Friday, July 24, 2009

சூப்பர் ஹிட் திரைப்படம்னா என்ன அர்த்தம்.????

ஒரு திரைப்படம் 100நாட்கள் ஓடினால் ஹிட் படம் என்றுசொல்லலாம்.........100நாட்களுக்கு மேல் ஓடினால் சூப்பர் ஹிட், சில்வர் ஜூப்ளி படம் என்று சொல்லலாம்..( ஸ்டார் வேல்யூவிற்காக 100நாள் ஓட்டப்படும் படங்கள் கணக்கில் கிடையாது...)

இந்த சேட்டலைட் யுகத்தில் ஒரு படம் 10நாள் ஓடினாலே சூப்பர் ஹிட்டுனு சொல்லிடுவாங்க போல.......அதுவும் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை அதிகம் இருக்கும் இக்காலக்கட்டத்தில் அது மொக்கை படமோ சூப்பர் படமோ அதை வாங்குவதில் சேனல்களுக்கிடையில் போட்டி கடுமை.....இதனால் பெரிய ஹீரோகள் நடித்து பிளாப் ஆன படங்களுக்கு கூட விலை அதிகம்........அதனால்தான் என்னவோ ஒரு படம் முதன் முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும்போது செய்யப்படும் விளம்பரங்கள் கேலிக்குறியதாக இருக்கிறது.


10நாள் கூட ஓடாமல் பிளாப் ஆன படங்களுக்கு தொலைக்காட்சியில் செய்யப்படும் விலம்பரம்" சூப்பர் ஹிட் அதிரடி திரைப்படம்".................அப்போ நிஜமாவே 100நாட்கள் அல்லது அதற்கு மேல் ஓடி வசூலை குவிக்கும் படங்களை என்னன்னு சொல்லலாம்?

தொலைக்காட்சிகளின் இந்த மாதிரியான விளம்பரங்கள் நகைப்புக்குறியட்தாகவே இருக்குதுப்பா.............. ஒவ்வொரு வாரமும் சூப்பர் ஹிட் அதிரடி திரைப்பங்களை கண்டுகளித்து எஞ்சாய் பண்ணுங்க தமிழ்மக்களே

26 comments:

நர்சிம் said...

நானும் நினைத்தேன் சகா. முன்பெல்லாம் 50வது நாள் பிறகு 100வது நாளில் சைக்கிள் டயரில் போஸ்டரை ஒட்டி அலப்பறை பண்ணுவோம்..இப்ப வெற்றிகரமாக மூன்றாவது காட்சி லெவலுக்கு வந்து நிக்குது.நல்லா சொல்லி இருக்கீங்க.

Anonymous said...

இதுக்கு போராட்டம் பண்ணியே தீர வேண்டும் தல.

Anonymous said...

இதனால் பெரிய ஹீரோகள் நடித்து பிளாப் ஆன படங்களுக்கு கூட விலை அதிகம்........
//
இதுல ஏதாவது உள்குத்து இருக்கா?

Raju said...

சரிதான் அத்திரி அண்ணே..!

ஊர்சுற்றி said...

சூப்பரப்பு.

'திரைக்கு வந்து சில மாதங்களே ஆன' ங்கற வரியை விட்டு விட்டீங்களே!

வால்பையன் said...

இன்னைக்கு நிலமைக்கு ஒருபடம் 10 நாள் ஓடுனா சூப்பர் ஹிட் தான்!

ஏன்னா அந்த பத்து நாள்ல போட்ட பணம் வந்துரும்!

நையாண்டி நைனா said...

நச்சுன்னு சொன்னே மாப்பி.

நையாண்டி நைனா said...

நச்சுன்னு சொன்னே மாப்பி.

வந்தியத்தேவன் said...

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக திரைக்கு வந்து சில மாதங்களே ஆன சூப்பர் ஹிட் திரைப்படம் என்பார்களே அவைதான் சூப்பர் ஹிட் படங்கள். தியேட்டரைவிட்டு சில நாட்களில் தூக்கப்படுபவை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

சூபர் ஹிட் என்றால் நன்கு அடி வாங்கிய படம் எனலாம்

அ.மு.செய்யது said...

