Friday, May 29, 2009

கலைஞர் - ஜெயா ஒரு விசயத்தில் மட்டும் ஒற்றுமை............

நடந்து முடிந்த மக்களவைத்தேர்தலில் தோற்ற கட்சிகள் தங்கள் தோல்விக்கு காரணத்தை தேடுகின்ற அதே நேரத்தில் தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் ஒப்பாரி சத்தங்கள் கொஞ்சம் அதிகமாகவும், நகைச்சுவையாகவும் இருக்கிறது.



பிரதான எதிர்க்கட்சியான பிஜேபி தங்களின் பிரச்சாரம் கடைக்கோடி மக்களை சென்றடையவில்லை என்றும்,மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொளவதாகவும் தெளிவாக சொல்லிவிட்டார்கள்... பீகார்ல நம்ம லல்லு திருவிளையாடல் தருமி பாணியில் எனக்கு வேணும் ஆசை ரொம்ப ஆசை என்ற அளவில் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.. ஆனால் தமிழ்நாட்டில் இதற்கு எதிர்மாறாக மக்கள் தீர்ப்பை ஜீரணிக்க முடியாமல் ஒப்பாரி வைக்கும் அறிக்கைகள் தான் அம்மாவிடம் இருந்தும்,டாக்டர் ஐயாவிடம் இருந்தும் அறிக்கை காமெடிகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.


ஓட்டு எந்திரத்தில் தில்லுமுல்லு செஞ்சிட்டாங்களாம்... தேர்தல் ஆணயம் நடுநிலையாக செயல்பட்டாலும் அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவா செயல்பட்டதனால் தோல்வியாம்...அதனால் வரும் தேர்தலில் வாக்கு சீட்டு முறையை கொண்டு வரணுமாம். தேமுதிக ஒரு படி மேலே போய் வருகின்ற சட்டமன்ற இடைத்தெர்தலில் வாக்கு சீட்டு முறையைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். ஆனால் மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம் என்று சொல்ல மட்டும் அவர்களால் முடியவில்லை...
 
அதிமுக தோற்க முக்கிய காரணங்கள்
 

1.எடுபடாத பிரச்சார யுக்தி... முக்கிய பிரச்சினைகளான மின்வெட்டு,விலைவாசி உயர்வு பற்றி மக்களிடம் கொண்டு செல்லாதது.
2. ஈழப்பிரச்சினையில் திடீர் பிதாமகனாக மாறியது
3.முக்கியமாக களப்பணிகள்...இதில்தான் அதிமுக முற்றிலும் தோற்றுவிட்டது....தெளிவில்லாத களப்பணிகள்....


திமுக கூட்டணி ஜெயிக்க காரணங்கள்


1.தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்தியது.
2.கிலோ அரிசி 1ரூபாய், இலவச டிவி,கேஸ் அடுப்பு
3.மிகத்திறமையான களப்பணிகள்........


தோல்விக்கான உன்மையான காரணங்களை ஆராயாமல் சும்மா ஒப்புக்கு புலம்புவது எதிர்க்கட்சிகளுக்கு அழகல்ல


டிஸ்கி:செயலலிதா பழையமுறையான வாக்கு சீட்டை கொண்டுவரச்சொல்லுவதற்கு கலைஞரும் ஒரு காரணம்... ஏன்னு கேட்டிங்கன்னா என்னதான் தகவல் அனுப்புவதற்கு ஈமெயில்,எஸ் எம் எஸ் வசதிகள் இருந்தாலும் இன்னும் பழைய முறையைத்தானே அவர் பின் பற்றுகிறார்........அதான்....
 
 
 
 

9 comments:

Cable சங்கர் said...

அவரு என்ன இன்னமும் புறாவா உட்டுக்கிட்டு இருக்காரு.. (ஓ.. கடிதம் எழுதறத சொல்றீங்களா..?)

Anonymous said...

தேர்தலில் வெற்றி தோல்வி என்பது எதிர்பார்த்த அரசியல் கட்சிகளுக்கு பெரிய விஷயமே இல்லை.


அ.தி.மு.க. இந்த தடவ 9 இடங்களை, அவர்களுக்கு பிடித்த எண்ணிலே கிடைத்து இருப்பது ஒருவகையில் மகிழ்ச்சி தான்.


