Sunday, June 13, 2010

இவ்ளோ நாள் புடுங்கவா போயிருந்தீங்க..................

போபால் விஷ வாயு விபத்து நடந்து 25 ஆண்டுகள் முடிந்த நிலையில் போனவாரம் தீர்ப்பு அளித்தாகிவிட்டது........வழக்கம்போல் தீர்ப்பு வெளியானவுடன் இன்னைக்குத்தான் தூக்கத்திலிருந்து எழுந்தவன் மாதிரி செய்தி ஊடகங்கள் கூப்பாடு போட ஆரம்பித்திருக்கின்றன... முக்கிய குற்றவாளியான ஆண்டர்செனை யார் தப்பிக்கவிட்டது என்பதிலிருந்து இப்ப அவர் எங்க இருக்கார் என்பது வரை சூட்டோடு சூடாக செய்திகளை அள்ளி தெளித்து தங்களுடைய டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்த முயற்சித்து கொண்டிருக்கின்றன.....

பிரபல் தமிழ் நாளிதளில் இரண்டு நாட்களுக்கு முன்பாக இந்த வழக்கு தொடர்பாக ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது... அதில் போபால் விஷ வாயு வழக்கில் இந்த தண்டணை கொடுத்ததே அதிகபட்சம் என்று சொல்லியிருக்கிறார்கள்.. காரணம் வழக்கு போடப்பட்டதேஅந்த மாதிரியான செக்சன்களை தேடி போட்டிருக்கிறார்கள்......... அப்பொழுதில் இருந்தே அமெரிக்காவின் அடிவருடியாக இருந்துள்ளது மத்திய அரசு. இந்த லட்சணத்துல ஆண்டரசனை தப்பிக்க விட்டது யார் என்பது பற்றி காங்கிரசுக்குள்ளே ஒரு பெரிய பட்டி மன்றம் நடந்து கொண்டிருக்கிறது.

ஊடகங்களுக்கு தெரியாதா இந்த வழக்கில் ஆண்டர்சென் முதன்மை குற்ற வாளி என்று..என்னமோ இன்னைக்குத்தான் கண்டுபிடிச்ச மாதிரி கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கின்றன.......... அரசும் வாய்மூடி மவுனியாக இருக்கிறது.........போன உசுருகள் எல்லாம் என்ன  கோமான்களா என்ன நடவடிக்கை எடுக்க................ சாதாரண மக்கள் தானே....................

நடக்கிற சம்பவங்களையெல்லாம் பார்க்கும்போது நாமெல்லாம் இந்தியாவில் வசிக்க தகுதியற்றவர்களோ என எண்ணத்தோன்றுகிறது.........ஆம் இந்தியாவுல அரசியல்வியாதிகள்,பன்னாட்டுக்கோமான்கள்,அரசியல் புரோக்கர்கள்,
அம்பானி மாதிரியான தொழில் அதிபர்கள் தான் வாழனும் போல...அவங்களுக்குக்காகத்தான் மத்திய அரசு இருக்கு...............நமக்கெல்லாம் கிடையாது............

வாழுக மன்மோகன் சோனியா
வாழுக இந்திய சனநாயகம்...

12 comments:

Unknown said...

ஊடகங்கள் மீதான நியாயமான கோபம் கொப்பளிக்கும் வரிகள். நன்று. தலைப்பப் பார்த்ததும் இது இன்னிக்கு எழுதுன யாரைப் பதியோனு நெனச்சேன்.

Unknown said...

நியாயமான கோபம்..

ஊர்சுற்றி said...

:(
ஏமாளி இருக்கிற வரைக்கும்.....

தராசு said...

நாங்க ஊடகங்களைப் பற்றி எழுதுனா வந்து திட்டறீங்கல்ல. இப்ப என்னத்தச் சொல்ல....

விடுங்க தல, இவிங்க எப்பயும் இப்பிடித்தான்.

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

தினம் ஒரு செய்தியை புதிதாக விற்க வேண்டும் .இதுவே ஊடகங்களின் நோக்கம்..

