Sunday, 25 October, 2009

ஒரு COMMON MAN செய்கிற வேலையா இது?

பொது ஜனம்னா இப்படித்தான் இருக்கனும் ஏட்டில் எழுதப்படாத விதிகள் இந்தியாவில் தமிழ் நாட்டுல இருக்கு.... பொதுஜனம்னா எல்லாத்தையும் பாத்து சகிச்சிட்டு போய்க்கிட்டே இருக்கனும். இதுதான் நம்ம நாட்டு மக்களின் நிலை.......பொது ஜனம்னா அவருக்குன்னு ஒரு குறிப்பிட்ட கடமைகள் வேலைகள் தான் செய்யனும்னு ஒரு இது இருக்கு......ஆனா இப்படியெல்லாம் இருக்காதிங்க உங்களுக்கும் கோவம் வரனும் அப்படினு நம்ம உலக நாயகன் அருமையாவே சொல்லியிருக்கார்..... நல்லாத்தான்யா இருக்கு உன்னைப்போல் ஒருவன்.

கதையின் போக்கில் எல்லோரையும் ஒரு கை பார்க்கிறார் கமல்...முக்கியமா மீடியாக்களை பற்றி பேசும் போது.....போலீஸ் கமிசனராக வரும் மோகன்லாலுக்கும் லட்சுமிக்கும் இடையே நடக்கும் சின்ன சின்ன லடாய்கள் நக்கலோடு இருக்கு..அதுவும் லட்சுமி தனது அலுவலகத்திற்கு வந்தவுடன் மோகன் லால் உக்காரச்சொன்னவுடன் பரவாயில்லை மரியாதை போதும்னு சொன்னவுடன் மோகன்லால் இல்ல எனக்கு அந்த மேப் மறைக்குது பாக்க முடியல அதான் உக்காரச்சொன்னேன் என்று ஆரம்பிக்கும் நக்கல் கடைசி வரைக்கும் அப்படியே போகுது.... மோகன்லாலின் உதவியாளராக வரும் இருவரின் நடிப்பும் அருமை..அப்படி ஒரு பாடி லேங்குவேஜ்.... யப்பா தளபதிங்களா,தலைங்களா கொஞ்சம் பாத்து கத்துக்கிடுங்க கொஞ்சமாவது நடிப்பை.

ரிப்போர்ட்டராக வரும் நடிகை பேர் என்னனு தெரியலப்பா ( நினைத்தாலே இனிக்கும் படத்தில் அழகாய் பூத்ததே பாடலில் வருமே அந்த பெண்தானே)..அசால்ட்டா நடிச்சிருக்குப்பா.........ஸ்ருதி ஹாசனின் இசை அறிமுகம் என்றாலும் அருமை.....


மொத்தத்தில் உன்னைப்போல் ஒருவன் ஒரு அக்னி ஏவுகணை

17 comments:

அத்திரி said...

test

தராசு said...

என்னது,

காந்திய சுட்டுட்டாங்களா?

காம்ன்மேனை வலையுலகத்துல எல்லாரும் அடிச்சு துவைச்சு, கசக்கி, பிழிஞ்சு காயப் போட்டதுக்கப்புறம் நம்ம அத்திரி அண்ணன் வந்துக்கறாருப்பா? இத்த இன்னாண்ணு சொல்றது.

கேபிள் அண்ணே, ஏன் இந்த லேட் பிக்கப்புன்னு கேக்க மாட்டிங்களா????

அ.மு.செய்யது said...

ம‌றுப‌டியும் ஃப‌ர்ஸ்ட்ல‌ர்ந்தா ??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!!

உன்னைப் போல் ஒருவனுக்கு முன்னாடி அத்திரி அண்ணன் கடைசியா பாத்தப்படம்
"வானத்தை போல" தானே !?!?!?!?!

ஹேமா said...

அத்திரி நான் இனித்தான் பாக்கணும்.

என்ன செய்யது உங்களை இப்பிடிக் கலாய்க்கிறார்.

Cable Sankar said...

