Tuesday, 7 December, 2010

தமிழ்நாட்டுல சென்னை மட்டும்தான் இருக்கோ???????


 
இந்த சந்தேகம் ரொம்ப நாளா இருக்கு...அதுக்கு காரணம் ஆளுங்கட்சி மற்றும் ஊடகங்கள்...சென்னைக்குள் எது நடந்தாலும் அய்யோ என அலறும் ஆளுங்கட்சியும், ஊடங்களும்...........சென்னைக்கு வெளியே பூகம்பமே வந்தாலும் மேம்போக்காக ஒரு பார்வை பார்த்து விட்டு செல்கின்றன................... எந்த விசயம் என்றாலும் இதே நிலைதான்...

கடந்த ஒரு மாதமாக சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் மழை கொட்டி தீர்த்து பல்லாயிரக்கணக்கான விளை நிலங்கள் நீரில் மூழ்கியும், நூற்றுக்கணக்கான கிராமங்கள் மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டு்ம் இருக்கின்றன. கிட்டத்தட்ட 180க்கும் மேற்பட்டோர் மழைக்கு பலியாகி உள்ளனர்.இந்த நிகழ்வுகளை தொலைக்காட்சி ஊடகங்களும், செய்தி நாளேடுகளும் ஒரு மேம்போக்கான செய்தியாக சொல்லி வருகின்றது........ஆனால் கடந்த இரு நாட்களாக சென்னையில் மழை பெய்யும் செய்தியை அரைமணிக்கு ஒரு தடவை சொல்லி கூப்பாடு போடுகின்றன........ அங்க தண்ணீர் நிக்கு இங்க தண்ணீர் நிக்கு வேளச்சேரி வெள்ளமாயிடிச்சி, வியாசர்பாடி சுரங்கப்பாதை முழுவதும் வெள்ளம்...மக்கள் வெளிய வரவேயில்லை இயல்பு வாழ்க்கை பாதிப்பு அப்படினு இன்னும் முழங்கிக்கொண்டிருக்கின்றன.................என்னமோ இவை அனைத்தும் இந்த வருசம்தான் நடக்கிற மாதிரி..............


டெல்டா மாவட்டங்களில் மக்கள் இரு வாரங்களுக்கும் மேலாக முடங்கி கெடக்காங்களே............இதெல்லாம் இந்த ஊடக கண்களுக்கு எப்போ தெரியும்.....................................அடுத்த வருட தேர்தலுக்கு ஆளும்கட்சிக்கு ஓட்டுக்களை கவர ஒரு அருமையான வாய்ப்பு............அவ்ளோதாம்பா............................

13 comments:

Cable Sankar said...

irukkudi unakku...

வழிப்போக்கன் - யோகேஷ் said...

ஆமாங்க...... மீடியாவில இந்த பாரபட்சம் அதிகமாவே இருக்கு

கார்த்திகைப் பாண்டியன் said...

அப்பப்போ உண்மை பேசணும்னு எதுவும் கொள்கை வச்சிருக்கீங்களா அண்ணே? நியாயமான வருத்தம்.. கரண்ட் கட்ல கூட சென்னைக்கு ஒரு விதி, எங்களுக்கு தனி விதி தானே..:-(((

துளசி கோபால் said...

'தலை' நகரமில்லையோ????

அதான் கூப்பாடு கூடுதல்!

THOPPITHOPPI said...

சென்னையில் எது நடந்தாலும் அலுவலகத்தின் பக்கத்தில் இருப்பதால் வீடியோவுடன் போடுவதால் செய்தி பெரிதாக்கப்படுகிறது, ஆனால் நீங்கள் சொல்லும் இடம் சென்னையில் இருந்து கொஞ்சம் தொலைவில், வீடியோ எடுக்கும் ஆட்கள் வசதி குறைவு மழைத்தண்ணீரில் சென்று வீடியோ எடுக்கும் அளவுக்கு நமமூரில் ஆட்கள் இல்லை அந்த ஒரு காரணம் தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. நீங்கலாக உங்களை மட்டம் தட்டிக்கொள்ள வேண்டாம். இன்னும் ஒரு சில ஆண்டுகளில் ஊடகம் வளர்ச்சி அடைந்தால் கண்டிப்பாக வீடியோவுடன் போடுவார்கள் என்று நம்புகிறேன் அது வரை இப்படி மேம்போக்காக தான் சொல்லும் சூழ்நிலை

நசரேயன் said...

நல்ல கேள்வி

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல கேள்வி

குகன் said...

ஆங்கில ஊடங்களுக்கு டெல்லி, மும்பாய்....

தமிழ் ஊடங்களுக்கு சென்னை. அவ்வளவு தான்.

ஆசாம், ஒரிசா மாநிலங்கள் செய்தியை CNN, NDTV பெரிதாக காட்டியிருக்கிறதா ? அப்படியே காட்டினாலும் ஊழல் செய்தியாக இருக்கும்.

ஹேமா said...

அத்திரி...
இருக்கீங்கதானே இன்னும் களத்தில !

துபாய் ராஜா said...

ஆமாங்க......நியாயமான வருத்தம்தான்.. தமிழ் ஊடங்களுக்கு தமிழ்நாட்டுல சென்னை மட்டும்தான் இருக்கு... :((

சிநேகிதன் அக்பர் said...

நியாயமான கேள்வி பதில் சொல்வது யார்?

ஆதிமூலகிருஷ்ணன் said...

எண்ணே.. இதுக்கெல்லாம் என்ன காரணம்னு நினைக்கிற நீயி.?

டிஸ்ட்டன்சுதான் காரணம்.

திருநெவேலியத் தூக்கி தாம்பரம் பக்கத்துல வச்சுட்டம்னு வைய்யி.. இந்த பிரச்சினையெல்லாம் சால்வாயிரும். ஹிஹி..

தராசு said...

எழுதறதே வருஷத்துக்கு ஒரு பதிவு, அதுலயும் அது நொட்டை இது நொள்ளைன்னுகிட்டு,