Friday, August 28, 2009

வலைப்பதிவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் இணையதளம்

நம்ம ஆளுக எழுதும் சினிமா பதிவுகளுக்கு எப்பவும் கிராக்கி இருக்கும்.கதை,கவிதை,நேர்த்தியான அரசியல் அலசல்கள் என யோசிச்சு எழுதும் பதிவுகளை விட ரெண்டு வரி சினிமா பதிவுகளுக்கு ஹிஸும் அதிகம் பின்னூட்டமும் அதிகம்...

நான் சொல்ல வருவது சினிமா விமர்சனம் பற்றி... முன்பெல்லாம் சினிமா விமர்சனம் என்றால் ஆ.வி.தான்.அவர்கள் போடும் மார்க்கை வைத்தே படத்தின் தலைவிதியை தெரிந்து கொள்ளலாம்...ஆனால் தற்போது எந்த பத்திரிக்கையும் நடுநிலையான விமர்சனம் செய்வதில்லை......ஆனால் நம்ம வலைப்பதிவுகளில் சினிமாவிமர்சனம்னாலே எந்த படம் என்றாலும் பிடி கொடுக்காமல் விளாசித்தள்ளுகிறார்கள்.......இந்த விசயத்தை பற்றி தமிழ்சினிமா.காம் வேண்டுகொளை விடுத்துள்ளது....... கீழே படிக்கவும்.....

//பிளாக் என்று சொல்லப்படும் வலைப்பூக்கள் கணிசமான வாசகர் வட்டாரத்தை கொண்டிருக்கிறது. இங்கே எழுதப்படும் சினிமா விமர்சனங்கள் பற்றிதான் இப்போது பெரும் கவலையோடு பேச ஆரம்பித்திருக்கிறார்கள் திரையுலகத்தில். சமீபத்தில் வெளிவந்த ஒரு மாபெரும் பட்ஜெட் படத்தை கிழிகிழியென்று கிழித்துவிட்டார்கள் இந்த பிளாக் எழுத்தாளர்கள். இவர்களின் விமர்சனத்தை பார்த்தால், ஒரு சீனுக்கு கூட தகுதியில்லாத படம் போலிருக்கிறது என்ற எண்ணமே எழும். ஆனால், நீளம் என்ற ஒரு குறையை தவிர கவலைப்படுத்துகிற மாதிரியான படம் இல்லை இது. அப்படியானால் இவர்கள் ஏன் இப்படி எழுதி கிழிக்க வேண்டும்? அநேகமாக எல்லா படத்தையும் இப்படிதான் கிழித்து தொங்கப் போடுகிறார்கள் இந்த வலைப்பூக்காரர்கள். எங்கோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு உதிரத்தை சிந்தி படம் எடுக்கும் படைப்பாளிகளையும், கோடி கோடியாக கொட்டிவிட்டு தவிக்கும் தயாரிப்பாளர்களையும் பீதிக்குள்ளாக்குகிற இவர்கள் கொஞ்சம் மனிதாபிமானத்தோடு விமர்சனங்கள் எழுத வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். ஒன்றுக்கும் உதவாத படங்களை கிழித்தால் கூட பொறுத்துக் கொள்ளலாம். பிரமாண்டம், நேர்த்தி, இசை, ஒளிப்பதிவு என்று எதிலும் குறைவைக்காத படத்தையெல்லாம் கூட ஒரே தராசில் வைத்து பார்ப்பதுதான் பெரும் சோகம். இனியாவது யோசியுங்கள் நண்பர்களே...////

கொஞ்சம் பாத்து எழுதுங்க மக்களே

23 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

இதில் மாறுபட்டக் கருத்துகள் இருக்கு நண்பா.. படம் நல்லா இருந்தா இருக்குன்னு சொல்லப் போறோம்.. இல்லைன்னாத்தானே கிழிக்கிறோம்.. வெறும் டேகிநிக்கள் சமாச்சாரங்களுக்காக ஒரு படம் நல்லா இருக்குன்னு சொல்லனுமா என்ன.. என்னதான் நடக்குதுன்னு பார்ப்போம்..

நட்புடன் ஜமால் said...

அப்படியாவது திருந்துவாங்களான்னு பார்ப்போம் ...


-----------------

இல்லன்னா அவங்களே ஒரு ப்லாக் ஆரம்பித்து எழுதலாம்

அல்லது

சில சானல்களுக்கும் பத்திரிகைகளுக்கும் காசு கொடுத்து எழுத வைப்பது போல் ப்லாக்கருக்கும் காசு கொடுத்து எழுத வைக்கட்டும்

தராசு said...

