Sunday, 18 July, 2010

மனதை திருடிய களவாணி பயபுள்ள

எப்பவும் மதுரை,தூத்துக்குடி,நெல்லை,கோவைன்னு சுற்றி வருகிற தமிழ் சினிமாவை தஞ்சாவூர் பக்கம் திருப்பியிருக்கிறார் இயக்குனர் சற்குணம்..முதல் படமாம் நம்ப முடியவில்லை...அந்த அளவுக்கு நேர்த்தியான திரைக்கதை. சாதாரண காதல் கதைதான் அதை அருமையான லொகேஷன்,படம் முழுக்க இழைந்தோடும் நகைச்சுவையுடன் குடும்பத்தோடு பார்க்க்க்கூடிய அளவுக்கு தந்திருக்கிறார் இயக்குனர்.

விமல் பருத்தி வீரன் கார்த்தியையும் அவருடைய் முந்தைய படமான பசங்க படத்தின் நடிப்பை ஞாபகப்படுத்தினாலும் நல்லாவே நடிச்சிருக்கிறார்... அதுவும் நெல் திருடும் கதாநாயகியிடம் ஏற்ற இறக்கங்களுடன் பேசும் வசனம் குசும்புத்தனம்...கஞ்சா கருப்பு விமல் கோஷ்டியிடம் மாட்டிக்கொண்டு படும் பாடு........குசும்புத்தனத்தின் உச்சக்கட்டம். கதாநாயகியாக ஓவியா..... கடேசியில் ”என்னையும் உன்ன மாதிரி களவாணியா மாத்திட்டியே” என்று சொல்லுமிடம் ஓகே
அம்மாவாக வரும் சரண்யா நடிப்பில் மிளிர்கிறார்...அதுவும் ஆடி முடிஞ்சி ஆவணி வந்துட்டா எம்மவன் டாப்பாயிடுவான்னு பட்டிக்காட்டு ஜோசியர் சொன்னாருன்னு சொல்லுமிடத்தில் டாப்பு............. இளவரசன்,கதாநாகியின் அண்ணன், உட்பட அனைவரும் நல்லா நடிச்சிருக்காங்க

படத்தில் கவனிக்கப்படவேண்டிய விசயம் கண்ணுக்கு குளிர்ச்சியான லொகேஷன்கள்.....அதை உறுத்தாமல் காட்டிய ஒளிப்பதிவாளர்......பாடல்கள் ஓகே........ இரண்டு ஊருக்கும் உள்ள பகையை ஒரு பில்டப் கொடுத்து கடைசி வரைக்கும் அதே டெம்ப்போடு கொண்டு செல்லும் விதம் அருமை.....
மொத்தத்தில் குடும்பத்தோடு பார்த்து ரசிக்க வேண்டிய திரைப்படம்.

டிஸ்கி: வி.தா.வ படம் பிடிக்கலைனா நீங்க யூத்தே கிடையாதுன்னு ஒரு யூத்து குரூப் சொல்லிச்சி......அதே மாதிரி இந்த களவாணிய புடிக்கலைனா உங்களுக்கு உங்க சொந்த ஊர் பிடிக்கலைனு அர்த்தம்...ஆங் சொல்லிட்டேன்...

22 comments:

இரும்புத்திரை said...

டாப்பா வந்துருவான்..

சி. கருணாகரசு said...

எனக்கு என் சொந்த ஊரு புடிச்சிருக்குங்க

பகிர்வுக்கு நன்றிங்க.

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல படம்.. சரி.. நேட்டிவிட்டி.. சரி.. டாப்பா வரட்டும்.. ஓகே..

அதுக்காக படம் பிடிக்கலைன்னு சொன்னா ரத்தம் கக்கி சாவன்னு மிரட்டுறதெல்லாம் ஓவருங்க..:-)))

வார்த்தை said...

//அதுக்காக படம் பிடிக்கலைன்னு சொன்னா ரத்தம் கக்கி சாவன்னு மிரட்டுறதெல்லாம் ஓவருங்க..:-)))//

repeaaattttuuu


http://vaarththai.wordpress.com

T.V.ராதாகிருஷ்ணன் said...

பகிர்வுக்கு நன்றி

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

டாப்பு டக்கரு

பிரியமுடன் பிரபு said...

எல்லோரும் சொல்லுதாக
சரி பார்த்துடுவோம்

வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said...

ஒரு முழு நீள நகைச்சுவை படம்...

