Friday, 29 January, 2010

கோவா........அய்யோ

 சென்னை28, சரோஜா வெற்றிக்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்பில் வந்திருக்கும் படம் கோவா.முழுக்க முழுக்க காமெடி படம் எடுக்க ஆசைப்பட்ட இயக்குனர் அப்படியே பல இடங்களில் நெளிய வைத்திருக்கிறார்.

ஊர்க்கட்டுப்பாடுகள் நிறைந்த கிராமத்தில் அந்த கட்டுப்பாடுகள் பிடிக்காமல் வாழும் இளைஞர்களாக ஜெய்,பிரேம்ஜி,வைபவ்... ஓரு கட்டத்தில் ஊரைவிட்டு வெளியேறி மதுரையில் உள்ள நண்பனை காண வருகிறார்கள்..வந்த இடத்தில் நண்பனுக்கு திருமணம் அதுவும் வெளிநாட்டு பெண்ணுடன்...நண்பனிடன் விவரம் கேட்கும் நம் கதாநாயகர்கள் நண்பனை பின்பற்றி கோவா சென்று வெளிநாட்டு பெண்களை காதலித்து வாழ்க்கையில் செட்டிலாகனும் என்ற லட்சியத்துடன் செல்கிறார்கள்..அவர்களது லட்சியம் நிறைவேறியது எப்படி எனபதை நம்மை நெளிய வைக்கும் காட்சிகளுடன் சொல்கிறார் இயக்குனர்.


அட்டகாசமான கிராமத்து பாடலுடன் ஆரம்பமாகும் காட்சிகள் அருமை....பஞ்சாயத்து காட்சிகள் நீளம் என்றாலும்சுவாரஸ்யத்துக்கு குறைவில்லை...நக்கலும் அதிகம். காட்சிக்கு காட்சி பிரேம்ஜி அசத்துகிறார் ஒரே மேனரிசத்துடன்... முதல் 45நிமிடங்கள் நன்றாகப்போகிறது... கோவாவுக்கு சென்ற பிறகு வரும் காட்சிகள் பெரும்பாலும் நம்மை நெளியவைக்கின்றன. அரைகுறை இங்கிலீஷில் பீட்டர் விடும் ஜெய், எந்த பெண்ணை பார்த்தாலும் மன்மதலீலை பிண்ணனி இசையுடன் வைபவ் கதை சொல்வது...என..... காமெடி காட்சிகள் இருந்தாலும் கோவா என்றவுடன் குடி கூத்து என திரும்ப திரும்ப காண்பிப்பது எரிச்சலடையவைக்கிறது.

இடைவேளைக்கப்புறம் படம் தொய்வடையும் போதெல்லாம் பிரேம்ஜியை காண்பித்து காமெடி பண்ணியிருக்கிறர் இயக்குனர்..இவருக்கு டூயட் பாடல் வேறு..அவ்வ்...........பிரெம்ஜியின் ஜோடியாக வரும் பெண் நல்ல பிகர்.............. ஓரினச்சேர்க்கையாளராக வரும் சம்பத்தின் பாடிலேங்குவேஜ் நல்லா இருக்கு........... ஆனால் பல நெளியவைக்கும் முக்கியமாக ஜட்டியுடன் ரூமில் ஆடுவது, அரவிந்த் கனவு காண்பதாக வரும் பாடல் காட்சிகள்,தேவையில்லாமல் சேர்த்திருப்பதாக தோன்றுகிறது.......... இது போன்றகாட்சிகளை நீக்கினால் நல்லாயிருக்கும்பா...
..
அப்புறம் பாடத்தின் ஆரம்பத்தில் இருந்து நம்ம கதாநாயகர்களை பற்றி ஒருவர் கேள்வி கேட்பார்.அவர் படம் முழுவதும் பின் தொடர்வார்......... அவர் ஏன் அப்படி செய்கிறார்?? இயக்குனர்ட்டதான் கேக்கனும், கோவில் நகை திருடுவது, கப்பல் காட்சிகள் எல்லாம் ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....வழக்கம் போல் யுவன் கலக்கியிருக்கிறார்.... இதுவரை என்ற மெலடி பாடல் அருமை....கிளைமாக்சில் எதிர்பாக்காத திருப்பம் அருமை......சினேகா வருகிறார், போகிறார் அவ்ளோதான்

பிரேம்ஜி மட்டும் இல்லனா.............படம் அய்யோஅய்யய்யோ
கோவா இயக்குனர் கதையை நம்பாமல் சதையை நம்பியிருக்கிறார்.

கடைசி வரை DTS SOUND- ஐ ஆன் பண்ணாத தாம்பரம் வித்யா தியேட்டர் ஆப்பரேட்டர் வாழ்க.....................

36 comments:

Arun said...

படம் பார்க்கலாமா??

கார்த்திகைப் பாண்டியன் said...

