Sunday, 16 November, 2008

அடைமழையிலும் சூடான சென்னை பதிவர் சந்திப்பு

போன பதிவர் சந்திப்பில் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை. இந்த சந்திப்பை தவறவிடக்கூடாது என்பதற்காக டுட்டியில் மாற்றம் செய்து, தங்க மணியிடம் அனுமதி வாங்கி சரியாக 5:50 மணியளவில் லைட் ஹவுஸ் வந்து. அங்கிருந்து காந்தி சிலைக்கு வந்து பார்த்தால் சந்திப்பு ஆரம்பம் ஆகிவிட்ட்டது. அதோடு மழையும் சேர்ந்துவிட்டது. முதல் சந்திப்பு என்பதால் ஒவ்வொருவரிடமும் அறிமுகபடுத்திக்கொண்டேன்.


கிட்டதட்ட 40க்கும் மேற்பட்ட பதிவர்கள் கலந்து கொண்டார்கள். பெயர்களை வரிசையிடுகிறேன். விடுபட்டால் மன்னிக்கவும்.


டோண்டு
ஜியாரோம் சுந்தர்
முரளிகண்ணன்
லக்கிலுக்( ஆள் ஒல்லியா இருந்தாலும் பேச்சில் கில்லி)
நர்சிம்(தமிழ் சினிமாஉலகம் ஒரு அழகான ஹீரோவை மிஸ் செய்கிறது.)
அதிஷா (( ஆள் ஒல்லியா இருந்தாலும் பேச்சில் கில்லி)
குப்பன் யாஹூ
பரிசல்காரன்( நேற்றைய கெஸ்ட்)
பாலபாரதி ( கமாண்டோ)
யோசிப்பவர்
அக்னிபார்வை
கார்க்கி( மூளைக்காரன்)
கென்
வளர்மதி
கும்கி
அகநாழிகை
குட்டிபிசாசு
சுரேஸ்கண்ணன்
கேபிள் சங்கர்

தாமிரா( தங்கமணி ரசிகர் மன்ற தலைவர்)
புதுகை அப்துல்லா
சுகுணா திவாகர்
வெண்பூ ( பெயருக்கு ஏற்ற மாதிரி வெண்மையாக இருந்தார்)
சிவஞானம்ஜி

போலீசார் கூட்டமாக நிற்க கூடாது எனக்கூறியதால் மரத்தடிக்கு நகர்ந்தோம். மழையும் கொஞ்சம் அதிகமாகியது. பின்னர் கடற்கரை மணலில் அனைவரும் உட்கார்ந்துகொண்டோம். போலிஸ் இன்ஸ்பெக்டர் வந்து நீங்கள் மரத்தடியிலே வைத்து நடத்திக்கொள்ளலாம் என்றும், டிசிக்கு உங்களை பற்றி தெரியாது என்றும் சொன்னார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு விவாதம் ஆரம்பம் ஆகியது.

வளர்மதி சட்டக்கல்லூரி பிரச்சினை பற்றி பேச ஆரம்பித்தார். மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலுக்குக்கான காரணங்களை எடுத்துரைத்தார். நர்சிம் கேள்வியிலும்,அக்னி பார்வை கேள்வியிலும் அனல் பறந்தது.மழையும் அதிகமாகியது. இந்த சமயத்தில் ஒரு சிலர் எழுந்து தனியே சென்றனர். வளர்மதி சாதி பெயரை நேரடியாக சொன்னதால் பிடிக்கவில்லையோ என்னவோ?. இது மாதிரி விவாதங்களில் சாதிப்பெயர் சொல்லுவாதை தவிர்த்தால் நலமாக இருக்கும்.

இதே மாதிரியான சாதிகலவரங்களை நான் டிப்ளமா படிக்கும்போதும், ஐடிஐ யில் வேலை பார்க்கும் போதும் நேரடியாக பார்த்தவான். அதுவும் 98ல் சாதிதலைவர்களின் பெயர்களை போக்குவரத்து கழகங்களுக்கு வைக்கவேண்டும் என்றும் சொல்லி கடையநல்லூரில் 20 பேருந்துகளை தீக்கிரையாக்கின சம்பவம் என் கண்ணில் இன்னும் நிற்கிறது.

