Saturday, May 16, 2009

மாப்பு வச்சிட்டாங்கய்யா ஆப்பு.....

இந்தப்பதிவின் தலைப்பு யாருக்கு சரியா இருக்கோ இல்லையோ நம்ம டாக்டர் ஐயா கட்சிக்கும், தமிழக காங்கிரசு முண்ணனி தலைவர்களுக்கும் பொருந்தும். ஒவ்வொரு முறையும் தேர்தல் தேதி அறிவித்தவுடன் நம்ம டாக்டர் ஐயா பிலிம் காட்ட ஆரம்பிப்பார்... நாடாளுமன்றத்தேர்தலில் ஒரு கூட்டணி, சட்டமன்றத்தேர்தலில் ஒரு கூட்டணி அப்படி இப்படினு அரசியல் வியாபார கணக்கு போட்டு திராவிடக்கட்சிகளுக்கு அல்வா கொடுப்பதுதான் இவர் வேலை.



ஒவ்வொரு தடவையும் இவர் போடும் கணக்கு சரியாக இருந்ததால் நாங்கள் எப்பவும் வெற்றி கூட்டணிதான்... பாமக ஒரு தவிர்க்க இயலாத கட்சி அப்படினு ஒரு இறுமாப்பு. இதையே சாக்காக வைத்து கூட்டணி வைக்கும் கட்சிகளிடம் பேரம் பேசி தலைவலியை ஏற்படுத்துவதே டாக்டர் ஐயாவின் பொழுது போக்கு... இநத நாடாளுமன்றத்தேர்தலுக்கு முன் திமுக கூட்டணியில் இருந்த பாமக வழக்கம் போல் அவரின் அரசியல் வியாபார கணக்கின் படி எல்லோரும் எதிர்பார்த்தது போல் அதிமுகவில் ஐக்கியமானார்...


இன்றைக்கு வந்த முடிவின் படி பாமக வை மக்கள் அது போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் புறந்தள்ளிவிட்டனர்.... டாக்டர் ஐயாவின் நிலையை நினைச்சா..........ஹிஹிஹி....பாமகவின் வருங்கால அரசியல் நிலை..இனிமேல் இந்த பேரம் பேசுவது உட்பட எல்லாமே.......ஊஊஊஊஊஊ இருந்தா ஒரே கூட்டணியில் இருங்கடா... இல்லைனா பாமகவின் நிலைதான் உங்களுக்கு என்று மக்கள் தெளிவா சொல்லிட்டாங்க.........

முத்துக்குமாரா யாரு அதுன்னு கேள்விகேட்ட அமைச்சர் இளங்கோவனை ஈரோட்டில் மக்கள் குப்ப்ற படுக்க வச்சிட்டாங்க.... இவரின் தோல்விக்கு கொங்குநாடு அமைப்பும் ஒரு காரணம்.. அந்த அமைப்பு கிட்டத்தட்ட 1லட்சம் வாக்குகளைப்பெற்றுள்ளது..மதிமுக 47,343 வாக்குகள் வித்தியாசத்தில் இங்கு வெற்றி பெற்றிருக்கிறது.



நம்ம தொங்கபாலு தினசரி அறிக்கையின் மூலம் பிரபலமானவர்.... இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி செய்வதில்லை என்று சத்தியம் பண்ணாத குறையா அறிக்கைவிட்டவர். லோக்கல் பிரச்சினையான கள் இறக்குவதை கண்மூடித்தனமா எதிர்த்தவர்.... இவருக்கும் ஆப்பு வச்சிட்டாங்க என்னா பேச்சு பேசினார் தொங்கபாலு... 46491 வாக்குகள் வித்தியாசத்தில் மண்ணை கவ்விட்டார்.


மயிலாடுதுறையில் மணிசங்கர் அய்யர் 36000வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துவிட்டார். விலைவாசி ஏற்றதுக்கு ஏற்ப மக்கள் தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும் அப்படினு புதுசா ஒரு ஐடியாவை சொன்ன முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் நிலைமை திரிசங்கு நிலைதான்...கடேசில ஒருவழியா ஜெயிச்சிட்டார்... இந்த வெற்றி அவருக்கு ஒரு பாடமாக அமையட்டும்...


