Friday, 6 November, 2009

பதுங்கிய கலைஞர் & பொய் சொன்ன ஸ்டாலின்

ரொம்ப வருசத்துக்கு அப்புறம் நம்ம கலைஞர் ஐயாவுக்கு எப்படித்தான் இநத அளவுக்கு தைரியம் வந்ததோ??.. முல்லைப்பெரியாறு விவகாரத்தில் கேரள அரசும் மத்திய அரசும் அங்கு வரவிருக்கும் சட்டமன்றதேர்தலை மனதில் வைத்து தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வருகின்றன..... கேரள கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்கள் தேர்தலுக்காகத்தான் முல்லைப்பெரியாறு விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.. எங்கே இந்த விவகாரத்தில் தமிழகத்து பக்கம் சாஞ்சா கேரளாவில் மறுபடியும் ஆட்சியை பிடிக்க முடியாதே என்ற கணக்கில் மத்திய காங்கிரசு அரசும் கேரள அரசும் கூட்டு செர்ந்து கொண்டன.

தமிழகத்துக்கு முல்லை பெரியாறு விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் துரோகம் இழைத்துவிட்டதாக கூறி மதுரையில் அவருக்கு எதிராக கணடன கூட்டம் போடப்போவதாக நம்ம முதல்வர் வேங்கையாக சீறினார். ரொம்ப நாளைக்கப்புறம் நம்ம கலைஞர் இப்பவாவது பாய்கிறாரேன்னு பாத்தா.... திடீர்னு இந்த விசயத்துல பதுங்க ஆரம்பிச்சி மதுரை கூட்டத்தையே நிறுத்திவைத்துவிட்டார். காரணம் மறுபடியும் ஸ்பெக்ட்ரம் பூதம் கிளம்பிடிச்சி.


நீ எனக்கு எதிரா கூட்டம் போடுறியா....இருஇதுக்கு பதிலடியா ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை சிபிஐ மூலமா மறுபடியும் ஒரு ஸ்டண்ட் ஷோவை காட்டிடிச்சு மத்திய அரசு. நம்ம கலைஞரும் மத்திய அமைச்சர் பதவியா??? தமிழக மக்கள் நலனா?? வழக்கம் போல் தமிழக நலனுக்கு ஒரு நாமம்......... கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் ஒகேனெக்கல் திட்டம் நிறைவேற்றப்படும் அப்படினார்..இப்ப அங்க ஆட்சியே கவிழ்கிறமாதிரி இருக்கு..அப்ப ஒகேனெக்கல்...............???

போன வாரம் அரசு விழா ஒன்றில் பொருளாதார மந்த சூழ்நிலையிலும் திமுக ஆட்சியில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றார் துணைமுதல்வர். நேரடியாக உயர்த்தவில்லை என்று சொல்லியிருந்தால் சரியாக இருந்திருக்கும்.ஒரு வேளை அவர் தனியார் பேருந்துகளை மனதில் வைத்து சொல்லி இருப்பாரோ?....... அரசுப்பேருந்துகளில்தான் எம் சர்வீஸ், டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ், SFS,TSS,நான் ஸ்டாப்..அப்படினு வெறும் போர்டை மற்றும் மாட்டிட்டு கட்டணத்தை உயர்த்தி கொள்ளை அடிப்பது துணை முதல்வருக்கு தெரியாதோ?

10 comments:

வால்பையன் said...

ரொம்ப கேள்வி கேக்குறிங்க!

உங்களுக்கு இலவச டீவீ கிடையாது!

ரோஸ்விக் said...

நீங்களும் சிறு நரிக்கூட்டத்தில் ஒருவன் என சொல்லிவிடும் அளவுக்கு கழகம் வளர்ந்துள்ளது....

இப்படியெல்லாம் கேள்வி கேட்கக் கூடாதென, தமிழக மக்களின் நலன் கருதி இந்த வார மானாட மயிராடவில், தினமலரில் குறிப்பிடப் பட்ட சில நடிகைகள் தோன்றுவார்கள்.

Cable Sankar said...

இப்ப என்னன்னு சொல்றீங்க..?

நாஞ்சில் பிரதாப் said...

அத்திரி சரியான கேள்விதான் கேட்ரிக்கீங்க

ஆனா இதெல்லாம் தெரிந்ததுதானே. புதுசா எதுவும் நடக்கலையே... கண்டன ஆர்ப்பாட்டம் நடந்திருந்ததான் அது நியுசு .நடக்கலைன்னா வழக்கமான விசயம்தான்...

நசரேயன் said...

ஆட்டோ தங்கி இருக்கிற வீட்டுக்கே தேடி வரும்

சந்ரு said...

நல்ல கேள்விகள்....

அத்திரி said...

// வால்பையன் said...
ரொம்ப கேள்வி கேக்குறிங்க!உங்களுக்கு இலவச டீவீ கிடையாது!//

அத போன வருசமே வாங்கிட்டேன்........நன்றி வால்பையன்

//ரோஸ்விக் said...
நீங்களும் சிறு நரிக்கூட்டத்தில் ஒருவன் என சொல்லிவிடும் அளவுக்கு கழகம் வளர்ந்துள்ளது....//

வருகைக்கு நன்றி ரோஸ்விக்

அத்திரி said...

// Cable Sankar said...
இப்ப என்னன்னு சொல்றீங்க..?
//

அண்ணே உங்களுக்கு என்ன செய்யனும்

//நாஞ்சில் பிரதாப்
கண்டன ஆர்ப்பாட்டம் நடந்திருந்ததான் அது நியுசு .நடக்கலைன்னா வழக்கமான விசயம்தான்..//

சரியா சொன்னீங்க நாஞ்சில்பிரதாப்

அத்திரி said...

//நசரேயன் said...
ஆட்டோ தங்கி இருக்கிற வீட்டுக்கே தேடி வரும்//

ஆட்டோவெல்லாம் வேணாம்..அது ரொம்ப பழசு ஒரு குவாலிஸ், இன்னோவா..இது மாதிரி ஏதாவது அனுப்பி வைங்க அண்ணாச்சி.

// சந்ரு said...
நல்ல கேள்விகள்....
//

வருகைக்கு நன்றி சந்த்ரு

Patta Patti said...

ஆட்டோ வரும் போல!!!