கடந்த வாரம் அவரிடம் பேசும் போது " உங்க ஊருக்குத்தான் போறேன்".( ஆஹா மறுபடியும் ஆரம்பிச்சிட்டாரு)
"எங்க ஊர்ல உங்களுக்கு என்ன வேலை அண்ணே...அதற்கு அவர் "உங்க ஊர்னா உங்க ஊர் கிடையாது குற்றாலம்பா" என்றார்
"அண்ணே குடும்பத்தோடவா போறீங்க?".... இந்த கேள்விக்கு காதுல ரத்தம் வர்ற மாதிரி பதில் வந்தது.... " நாங்க எல்லாம் யூத்துப்பா"( அவர் வீட்டில் இருக்கும் வரைதான் குடும்ப இஸ்திரி ...... வெளிய வந்தா யூத்து போல...அன்னியன் மாதிரி)
"குற்றாலத்துல எந்த பரோட்டா கடை நல்லாயிருக்கும்?"( எங்க போனாலும் ஓட்டலை தேடும் பழக்கத்தை விடமாட்டாரோ)
"அண்ணே குற்றாலத்துல ஒரு ஓட்டலும் நல்லாயிருக்காது...பிரானூர் பார்டர்ல ஏகப்பட்ட பரோட்டா கடை இருக்குது...அங்க போங்கண்ணே....
"சரி அங்க எந்த கடை நல்லாயிருக்கும்"( விடவே மாட்டாரோ)
"தெரியல அண்ணே அங்க எல்லாம் போய் வருசக்கணக்காவுது...."
"பக்கத்து ஊரை பற்றி ஒன்னுமே தெரியல உன்ன்னையெல்லாம்".( ஆஹா மறுபடியுமா)சென்னையில நாலு சுவத்துக்குள்ள பக்கெட்ல தண்ணிய மொண்டு குளிச்சவரு குற்றால அருவிய நேர்ல பார்த்ததும் காஞ்ச மாடு கம்பங்கொல்லையில பாஞ்ச மாதிரி ஓவர் குஷி ஆகிட்டார்.... கூட வந்தவங்கதான் யோவ் கொஞ்சம் அடக்கி வாசின்னதும்..கொஞ்சம் அமைதி ஆனார்.....அருவியில் குளிப்பதற்கு கியூவில் நிற்கும் போது புலம்பிக்கொண்டே இருந்ததால் அவருக்கு முன்னாடி இருந்தவர் "அண்ணாச்சி சென்னையில இருந்தா வர்றீக"...... ஆமா உங்களுக்கு எப்படி தெரியும்?.......... நீங்க புலம்புறத வச்சிதான்....
"சென்னையிலதான் எதுக்கு எடுத்தாலும் வரிசைனா இங்கயுமா?....."
"சரி முன்னாடி போங்க நல்லா குளிச்சிட்டு வாங்க என்று வழி விட்டார்............ "
நம்ம பதிவர் குளிக்க ஆரம்பித்ததும் அருவியிலே டிராபிக் ஜாம் ஆயிடிச்சி.....அவருக்கு பின்னாடி வந்தவங்க எல்லாம் குளிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தனர்......நம்ம பதிவர் நாலு பேர் குளிக்கிற இடத்தை இவருடைய தொப்பை மறைத்ததால் வந்த விளைவுதான் இந்த டிராபிக் ஜாம்........ இதை அறியாத நம்ம பதிவர் வாழ்க்கையிலே முதல் முறையா அருவியில குளிச்ச சந்தோசத்தில் இருந்தார்.... அதற்குள் ஒரு காவலர் வந்து நம்ம பதிவரிடம் வந்து" சார் குளிச்சது போதும். பாருங்க எவ்ளோ பேர் வெயிட் பண்றாங்கன்னு" என்றார்...நம்ம பதிவர்" சார் இன்னும் ஒரு அஞ்சு நிமிசம் முடிச்சிட்டு வந்திடுறேன்.யோவ் சொன்ன கேக்க மாட்டியா... ஆமா எங்க இருந்து வர்ற...... சென்னையில் இருந்து...
"சென்னையில என்ன பண்ற"....
"நான் பதிவர்ங்க"......
என்னது பதிவரா... பத்திரமெல்லாம் பதிவு பண்றவரா?........."
இல்ல சார் அது வந்து இன்டெர் நெட்ல எழுதி எல்லோருக்கும் மொக்கை போடுவோம்.........".