விருது நகர்ல இன்னும் கண்ணைகட்டிக்கிட்டு இருக்கு.... காங்கிரஸ் வெற்றி பெற்றதாக அறிவிப்பு வந்தாலும் அங்கே பதிவான வாக்குகளைவிட எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக ஒரு தகவல்............ புயல் கரையை கடக்குமா??


அப்புறம் ஈழம் ஈழம் அப்படினு சொன்னாங்க...அது என்னவாகப்போவுதோ........அய்யோ...

32 comments:

ரங்குடு said...

மக்கள் தான் கலஞரின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவிச்சு, தி.மு.க விற்கு ஓட்டுப் போட்டுட்டாங்களே?

அவரும், காங்கிரஸும் ஈழத்தமிழர்களைக் கை கழுவி ரொம்ப நாளாச்சு.

இனிமேல் இலங்கைத் தமிழர்களைக் காக்க அந்தக் கடவுள் தான் வர வேண்டும்.

வருவார்.

Anonymous said...

கலைஞர் இந்த பிழைப்பு பிழைக்கிறதுக்கு.

?????

கார்க்கிபவா said...

இருந்தாலும் திமுக ஜெய்ச்சத பத்தி ஒரு வரி கூட எழுதலையே சகா.. எனக்கு என்னவோ தலைப்பு உங்களுக்கும் பொருந்தும்னு தோணுது :))))

யட்சன்... said...

தமிழகத்தில் பெரும்பான்மையான மக்களின் மன நிலையை தேர்தல் முடிவுகள் உணர்த்தியிருக்கின்றன.

மக்களை முட்டாளாய் நினைத்து இனி அரசியல் பண்ண முடியாது...அது பா.ம்.க வாய் இருந்தாலும் சரி, காங்கிரஸ் ஆக இருந்தாலும் சரி

Anonymous said...

இனிமேல் இலங்கைத் தமிழர்களைக் காக்க அந்தக் கடவுள் தான் வர வேண்டும்.

இத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும்
சப்பாணிக் கழுதையே - இனி
எப்போதும் மறவாது தமிழினம் - உனை
எப்போதும் மறவாது தமிழினம்!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல அலசல்..

டாக்டர பத்தி சொன்னது சரி...

இதோ என் அலசலையும் படித்துப் பாருங்க...

test said...

புயல் வலுவிலந்து விட்டது,

தீப்பெட்டி said...

சூப்பரா சொன்னீங்க பாஸ்..

Anonymous said...

/****
ரங்குடு said...
இனிமேல் இலங்கைத் தமிழர்களைக் காக்க அந்தக் கடவுள் தான் வர வேண்டும்.
**///
ஜெயலலிதா மட்டும் ஜெயித்திருந்தால் எல்லா பிரச்சனையும் தீர்ந்திடுமா... யோ.. போங்கயா..

Anonymous said...

ராமதாஸ் ஒரு செத்த பாம்பு பாவம் அதை அடிக்காதீர்கள்

Cable சங்கர் said...

//ராமதாஸ் ஒரு செத்த பாம்பு பாவம் அதை அடிக்காதீர்கள்//

என்னது செத்தபாம்பா.. உசுரோட இருக்கும் போது என்ன ஆட்டம் காட்டிச்சு.. அதான் சனங்க ஆசை தீர்ற வரைக்கும் அடிக்கிறாங்க.. அனானி ஏன் வருத்தபடுறீங்க..

ஆதவா said...

அதெல்லாம் சரிதான்..... ஈழத்தமிழர்கள்????

பா.ம.க வுக்கு இது தேவைதான்!!!

குடுகுடுப்பை said...

நல்லா வெச்சாங்க அந்தக்கட்சிய யாரும் சேக்காம விடனும்.

நான் வெல்லவேண்டும் என்று நினைத்த இருவர் தோல்வி.

வைகோ
சாருபாலா தொண்டைமான்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Venkatesh Kumaravel said...

எல்லாரும் எல்லாத்தையும் பத்தி பேசுனாலும் இளைஞர்களின் விடிவெள்ளி அண்ணன் சரத்பாபு பத்தில் சொல்லவே மாட்டேங்குறீங்களே!?

thomasruban-bangalore said...

மாப்பு வச்சிட்டாங்கய்யா ஆப்பு.....
டாக்டர் ஐயா கட்சி இருக்கும் போது என்ன ஆட்டம் காட்டிச்சு.மக்களை முட்டாளாய் நினைத்து இனி அரசியல் பண்ண முடியாது.
முத்துக்குமாரா யாரு அதுன்னு கேள்விகேட்ட அமைச்சர் இளங்கோவனை ஈரோட்டில் மக்கள் வச்சிட்டாங்கய்யா ஆப்பு.
வைகோ புயல் வலுவிலந்து விட்டது,

Anonymous said...

