Monday, May 18, 2009

சொன்னதை செய்த மத்திய மாநில அரசுகள்

ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாக எப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்தன..இந்த போராட்டங்களை அடக்குவதில் மத்திய மாநில அரசுகள் பெரும் முனைப்பு காட்டின..... தூண்டிவிட்ட அகல் விளக்கு ஒளிர்வது போல் போராட்டத்தின் தீவிரம் அதிகமாகியது.... அம்மா ஒரு படி மேலே போய் தனி ஈழம் அமைக்க பாடுபடுவேன் என்றார்.. கலைஞரும் சாகும் வரும் வரை உண்ணாவிரதம் இருந்தார்.


இந்த நிகழ்வுகளுக்கு அடுத்து நம்ம மத்திய அரசும் மாநில அரசும் தேர்தலுக்கு பிறகு இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட தீவிரமாக பாடுபடுவோம் என்றார்கள். இன்று அவர்கள் சொன்னதை செய்துவிட்டார்கள்.... நேற்று முதல் இலங்கையில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துவிட்டது...... பிரபாகரன் மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தியும் வருகிறது.


இந்த விசயத்தில் தான் நம்ம அரசுகள் சொன்னதை செய்துவிட்டது...இனி ஈழ மக்களின் நிலை எப்படி இருக்கும்............???????????????

6 comments:

Anonymous said...

இனி இலங்கை மக்களின் வாழ்வு நிம்மதியாக இருக்கும்..
நாடு பொருளாதார பாதையில் முன்னேறும்.......
தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பார்கள்...

அ.மு.செய்யது said...

//இனி ஈழ மக்களின் நிலை எப்படி இருக்கும்............??????????????? //

எப்படி இருக்கும்...???

அமைதி தான்..மயான அமைதி !!!

எல்லோரையும் ரசாயன ஆயுதங்களை வைத்து கொன்று குவித்து விட்டனர்.பிறகென்ன ??

மனம் வலிக்கிறது.

Cable சங்கர் said...

இதற்கான காப்பிரைட் உரிமையை கோரி உண்ணாவிரதம் இருக்க போகிறேன்.

"உழவன்" "Uzhavan" said...

//இனி ஈழ மக்களின் நிலை எப்படி இருக்கும்............??????????????? //
தெரிந்து கொள்ள தமிழகமே ஆவலாய் இருக்கிறது.

அத்திரி said...

நன்றி பெயரில்லாதவரே
நன்றி செய்யது
நன்றி கேபிள் அண்ணே
நன்றி உழவன்

Kiruthigan said...

ஈழத்தில தமிழ் மக்களா?
அவங்களுக்க பிரச்சனையா..?