Monday, January 11, 2010

என்டர் கவிதைகள்- 1 யூத் கேபிளுக்கு சமர்ப்பணம்


வா என்கிறேன்
வரமாட்டேன் என்கிறாய்
வரவேண்டாம் என்கிறேன்
வருவேன் என்கிறாய்
தா என்கிறேன்
தரமாட்டேன் என்கிறாய்
தர வேண்டாம் என்கிறேன்
தருவேன் என்கிறாய்
இப்படி எதிர்வாதம் செய்யாதே என்கிறேன்
செய்வேன் என்கிறாய்
செய் என்கிறேன்
செய்யமாட்டேன் என்கிறாய்.
பேசு என்கிறேன்

பேச மாட்டேன் என்கிறாய்
பேசவேண்டாம் என்கிறேன்
பேசுவேன் என்கிறாய்..
இப்படி ஒவ்வொன்றிலும் எதிராக இருந்தாலும்

ஏதோ ஒரு புள்ளியில் ஒன்று சேர்கிறோம்


31 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

நட்புடன் ஜமால் said...

:P

கார்க்கிபவா said...

ஜனங்களே.. நல்லா பாருங்க.. இந்த பாவத்துக்கெல்லாம் நான் பொறுப்பாகாவே மாட்டேன்னு யூத் வந்து சொல்லுவாரு பாருங்க..

பரிசல்காரன் said...

உரையாடல் கவிதைப் போட்டியை கேன்சல் பண்ணீட்டாங்களாமே.. அப்டியா?

Cable சங்கர் said...

இன்னும்
வளரணும்
தம்பி

வாழ்த்துக்கள்.
கேபிள்
சங்கர்

Raju said...

ஒரு ரூபாய்க்கு கேட்கிறேன்
தரமாட்டேன் என்கிறாய்
இரண்டு ரூபாய்க்கு கேட்கிறேன்
தரமாட்டேன் என்கிறாய்
மூன்று ரூபாய்க்கு கேட்கிறேன்
தரமாட்டேன் என்கிறாய்
நான்கு ரூபாய்க்கு கேட்கிறேன்
தரமாட்டேன் என்கிறாய்
ஐந்து ரூபாய்க்கு கேட்கிறேன் தரமாட்டேன் என்கிறாய்
ஆறு ரூபாய்க்கு கேட்கிறேன்
தரமாட்டேன் என்கிறாய்
ஏழு ரூபாய்க்கு கேட்கிறேன்
தரமாட்டேன் என்கிறாய்
எட்டு ரூபாய்க்கு கேட்கிறேன்
தரமாட்டேன் என்கிறாய்
.....
....
ஏன் என் பிய்ந்துபோன ஒரு செருப்பை வைத்து
”மியூசியம் வைக்க எண்ணமா” என்
கண்ணே..!

Raju said...

தலைவரே, கார்க்கி, பரிசல், கேபிள் சொல்றதையெல்லாம் கேட்டு மனசை குழபிக்காதீங்க.. தொடர்ந்து எழுதுங்க.
நீங்களும் ரவுடியா ஃபார்ம் ஆயாச்சு..!

தராசு said...

சரிப்பா, இதா இன்னொரு யூத்து கிளம்பிருச்சு....

Ashok D said...

என்ன கொடுமை சரவணா.. இதெல்லாம்? நொம்ப கஷ்டம்...

Anonymous said...

எந்த புள்ளியில் நண்பா?

Anonymous said...

வட்டத்தின் மையப்புள்ளியில் நீ
சுற்றி வரும் கோளாய் நான்!

சுற்றி சுற்றி வருகிறேன்
வட்டம் தாண்டி நீ வருவதற்காக...!

வருவேன் என்கிறhய்
வர மாட்டாய்!

ம்...ம்...ம்.
நிற்காமல் ஓடுகிறது என் கால்கள்
வட்டம் தேயும் வரை...!
அப்போதாவது வந்து விடுவாயா கண்ணே!

வாழ்க்கை ஒரு வட்டம்
எவனோ சொன்னான்
சரியாதான் போச்சு இப்போம்...!

வட்டத்துக்குள் நீ
வெளியே நான்
சுழல்கிறேன்
கடிகாரம் முள் போல...

Ashok D said...

//வட்டத்துக்குள் நீ
வெளியே நான்
சுழல்கிறேன்
கடிகாரம் முள் போல...//

அட.. :)

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமை

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்லாத்தான போயிட்டிருந்திச்சு .

உண்மைத்தமிழன் said...

தம்பி..

அதான் "சமர்ப்பணம்" வாங்குற அளவுக்கு கேபிள் பெரிசு ஆயிட்டாருல்ல.. அப்புறம் ஏன்யா யூத். யூத்துன்னு சொல்லி புரளியைக் கிளப்புறீங்க..?

உண்மைத்தமிழன் said...

தம்பி..

சொல்ல மறந்திட்டேன்.. கவிதை நல்லாயிருக்கு..

மறக்காம போட்டிக்கு அனுப்பிரு.. பரிசு கிடைக்கலைன்னா சொல்லு..

பைத்தியக்காரன் வீட்டுக்கு ஆட்டோ, வேணாம்.. ஒரு லாரியவே அனுப்பிருவோம்..!

ஹேமா said...

அத்திரி கவிதை நல்லாத்தானே இருக்கு.எனக்குன்னா நையாண்டியாத் தெரில.எதிர்வாதம்,எதிராய் இப்பிடி ஏதாச்சும் பேர் வச்சுப் பாருங்க.நல்லாருக்கும்.