விஜயகாந்த் மாப்பு பாமக வாக்குவங்கியில் வட்சாரையா ஆப்பு

ராம கிருஷ்ணன் said...

கல்லூரி கட்டண கொள்ளை அடிக்காதீர்கள்.
மணல் கொள்ளை அடிக்காதீர்கள்.
சமசீர் கல்வி கொடுங்கள். ஈழத்தமிழரை காத்திடுங்கள்.
மது ஒழித்திடுங்கள். மதுவைக்கொண்டு மக்களை சுரண்டாதீர்கள்.
நிலம் எடுப்பதானால் உரிய இழப்பீடை மக்களுக்கு வழங்குங்கள்.
போதை ஆபாச கலாசாரத்தை டிவி மூலம் திணிக்காதீர்கள்.
நல்ல சினிமா வளருங்கள். சினிமா மோகம் ஒழியுங்கள் என்று மேலும் மேலும் மக்களுக்காக போராடினார்.

இது தவறென்றால் ஏழு தொகுதியிலும் தோற்றது நியாயம்தான் .
கருணாநிதி குடும்பம் பண்ணிய அநியாயங்களை விடவா ராமதாஸ் குடும்பம் செய்துவிட்டது?
அழகிரியின் அநியாங்கள் கொலைகள் கேபிள் அறுப்பு யுத்தங்கள் மக்கள் ஏற்றுகொண்டுவிடார்களா?
ரெண்டு வருடம் எந்த மக்கள் பணியுமே செய்யாத தயாநிதி மாறனை எதற்காக கட்சியை விட்டு நீக்கினார்கள். ஏன் மீண்டும் சீட் கொடுத்தார்கள். விடை தெரியாமலே வாக்களித்த மக்களை என்ன செய்வது? சிந்துத்து பார்த்தால் மாறன் வெற்றி பெற்றிருக்க முடியுமா?

கேபிள் சங்கர் கூறுகிறார்.....
////என்னது செத்தபாம்பா.. உசுரோட இருக்கும் போது என்ன ஆட்டம் காட்டிச்சு.. அதான் சனங்க ஆசை தீர்ற வரைக்கும் அடிக்கிறாங்க.. அனானி ஏன் வருத்தபடுறீங்க..////

இவர் தின்ற சோற்றிலா ராமதாஸ் மண்ணை அள்ளி போட்டுவிட்டார்? எதற்காக இந்த காழ்ப்புணர்ச்சி? எல்லோர் மனதிலும் குடிகொண்டிருக்கும் சாதிய உணர்வுதானே?
தினம் செத்துமடியும் தமிழனின் பிணம் - திமுக ஆதரவாளர்களுக்கு டேக் இட் ஈசி.
ஊழல் ஒரு பிரச்சினையே இல்லை.

குடும்பமே கழகமாவது மட்டும் மக்கள் ஏற்ப்பளிதுத்துவிட்டார்கள?

கேபிள் சங்கருக்கு சினிமா விமர்சனம் எழுதுவதில் மட்டுமே அவருக்கு கவலை.
பதிவு எழுதுபவர்கள் ராமதாசை ஒழித்துவிட்டதாக சந்தோசம் அடைபவர்கள் அனைவரும் ஜனநாயக கடமைகளை நேர்மையாக கடைபிடிப்பவர்கள்தானா? அவரவர் மனாசட்சிக்கு பதில் சொல்லி கொள்ளுங்கள்.

ஊர்சுற்றி said...

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!

Sanjai Gandhi said...

அதிமுக தோல்வியை பத்தி ஒன்னுமே இல்லையே.. :)

அத்திரி said...

//ரங்குடு said...
மக்கள் தான் கலஞரின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவிச்சு, தி.மு.க விற்கு ஓட்டுப் போட்டுட்டாங்களே?//

உள்ளூர் பிரச்சினை தான் முக்கியம் என மக்கள் முடிவெடுத்துவிட்டனர்... நன்றி ரங்குடு

அத்திரி said...

