Sunday, July 12, 2009

இன்னைக்கு யாரை/ எதை பற்றி திட்டி பதிவு போடலாம்>>>>>>>>>>>>>>>>>

முதலில் சொல்லிவிடுகிறேன்....இது முழுக்க முழுக்க சீரியஸ் பதிவு....காமெடியே கிடையாது.சொல்லிப்புட்டேன் ஆமா சொந்த வேலை காரணமாக பத்து நாள பதிவுகள் பக்கம் வர முடியல..இப்ப ஒரு மூனு நாளா வந்து பாத்தா ரத்த பூமியா மாறிட்டு இருந்தது... என்னடா இது...சரி எப்படியும் இந்த ரணகளம் குறைஞ்சது ஒருவாரமாவது ஓடும்னு எதிர்பார்த்தேன்....அதுக்குள்ள எல்லோரும் சமாதானம் ஆயிட்டாங்களாம்.........இவங்க போதைக்கு பின்னூட்டம் போட்ட என்ன மாதிரி பதிவருங்கதான் பாவம்.......... அதனால இந்த மேட்டரை விடமாட்டேன்....


இந்த விளையாட்டு உண்மையிலே ரொம்ப நல்லாயிருக்கு...முதல்ல ஒருத்தர் காமெடியா பதிவு போடுவாராம்....அதுல பின்னூட்டத்துல எல்லாரையும் கலாய்ப்பாராம்..அதுக்கு ஒருத்தர் கண்டன பதிவு போடுவாராம்.....அந்த பதிவையும் இவரு பயங்கரமா விமர்சிப்பாராம்....ஆளாளுக்கு ஒரு குரூப்பா உக்காந்து திட்டுவாங்களாம்..கடேசில முதல்ல ஆரம்பிச்சவரு மன்னிப்பு கேப்பாராம்.....உடனே எல்லா பிரச்சினையும் முடிஞ்சிருமாம்.........நல்லாயிருக்குப்பா இந்த விளையாட்டு.......அரசியல்லதான் இந்த மாதிரி நடக்கும்......ஆனா அரசியலையும் மிஞ்சிட்டாங்க..எப்படினா அரசியவாதிங்க குறைந்த பட்சம் 4வருசம் ஒருத்தரை ஒருத்தர் திட்டிப்பாங்க 5வது வருசம் கொஞ்சம் அடக்கிவாசிப்பாங்க..ஏன்னா தேர்தல் வரும்....ஆனா இங்க அதையெல்லாம் மிஞ்சிட்டாங்க......

அதனால இந்த வாரம் பிரபல பதிவர் யாரையாவது திட்டலாம்னு இருக்கேன்.ரெண்டு மூனு நாள் பயங்கரமா திட்டி பதிவு எழுதிட்டு அப்புறம் மன்னிப்பு கேட்டு பதிவு எழுதினா எல்லாம் சரியாயிரும்னு நினைக்கிறேன்.....ஆனா யாரை திட்டுறதுன்னே தெரியலை.......ஏன்னா பதிவரை திட்டுவதற்கு முன்னால் அவரோட குருப்ப பற்றி நல்லா தெரிஞ்சிக்கனும்..பதிலுக்கு எல்லோரும் சேர்ந்து எனக்கு டின் கட்டிடக்கூடாது...அதனால் அந்த பதிவர் கொஞ்சம் பிரபலமா இருக்கனும்..ஆனா மற்ற பதிவருங்க சப்போர்ட் இருக்கக்கூடாது... அரசியல்லதான் வாரிசு அரசியல் இருக்குதுனா இங்கயும் அத கொண்டுவந்துட்டாங்க....அதை பற்றியும் கொஞ்சம் யோசிக்கனும்...

அண்ணன் கேபிள் சங்கரை ஏற்கனவே திட்டியாச்சு...ஏதாவது மேட்டரில் மாட்டும்போது மறுபடியும் ஆரம்பிக்கலாம்.