//கதை,கவிதை,நேர்த்தியான அரசியல் அலசல்கள் என யோசிச்சு எழுதும்//

இந்த மாதிரி பதிவுகள் எங்கண்ணே இருக்கு

தராசு said...

//ஒன்றுக்கும் உதவாத படங்களை கிழித்தால் கூட பொறுத்துக் கொள்ளலாம். பிரமாண்டம், நேர்த்தி, இசை, ஒளிப்பதிவு என்று எதிலும் குறைவைக்காத படத்தையெல்லாம் கூட ஒரே தராசில் வைத்து பார்ப்பதுதான் பெரும் சோகம். இனியாவது யோசியுங்கள் நண்பர்களே...////

கொஞ்சம் பாத்து எழுதுங்க மக்களே//



அத்திரி அண்ணே,

இப்படி சொல்றதுக்கு பதிலா, நீங்க நேராகவே கேபிள் அண்ணனை திட்டியிருக்கலாம்.

வந்தியத்தேவன் said...

தமிழ்சினிமா மட்டும் நேர்மையாக விமர்சிக்கிறதா? இல்லை அவர்கள் கவர் வாங்கிக்கொண்டு குப்பைப் படங்களை நல்லதென்பார்கள், நல்ல படங்களைச் சுமார் என்பார்கள். முதலில் இணையங்களும் பத்திரிகைகளும் நடுநிலையாக விமர்சிக்கவேண்டும். இப்போது விகடன் என்ற மட்டமான பத்திரிகை சன் பிக்சர்ஸ் படங்களை தூக்கிவைக்கிறது. ஏனென்றால் சன்னுக்கும் அவர்களுக்கும் தொடர்பிருக்கிறது.

நாம் எமக்கு படம் பிடித்தால் பிடித்தது என்கின்றோம் இல்லையென்றால் மட்டம் சூப்பர் ஸீரோ என்கின்றோம் இதில் என்ன தப்பு. அப்போ வலைப்பதிவரின் விமர்சனங்கள் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதை தமிழ்சினிமா.கொம் என்ற இணைய ஒத்துக்கொள்கின்றதா?

SShathiesh-சதீஷ். said...

நானும் இப்படித்தான் ஒரு பதிவிட்டேன். எல்லோரும் சிறந்து கும்மிவிட்டார்கள். எப்போதான் உணர்வார்களோ?

குடுகுடுப்பை said...

சாமி நாங்க காசு கொடுத்து பாக்கிறோம், எங்க காது கிழிஞ்சா நாங்க எழுதி கிழிக்கதான் சேய்வோம்.

துபாய் ராஜா said...

நாடோடிகள் படத்தை பதிவர்கள் யாரும் நன்றாக இல்லை என்று எழுதினார்களா ??!!....

மோசமாக படம் எடுக்கப்போய் தானே இப்படி விமர்ச்னம் வருது....

முதல்ல அவங்களை நிறுத்தச் சொல்லுங்க. அப்புறம் நாம நிறுத்துவோம்.

நீங்க சொன்ன வலைதளமும் போய் பார்த்தேன்.ஒரே கிசுகிசுவும்,சிண்டு முடியற செய்திகளும்தான்....

அவர்களது வலைத்தளத்திலே கந்தசாமி விமர்சனம் பற்றி சில வரிகள்...

/எல்லாவற்றையும் லாஜிக்கோடு செய்து காட்டிய ஒரு விஷயத்திற்காகவே சுசி கணேசனை பாராட்டலாம். (அந்நியன் அம்பியிடம் கூட இந்த லாஜிக் இல்லையே!)/

ஷங்கரை தாக்கி......

//கதையின் வேகத்தை குறைக்கிற அளவுக்கு பாடல்கள்//

கந்தச்சாமி பாடல்கள் சரியில்லையாம்.

//கதை விஷயத்தில் முந்தைய சில படங்களின் சாயலை தவிர்த்திருந்தால் கந்தசாமி உலகத் தர வரிசையில் ஒன்றாக இருந்திருக்கும்.//

இயக்குநர் காப்பி அடித்திருக்கிறார் என்று கூற இவர்களுக்கு மட்டும்தான் உரிமையா ??!!

விமர்சனத்தின் கடைசி வரி.

//அரை(குறை) தூக்கத்தோடு ஒரு கொக்கரக்கோ //

இதுக்கு என்ன அர்த்தமோ?.இதைப் படித்த மக்கள் தூங்குவதற்காக தியேட்டர் செல்வார்களோ ??!!

இந்த இணையதளத்தின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டால் அடுத்தது மோசமான படம் வந்தால் படம் பார்த்த பொதுமக்கள் மற்றவர்களிடம் கருத்து சொல்லக்கூடாது என்று கட்டளை இட்டாலும் இடுவார்கள்.