// கார்க்கி said...
இருந்தாலும் திமுக ஜெய்ச்சத பத்தி ஒரு வரி கூட எழுதலையே சகா.. எனக்கு என்னவோ தலைப்பு உங்களுக்கும் பொருந்தும்னு தோணுது :))))//


திமுக தேமுதிகவால் ஜெயிக்க வைக்கப்பட்டது சகா..................

அத்திரி said...

//யட்சன்... said...
மக்களை முட்டாளாய் நினைத்து இனி அரசியல் பண்ண முடியாது...அது பா.ம்.க வாய் இருந்தாலும் சரி, காங்கிரஸ் ஆக இருந்தாலும் சரி//

சரியாசொன்னீங்க யட்சன்...நன்றி

//Anonymous said...
இனிமேல் இலங்கைத் தமிழர்களைக் காக்க அந்தக் கடவுள் தான் வர வேண்டும்.//

நல்லதே நடக்கும் என நம்புவோம் பெயரில்லாதவரே

அத்திரி said...

// S Senthilvelan said...
நல்ல அலசல்..
//

முதல் வருகைக்கு நன்றி செந்தில் வேலன்

//paulos raja said...
புயல் வலுவிலந்து விட்டது,//

ஆமாம் ..நன்றி ராஜா

அத்திரி said...

//Anonymous said...
ஜெயலலிதா மட்டும் ஜெயித்திருந்தால் எல்லா பிரச்சனையும் தீர்ந்திடுமா... யோ.. போங்கயா..//

யார் ஜெயித்தாலும் இந்த பிரச்சினை தீராது பெயரில்லாதவரே

அத்திரி said...

//Anonymous said...
ராமதாஸ் ஒரு செத்த பாம்பு பாவம் அதை அடிக்காதீர்கள்//

என்ன ஆட்டம் போட்டாங்க.........நன்றி பெயரில்லாதவரே

அத்திரி said...

//Cable Sankar said...
என்னது செத்தபாம்பா.. உசுரோட இருக்கும் போது என்ன ஆட்டம் காட்டிச்சு.. அதான் சனங்க ஆசை தீர்ற வரைக்கும் அடிக்கிறாங்க.. அனானி ஏன் வருத்தபடுறீங்க..//

அண்ணன் சொன்னா சரிதான்

//ஆதவா said...
அதெல்லாம் சரிதான்..... ஈழத்தமிழர்கள்????//

அது வந்து....................ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

நன்றி ஆதவா

அத்திரி said...

//குடுகுடுப்பை said...
நல்லா வெச்சாங்க அந்தக்கட்சிய யாரும் சேக்காம விடனும்.//

வாங்க குடுகுடுப்பை

//வெங்கிராஜா said...
எல்லாரும் எல்லாத்தையும் பத்தி பேசுனாலும் இளைஞர்களின் விடிவெள்ளி அண்ணன் சரத்பாபு பத்தில் சொல்லவே மாட்டேங்குறீங்களே!?//

சொல்வதற்கு ஒன்னும் இல்லை வெங்கிராஜா

அத்திரி said...

//thomasruban-bangalore said...
மாப்பு வச்சிட்டாங்கய்யா ஆப்பு.....
டாக்டர் ஐயா கட்சி இருக்கும் போது என்ன ஆட்டம் காட்டிச்சு.மக்களை முட்டாளாய் நினைத்து இனி அரசியல் பண்ண முடியாது.//

கண்டிப்பாக தாமஸ்

//Anonymous said...
விஜயகாந்த் மாப்பு பாமக வாக்குவங்கியில் வட்சாரையா ஆப்பு//

நன்றி பெயரில்லாதவரே

அத்திரி said...

//ராம கிருஷ்ணன் said...
கேபிள் சங்கர் கூறுகிறார்.....
////என்னது செத்தபாம்பா.. உசுரோட இருக்கும் போது என்ன ஆட்டம் காட்டிச்சு.. அதான் சனங்க ஆசை தீர்ற வரைக்கும் அடிக்கிறாங்க.. அனானி ஏன் வருத்தபடுறீங்க..////

இவர் தின்ற சோற்றிலா ராமதாஸ் மண்ணை அள்ளி போட்டுவிட்டார்? //

அண்ணன் கேபிள் சங்கர் பாமக பண்ணும் அரசியல் வியாபாஅரத்தை பற்றித்தான் அப்படி சொன்னார்..... அதே வியாபாரம்தான் இன்று பாமகவை மண்ணை கவ்வ வைத்துவிட்டது..
நன்றி ராம கிருஷ்ணன்

அத்திரி said...