இப்பல்லாம் இந்திய தொலைக்காட்சிகள்லா வந்தாலே அது சூப்பர் ஹிட் திரைப்படம் தான்னு சரியா
சொல்லிட்டீங்க தல...

யூகிசேது சொன்னது:

பாக்ஸ் ஆஃபிஸ்னா படம் 100 நாள் ஓடி ஹிட் ஆகுறது.

பாக்ஸ் ஆஃபிஸ்லயே இருந்தா அதுக்கு பேரு பாக்ஸ் ஆஃபிஸ் இல்ல.

நட்புடன் ஜமால் said...

நன்னா சொன்னேள்

நல்ல வேலை நான் இருக்குமிடத்தில் டீவி இருக்கு ஆனா இந்திய தொ(ல்)லை காட்ச்சிகள் இல்லை.

தராசு said...

ஆமா, தொலைக் காட்சிகள் மேல் ஏன் இப்படி ஒரு காண்டு.

எப்ப பாத்தாலும் அது நொட்டை இது நொள்ளைன்னு சொல்லிகிட்டு.

கேபிள் அண்ணன் எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்.

Cable சங்கர் said...

இதோ வந்திட்டேனில்ல..

Cable சங்கர் said...

எல்லாத்துக்கும் காரணம் நீஙக் பி.ஆர்.வோவா இருக்கிற டீவிக்காரங்கதான் தம்பி.. அவிய்ங் ஆரம்பிச்சது.. 10 நாள் ஓடினதை எல்லாம் சூப்பர் ஹிட்டுனு சொல்லறத.. இப்ப என்னன்னா.. படம் எடுக்கறதுக்கு முன்னாடியே சூப்பர் ஹிட்டுனு சொல்ல ஆரம்பிச்சிட்டானுக..

போற போக்க பார்த்தா.. ஸ்க்ரிப்ட் எழுதறதுக்கு முன்னமே சூப்பர் ஹிட் ஆயிரும் இவனுக பண்ணுற் அலப்பறல்..

கார்த்திகைப் பாண்டியன் said...

பொது வாழ்க்கையில இதெல்லாம் சாதரணமப்பா..:-))))))

Anonymous said...

Cable Sankar said...
எல்லாத்துக்கும் காரணம் நீஙக் பி.ஆர்.வோவா இருக்கிற டீவிக்காரங்கதான் தம்பி..
//


அப்போம் அத்திரி பிரபல டி.வி.யை சேர்ந்தவரா?

அத்திரி said...

//நர்சிம் said...
நானும் நினைத்தேன் சகா. முன்பெல்லாம் 50வது நாள் பிறகு 100வது நாளில் சைக்கிள் டயரில் போஸ்டரை ஒட்டி அலப்பறை பண்ணுவோம்..இப்ப வெற்றிகரமாக மூன்றாவது காட்சி லெவலுக்கு வந்து நிக்குது.நல்லா சொல்லி இருக்கீங்க//

வாங்க சகா நன்றி

அத்திரி said...

//கடையம் ஆனந்த் said...
இதுக்கு போராட்டம் பண்ணியே தீர வேண்டும் தல.//

இதுக்கெல்லாம் டென்சன் ஆவக்கூடாது..கூல்

// கடையம் ஆனந்த் said...
இதனால் பெரிய ஹீரோகள் நடித்து பிளாப் ஆன படங்களுக்கு கூட விலை அதிகம்........
/இதுல ஏதாவது உள்குத்து இருக்கா//

உள் குத்துன்னா என்ன மாப்ளே

அத்திரி said...

// டக்ளஸ்... said...
சரிதான் அத்திரி அண்ணே..!//

வாங்க டக்ளஸ்

//ஊர்சுற்றி said...
சூப்பரப்பு.
'திரைக்கு வந்து சில மாதங்களே ஆன' ங்கற வரியை விட்டு விட்டீங்களே!//


மறந்து போச்சே.....நன்றி ஊர்சுற்றி

அத்திரி said...