"ஓ நீங்க அந்த கோஷ்டியா...."
எந்த கோஷ்டி சார்?...... கம்பியூட்டர் முன்னாடி உக்காந்து ஆட்களை நேராக பாக்காம நெட் மூலமா திட்டி ஒரு பெரும் கலவரத்தையே உண்டாக்குவீங்களே அந்த கோஷ்டியா????" அப்படினு கேட்டதுதான் தாமதம்................. அடுத்த செகண்டுல நம்ம பதிவர் எஸ்கேப்.
அடுத்ததா பிரானூர் பார்டர்ல என்ன கலாட்டா பண்ணினாரோ.......விசாரிச்சி சொல்றேன்.
அந்த பிரபல பதிவர் இவர்தான்
25 comments:
யோவ்.. என்னை பத்தி கிசுகிசு எழுதலேன்னா உனக்கு தூக்கம் வராதா..? இன்னைய வரைக்கும் நான் கூட கொஞ்சம் குண்டா இருக்கேன்னு ஒரு நினைப்பு இருந்திச்சு.. அங்க போய் பார்த்தவுடன் தான் நானெல்லாம் நாகேசு ரேஞ்ச்னு தெரியுது..:)
அடுத்த கொத்து பரோட்டாவுல சொல்றேன்.. உங்க ஊர்ல என்ன என்ன எங்க எங்க கிடைக்குதுன்னு.. போய்யா...
யோவ் அத்திரி,
சங்கர் ஒண்ணும் அவ்வளாவு குண்டு இல்லையே.
அதும் குற்றாலத்துல பார்க்காத குண்டுகளா?
சொன்னாலும் சொல்லலைன்னாலும் எங்க அண்ணன் யூத்து தாம்பா, அவுரு சொன்ன மாதிரி, குற்றாலத்துல போனாதான் தெரியும், என்குளுக்கு இருக்கறதெல்லாம் பாடியில்ல, வெறும் பீடின்னு,
ஆருபா அது.. மலையாளப்பட வில்லன் மாதிரி இருக்குறாரு..!
ஆமா, நீங்க ரொம்ப நாளா கேட்டுனு இருந்தபடி கீழப்பாவூர்ல என்ன நடந்ததுன்னு பதிவு போட்டுருக்கேன். படிக்க வாரும்யா.. வந்து கூப்ட்னு போக வேண்டியதா இருக்குது.
:-))
செங்கோட்டையில் பார்டர் கடை என்று ஒன்று உள்ளது
அங்கு சாப்பிட்டு பார்க்கவும்
/யோவ் அத்திரி,
சங்கர் ஒண்ணும் அவ்வளாவு குண்டு இல்லையே.
//
சொல்லுங்கண்ணே.. யோவ் அத்திரி.. பாத்தியா.. தெரிஞ்சிக்க..
:-))
இந்த uncle யாருங்கனா?....
கேபிள் சங்கர்..
வடகரைவேலன்..
தராசு..
ஆதி அங்கிள்,
டி.வி.ஆர்,
புருனோ..
என்னா அத்திரி அண்ணே, உங்க ஏரியாப்பக்கம் ஒரே யூத்துங்க (?) கூட்டமா இருக்கு..?
எதுனா விஷேஷமா தலைவா..?
குற்றாலக் கும்மாளம் ம் ம்ம்ம்ம்ம்?அக்கா பாவம்க.
சற்றே உடம்பு பூசினாற் போல இருக்கும் மக்கள் கட்சியின் தலைவர் கேபிள் ஷங்கர் வாழ்க..
:))
யாருங்க அந்த பிரபலம்?
// Cable Sankar said...
//யோவ்.. என்னை பத்தி கிசுகிசு எழுதலேன்னா உனக்கு தூக்கம் வராதா..? //
தூக்கம் வர்றதுக்குத்தான் எழுதுறேன்
இன்னைய வரைக்கும் நான் கூட கொஞ்சம் குண்டா இருக்கேன்னு ஒரு நினைப்பு இருந்திச்சு.. அங்க போய் பார்த்தவுடன் தான் நானெல்லாம் நாகேசு ரேஞ்ச்னு தெரியுது..:)//
எப்படினாலும் தொப்பை தொப்பைதான்
//வடகரை வேலன் said...