கூட்டணி கட்சியை திருப்தி படுத்த எந்திரத்தில் கோளாறு என்று அறிக்கை விட வேண்டியிருக்கிறது அவர்களுக்கு.
இல்லையென்றhல் பா.ம.க., தங்கள் தோற்பதற்கு அ.தி.மு.க. தான் காரணம் என்று சொல்கின்ற நிலை வரலாம். இதற்காகவே அம்மா இப்படி அறிக்கை விடலாம்.

விரைவில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வர இருக்கிறது. ஆக, இப்படி ஏதாவது சொன்னால் தான் அரசியல் நடத்த முடியும்.

கார்க்கிபவா said...

முடிந்த பின் எல்லோரும் காரணம் சொல்லலாம்.. தேர்தலுக்கு முன் இதெல்லாம் செய்தால் தோல்வி கிடைக்கும்ன்னு சொல்ல முடிஞ்சுச்சா சகா உங்களால? இப்ப வந்து அலசி ஆரய்ஞ்சு என்ன பிரயோஜனம்?

திமுக காய்ச்சல் போல. உயிர் வாழலாம் அதனோடு. அதிமுக புற்று நோய் போல. அழித்து விடும்...

ஆதவா said...

விடுங்க.... விளையாட்டை விளையாட்டா பாருங்க!!!! :D :D

நசரேயன் said...

//ஏன்னு கேட்டிங்கன்னா என்னதான் தகவல் அனுப்புவதற்கு ஈமெயில்,எஸ் எம் எஸ் வசதிகள் இருந்தாலும் இன்னும் பழைய முறையைத்தானே அவர் பின் பற்றுகிறார்.//

அப்ப அடுத்த தந்தி உங்களுக்கா?

அத்திரி said...

//Cable Sankar said...
அவரு என்ன இன்னமும் புறாவா உட்டுக்கிட்டு இருக்காரு.. (ஓ.. கடிதம் எழுதறத சொல்றீங்களா..?)//

இந்த விசயத்தில் உங்களுக்கு ஒன்னுமே புரியாதே.......... எதிர்பார்த்ததுதான் அண்ணே

//கடையம் ஆனந்த் said...
விரைவில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வர இருக்கிறது. ஆக, இப்படி ஏதாவது சொன்னால் தான் அரசியல் நடத்த முடியும்.//

வா மாப்ளே..... அரசியல் நடத்துறதுக்கு வேற மேட்டரே கிடைக்கலையோ..சரியா சொன்ன

அத்திரி said...

//கார்க்கி said...
முடிந்த பின் எல்லோரும் காரணம் சொல்லலாம்.. தேர்தலுக்கு முன் இதெல்லாம் செய்தால் தோல்வி கிடைக்கும்ன்னு சொல்ல முடிஞ்சுச்சா சகா உங்களால? இப்ப வந்து அலசி ஆரய்ஞ்சு என்ன பிரயோஜனம்?//

தேர்தலுக்கு முன் மக்கள் மனநிலை எப்படினு சொல்ல முடியும்... ஊடகங்கள் முதற்கொண்டு எதிர்பார்த்தது வேறு ......ரிசல்ட் வந்தது வேறு.... ஏன் நம்ம கலைஞரே ஈழ விசத்தில் கொஞ்சம் ஆடிப்போய்தானே உண்ணாவிரதம் இருந்தார்.......... ஆனால் மக்கள் மனநிலை வேறாக இருந்தது என்பது தேர்தலுக்கு அப்புறம் தான் .......... ஆனால் எதற்காக தோல்வி என்பதை ஆராயாமல் .....சும்ம சவுண்டு விடுறதத்தான் சொல்ல வந்தேன்.......நன்றி சகா

திமுக காய்ச்சல் போல. உயிர் வாழலாம் அதனோடு. அதிமுக புற்று நோய் போல. அழித்து விடும்...

அத்திரி said...

//ஆதவா said...
விடுங்க.... விளையாட்டை விளையாட்டா பாருங்க!!!!//


அது சரி.........நன்றி ஆதவா

//நசரேயன் said...
//ஏன்னு கேட்டிங்கன்னா என்னதான் தகவல் அனுப்புவதற்கு ஈமெயில்,எஸ் எம் எஸ் வசதிகள் இருந்தாலும் இன்னும் பழைய முறையைத்தானே அவர் பின் பற்றுகிறார்.//
அப்ப அடுத்த தந்தி உங்களுக்கா//

ஏன் ஏன் இப்படி.......நன்றி அண்ணாச்சி

ஆப்பனுக்கு ஆப்பு said...

ஆப்புக்குஆப்படிப்பவன்...!