Saturday, May 30, 2009

பேருதான் பெருசா மெட்ரோ சிட்டி............

பேருதான் பெருசா மெட்ரோ சிட்டி மற்ற்படி பல விசயங்களில் சென்னை சொல்லிக்கிற மாதிரி இல்லை...நான் சொல்ல வருவது சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் செயல்பாடுகள் குறித்து. கிட்டத்தட்ட 10லட்சம் பயணிகள் பயணம் செய்கிறார்கள்... பெருமைதான். புதுப்புது வழித்தடங்களில் மாநகர போக்குவரத்து கழகம் அறிமுகப்படுத்துகிறது. சந்தோசம்.எல்லாம் நல்லாத்தான் இருக்கு.......ஆனா......

நான் சொல்ல வருவது காலை 5 மணி முதல் 10 மணி வரை... இரவு 8 மணியிலிருந்து 11 மணி வரையுள்ள நெரிசல் நேரம் பற்றியது. பொதுவாக காலை நேரங்களில் சென்னை நகருக்கு வெளியே செல்லும் கூட்டத்தை விட உள்ளே வரும் கூட்டம் அதிகம்..அதற்கு ஏற்றார்போல் மாநகர போக்குவரத்து இருக்கிறதா என்றால் ..........பதில் கண்டிப்பாக இல்லை என்றுதான்வரும்..தற்போதுள்ளநிலையில் மாநகரசாதாரணப்
பேருந்துகளைவிட விரைவுப்ப்பேருந்துகள்,சொகுசுப்பேருந்துகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது. இந்த நடைமுறைதான் பேருந்துகளில் கூட்ட நெரிசலுக்கு வழிவகுக்கிறது. காலை 5 மணிக்கு நீங்கள் மாநகர பேருந்துக்காக நின்றீர்களானால் கண்டிப்பாக சாதரணப்பேருந்துகள் வராது... விரைவோ,சொகுசு பேருந்துதான் வரும். சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்களின் நிலைதான் மிக மோசம்.. சீசன் டிக்கெட் சாதாரண மற்றும் எல் எஸ் எஸ் பேருந்துகளில் மட்டும்தான் செல்லும்... ஆனால் அதிகலை நேரங்களிலும் நெரிசல் நேரங்களிலும் விரைவு மற்றும் சொகுசு வழித்தடங்கள் தான் அதிகம் வரும். இந்த தொல்லையால் தினசரி எக்ஸ்ட்ரா காசு கொடுத்துதான் செல்ல வேண்டியுள்ளது. அதே மாதிரி இரவு 8மணியை தாண்டிவிட்டாலே போதும் ஏறக்குறைய எல்லாப்பேருந்துகளும் கட்சர்வீஸாக பணிமணையை நோக்கி செல்ல ஆரம்பிக்கும்....

இரவு 9:30 மணிக்கு மேல் பேருந்து நிறுத்தங்களில் மக்கள் கூட்டம் அலையடிக்கும்..ஆனால் பேருந்து மட்டும் வராது..... அதற்கு மேல வரும் பேருந்துகள் அனைத்தும் கண்டிப்பாக விரைவு அல்லது சொகுசாகத்தான் இருக்கும்.... போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அவர்களின் கல்லா நிறைந்தால் போதும்... மக்கள் எப்படி கஷ்டப்பட்டால் என்ன.... கண்டக்டரிடமோ டிரைவரிடமோ கேட்டால் "அதிகாரிகள் இந்த மாதிரியான விரைவு மற்றும் சொகுசுப்பேருந்துகளைத்தான் அதிகமாக இயக்க சொல்லுகிறார்கள்" என்கிறார்கள்.


மாநகர போக்குவரத்து துறை நெரிசலை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்...

1.நெரிசல் நேரம் என்பது இன்னும் பழைய நேரமான காலை 8மணி என்பதையே பின்பற்றுகிறார்கள். அதை 7 அல்லது 6மணியாக மாற்றவேண்டும்..


2.நெரிசல் நேரங்களில் சாதாரணப்பேருந்துகளின் வழித்தடங்களை அதிகமாக இயக்கவேண்டும்.


3.இரவு 11மணி வரை நெரிசல் நேரம் என கருத்தில் கொள்ள வேண்டும்.......


4.சீசன் டிக்கெட்களின் விலையை சற்று உயர்த்தி விரைவு மற்றும் சொகுசுப்பேருந்துகளில் அனுமதிக்க வேண்டும்( தற்போது மினிமம் சீசன் டிக்கெட் விலை 140ரூபாய்)


இதையெல்லாம் செய்வாங்களா ....................

 50 வது FOLLOWER வேத்தியனுக்கு நன்றிகள்

15 comments:

Cable சங்கர் said...

திமுக தலைவர், முதலமைச்சர் கருணாநிதி விட்ட புதிய் அறிக்கை.. புதிய போக்குவரத்து துறை ஒரு நாள் அமைச்சராக திரு அத்திரி அவர்களை நியமித்து இருப்பதாகவும், இந்த ஒரு நாளில் அவரின் திறமையை காட்டி போக்குவரத்து துறையை மென் மேலும் உயர்த்துவார் என்கிற நம்பிக்கையில்
மு.க
(எதிர்கட்சியில இருந்துட்டு பதிவா போடற மவனே.. மாட்னடா..)

