Friday, February 26, 2010

மணத்தக்காளி கீரை பொரியல்---- பேச்சிலர் சமையல்

தினசரி கோதுமை தோசை,அரிசி மாவு தோசை, ஆம்லெட், சாம்பார்,அப்பளம் அப்படினு சப்பிட்டு ரொம்ப போரடிச்சிருச்சி......... வேற வழியில்லாம சாப்பிட வேண்டியதா போச்சு...... வித்தியாசமா ஏதாவது செய்து சாப்பிடனும்னு ஆசை...... சிக்கன் வைக்கலாம்னு பாத்தா சைவ சமையலில் ஏதாவது குறை என்றால் உப்போ காரமோ கொஞ்சம் அதிகம் சேர்த்து சமாளிச்சிடலாம்........ அசைவத்தில் குளறுபடி பண்ணிவிட்டால் கண்டிப்பா சாப்பிடமுடியாது...........இதனால கீரையை ஒரு கை பார்க்கலாம் என்று முடிவெடுத்துவிட்டேன்....... மணத்தக்காளி கீரை உடம்புக்கு நல்லதாமே........... ஒரு கட்டு கீரை வாங்கிட்டேன்.ஆனா எப்படி சமைப்பது என்று தெரியவில்லை.வழக்கம் போல் தங்கமணியிடம் வாங்கி கட்டிக்கொண்டு குறிப்பையும் கேட்டுக்கொண்டேன்.........

கீரையை நன்றாக உருவி அதை நறுக்கி கொள்ளவும்... கீரையை தண்ணியில் அலசிக்கொள்ளூங்கள்.சின்னவெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் தேவைக்கேற்றார்போல் எடுத்துக்கொள்ளவும். காய்ந்த மிளகாய் ஒன்று போதும்....ஒரு துண்டு தேங்காயை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்..... அடுப்பில் வானலி வைத்து கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்....அதன் பிறகு அதனுடன் கீரையை சேர்த்து வதக்கவும்...குறைந்த பட்ச சூட்டில் வைத்து வதக்க வேண்டும்..அப்பதான் சட்டியின் அடியில் பிடிக்காது.. கொஞ்ச நேரம் மூடி வைத்து விட்டு மறுபடியும் கிளற வேண்டும்...... தோராயமாக பத்து நிமிடம் கழித்து தெவைக்கேற்றார் போல் உப்பும், அரைத்து வைத்த தேங்காயையும் சேர்த்து கிளறிவிடுங்கள்...மணத்தக்காளி கீரை பொறியல் ரெடி............. கொஞ்சம் கசப்பாக இருந்தாலும் அதன் ருசியே தனி........

டிஸ்கி:


கோதுமை தோசை நன்றக வர வேண்டுமா???..எவ்ளோதான் தண்ணியில் கோதுமையை நன்றாக கரைத்தாலும் தோசை வார்க்கும் பொழுது நன்றாக வராது....இதற்கு ஒரு முட்டையை உடைத்து கோதுமை கரைசலில் நன்றக கலக்கினால் கோதுமை தோசையும் நன்றாக வரும்..ருசியும் சூப்பரா இருக்கும்.... ஆறினாலும் சாப்பிடலாம்

13 comments:

தமிழ் அமுதன் said...

;))

Anbu said...

எனக்கும் பார்சல் அனுப்பி வைங்க அண்ணே..

வால்பையன் said...

எனக்கு டிஸ்கி தான் பயனுள்ளதா தெரியுது!

சுலபமும் கூட!

இரும்புத்திரை said...

அண்ணா,அண்ணி இல்லாத இப்படி அமுக்கினா எப்படி உடம்பு குறையும்.அதுவும் இப்படி திங்க வழியில்லாமல் இருக்கிறவனை கிட்ட வம்படியா இப்படி இப்படி காட்டி காட்டி சாப்பிடாதீங்க

சங்கர் said...

//"மணத்தக்காளி கீரை பொரியல்---- பேச்சிலர் சமையல்"//

உங்களுக்கும் யூத் மேனியா வந்திடுச்சா?

:))

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

ஜெட்லி... said...

நடத்துங்க....அடுத்து என்ன சமையல் குறிப்பு??

சிநேகிதன் அக்பர் said...

தல சமையல் குறிப்பு சூப்பர்.

எங்களுக்கு பயனுள்ளதா இருக்கும்.

Raju said...

என் ரூமுக்கு வந்தீங்கன்னா,என் கையால உங்களுக்கு தயிர்சாதமும் கண்மார்க் ஊறுகாயும் “சமைச்சு” தரேன். வர்றீங்களாண்ணே..!

ஹேமா said...

அத்திரி...தோசை டிப்ஸ் பயனுள்ளது.மணத்தக்காளி சட்னி பண்ணிப்பாருங்க.அருமையா இருக்கும்.வாய் அவியல் அடிக்கடி வாறவங்களுக்கு மணத்தக்காளில சொதி பண்ணிக் குடுப்பாங்க.

Cable சங்கர் said...

veelaya paruyaa..

Anonymous said...

:-)))

puduvaisiva said...

"கீரையை நன்றாக உருவி அதை நறுக்கி கொள்ளவும்... கீரையை தண்ணியில் அலசிக்கொள்ளூங்கள்."

Ist Step

கீரையை நன்றாக உருவி தண்ணியில் அலசிக்கொள்ளூங்கள்.

II. Step

கீரையை நறுக்கி கொள்ளவும்.

This is Good way to Cook

Senior பேச்சிலர்

:-))))