருங்க இல்ல தொங்கபாலு கிட்ட உதவியாளர சேருங்க.

உமா

தராசு said...

சரியான ஆதங்கம்.

இந்த மதிகெட்ட மாந்தரின் நாடகங்களைக்கண்டு மனது மரத்துப்போய்விட்டது அத்திரி.

கார்த்திகைப் பாண்டியன் said...

நீங்களும் நானும் புலம்பி என்ன ஆகப் போகுது.. ஜனங்க ஹாயா டிவி பார்த்து பொழுது போக்க இன்னொரு ஞாயிறு.. அவ்வளவுதான்..

அத்திரி said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
//பேசுமாம்......... முடியல................ பேட்டி அளிக்கும் போது அந்த முகத்தை பாக்கனுமே... திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி..//

சிரிப்ப அடக்க முடியல.//

நன்றி முத்துராமலிங்கம்

அத்திரி said...

//கோவி.கண்ணன் said...
இந்த பந்து வெற்றிகரமாக நடந்ததால் தமிழ் நாட்டில் தூமுக அலை வீசுவதாகவும், தங்கள் கூட்டணிக்கு 40 க்கு 40 கிடைக்கப் போவது உறுதியாகிவிட்டது என்று தொங்கபாலு தெரிவித்தார்//

வாங்க கோவியாரே.....நன்றி

அத்திரி said...

// மாண்புமிகு பொதுஜனம் said...
அதென்னமோதெரியவில்லை.மொக்கைக்கும்,நையாண்டிக்கும்,ஜோசியத்துக்கும்வரிசையில் நின்று பின்னூட்டம் போடும் பதிவர்கள் தமிழக அரசு,நடுவணரசுகளின் கையாலாகாதத்தனத்தைக் கண்டித்து பின்னூட்டமே போடுவதில்லை.நமக்கேன் வம்பு?என்று நழுவுகிறார்களோ!
செத்துக்கொண்டிருப்பது நம் இனமய்யா.//

நன்றி
பொதுஜனம்

அத்திரி said...

//Anonymous said...
Nobody else can make fun of the people of tamilnadu than Karunanidhi.
1. Not achieved any thing by way of any of this stupid show of strength other than to consolidate his base
2. Bus service is non-essential service and so need not operate. but Tasmak is essential service and should be kept open. Then only people will stay drunk and become more numb to the reality
//
நன்றி பெயரில்லாதவரே

அத்திரி said...

//அ.மு.செய்யது said...
//இலங்கைக்கு உதவும் இஸ்ரேல் சீனா போன்ற நாடுகளின் ஆதிக்கத்தை நிறுத்த பன்னாட்டு அமைப்பிடம் மத்திய அரசு பேசுமாம்.......//
விரக்திதான் மிஞ்சுகிறது.//

என்ன பண்றது செய்யது...நன்றி

//வித்யா said...
ரெஸ்ட் எடுத்து எடுத்தே டயர்டா ஆகிடுவோம் போலிருக்கே. பையா ஒரு ஆபிள் ஜூஸ் கொண்டுவாப்பா. படம் பார்த்து ரொம்ப களைச்சு போய்ட்டேன்.//

அது சரி......நன்றி வித்யா

அத்திரி said...

// Anonymous said...
திமுக கூட்டணி கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் இருந்தனராமே. அவர்கள் ஓய்வே எடுக்கவில்லை. ஏன் இப்படி அபாண்டமாக பழி போடுகிறீர்கள்.//

நன்றி பெயரில்லாதவரே

அத்திரி said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
:-((//

வாங்க அண்ணே

//shortfilmindia.com said...
///கடைசியா ஒரு கேள்வி இன்னைக்கு எதுக்கு பந்த் நடத்தினாங்க.........யாருக்காவது தெரியுமா ........... சொல்லுங்கப்பா//

:(0)//

கேபிள் அண்ணே ஒன்னுமே சொல்லலை

அத்திரி said...

நன்றி பெயரில்லாதவரே


//தராசு said...
சரியான ஆதங்கம்.

இந்த மதிகெட்ட மாந்தரின் நாடகங்களைக்கண்டு மனது மரத்துப்போய்விட்டது அத்திரி//

ஆமாண்ணே.... நன்றி

அத்திரி said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
நீங்களும் நானும் புலம்பி என்ன ஆகப் போகுது.. ஜனங்க ஹாயா டிவி பார்த்து பொழுது போக்க இன்னொரு ஞாயிறு.. அவ்வளவுதான்.//

வா நண்பா...........நன்றி

Cable Sankar said...

ஷேர் ஆட்டோவில் சென்றாவது கடமையாற்றிய அதிமுக உறுப்பினர் அத்திரி வாழ்க..

அத்திரி said...

//Cable Sankar said...
ஷேர் ஆட்டோவில் சென்றாவது கடமையாற்றிய அதிமுக உறுப்பினர் அத்திரி வாழ்க..//


ஷேர் ஆட்டோ ரெடி பண்ணி கொடுத்த கேபிள் சங்கர் அண்ணன் வாழ்க

Mehar said...

Hello Friend, Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers and their behavior. My research topic is "Improving self concept through blogging". In connection with my research I need your help. If you spare your mail Id, I will be sending the research questionnaire to your mail Id. You can give your responses to the questionnaire. It will take only ten minutes to complete the questionnaire. My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose. To end with friendly note, I am always ready to help you if you have any queries or doubts related to psychology. Thank you.
Regards
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com