முதல்ல அவங்களை நிறுத்தச் சொல்லுங்க. அப்புறம் நாம நிறுத்துவோம்.

சத்ரியன் said...

//சில சானல்களுக்கும் பத்திரிகைகளுக்கும் காசு கொடுத்து எழுத வைப்பது போல் ப்லாக்கருக்கும் காசு கொடுத்து எழுத வைக்கட்டும்//

ஜமால்,

ஒரு படம் எடுக்க‌
எத்தனையோ கோடி ரூபாய் செலவு செய்கிறார்கள். நீங்க சொல்ற யோசனைக் கூட நியாயமாத்தான் படுது.அப்படியொரு வாய்ப்புன்னா எனக்கும் சொல்லுங்க.

Raju said...

இதுக்கு நீங்க கேபிளை நேரடியாகவே திட்டியிருக்கலாம்.
ரிப்பீட்டு..
:)

Prasanna Rajan said...

’சுப்ரமனியாபுரம்’ வந்த போது, அந்த படத்தைப் பற்றி எல்லோருக்கும் தெரிய வைத்ததே ப்ளாக்குகள் தான். சொல்லப் போனால் ப்ளாக்குகள் படிப்பவர்கள் தமிழகத்தை பொறுத்த மட்டில் மிகக் குறைவே. அப்படி இருக்கையில் இப்படி சொல்வதெல்லாம் வெறும் சப்பைக்கட்டு. என் ஊரான தேனியில் ‘கந்தசாமி’ படம் பார்த்து விட்டு த்யேட்டரில் இருந்து வெளி வரும் ஒரு வண்டிக்காரரிடம் கேட்டால் கூட, வலையுலகில் என்ன சொல்லி இருக்கிறார்களோ, அதைத் தான் சொல்வார். நல்ல படங்கள் கொடுத்தால் தூக்கி வைத்து கொண்டாடுவோமே...

Cable சங்கர் said...

அது சரி இதை காப்பி பண்ணி போட அத்திரி நீ எவ்வளவு கவர் வாங்கினே..?

குப்பன்.யாஹூ said...

Like kaarthikai paandiyan, I too fully disagree with your post.

If the film is good most of the bloggers appreciate that. I have seen positive review posts about paruthiveeran, pasanga, naadodikal.

If the film is bad we should accept the fact.

I have downloaded kandasamy film from net (6 files )but unable to see even the 1st file itself (1st songs picturisation is very pathetic).

Susi Ganesan tried to become shankar., That is the fundamental reason for the failure of Kandhasamy.

Just because they spent 10 crores or 20 crores, we cant accept a poor film as good film.

Thamira said...

நட்புடன் ஜமால் said...

சில சானல்களுக்கும் பத்திரிகைகளுக்கும் காசு கொடுத்து எழுத வைப்பது போல் ப்லாக்கருக்கும் காசு கொடுத்து எழுத வைக்கட்டும்//

ஹைய்யா.. இது நல்ல ஐடியாவா இருக்கே..!

ஊர்சுற்றி said...

// வெறும் டேகிநிக்கள் சமாச்சாரங்களுக்காக ஒரு படம் நல்லா இருக்குன்னு சொல்லனுமா என்ன..//

ஆஆங்க!!!

@துபாய் ராஜா.... அதேதாங்க.

நல்லாயிருந்தா நல்லாயிருக்குன்னு சொல்லப்போறோம், இல்லன்னா இல்ல. இதில் தனிப்பட்ட நபர்களின் ரசனையும் அடங்கியிருக்கிறது.

அத்திரி said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
வெறும் டேகிநிக்கள் சமாச்சாரங்களுக்காக ஒரு படம் நல்லா இருக்குன்னு சொல்லனுமா என்ன.. //

புரொபசர் சொன்னா சரிதான்...

//நட்புடன் ஜமால் said...
சில சானல்களுக்கும் பத்திரிகைகளுக்கும் காசு கொடுத்து எழுத வைப்பது போல் ப்லாக்கருக்கும் காசு கொடுத்து எழுத வைக்கட்டும்//

நல்ல ஐடியா ஜமால் அண்ணாச்சி

அத்திரி said...

//தராசு said...
இப்படி சொல்றதுக்கு பதிலா, நீங்க நேராகவே கேபிள் அண்ணனை திட்டியிருக்கலாம்.//

என்னையும் கேபிள் அண்ணனையும் பிரிக்கும் சூழ்ச்சிக்கு நாங்கள் மயங்கமாட்டோம்


//வந்தியத்தேவன் said...
தமிழ்சினிமா மட்டும் நேர்மையாக விமர்சிக்கிறதா? இல்லை அவர்கள் கவர் வாங்கிக்கொண்டு குப்பைப் படங்களை நல்லதென்பார்கள்,//

நம்ம வலைப்பதிவர்கள் எதற்கும் வளைந்து கொடுக்காமல் கரெக்டா விமர்சனம் பண்றது பிடிக்கலையோ என்னவோ????????? நன்றி வந்தியத்தேவன்

அத்திரி said...