/கேபிள் அண்ணே, ஏன் இந்த லேட் பிக்கப்புன்னு கேக்க மாட்டிங்களா????
//

அண்ணே.. இவரு தியேட்டர் போய் படம் பாக்குறதே அபூர்வம்.. ஏதொ இந்த மட்டும் எழுதினாரே...

கார்த்திகைப் பாண்டியன் said...

// தராசு said...
என்னது,காந்திய சுட்டுட்டாங்களா?//

//அ.மு.செய்யது said...
ம‌றுப‌டியும் ஃப‌ர்ஸ்ட்ல‌ர்ந்தா ??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!!//

இதுக்கு மேல நான் என்ன சொல்றது.. ஹி ஹி ஹி ..

ஆதிமூலகிருஷ்ணன் said...

எல்லா பின்னூட்டங்களுக்கும் ஒரு ரிப்பீட்டு.!

துபாய் ராஜா said...

இவங்க எப்பவுமே இப்படித்தான் பாஸூ... என்ன எழுதுனாலும் கிண்டல் பண்ணுவாங்க.. அவங்க வாயை அடைக்கிற மாதிரி அடுத்தடுத்து கந்தசாமி கலக்கல், பொக்கிஷம் புதையல்ன்னு ரெண்டு விமர்சனப்பதிவு போடுங்க... :))

T.V.Radhakrishnan said...

காமன் மேனுக்கு எல்லாமே லேட்டாய்த்தான் உரைக்கும்னு சிம்பாலிக்கா சொல்லியிருக்கீங்க லேட்டா விமரிசனம் செஞ்சு...

:-)))

அத்திரி said...

சில மாதங்களே ஆன புத்தம் புதிய திரைப்படம் டிவியில் போட்டா மட்டும் போய் உக்காந்து பாக்குறிங்களே.....நான் மட்டும் கொஞ்சம் லேட்டா விமர்சனம் பண்ணினா என்ன....தராசு அண்ணன் எப்பவும் இப்படித்தான்.நன்றி அண்ணே

அத்திரி said...

//அ.மு.செய்யது said...
ம‌றுப‌டியும் ஃப‌ர்ஸ்ட்ல‌ர்ந்தா ??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!!
உன்னைப் போல் ஒருவனுக்கு முன்னாடி அத்திரி அண்ணன் கடைசியா பாத்தப்படம்
"வானத்தை போல" தானே !?!?!?!?!//


ஹிஹி தப்பு தம்பி கடேசியா பசங்க படம் பார்த்தேன்.......நன்றி செய்யது

அத்திரி said...

//ஹேமா said...
அத்திரி நான் இனித்தான் பாக்கணும்.//

மிஸ் பண்ணிடாதிங்க.நன்றி ஹேமா

அத்திரி said...

//Cable Sankar said
அண்ணே.. இவரு தியேட்டர் போய் படம் பாக்குறதே அபூர்வம்.. ஏதொ இந்த மட்டும் எழுதினாரே...//

ரொம்ப நன்றி அண்ணே

அத்திரி said...

நன்றி புரொபசர்

நன்றி ஆதி அண்ணே

அத்திரி said...

//துபாய் ராஜா said...
இவங்க எப்பவுமே இப்படித்தான் பாஸூ... என்ன எழுதுனாலும் கிண்டல் பண்ணுவாங்க.. அவங்க வாயை அடைக்கிற மாதிரி அடுத்தடுத்து கந்தசாமி கலக்கல், பொக்கிஷம் புதையல்ன்னு ரெண்டு விமர்சனப்பதிவு போடுங்க... :))//

ராசா ரெண்டு படத்தையும் ஒரே நேரத்துல பாத்தா என் நிலைமை.......அவ்வ்வ்வ்வ்வ்

அத்திரி said...

//T.V.Radhakrishnan said...
காமன் மேனுக்கு எல்லாமே லேட்டாய்த்தான் உரைக்கும்னு சிம்பாலிக்கா சொல்லியிருக்கீங்க லேட்டா விமரிசனம் செஞ்சு...//

ஐயா நீங்க தான் சரியா சொல்லியிருக்கீங்க

அத்திரி said...

ஐயா நீங்க தான் சரியா சொல்லியிருக்கீங்க