கார்க்கிய திட்டலாம்.ஆனால் பின்னாடியே அதிஷா,முரளிக்கண்ணன்,
தாமிரா அப்படின்னு எல்லோரும் என்னை உண்டு இல்லைனு பண்ணிடுவாங்க..

அனுஜன்யா அண்ணாச்சிய திட்டலாம்னு பாத்தா அவரு என்னை ஒன்னும் அறியாத குழந்தைன்னு சொல்லிட்டார்...

தராசு அண்ணாச்சிய திட்டலாம்னா ஏற்கனவே அவரு வீட்டுல தினசரி வாங்கிட்டு இருக்காரு..பாவம்..

ஜ்யோவ்ராம் சுந்தர் அண்ணாச்சிய திட்டலாம்...ஆனா அவரு பின்னாடி ஏகப்பட்ட பின் நவீனத்துவ கூட்டமும் எலக்கியவாதி கூட்டமும் இருக்கு....சும்மாவே அவரு பதிவ ஒரு பத்துவாட்டி படிச்சாத்தான் என்ன சொல்ல வர்றார்னு எனக்கு புரியும்...அதனால வேணாம்...

வேற எதைப்பற்றி திட்டலாம் அப்படினு யோசிக்கையில் கலைஞரும்,அவருடைய தொலைக்காட்சியும் ஞாபகத்துக்கு வந்தது...ஆனா லக்கியும் உடன்பிறப்பும் என்ன உண்டு இல்லைனு பண்ணிடுவாங்களே............

அதனால ..


அதனால...






ஊருக்கு இளைச்சவன் ஆண்டி அப்படின்ற பழமொழி படி சன்டிவிய திட்டலாம்னு இருக்கேன் ( சன்டிவி யாருக்கும் இளைச்சது கிடையாது).....நல்லா யோசிச்சு பாத்ததுல இதுக்கு அமோக ஆதரவு இருக்கும்......எதிர்ப்பே இருக்காது ஹிஹிஹிஹிஹிஹி...........


எப்பூடி நம்ம ஐடியா......................

26 comments:

Cable சங்கர் said...

ரைட்டு.. நல்லா யோசிச்சு திட்டுங்க.. அப்புறம் ஏதாவது ப்ரச்சனைனா.. வருத்தப்படக்கூடாது..

ஆனாலும் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. அத்திரி..

நாமக்கல் சிபி said...

ரைட்டு!

(ஒரு ரகசிய டீலிங்க், நம்மை திட்டுங்க! நமக்கு பின்னாட்டியும் நம்ம நண்பர்கள் இருக்காங்க)

உண்மைத்தமிழன் said...

ரொம்ப, ரொம்ப அறிவுப்பூர்வமான பதிவாக இருக்கிறது..

இந்த ரேஞ்ச்சுல இன்னும் ரெண்டு பதிவு போட்டீன்னா நீயும் பிரபல பதிவர்தான்..

நல்லாயிருப்பூ..!

thamizhparavai said...

:-))))))))
நானும் ரௌடிதான்...

வால்பையன் said...

நடக்கட்டும் நடக்கட்டும்!

தேவன் மாயம் said...

பேசாம எனையத்திட்டுங்க!! ரெண்டு பேரும் ஒரு வாரம் ஜாலியா இருப்போம்!!

Anonymous said...

இப்போம் அப்படி தான் ஆயி போச்சு நண்பா.. திட்டதுறதுக்காகவே பதிவு போடுறhங்க...விட்டு தள்ளுங்க...உங்க ஆதாங்கம் இங்கே.. என்பதிவில் வந்து பாருங்க என் ஆதாங்கமும் புரியும். வேற என்ன சொல்ல.

இனிமேல் இது போன்று பதிவுகளை எழுதினா வேடிக்கை பார்ப்போம். பதில் கொடுத்து நம்ம ஏன் அசிங்க படணும்...

RRSLM said...