//// வால்பையன் said...
இன்னைக்கு நிலமைக்கு ஒருபடம் 10 நாள் ஓடுனா சூப்பர் ஹிட் தான்!
ஏன்னா அந்த பத்து நாள்ல போட்ட பணம் வந்துரும்!//

நீங்க சொல்றது சின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன பட்ஜெட் படங்களுக்கு பொருந்தும்.......நன்றி வால் பையன்


//நையாண்டி நைனா said...
நச்சுன்னு சொன்னே மாப்பி.//

நன்றி நைனா

அத்திரி said...

//வந்தியத்தேவன் said...
இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக திரைக்கு வந்து சில மாதங்களே ஆன சூப்பர் ஹிட் திரைப்படம் என்பார்களே அவைதான் சூப்பர் ஹிட் படங்கள். தியேட்டரைவிட்டு சில நாட்களில் தூக்கப்படுபவை.//

நல்லா சொன்னீங்க வந்தியத்தேவன்..நன்றி.


//T.V.Radhakrishnan said...
சூபர் ஹிட் என்றால் நன்கு அடி வாங்கிய படம் எனலாம்//

வாங்க ஐயா.........

அத்திரி said...

//அ.மு.செய்யது said...
இப்பல்லாம் இந்திய தொலைக்காட்சிகள்லா வந்தாலே அது சூப்பர் ஹிட் திரைப்படம் தான்னு சரியாசொல்லிட்டீங்க தல...
யூகிசேது சொன்னது:
பாக்ஸ் ஆஃபிஸ்னா படம் 100 நாள் ஓடி ஹிட் ஆகுறது.பாக்ஸ் ஆஃபிஸ்லயே இருந்தா அதுக்கு பேரு பாக்ஸ் ஆஃபிஸ் இல்ல.//

வாங்க செய்யது..நன்றி

//நட்புடன் ஜமால் said...
நன்னா சொன்னேள்நல்ல வேலை நான் இருக்குமிடத்தில் டீவி இருக்கு ஆனா இந்திய தொ(ல்)லை காட்ச்சிகள் இல்லை.
//

அப்போ நீங்க விண்வெளியிலா இருக்கீங்க( உலகம் முழுவதும் தமிழ் தொலைக்காட்சிகள் இருக்குதே) நன்றி ஜமால்

அத்திரி said...

// தராசு said...
ஆமா, தொலைக் காட்சிகள் மேல் ஏன் இப்படி ஒரு காண்டு.எப்ப பாத்தாலும் அது நொட்டை இது நொள்ளைன்னு சொல்லிகிட்டு.

கேபிள் அண்ணன் எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்.//

தமிழனோடு ஒட்டி உறவாடுவது இந்த தொலைக்காட்சிகள் தானே அண்ணே...... அப்புறம் என்ன.....இப்படியெல்லாம் ஆள் சேக்க கூடாது,,,,,,,

Cable Sankar said...
போற போக்க பார்த்தா.. ஸ்க்ரிப்ட் எழுதறதுக்கு முன்னமே சூப்பர் ஹிட் ஆயிரும் இவனுக பண்ணுற் அலப்பறல்..//

ஏம்ணே இவ்ளோ டென்சன் ஆவுறீங்க................

அத்திரி said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
பொது வாழ்க்கையில இதெல்லாம் சாதரணமப்பா..:-))))))//


வாங்க புரொபசர்..........

// கடையம் ஆனந்த் said...
அப்போம் அத்திரி பிரபல டி.வி.யை சேர்ந்தவரா?//

பீதிய கிளப்புறதே வேலையா போச்சி.............

கிரி said...

ஒரு படம் சூப்பர் ஹிட் என்று எவ்வாறு கூறப்படுகிறது என்றால் முதலீடு செய்யப்பட பணத்தை விட பல மடங்கு அதிகமாக வசூல் செய்தால் மட்டுமே.

தற்போது 100 நாட்கள் ஓடுவது என்பதெல்லாம் கணக்கில் இல்லை.. வேண்டும் என்றால் அவர்கள் சாதனை! கணக்கில் சேர்த்து கொள்ளலாம்

தற்போது வசூல் மட்டுமே கணக்கு எத்தனை நாட்கள் படம் ஓடுகிறது என்பதெல்லாம் வெற்றியை நிர்ணயம் செய்வதில்லை..