// SShathiesh said...
நானும் இப்படித்தான் ஒரு பதிவிட்டேன். எல்லோரும் சிறந்து கும்மிவிட்டார்கள். எப்போதான் உணர்வார்களோ?//

வாங்க சதீஷ்

//குடுகுடுப்பை said...
சாமி நாங்க காசு கொடுத்து பாக்கிறோம், எங்க காது கிழிஞ்சா நாங்க எழுதி கிழிக்கதான் சேய்வோம்//

சரிங்க ஐயா......நன்றி

அத்திரி said...

//துபாய் ராஜா said...
மோசமாக படம் எடுக்கப்போய் தானே இப்படி விமர்ச்னம் வருது....
முதல்ல அவங்களை நிறுத்தச் சொல்லுங்க. அப்புறம் நாம நிறுத்துவோம்.//

ஒரு முடிவோடத்தான் இருக்கீங்க....நன்றி ராஜா


//சத்ரியன் said...
ஒரு படம் எடுக்க‌
எத்தனையோ கோடி ரூபாய் செலவு செய்கிறார்கள். நீங்க சொல்ற யோசனைக் கூட நியாயமாத்தான் படுது.அப்படியொரு வாய்ப்புன்னா எனக்கும் சொல்லுங்க.//

வாங்க சத்ரியன்

அத்திரி said...

// டக்ளஸ்... said...
இதுக்கு நீங்க கேபிளை நேரடியாகவே திட்டியிருக்கலாம்.
ரிப்பீட்டு..
:)//

ஆஹா.ஒரு குரூப்பாத்தான் இருக்காங்கடே.....நன்றி டக்ளஸ்

//பிரசன்னா இராசன் said...
’சுப்ரமனியாபுரம்’ வந்த போது, அந்த படத்தைப் பற்றி எல்லோருக்கும் தெரிய வைத்ததே ப்ளாக்குகள் தான்.
//

சரியாச்சொன்னீங்க........முதல் வருகைக்கு நன்றி பிரசன்னா இராசன்

அத்திரி said...

///Cable Sankar said...
அது சரி இதை காப்பி பண்ணி போட அத்திரி நீ எவ்வளவு கவர் வாங்கினே..?//

நீங்க எவ்ளோ குடுத்தீங்களோ.............அதே அளவுதான்..........

//ராம்ஜி.யாஹூ said...
Like kaarthikai paandiyan, I too fully disagree with your post.//

வாங்க ராம்ஜி
முதல் வருகைக்கு நன்றி

அத்திரி said...

// ஆதிமூலகிருஷ்ணன் said...
ஹைய்யா.. இது நல்ல ஐடியாவா இருக்கே..!//

வாங்க அண்ணே............


//ஊர்சுற்றி said...
நல்லாயிருந்தா நல்லாயிருக்குன்னு சொல்லப்போறோம், இல்லன்னா இல்ல. இதில் தனிப்பட்ட நபர்களின் ரசனையும் அடங்கியிருக்கிறது.//

சரியாச்சொன்னீங்க ஊர்சுற்றி

பின்னோக்கி said...

ஆனந்த விகடன் படம் தயாரிக்கத்தொடங்கியதிலிருந்து, விமர்சனம் சரியில்லை.

நல்ல படமா எடுக்க துப்பு இல்லை, இதுல இந்த மாதிரி வேண்டுகோள் வேற. எதுக்கு எடுத்தாலும், கோடிக்கணக்கான ரூபாய் போட்டு படம் எடுத்துருக்கேன் அதுனால விமர்சனம் பார்த்து எழுதுங்கன்னு கேட்குறது, பிச்சைக் கேட்குறது மாதிரி.

நானும் கந்தசாமி படம் பார்த்தேன். அப்படி ஒரு குப்பைய எடுத்துட்டு என்னப் பேச்சு பாருங்க.

5 ஸ்டார், திருட்டுபயலே படம் பார்த்திட்டு சுசிகணேசன் மேல ஒரு மரியாதை இருந்தது. இப்போ போய்டுச்சு.கந்தசாமி படத்துனால இல்லை, அவர் இந்த படத்தை உலக ரேஞ்சுல பேசுனதுக்காக.

ஒழுங்கா, ஹீரோ பின்னாடி சுத்தாம, நல்ல கதை, திரைக்கதை வச்சு படம் எடுத்துட்டு பேசட்டும்.