சொல்வது அத்தனையும் உண்மை, வாசகர்கள் எல்லாம் பைத்தியம்ன்னு நினைச்சிட்டாங்க போல, அசிங்கமா இருக்கு, கொடுமை................ நீதியையும், பகுத்தறிவையும் பற்றி பதிவ போட்டுட்டு, அடுத்த பதிவுல, அதுக்கும் எங்களுக்கும் சம்பந்தமே இல்ல என்பதை போல இப்படி அடித்து கொள்கிறார்கள்.

நசரேயன் said...

நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் அண்ணாச்சி

Athisha said...

மாம்ஸ் என்னோடதான சண்டைபோடறதுன் பேச்சு.. இப்போ இப்படி பதிவு போட்டுட்டா விட்டுருவேனா.. மரியாதையா நாளைக்கு என்னைத்திட்டி பதிவு போடுங்க

தீப்பெட்டி said...

:)

அ.மு.செய்யது said...

அண்ணன் ப்ளீஸ்..என்ன திட்டி பதிவு போடுங்க...

நானும் பிரபலமாவனுமில்ல....செட்டில்மென்ட் பத்தியெல்லாம் ஆஃப்லைன்ல முடிவு பண்ணிக்கலாம்

anujanya said...

அத்திரி, என்ன சொன்னாலும், innocence ஒரு வரம். அதை விட்டுடாதீங்க. மத்தப்படி உங்க நகைச்சுவையை (சீரியஸ் பதிவுன்னு சொன்னாலும்) ரசித்தேன்.

அனுஜன்யா

தராசு said...

//தராசு அண்ணாச்சிய திட்டலாம்னா ஏற்கனவே அவரு வீட்டுல தினசரி வாங்கிட்டு இருக்காரு..பாவம்..//

யோவ், இப்படியா நம்ம மேட்டர போட்டு உடைக்கறது.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்லா கெளப்புறாங்கப்பா பீதிய. ரைட்டு நடக்கட்டும்.

Jackiesekar said...

ஊருக்கு இளைச்சவன் ஆண்டி அப்படின்ற பழமொழி படி சன்டிவிய திட்டலாம்னு இருக்கேன் ( சன்டிவி யாருக்கும் இளைச்சது கிடையாது).....நல்லா யோசிச்சு பாத்ததுல இதுக்கு அமோக ஆதரவு இருக்கும்......எதிர்ப்பே இருக்காது ஹிஹிஹிஹிஹிஹி...........//

நல்ல முடிவு வாழ்த்துக்கள்

நாஞ்சில் நாதம் said...

திரும்ப ஆரம்பிக்காதீங்க பாஸ். இப்படி ஆரம்பிச்சு தான் சண்டையில முடியும்.

அத்திரி said...

.//Cable Sankar said...
ஆனாலும் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. அத்திரி..//

அண்ணே ரொம்ப நன்றி........

// நாமக்கல் சிபி said...
ரைட்டு!
(ஒரு ரகசிய டீலிங்க், நம்மை திட்டுங்க! நமக்கு பின்னாட்டியும் நம்ம நண்பர்கள் இருக்காங்க)//

குரூப்பா இருந்தா நான் திட்டமாட்டேன்னு சொல்லியிருக்கேன்ல....நன்றி சிபி

அத்திரி said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644
இந்த ரேஞ்ச்சுல இன்னும் ரெண்டு பதிவு போட்டீன்னா நீயும் பிரபல பதிவர்தான்..//

ஆஹா நன் இந்த விளையாட்டுக்கு வரலை அண்ணே......

//தமிழ்ப்பறவை said...
:-))))))))
நானும் ரௌடிதான்...//

அப்படியா போலாம் ரைட்டு

அத்திரி said...