Excuse me.. இது அத்திரிதானா மொத நாளே படம் எல்லாம் பாக்குறாரு? எத்தன பேருயா இப்படி போட்டிக்கு கிளம்பி இருக்கீங்க?

கார்த்திகைப் பாண்டியன் said...

இதுல அண்ணன் கேபிளோட உள்குத்து எதுவும் இருக்கோ? என்னமோ போங்கப்பா..

ஸ்ரீ said...

ஆக மொத்தத்தில் படம் சுமார் ரகம்னு சொல்லுறீங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

பாக்குற சீன எல்லாம் வாயப் பொளந்து பார்த்துட்டு இங்க வந்து என்ன பொலம்பல் வேண்டிக் கிடக்கு.. சின்னப்புள்ளத்தனமா?

செ.சரவணக்குமார் said...

விமர்சனம் நல்லாருக்கு நண்பா.

♠ ராஜு ♠ said...

ரைட்டு. சீக்கிரம் ஃபாலோயர்ஸ் சதமடித்து ஜீப்பிலேற வாழ்த்துக்கள்.
:-)

பிரியமுடன்...வசந்த் said...

உங்களுக்கு எதுமாதிரி சினிமா வேணும்ன்னு முதல்லயே டைரக்டர்கிட்ட சொல்லியிருக்கலாம்ல....

:)))

கார்க்கி said...

சதமடிச்சாச்சு..

வாழ்த்துகள்..

Arun said...

101 நான்...

Cable Sankar said...

வாழ்த்துக்கள்

துபாய் ராஜா said...

சீக்கிரம் 111-க்கு வாழ்த்துக்கள். :))

வெற்றி said...

//பாக்குற சீன எல்லாம் வாயப் பொளந்து பார்த்துட்டு இங்க வந்து என்ன பொலம்பல் வேண்டிக் கிடக்கு.. சின்னப்புள்ளத்தனமா?//

ரிப்பீட்டு :)

வெற்றி said...

:)

rooto said...

உங்கள மாதிரி ஆக்களுக்கு தானே விஜய் வேட்டைகாரன், வில்லு, குருவி, ஆதி, சிவகாசி, திருப்பாச்சி, மதுரை எண்டு ஒரு ஓடரில விடுறான், எனி சுறாவும் வருதாமில்ல!! ஏண்டா கொஞ்சம் வித்தியாசமா படம் எடுப்பம் எண்டு நினைக்கிறவங்களையும் முன்னேற விடாம நாசமாக்கிறிங்க???!!! உங்கட ஊரில தான் நல்ல சினிமா எல்லாம் ஊத்திகிச்சே!!!!

ஹேமா said...

அப்போ...படம் பாக்காலாம்.சரி.

Sangkavi said...

சரி படம் பார்த்துவிடலாம்....

T.V.Radhakrishnan.. said...

விமர்சனம் நல்லாருக்கு

தராசு said...

இங்க பார்றா, எங்க கேபிள் அண்ணனுக்கு போட்டியா முதல் நாளே விமர்சனம் எழுதறதுக்குனு கிளம்பிருக்காங்க,

கலக்கல். 100 க்கு வாழ்த்துக்கள்.

எறும்பு said...

Goa.. ME escape..

I saw Tamil padam...

dont miss it...

பிரியமுடன் பிரபு said...

படம் பார்க்கலாமா??

அக்பர் said...

//கோவா இயக்குனர் கதையை நம்பாமல் சதையை நம்பியிருக்கிறார்.//

அப்படியா!

விமர்சனம் நல்லாயிருக்கு.

ஜாக்கி சேகர் said...

:-)

அத்திரி said...

//Arun said...
படம் பார்க்கலாமா
//

பார்க்கலாம் ..மண்டய கழட்டி வச்சிட்டு பாக்கலாம்.
நன்றி அருண்

// கார்த்திகைப் பாண்டியன் said...
Excuse me.. இது அத்திரிதானா மொத நாளே படம் எல்லாம் பாக்குறாரு? எத்தன பேருயா இப்படி போட்டிக்கு கிளம்பி இருக்கீங்க?//

எத்தன நாளைக்குத்தான் உங்க விமர்சனத்த படிச்சிட்டு படத்துக்கு போறது...ஒரு சேஞ்சுக்கு..நன்றி புரொபசர்

அத்திரி said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
இதுல அண்ணன் கேபிளோட உள்குத்து எதுவும் இருக்கோ? என்னமோ போங்கப்பா..//

என்ன் புரொபசர் ரொம்ப ஜாலி மூடுல இருக்கீங்களா

// ஸ்ரீ said...
ஆக மொத்தத்தில் படம் சுமார் ரகம்னு சொல்லுறீங்க..//

ரொம்ப சுமார் .......வெங்கட்டின் முந்தைய படங்களை மனதில் வைத்துக்கொண்டு படம் பாக்க போவாதிங்க..நன்றி ஸ்ரீ

அத்திரி said...