யோவ் அத்திரி,
சங்கர் ஒண்ணும் அவ்வளாவு குண்டு இல்லையே.
அதும் குற்றாலத்துல பார்க்காத குண்டுகளா?//
யூத் அண்ணாச்சியே வருக
// தராசு said...
சொன்னாலும் சொல்லலைன்னாலும் எங்க அண்ணன் யூத்து தாம்பா,//
ஆமாண்ணே 50வயசு யூத்து
அவுரு சொன்ன மாதிரி, குற்றாலத்துல போனாதான் தெரியும், என்குளுக்கு இருக்கறதெல்லாம் பாடியில்ல, வெறும் பீடின்னு,//
உண்மையிலே கேபிள் அண்ணன் பிரபலம் தான் இவ்ளோ பேர் சப்போர்ட்டுக்கு வர்றீங்களே
// ஆதிமூலகிருஷ்ணன் said...
ஆருபா அது.. மலையாளப்பட வில்லன் மாதிரி இருக்குறாரு..!//
புதுசா தயாரிக்கப்படும் ஷகீலா படத்துல வில்லனா நடிக்கிறார்
//ஆமா, நீங்க ரொம்ப நாளா கேட்டுனு இருந்தபடி கீழப்பாவூர்ல என்ன நடந்ததுன்னு பதிவு போட்டுருக்கேன். படிக்க வாரும்யா.. வந்து கூப்ட்னு போக வேண்டியதா இருக்குது.//
படிச்சு பின்னூட்டமும் போட்டாச்சு
// T.V.Radhakrishnan said...
:-))//
என் பதிவுக்கு வந்தால் எப்பவும் சிரிப்புதானா ஐயா??....நன்றி
// புருனோ Bruno said...
செங்கோட்டையில் பார்டர் கடை என்று ஒன்று உள்ளது
அங்கு சாப்பிட்டு பார்க்கவும்//
நன்றி டாக்டர்
// Cable Sankar said...
/யோவ் அத்திரி,
சங்கர் ஒண்ணும் அவ்வளாவு குண்டு இல்லையே.
//சொல்லுங்கண்ணே.. யோவ் அத்திரி.. பாத்தியா.. தெரிஞ்சிக்க..//
ஒரு யூத்தை குறை சொன்னதுக்கு இத்தனை யூத் களிடம் இருந்து எதிர்ப்பு வரும் என்று கொஞ்சமும் எதிர்பாக்கலை
// கடையம் ஆனந்த் said...
:-))//
என்ன மாப்ளே வெறும் சிரிப்பு மட்டும்தானா?
//Statistics said...
இந்த uncle யாருங்கனா?....//
அவரு அங்கிள் இல்லை யூத்துப்பா............நன்றி
//டக்ளஸ்... said...
என்னா அத்திரி அண்ணே, உங்க ஏரியாப்பக்கம் ஒரே யூத்துங்க (?) கூட்டமா இருக்கு..?
எதுனா விஷேஷமா தலைவா..?//
வாங்க டக்ளஸ்
//Thirumathi Jaya Seelan said...
குற்றாலக் கும்மாளம் ம் ம்ம்ம்ம்ம்?அக்கா பாவம்க.//
முதல் வருகைக்கு நன்றி ஜெய சீலன்
//கார்த்திகைப் பாண்டியன் said...
சற்றே உடம்பு பூசினாற் போல இருக்கும் மக்கள் கட்சியின் தலைவர் கேபிள் ஷங்கர் வாழ்க..//
வாங்க நண்பரே............
//நாஞ்சில் நாதம் said...
:))//
வாங்க நாஞ்சில்
//நையாண்டி நைனா said...
யாருங்க அந்த பிரபலம்?//
என்ன அண்ணாச்சி இப்படி கேட்டுட்டீங்க?
மேலகரத்தில் எல்லா குட்டி மெஸ்ஸும் நன்றாக இருக்கும். பார்டர் பேமஸ் பாவூர் பேமஸ் என்று ஒரு செயின் கூட இருப்பதாக கேள்வி. சத்தரத்தில் இருப்பதின் சுவையே தனி. குற்றாலம் சம்பந்தாமாக ஏதேனும் வாசித்தாலே நெறைய பேச தோன்றுகிறது
பி.கு : நான் கேபிளுக்கு இருபத்தைந்து வயதிருக்கும் என்று நினைத்திருந்தேன் :D
Post a Comment