//வால்பையன் said...
நடக்கட்டும் நடக்கட்டும்!//

வாங்க வால் பையன்


//தேவன் மாயம் said...
பேசாம எனையத்திட்டுங்க!! ரெண்டு பேரும் ஒரு வாரம் ஜாலியா இருப்போம்!!//

திட்டுறதுக்கு எவ்ளோ கொடுப்பீங்க பணம்தான்.............நன்றி தேவன்

அத்திரி said...

//கடையம் ஆனந்த் said...
இப்போம் அப்படி தான் ஆயி போச்சு நண்பா.. திட்டதுறதுக்காகவே பதிவு போடுறhங்க...விட்டு தள்ளுங்க//

மாப்ளே கூல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்/...........


// RR said...
சொல்வது அத்தனையும் உண்மை, வாசகர்கள் எல்லாம் பைத்தியம்ன்னு நினைச்சிட்டாங்க போல, அசிங்கமா இருக்கு,//


வாங்க ஆர் ஆர்........நன்றி........

அத்திரி said...

//T.V.Radhakrishnan said...
:-))//

நன்றி ஐயா


//நசரேயன் said...
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் அண்ணாச்சி//

வாங்க அண்ணாச்சி எப்படி இருக்கீங்க

அத்திரி said...

// அதிஷா said...
மாம்ஸ் என்னோடதான சண்டைபோடறதுன் பேச்சு.. இப்போ இப்படி பதிவு போட்டுட்டா விட்டுருவேனா.. மரியாதையா நாளைக்கு என்னைத்திட்டி பதிவு போடுங்க//

சகா நாம பேசுன அமவுன்ட் இன்னும் தரலையே.......நீ கொடுத்த பிறகுதான் பதிவு போடமுடியும்.....ஆமா......நன்றி

தீப்பெட்டி said...
:)

வாங்க தீப்பெட்டி நன்றி

அத்திரி said...

// அ.மு.செய்யது said...
அண்ணன் ப்ளீஸ்..என்ன திட்டி பதிவு போடுங்க...நானும் பிரபலமாவனுமில்ல....செட்டில்மென்ட் பத்தியெல்லாம் ஆஃப்லைன்ல முடிவு பண்ணிக்கலாம்//

பயபுள்ளைங்க அடங்கவேமாட்டேங்குதுங்க........திட்டுறதுன்னா..அவ்ளோ சந்தோசமா தம்பி...

//அனுஜன்யா said...
அத்திரி, என்ன சொன்னாலும், innocence ஒரு வரம். அதை விட்டுடாதீங்க. மத்தப்படி உங்க நகைச்சுவையை (சீரியஸ் பதிவுன்னு சொன்னாலும்) ரசித்தேன். //

வாங்க அண்ணாச்சி ரொம்ப நன்றி

அத்திரி said...

// தராசு said...
//தராசு அண்ணாச்சிய திட்டலாம்னா ஏற்கனவே அவரு வீட்டுல தினசரி வாங்கிட்டு இருக்காரு..பாவம்..//

யோவ், இப்படியா நம்ம மேட்டர போட்டு உடைக்கறது.//

குடும்ப அரசியல்ல இதெல்லாம் சகஜம் அண்ணே.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//ஸ்ரீதர் said...
நல்லா கெளப்புறாங்கப்பா பீதிய. ரைட்டு நடக்கட்டும்.//

வாங்க ஸ்ரீதர் .....நம்ம வேலையே அதானே.....

அத்திரி said...

//jackiesekar said...
ஊருக்கு இளைச்சவன் ஆண்டி அப்படின்ற பழமொழி படி சன்டிவிய திட்டலாம்னு இருக்கேன் ( சன்டிவி யாருக்கும் இளைச்சது கிடையாது).....நல்லா யோசிச்சு பாத்ததுல இதுக்கு அமோக ஆதரவு இருக்கும்......எதிர்ப்பே இருக்காது ஹிஹிஹிஹிஹிஹி...........//
நல்ல முடிவு வாழ்த்துக்கள்//

சன்டிவிய திட்டுறதுன்னா அவ்ளோ சந்தோசமா ஜாக்கி