// கார்த்திகைப் பாண்டியன் said...
பாக்குற சீன எல்லாம் வாயப் பொளந்து பார்த்துட்டு இங்க வந்து என்ன பொலம்பல் வேண்டிக் கிடக்கு.. சின்னப்புள்ளத்தனமா?//

புரொபசர் நீங்க இந்த படத்த பாத்துட்டு சொல்லுங்க


//செ.சரவணக்குமார் said...
விமர்சனம் நல்லாருக்கு நண்பா.
//

நன்றி சரவணக்குமார்

அத்திரி said...

// ♠ ராஜு ♠ said...
ரைட்டு. சீக்கிரம் ஃபாலோயர்ஸ் சதமடித்து ஜீப்பிலேற வாழ்த்துக்கள்.
:-)//

நன்றி ராஜு

//பிரியமுடன்...வசந்த் said...
உங்களுக்கு எதுமாதிரி சினிமா வேணும்ன்னு முதல்லயே டைரக்டர்கிட்ட சொல்லியிருக்கலாம்ல....//

அது சரி.......டைரக்டர் என்னதான் சொல்லப்போறர் அப்படினு யோசிக்க வச்சிட்டாரு......அதான் நன்றி

அத்திரி said...

//கார்க்கி said...
சதமடிச்சாச்சு..

வாழ்த்துகள்..//

நன்றி சகா

// Arun said...
101 நான்...//

நன்றி அருண்

அத்திரி said...

// Cable Sankar said...
வாழ்த்துக்கள்//

நன்றி அண்ணே

// துபாய் ராஜா said...
சீக்கிரம் 111-க்கு வாழ்த்துக்கள். :))
//

ஆஹா........நன்றி அண்ணே

அத்திரி said...

// வெற்றி said...
//பாக்குற சீன எல்லாம் வாயப் பொளந்து பார்த்துட்டு இங்க வந்து என்ன பொலம்பல் வேண்டிக் கிடக்கு.. சின்னப்புள்ளத்தனமா?//
ரிப்பீட்டு :)//

நன்றி வெற்றி


// rooto said...
உங்கள மாதிரி ஆக்களுக்கு தானே விஜய் வேட்டைகாரன், வில்லு, குருவி, ஆதி, சிவகாசி, திருப்பாச்சி, மதுரை எண்டு ஒரு ஓடரில விடுறான், எனி சுறாவும் வருதாமில்ல!! ஏண்டா கொஞ்சம் வித்தியாசமா படம் எடுப்பம் எண்டு நினைக்கிறவங்களையும் முன்னேற விடாம நாசமாக்கிறிங்க???!!! உங்கட ஊரில தான் நல்ல சினிமா எல்லாம் ஊத்திகிச்சே!!!!//

ஐயா நீங்களே இந்த படத்த பாத்துட்டு சொல்லுங்க ..........குடும்பத்தோடு கண்டிப்பா படத்த பாக்க முடியாது.வருகைக்கு நன்றி

அத்திரி said...

// ஹேமா said...
அப்போ...படம் பாக்காலாம்.சரி
//

கொஞ்சம் சிரமம் தான். நன்றி ஹேமா

//Sangkavi said...
சரி படம் பார்த்துவிடலாம்....//

நன்றி சங்கவி

அத்திரி said...

//T.V.Radhakrishnan.. said...
விமர்சனம் நல்லாருக்கு//

நன்றி ஐயா

//தராசு said...
இங்க பார்றா, எங்க கேபிள் அண்ணனுக்கு போட்டியா முதல் நாளே விமர்சனம் எழுதறதுக்குனு கிளம்பிருக்காங்க,
கலக்கல். 100 க்கு வாழ்த்துக்கள்//

நன்றி யூத் அண்ணாச்சி
.

அத்திரி said...

// பிரியமுடன் பிரபு said...
படம் பார்க்கலாமா??//

சொல்லிக்கிற மாதிரி படத்துல எதுவும் இல்ல.........நன்றி பிரபு

// எறும்பு said...
Goa.. ME escape..
I saw Tamil padam...
dont miss it...//

நன்றி எறும்பு

அத்திரி said...

//அக்பர் said...
//கோவா இயக்குனர் கதையை நம்பாமல் சதையை நம்பியிருக்கிறார்.//
அப்படியா!
விமர்சனம் நல்லாயிருக்கு.//

நன்றி அக்பர்


// ஜாக்கி சேகர் said...
:-)//

நன்றி ஜாக்கி சேகர்

மாயாவி said...

படத்தை முதல் ஆளா விழுந்தடிச்சி பார்த்திட்டுதான் இந்த அலம்பலா!!

சில சீன்ல தொறந்த வாயை இன்னும் மூடலன்னு வேற தகவல்!

AmAlAn said...

hello Rooto neenga unga amma, akkavoda poi entha padatha parunga. unga amma ungala seruppala adihu solluvanga "ethukku vettaikaranukkavathu poierukkalamnu".

nambalaina try pannunga.

pinvilaivugalukku sangam poruperkathu.