புருனோ Bruno said...

//டிஸ்கி: 50 வது FOLLOWER வேத்தியனுக்கு நன்றிகள்//

இதுக்கு எதுக்கு டிஸ்கி ???

டிஸ்கி என்றால் டிஸ்க்ளெமர் : பொறுப்புதுறப்பு

பின்குறிப்பு போன்ற சொற்கள் இருக்கும் போது டிஸ்கி ஏன்

கார்த்திகைப் பாண்டியன் said...

தேர்தல் முடிஞ்சதுக்கு அப்புறம் இதெல்லாம் சொல்லி என்ன நண்பா பிரயோஜனம்? எங்க.. இப்போ பஸ் டிக்கெட்டை குறைக்க சொல்லுங்க.. மாட்டாங்க..? மக்களை பத்தின கவலை இனிமே ரெண்டு வருஷம் கழிச்சுத்தான் நண்பா

அ.மு.செய்யது said...

இன்று காலையில் தான் வட இந்தியர் ஒருவரிடம் சென்னை மாநகர பேருந்துகளை பற்றி பேசி கொண்டிருந்தேன்

அதற்குள் உங்கள் பதிவு.

உங்கள் யோசனைகள் சம்பந்த பட்டவர்களிடம் போய் சேருமாயின் நிச்சயம் பயனளிக்கும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

உங்களை ஒரு தொடர்பதிவில் இணைத்துள்ளேன்..இடுகையைப் பார்க்கவும்.

தராசு said...

//(எதிர்கட்சியில இருந்துட்டு பதிவா போடற மவனே.. மாட்னடா..)//

ஹா, ஹா, ஹா.

கரெக்டு கேபிள் அண்ணே, சரியா சொன்னீங்க‌.

Anonymous said...

50 பாலோர்ஸ் பெற்று அரை சதத்தை கடந்து சாதனை படைக்கும் அண்ணன் அத்திரி வாழ்க.

அத்திரி said...

// Cable Sankar said...
திமுக தலைவர், முதலமைச்சர் கருணாநிதி விட்ட புதிய் அறிக்கை.. புதிய போக்குவரத்து துறை ஒரு நாள் அமைச்சராக திரு அத்திரி அவர்களை நியமித்து இருப்பதாகவும், இந்த ஒரு நாளில் அவரின் திறமையை காட்டி போக்குவரத்து துறையை மென் மேலும் உயர்த்துவார் என்கிற நம்பிக்கையில்
மு.க//

உங்க புண்ணியத்துல கிடைச்சா நல்லா இருக்கும்........

//(எதிர்கட்சியில இருந்துட்டு பதிவா போடற மவனே.. மாட்னடா..)//

எந்த கட்சியில இருந்தாலும் மக்கள் பிரச்சினையை சொல்றோம்ல

அத்திரி said...

//புருனோ Bruno said...

//பின்குறிப்பு போன்ற சொற்கள் இருக்கும் போது டிஸ்கி ஏன்//

டிஸ்கிய எடுத்திட்டேன் டாக்டர்.....நன்றி

//கார்த்திகைப் பாண்டியன் said...
தேர்தல் முடிஞ்சதுக்கு அப்புறம் இதெல்லாம் சொல்லி என்ன நண்பா பிரயோஜனம்? எங்க.. இப்போ பஸ் டிக்கெட்டை குறைக்க சொல்லுங்க.. மாட்டாங்க..? மக்களை பத்தின கவலை இனிமே ரெண்டு வருஷம் கழிச்சுத்தான் //

நண்பா அப்ப நீங்களும் எதிர்க்கட்சியா/

அத்திரி said...

// அ.மு.செய்யது said...
உங்கள் யோசனைகள் சம்பந்த பட்டவர்களிடம் போய் சேருமாயின் நிச்சயம் பயனளிக்கும்.//

நடந்தால் நல்லதுதான்..நன்றி செய்யது

// T.V.Radhakrishnan said...
உங்களை ஒரு தொடர்பதிவில் இணைத்துள்ளேன்..இடுகையைப் பார்க்கவும்.//

பார்க்கிறேன் ஐயா....

அத்திரி said...

//கடையம் ஆனந்த் said...
50 பாலோர்ஸ் பெற்று அரை சதத்தை கடந்து சாதனை படைக்கும் அண்ணன் அத்திரி வாழ்க.//


நன்றி மாப்ளே

நசரேயன் said...

இதுக்குதான் நான் சென்னைக்கு வாரதே இல்லை

மேவி... said...

நம்புவோம் நடக்கும் என்று

அத்திரி said...

//நசரேயன் said...
இதுக்குதான் நான் சென்னைக்கு வாரதே இல்லை//

அண்ணாச்சி நம்பிட்டேன்.......நன்றி

அத்திரி said...

//MayVee said...
நம்புவோம் நடக்கும் என்று//

நம்பித்தானே ஆகனும்.... நம்ம தலையெழுத்து அதுதானே .... நன்றி