அத்திரி said...

//கலாநேசன் said...
ஊடகங்கள் மீதான நியாயமான கோபம் கொப்பளிக்கும் வரிகள். நன்று. தலைப்பப் பார்த்ததும் இது இன்னிக்கு எழுதுன யாரைப் பதியோனு நெனச்சேன்.
//

ஆஹா, அப்படி வேறயா.....நன்றி கலா நேசன்

அத்திரி said...

// கே.ஆர்.பி.செந்தில் said...
நியாயமான கோபம்..
//

நன்றி செந்தில்

//ஊர்சுற்றி said...
:(
ஏமாளி இருக்கிற வரைக்கும்.....//

நன்றி ஊர் சுற்றி.....என்ன ரொம்ப நாளா ஆளைக் காணோம்

அத்திரி said...

//தராசு said...
நாங்க ஊடகங்களைப் பற்றி எழுதுனா வந்து திட்டறீங்கல்ல. இப்ப என்னத்தச் சொல்ல....
விடுங்க தல, இவிங்க எப்பயும் இப்பிடித்தான்.//

நீங்க தமிழ் ஊடகங்களைஉள்குத்தோடு திட்டுவீங்க........நான் எல்லோரையும் சேத்து தானே சொன்னேன்

அத்திரி said...

// தமிழ் வெங்கட் said...
தினம் ஒரு செய்தியை புதிதாக விற்க வேண்டும் .இதுவே ஊடகங்களின் நோக்கம்..
//


நன்றி தமிழ்

vels-erode said...

எழுதுபவர்கள் மீது ஒரு நம்பிக்கை வர மாதிரி எழுத வேண்டும். உங்கள் தலைப்பைப் பார்த்த உடனே டெலிட் செய்யத்தோண்றுகிறது. சாரி. இதுதான் ஒரு எழுத்தாளனின் லட்சணம் என்றால் ....மன்னிக்கவும்..நீங்கள் இன்னும் 10 ஜென்மம் எடுத்து , திருந்தி வாருங்கள். பிறகாவது பதிவருக்குரிய தகுதி வருதான்னு பார்ப்போம்.

சாமக்கோடங்கி said...

உங்கள் கோபம் நியாயமானது... கொஞ்சம் உத்து கவனிப்போமானால், நாமும் இத்தனை நாள் இந்த போபால் பிரச்சினையைப் பற்றிப் பேசவே இல்லை..(யாராவது பேசியிருந்தால் மன்னிக்கவும்..எனக்குத் தெரிந்து இல்லை)இந்த விஷவாயு சம்பவம் நடந்த காலத்தில் தான் நான் பிறந்தேன்.. ஊடகங்களின் வழியாக அவர்கள் காசு சம்பாரிக்கும் அதே வேளையில் அவர்கள் செய்திகளைக் கொண்டு போகும் ஒரு செயலைச் செய்கிறார்கள்.. அவர்கள் ஒருதலைப் பட்சமாக நடக்காமல்,அவர்களது சொந்த விருப்பு வெறுப்புகளை எழுதாமல், நடுவு நிலைமை காக்க வேண்டும்.. இந்த நாட்டின் அரசியல் மீதும், வெளிநாட்டுக் காரர்கள் நீட்டும் பணத்துக்கு சலாம் போடும் நம் அரசியல் வாதிகளின் மீதும் எனக்கும் கடும் கோபம தான்... வரிகளில் இன்னும் கொஞ்சம் கண்ணியம் சேர்ந்திருந்தால் யார் மனமும் கோணாது..

தமிழ் மதுரம் said...

நடக்கிற சம்பவங்களையெல்லாம் பார்க்கும்போது நாமெல்லாம் இந்தியாவில் வசிக்க தகுதியற்றவர்களோ என எண்ணத்தோன்றுகிறது.........//



என்ன கொதிச்சிட்டீங்கள் போல..

அரசியல் மக்களை விற்றுக் கொண்டிருக்கிறது.