அக்பர் said...

நேத்துதான் பார்த்தேன். ரொம்ப நல்லாயிருந்துச்சு.

டாப்பா வருவான். ஆனா புதுப்படக்காரங்க தியேட்டரைவிட்டு தூக்க சொல்லுறாங்களாம்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

என்ன இப்படி திடீர்னு திரை விமர்சனமெல்லாம்.? நல்லாருக்குது.

Cable Sankar said...

enna aathi.. நடு ராத்திரியில.. பின்னூட்டம்..

Prasanna Rajan said...

எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. ஏன் இந்த படத்தை எல்லோரும் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். அமெச்சூர்த்தனமான காட்சிகள் படம் நெடுக. நேர்த்தியான திரைக்கதை எனும் பொது சிரிப்பு தான் வருகிறது.

சி.பி.செந்தில்குமார் said...

லேட்டா போட்டாலும் லேட்டஸ்ட்டா இருக்கு

அத்திரி said...

// இரும்புத்திரை said...
டாப்பா வந்துருவான்..
//

நன்றி தம்பி

// சி. கருணாகரசு said...
எனக்கு என் சொந்த ஊரு புடிச்சிருக்குங்க//

நன்றி கருணாகரசு

அத்திரி said...

.//கார்த்திகைப் பாண்டியன் said...
நல்ல படம்.. சரி.. நேட்டிவிட்டி.. சரி.. டாப்பா வரட்டும்.. ஓகே..//
அதுக்காக படம் பிடிக்கலைன்னு சொன்னா ரத்தம் கக்கி சாவன்னு மிரட்டுறதெல்லாம் ஓவருங்க..:-))//

புரொபசர் இப்பவும் அதத்தான் சொல்லுவேன்.உங்க விமர்சனத்துல படம் சரியில்லைனு சொல்லியிருந்தீங்களே

அத்திரி said...

//வார்த்தை said...
//அதுக்காக படம் பிடிக்கலைன்னு சொன்னா ரத்தம் கக்கி சாவன்னு மிரட்டுறதெல்லாம் ஓவருங்க..:-)))//
repeaaattttuuu//

முதல் வருகைக்கு நன்றி வார்த்தை

// T.V.ராதாகிருஷ்ணன் said...
பகிர்வுக்கு நன்றி//

நன்றி ஐயா

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
டாப்பு டக்கரு//

வாங்க அண்ணாச்சி

அத்திரி said...

//பிரியமுடன் பிரபு said...
எல்லோரும் சொல்லுதாக
சரி பார்த்துடுவோம்//

நன்றி பிரபு

//வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said...
ஒரு முழு நீள நகைச்சுவை படம்...//

நன்றி வழிப்போக்கன்

அத்திரி said...

// அக்பர் said...
நேத்துதான் பார்த்தேன். ரொம்ப நல்லாயிருந்துச்சு.
டாப்பா வருவான். ஆனா புதுப்படக்காரங்க தியேட்டரைவிட்டு தூக்க சொல்லுறாங்களாம்.//

வாங்க அக்பர்............அவ்ளோ சீக்கிரத்துல தூக்கமாட்டாங்கன்னு நினைக்கிறென்

அத்திரி said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
என்ன இப்படி திடீர்னு திரை விமர்சனமெல்லாம்.? நல்லாருக்குது//

வாங்க அண்ணே......இதுல இருந்து தெரியுது என் கட பக்கம் நீங்க வந்து ரொம்ப நாளாவுது

அத்திரி said...

// Cable Sankar said...
enna aathi.. நடு ராத்திரியில.. பின்னூட்டம்..//

அண்ணே நடு ராத்திரியில் உங்களுக்கு என்ன வேலை???


// Prasanna Rajan said...
எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. ஏன் இந்த படத்தை எல்லோரும் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். அமெச்சூர்த்தனமான காட்சிகள் படம் நெடுக. நேர்த்தியான திரைக்கதை எனும் பொது சிரிப்பு தான் வருகிறது.//

அப்போ நேர்த்தியான திரைக்கதை என்று எதை சொல்லப்போகிறீர்கள்??
பேரரசு வகையறா படங்களா???

அத்திரி said...

//சி.பி.செந்தில்குமார் said...
லேட்டா போட்டாலும் லேட்டஸ்ட்டா இருக்கு//

நன்றி செந்தில்குமார்

அஹமது இர்ஷாத் said...

பார்வை நல்லாயிருக்கு..