ஆனந்தின் கவிதை சூப்பர்.

சிநேகிதன் அக்பர் said...

//ஐந்து ரூபாய்க்கு கேட்கிறேன் தரமாட்டேன் என்கிறாய்//

ஒரு என்டர் மிஸ்ஸிங் ராஜு.

//எந்த புள்ளியில் நண்பா?//

அதே டவுட்டுதான் எனக்கும்.

கவிதை நல்லாயிருக்கு பாஸ்.

நசரேயன் said...

என்னவோ நடக்குது .. ஒண்ணுமே புரியலை ..

புளியங்குடி said...

பின்றீங்க தல.

அத்திரி said...

// T.V.Radhakrishnan said...
:-)))//

நன்றி ஐயா

// நட்புடன் ஜமால் said...
:P//

நன்றி ஜமால்

அத்திரி said...

// கார்க்கி said...
ஜனங்களே.. நல்லா பாருங்க.. இந்த பாவத்துக்கெல்லாம் நான் பொறுப்பாகாவே மாட்டேன்னு யூத் வந்து சொல்லுவாரு பாருங்க..
//

யூத்த டேமேஜ் பண்றதுன்னு முடிவு பண்ணிட்டேன்

அத்திரி said...

// பரிசல்காரன் said...
உரையாடல் கவிதைப் போட்டியை கேன்சல் பண்ணீட்டாங்களாமே.. அப்டியா
//

சொக்கா போச்சே......பரவாயில்லை பரிசல் அடுத்த வருசம் பாத்துக்கலாம்..நன்றி

// Cable Sankar said...
இன்னும்
வளரணும்
தம்பிவாழ்த்துக்கள்.
கேபிள்
சங்கர்//

எந்த அளவுக்குன்னு சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும்

அத்திரி said...

// ♠ ராஜு ♠ said...
தலைவரே, கார்க்கி, பரிசல், கேபிள் சொல்றதையெல்லாம் கேட்டு மனசை குழபிக்காதீங்க.. தொடர்ந்து எழுதுங்க.
நீங்களும் ரவுடியா ஃபார்ம் ஆயாச்சு
//

உங்க கவிதையும் பட்டைய கிளப்புது....உங்கள் அன்பான ஆதரவுக்கு நன்றி

அத்திரி said...

// தராசு said...
சரிப்பா, இதா இன்னொரு யூத்து கிளம்பிருச்சு....//


அண்ணே நான் யூத்து இல்லை......சின்னப்புள்ள அண்ணே.........நன்றி


// D.R.Ashok said...
என்ன கொடுமை சரவணா.. இதெல்லாம்? நொம்ப கஷ்டம்...//

கேபிள் எழுதுனா மட்டும் நல்லா இருக்காம் நான் எழுதினா கொடுமையா......என்னண்ணே இப்படி சொல்லிட்டீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்

அத்திரி said...

// கடையம் ஆனந்த் said...
எந்த புள்ளியில் நண்பா?//

அந்தப்புள்ளி உனக்கு தெரியுமே............உன் கவிதை சூப்பர் ..பதிவுல போட்டிடு

// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமை//

நன்றி ஸ்டார்ஜன்

அத்திரி said...

// ஸ்ரீ said...
நல்லாத்தான போயிட்டிருந்திச்சு .
//

இப்பவும் நல்லாத்தான் போய்க்கிட்டு இருக்கு.இது என்ன சந்தேகம்.....நன்றி

// உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
தம்பி..அதான் "சமர்ப்பணம்" வாங்குற அளவுக்கு கேபிள் பெரிசு ஆயிட்டாருல்ல.. அப்புறம் ஏன்யா யூத். யூத்துன்னு சொல்லி புரளியைக் கிளப்புறீங்க..?//

உங்களுக்கு ஏன் பொறாமையா இருக்கு யூத் அண்ணே


//மறக்காம போட்டிக்கு அனுப்பிரு.. பரிசு கிடைக்கலைன்னா சொல்லு..பைத்தியக்காரன் வீட்டுக்கு ஆட்டோ, வேணாம்.. ஒரு லாரியவே அனுப்பிருவோம்..!
//

அவருக்கு ஏன் அவ்ளோ சிரமம் கொடுக்கனும்னு அனுப்பலை

அத்திரி said...

//ஹேமா said...
அத்திரி கவிதை நல்லாத்தானே இருக்கு.எனக்குன்னா நையாண்டியாத் தெரில.எதிர்வாதம்,எதிராய் இப்பிடி ஏதாச்சும் பேர் வச்சுப் பாருங்க.நல்லாருக்கும்.ஆனந்தின் கவிதை சூப்பர்.//

நன்றி ஹேமா.........


//அக்பர் said...
//எந்த புள்ளியில் நண்பா?//

அதே டவுட்டுதான் எனக்கும்.கவிதை நல்லாயிருக்கு பாஸ்.//

நீ சின்னப்பையன் அதனால உனக்கு சொல்லக்கூடாது..நன்றி

அத்திரி said...

// நசரேயன் said...
என்னவோ நடக்குது .. ஒண்ணுமே புரியலை//

இதுக்கே இப்படியா அண்ணாச்சி

// புளியங்குடி /said...
பின்றீங்க தல.//

நன்றி புளியங்குடி

goma said...

நாலே நாலு வார்த்தைகளை[வா,தா,செய்,பேசு,] மூலதனமாக்கி நல்லா எழுதியிருக்கீங்க

அத்திரி said...

நன்றி அக்பர்
நன்றி கோமா