//ஊர்சுற்றி said...
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு//

வாங்க ஊர்சுற்றி

// Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
அதிமுக தோல்வியை பத்தி ஒன்னுமே இல்லையே.. :)//

என்னத்தை சொல்ல...... முதல் வருகைக்கு நன்றி சஞ்சய்

Anonymous said...

####கல்லூரி கட்டண கொள்ளை அடிக்காதீர்கள்.
மணல் கொள்ளை அடிக்காதீர்கள்.
சமசீர் கல்வி கொடுங்கள். ஈழத்தமிழரை காத்திடுங்கள்.
மது ஒழித்திடுங்கள். மதுவைக்கொண்டு மக்களை சுரண்டாதீர்கள்.
நிலம் எடுப்பதானால் உரிய இழப்பீடை மக்களுக்கு வழங்குங்கள்.
போதை ஆபாச கலாசாரத்தை டிவி மூலம் திணிக்காதீர்கள்.
நல்ல சினிமா வளருங்கள். சினிமா மோகம் ஒழியுங்கள் என்று மேலும் மேலும் மக்களுக்காக போராடினார்.

இது தவறென்றால் ஏழு தொகுதியிலும் தோற்றது நியாயம்தான் .
கருணாநிதி குடும்பம் பண்ணிய அநியாயங்களை விடவா ராமதாஸ் குடும்பம் செய்துவிட்டது?
அழகிரியின் அநியாங்கள் கொலைகள் கேபிள் அறுப்பு யுத்தங்கள் மக்கள் ஏற்றுகொண்டுவிடார்களா?
ரெண்டு வருடம் எந்த மக்கள் பணியுமே செய்யாத தயாநிதி மாறனை எதற்காக கட்சியை விட்டு நீக்கினார்கள். ஏன் மீண்டும் சீட் கொடுத்தார்கள். விடை தெரியாமலே வாக்களித்த மக்களை என்ன செய்வது? சிந்துத்து பார்த்தால் மாறன் வெற்றி பெற்றிருக்க முடியுமா?

கேபிள் சங்கர் கூறுகிறார்.....
////என்னது செத்தபாம்பா.. உசுரோட இருக்கும் போது என்ன ஆட்டம் காட்டிச்சு.. அதான் சனங்க ஆசை தீர்ற வரைக்கும் அடிக்கிறாங்க.. அனானி ஏன் வருத்தபடுறீங்க..////

இவர் தின்ற சோற்றிலா ராமதாஸ் மண்ணை அள்ளி போட்டுவிட்டார்? எதற்காக இந்த காழ்ப்புணர்ச்சி? எல்லோர் மனதிலும் குடிகொண்டிருக்கும் சாதிய உணர்வுதானே?
தினம் செத்துமடியும் தமிழனின் பிணம் - திமுக ஆதரவாளர்களுக்கு டேக் இட் ஈசி.
ஊழல் ஒரு பிரச்சினையே இல்லை.

குடும்பமே கழகமாவது மட்டும் மக்கள் ஏற்ப்பளிதுத்துவிட்டார்கள?

கேபிள் சங்கருக்கு சினிமா விமர்சனம் எழுதுவதில் மட்டுமே அவருக்கு கவலை.
பதிவு எழுதுபவர்கள் ராமதாசை ஒழித்துவிட்டதாக சந்தோசம் அடைபவர்கள் அனைவரும் ஜனநாயக கடமைகளை நேர்மையாக கடைபிடிப்பவர்கள்தானா? அவரவர் மனாசட்சிக்கு பதில் சொல்லி கொள்ளுங்கள்.#####

மது கடைகள் துவங்கியது பாமக உள்ளிட்ட அதிமுக ஆட்சிகாலத்தில் அப்போது ராமதாஸ் என்ன செய்துகொண்டு இருந்தார். பிறர் தொடங்கிய கட்சியை பிடுங்கி இவர் நடத்திகொண்டிருக்கிறார் ராமதாஸ் என்பது உங்களுக்கு தெரியாதா , வனிய சமுதாயத்தில் எந்தனையோ பெரியவர்கள் இருக்கும் போது பல்கலைகழகத்துக்கு இவருடைய மனைவி பெயரை ஏன் வைத்து அழகுபார்த்தார் என்பது உங்களுக்குத்தான் தெரியும்