Sunday, February 21, 2010

கொலுசு கொஞ்சும் பாதம்









கொலுசு கொஞ்சும் பாதம்
ஒரு புதிய ராகம் பாட
மனசுபோடும் தாளம்
அது பிடிபடாமல் ஓட
காற்றிலே காறிலே என் மனம் நீந்துதே
வெண்ணிலா வீதியில் ஊர்வலம் போகுதே
கண்களை நான் மூடினால்
தேன் மழை தினம் சிந்துதே
சோலை பனிப்பூவாய் சேலை மலராட
சிந்தும் மணிமாலை நெஞ்சில் விளையாட
மல்லிச்சரம் வாசம் பட்டு சூடானேன்
அள்ளித்தர ஆசைப்பட்டு ஆளானேன்
குளிருதே மாம்பனி கூந்தலில் மூடடி அழகே
வெள்ளை மனம் பார்த்தேன்
கொஞ்சம் இடம் கேட்டேன்
அன்பே உனைப் பார்த்தேன்
அன்பின் நிறம் பார்த்தேன்
கட்டில் சுகம் காணும் முன்னே
நான் வேர்ப்பேன்
மற்ற விழி ஜாடை சொன்னால்
கை சேர்ப்பேன்
நாளெல்லாம் பவுர்ணமி
சாய்வதே நிம்மதி உயிரே

டிஸ்கி: கண்டுபிடிங்க பார்க்கலாம்

16 comments:

நட்புடன் ஜமால் said...

சின்னதுரை - எதை கண்டு பிடிக்கனும்

அத்திரி said...

அதான் சொல்லிட்டீங்களே

சிநேகிதன் அக்பர் said...

பாட்டு நல்லாயிருக்கு.

ஆமா சின்னதுரை என்றால் என்ன.

நசரேயன் said...

வசந்தமாளிகை

அன்புடன் நான் said...

திரையிசை பாடல் போல் உள்ளது.

எது எப்படியோ... பாடல் நல்லாயிருக்கு.

துபாய் ராஜா said...

அருமை.அருமை. கவிதை வரிகளும், வர்ணனைகளும் அருமை.எதுகை, மோனைகளும் இனிமை.

எதைன்னு குறிப்பிட்டு சொல்ல அனைத்து வரிகளும் அட்டகாசம்.

//டிஸ்கி: கண்டுபிடிங்க பார்க்கலாம்//

கவிதை படித்ததும்.கொஞ்சு தேர் அஞ்சுறைதும்பி போல... பாடல்தான் நினைவிற்கு வந்தது..

அதிரடியா கவிஞர் ஆகிட்டிங்க. தொடர்ந்து இது மாதிரி கவிதைகளும், அப்படியே கொஞ்சம் கதைகளும் எழுதிட்டிங்கன்னா சீக்கிரம் புத்தகமா போட்டுடலாம்...வெள்ளாட்டுக்கு சொல்லலை...சீரியஸாதான் சொல்றேன்.

கற்பனை குதிரையை கட்டிப்போடாம அப்பப்ப இப்படி அவுத்து வுடுங்க... தமிழ்ல்ல நல்லா மேயட்டும்.. :))

ஹேமா said...

குழந்தையா ?

புலவன் புலிகேசி said...
This comment has been removed by the author.
புலவன் புலிகேசி said...

சினிமாப் பாடல்னு தோனுது..

தராசு said...

நாங்க எதை கண்டு பிடிக்கணும்?????

Thamira said...

என்னையா பிரச்சினை உமக்கு?

அத்திரி said...

//அக்பர் said...
பாட்டு நல்லாயிருக்கு.
ஆமா சின்னதுரை என்றால் என்ன.//

சின்னதுரை படப்பாடல் அது அக்பர்..வருகைகு நன்றி

// நசரேயன் said...
வசந்தமாளிகை//

அண்ணாச்சி இது சரத் நடித்த சின்னதுரை படப்பாடல் இளையராஜா இசை

அத்திரி said...

// சி. கருணாகரசு said...
திரையிசை பாடல் போல் உள்ளது.
எது எப்படியோ... பாடல் நல்லாயிருக்கு//

வருகைகு நன்றி கருணாகரசு

// துபாய் ராஜா said
அதிரடியா கவிஞர் ஆகிட்டிங்க. தொடர்ந்து இது மாதிரி கவிதைகளும், அப்படியே கொஞ்சம் கதைகளும் எழுதிட்டிங்கன்னா சீக்கிரம் புத்தகமாபோட்டுடலாம்...வெள்ளாட்டுக்கு சொல்லலை...சீரியஸாதான் சொல்றேன்//

ஏன் இந்த கொலைவெறி அண்ணே

அத்திரி said...

// ஹேமா said...
குழந்தையா ?//

நான் சொன்னது இது எந்த படப்பாட்டுனு கேட்டது நன்றி


// புலவன் புலிகேசி said...
சினிமாப் பாடல்னு தோனுது..//


அதேதான் புலிகேசி நன்றி

அத்திரி said...

//தராசு said...
நாங்க எதை கண்டு பிடிக்கணும்?????//

இன்னும் கண்டுபிடிக்கலையா????

ஆதிமூலகிருஷ்ணன் said...
என்னையா பிரச்சினை உமக்கு?

ஒரு பிரச்சினை இல்ல அண்ணே

அம்பாளடியாள் said...

அழகிய பாடல்வரிகள் வாழ்த்துக்கள் நன்றி பகிர்வுக்கு .....