Monday, September 21, 2009

எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்

ஏற்கனவே பலமுறை அனுபவப்பட்டதால் அந்த தப்பை பண்ணக்கூடாது என்று ஒரு கொள்கையோடிருந்தேன்..ஆனா இந்தவாட்டி மறுபடியும் அதே தப்பை பண்ணவேண்டியதா போச்சு....அய்யய்யோ நீங்க வேற மாதிரி நினைக்காதிங்க...நான் செஞ்ச தப்பு மறுபடியும் அரசு விரைவு பேருந்தில் பயணம் செய்த கொடுமை .அவ்வ்வ்வ்வ்..............

இந்த மாத ஆரம்பத்தில் ஊரில் திருவிழா இருந்ததால் ஊருக்கு சென்றிருந்தேன்..போகும்போது பேச்சிலராக போனதால் பிரச்சினையில்லை...... வரும்போது தங்கமணியும் கூட வந்ததால் பிரச்சினை ஆரம்பமாகியது..ரெயில்ல ரிசர்வேசன் கெடைச்சா மறுபடியும் சுனாமியே வந்திடும்.......தனியார் டிராவல்சிலும் டிக்கெட் தீர்ந்துவிட்டது. சரி ஐந்தரைமணி அரசு விரைவுப்பேருந்தில் ரிசர்வேசன் பண்ணலாம்னா அதிலும் டிக்கெட் இல்லை ( ஹைவே ரைடராம்).நாலரைமணி அரசுப்பேருந்தில் தான் டிக்கெட் இருந்தது..மனதை கல்லாக்கி கொண்டு டிக்கெட் எடுத்தேன்...



தென்காசிக்கு 5 மணிக்கு வரவேண்டிய பேருந்து இன்னும் வரவில்லை..... அலுவலகத்தில் கேட்டால் 'வண்டில கொஞ்சம் பிராப்ளம் பாத்துட்டாங்க செங்கோட்டையில் இருந்து கிளம்பிடிச்சு' அப்படினாங்க.... 6 மணியாகியும் வண்டி வரலை...இடைப்பட்ட நேரத்தில் சென்னை போர்டு போட்டு ஒரு வண்டி வந்திச்சி ஏறலாம்னா அது வேளாங்கன்னி ஸ்பெசலாம்... என்ன சார் இது சென்னை வண்டிய ஸ்பெசலா வுட்டா எப்படி? .....என கோபமாக கேட்க ஆரம்பிக்க.....அந்த அலுவலர் எஸ்கேப்.ஒரு வழியா நாலரைக்கு வரவேண்டிய பேருந்து ஆறரைக்கு வந்தது......



பேருதான்  விரைவுப்பேருந்து...ராஜபாளையம்   வரவே 9:30 மணியாகியது.        ஆஹா திருச்சி போறதுக்கே காலை 5 மணியாகிடும்போல என்றே நினைத்தேன்....காலை 3மணிக்கே திருச்சிக்கு வந்துவிட்டது...இங்கே ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் மாறுவார்கள்..ஏற்கனவே பலமுறை அனுபவம் என்பதால் நான் அமைதியாக இருந்தேன்...திருச்சி வந்தவுடன் ஒரு பயணி சற்று கோபத்துடன் அந்த ஓட்டுனரிடம் " என்ன சார் தென்காசியில் இருந்து இங்கு வர 9 மணிநேரம் ஆக்கிட்டீங்களே..ஒரு இடத்துல கூட நீங்க ப்ஸ்ஸை நிப்பாட்டலியே... ஏன் இப்படி ஸ்லோவா ஓட்டுறீங்கன்னு கேட்டார்"..அதற்கு ஓட்டுனர்" நீங்க சொல்றதெல்லாம் சரிதான் நாங்க என்னபண்றது ஒரு லிட்டர் டீசலுக்கு அஞ்சரை கிலோமீட்டர் மைலேஜ் கேக்குறாங்க...லாக் பண்ணிட்டாங்க..நான் முடிஞ்சவரைக்கும் வேகமாத்தான் வந்திருக்கேன்..இதுக்கே இப்படி சொன்னா எப்படி..அடுத்து வர்ற டிரைவர் ஓட்டும்போதுதான் தெரியும் உங்களுக்கு என்ன பத்தி" என்று ஒரு மரம் புன்னகையோடு இறங்கினார்....அவர் சொன்னது அந்த பயணிக்கு புரிந்ததோ இல்லையோ எனக்கு நன்றாக புரிந்தது...

திருச்சி ஓட்டுனரின் வேகம் 30-40கிலோமீட்டருக்குள்ளே இருந்தது......இப்படியே பேருந்து சென்றால் லிட்டருக்கு 8 கிலோமீட்டர் கிடைக்கும்போல... காலை7:30க்கு விழுப்புரம் வந்த பிறகுதான் கொஞ்சம் வேகம் எடுத்தார்............டவுன் பஸ்ஸைத்தவிர எல்லா வண்டிகளும் எங்கள் பேருந்தை முந்தி சென்றன....செங்கல்பட்டு தாண்டி நம்ம மாநகர பேருந்து கூட முந்திபோனதுதான் ஹைலைட்............ தமபரம் வந்தடையும் போது மணி காலை 10:30.......இதுக்கப்புறம் அந்த பேருந்து கோயம்பேடு போகவேண்டும்............நீங்களே கணக்கு போட்டுக்கிடுங்க பயணநேரம் எவ்வளவு என்று....

செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு எல்லா பேருந்துகளூம் போன வருசம் வரைக்கும் சூப்பர் டீலக்ஸ் பேருந்துகளாக இருந்தது....நம்ம கலைஞர் ஆட்சியில தான் பேருந்து கட்டணம் உயர்த்தலையே ..அதானால் பயணிகளின் நலன் கருதி!!!!!!!! இப்பா எல்லா பேருந்துகளும் அல்ட்ரா டீலக்ஸா மாத்திட்டாங்க.......... சரி காசுதான் அதிகம் ஓகே...ஆனா வேகம்.........ம்ம்ம்ம்ஹும்..................மக்களே தயவு செய்து அரசு விரைவுப்பேருந்தில் பயணம் செஞ்சி என்னை போல் எஞ்சாய் பண்ணுங்க............



மதுரையில் இருந்து சென்னை வரைக்கும் உள்ள நெடுஞ்சாலை தற்போது அருமையாஇருக்கு ..ஆனா நம்ம பேருந்துகள்தான்.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் யாரைத்தான் குற்றம் சொல்ல 12மணிநேர பயணத்தை 17மணிநேரமாக ஆக்கும் கொடுமையை......

14 comments:

Anonymous said...

என்னத்த சொல்ல... என்னன்னு சொல்ல... சேம் பிளட்.. அவ்வுளவு தான். அவ்வ்வ்வ்வ்வ்... வேற என்னய்யா செய்ய...

17 மணி நேரம் என்ன 24 மணி நேரமும் ஆகும்...

அப்புறம் பஸ் கலர மாத்தி....ம்...ம்...இன்னும் பல சா(சோ)தனைகளை செய்து... கட்டணத்தை உயர்த்தி... பச்சை கலர் சிக்குச்சான்...மஞ்சல் கலர் சிக்சன் தான் பாட்டு தான் பாடனும்

கார்க்கிபவா said...

:))))

Cable சங்கர் said...

ஏன் நீஙக் ப்ளைட்டுல வரக்கூடாது..?

Raju said...

தல..பாத்து தல..!
பஸ் பிரச்சனைக்கு ஆட்டோ வந்துரப் போவுது.
:-)

தராசு said...

//வரும்போது தங்கமணியும் கூட வந்ததால் பிரச்சினை ஆரம்பமாகியது//

ஹலோ,

டிரைவர் மெதுவா ஓட்டுனதுக்கும் தங்கமணி கூட வந்ததுக்கும் இன்னா கனிக்ஷன்.

அ.மு.செய்யது said...

ந‌ம்மூர்ல‌ ம‌ட்டும் இந்த‌ அர‌சு பேருந்து பிர‌ச்ச‌னை எப்ப‌த்தான் தீருமோ ?/

நான் ம‌ட்டும் முத‌ல‌மைச்ச‌ர் ஆனேனா எல்லா ப‌ஸ்ஸையும் வோல்வோவா ஆக்கிட்டு தான் ம‌றுவேல‌ பாப்பேன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

போனது நம்ம தப்பு.. அப்புறம் குத்துதே குடையுதேன்னா? ஒழுங்கா ரயில்ல போகலாம்ல...

Unknown said...

omni bussukku business undavatharku ithuvum oru vali

அத்திரி said...

// கடையம் ஆனந்த் said...
என்னத்த சொல்ல... என்னன்னு சொல்ல... சேம் பிளட்.. அவ்வுளவு தான். அவ்வ்வ்வ்வ்வ்... வேற என்னய்யா செய்ய... //

மாப்ளே அவ்ளோ சந்தோசமா......நன்றி.

//கார்க்கி said...
:))))//

வா சகா உனக்கு சிரிப்பா இருக்குதா??

அத்திரி said...

// Cable Sankar said...
ஏன் நீஙக் ப்ளைட்டுல வரக்கூடாது..?//

நீங்க மனசு வச்சா நான் ப்ளைட்ல வரலாம்.கொஞ்சம் பாத்து செய்ங்க

//T.V.Radhakrishnan said...
:-)))//

சிரிப்புக்கு நன்றி ஐயா

அத்திரி said...

// ♠ ராஜு ♠ said...
தல..பாத்து தல..!
பஸ் பிரச்சனைக்கு ஆட்டோ வந்துரப் போவுது.//
:-)

ஆட்டோவுக்கெல்லாம் பயப்படமாட்டோம்ல.நன்றி

//தராசு said...
ஹலோ,
டிரைவர் மெதுவா ஓட்டுனதுக்கும் தங்கமணி கூட வந்ததுக்கும் இன்னா கனிக்ஷன்.//

அலோவ்.....தங்க மணி வரலைனா நான்பாட்டுக்கு ஏதாவது ஒரு பஸ் ஏறி வந்திருப்பேன்....அவ்ளோதான்..............

இப்படி சிண்டு முடியலைனா உங்களுக்கு தூக்கம் வராதா?

அத்திரி said...

//அ.மு.செய்யது said...
நான் ம‌ட்டும் முத‌ல‌மைச்ச‌ர் ஆனேனா எல்லா ப‌ஸ்ஸையும் வோல்வோவா ஆக்கிட்டு தான் ம‌றுவேல‌ பாப்பேன்.//

ஹிஹி அப்பவும் இதே வேகம்தான்.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

///கார்த்திகைப் பாண்டியன் said...
போனது நம்ம தப்பு.. அப்புறம் குத்துதே குடையுதேன்னா? ஒழுங்கா ரயில்ல போகலாம்ல...//

டிரெயின்ல டிக்கெட் கெடைக்கலையே நண்பா.....

அத்திரி said...

//Haja said...
omni bussukku business undavatharku ithuvum oru vali//

ஆஹா இந்த மேட்டர் புதுசா இருக்கே
முதல் வருகைக்கு நன்றி

பின்னோக்கி said...

//.டவுன் பஸ்ஸைத்தவிர எல்லா வண்டிகளும் எங்கள் பேருந்தை முந்தி சென்றன

:)))