சரி விசயத்துக்கு வருவோம்.வளர்மதி சொன்னதில் ஒரு விசயம் நமக்கு புதுசு. சித்திரை செல்வன் எனும் தலித் மாணவன் மதியம் 1 மணிக்கே தாக்கப்பட்டு ஜிஹெச்சில் அட்மிட் ஆகியிருப்பதாக சொன்னார். ஆனால் இதைப்பற்றி மீடியாவிலும் வரவில்லை. இவர் சொன்னது போல் அந்த மாணவனை ப்ற்றி எந்த செய்தியும் வெளியில் கசியவில்லை. எல்லாம் அரசின் வேலை.

விவாதம் மழைக்கு பிடிக்கவில்லையோ என்னாவோ இன்னும் அதிகமாகியதால் இத்துடன் முடிவுக்கு வந்தது. அனைவரும் சென்னை வானொலி நிலையத்திற்கு எதிரில் உள்ள கடையில் தேநீர் அருந்தினோம்.தாமிரா,கேபிள்சங்கர்,புதுகை அப்துல்லா ஆகியோர் வந்து கலந்து கொண்டார்கள்.

கேபிள்சங்கர்,லக்கிலுக்,முரளி கண்ணன் மூவரும் ரொம்ப டீப்பா டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தாங்கோ.என்னன்னு சொல்லுங்கப்பு. நேரம் அதிகமாகியதாலும் மழை விடைபெறாததாலும் நான் அனவரிடமும் விடை பெற்றேன்.டோண்டு சார் அலையை பார்ப்பதற்கு என்னை கூப்பிட்டிருந்தால் வந்திருப்பேன். கார்க்கி தமிழ்மணத்தில் ஏற்படும் சிரமங்களை எப்படி சமாளிப்பது என்பதை பற்றி பேசிக்கொண்டு வந்தார். நானும்,சுகுணா திவாகரும் ஒரே பேருந்தில் ஏறினோம். அவர் வேளச்சேரி. மின் வெட்டு பற்றீபேசும் பொழுது என் சீட்டிற்கு முன்னால் இருந்தவர் எங்கள் பேச்சினூடாக வந்தார்.அவர் மின் வாரியத்தில் துணை பொறியாளராக இருப்பதாக சொன்னார். இப்போதுள்ள மின்வெட்டுக்கு மின் வாரிய அதிகாரிகளே காரணம் என்றார்.

வீடு போய் சேர்வதற்கு 9:30 ஆகியது.என்னை சொந்தமாக பதிவு எழுத ஊக்கப்படுத்திய முரளி

கண்ணன்,லக்கி,அதிஷா,தாமிராவுக்கு ஒரு ஓ போடுங்கோ.அப்புறம் ஒரு முக்கியமான விசயம்


சகா நர்சிம் ஒரு பேச்சிலர். அனைவரும் மனதில் கொள்க
போதுமா சகா

38 comments:

கிரி said...

:-)

கடையம் ஆனந்த் said...

பதிவர் சந்திப்பு நடந்து கொண்டு இருந்த போது நான் என்னுடைய ஆபீஸ் வேலையாக காந்தி சிலை சாலை வழியாக பட்டிணப்பாக்கம் சென்று கொண்டிருந்தேன்.
வர வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நேரம் என்னை தடுத்து விட்டது.

தமிழ்ப்பறவை said...

நீங்களும் ஜோதியில்(பரங்கிமலை ஜோதி இல்லை) ஐக்கியமாயிட்டீங்களா...?
தமிழகத்தில் இருந்திருந்தால் கலந்திருக்கலாம்....

அகநாழிகை said...

நானும் கலந்து கொண்டேன். போக்குவரத்து நெரிசலில் சிக்கி பதிவர்களை வந்து சேரும்போது, 6.45 ஆகி விட்டது. பதிவர் சந்திப்பு பற்றிய உங்கள் பதிவு அருமை. மழை வராமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பதிவர் சந்திப்பு குறித்து எனது கருத்துக்களை நானும் எழுதுகிறேன்.

siva gnanamji(#18100882083107547329) said...

என் பெயரை வுட்டிட்டீங்களே சகா!

ஆ! இதழ்கள் said...

ஆக மொத்தம் ஒரே கலக்கல் தானாக்கும். வாழ்த்துக்கள்.

குப்பன்_யாஹூ said...

nice writing, thanks buddy, google tamil translator not working.

அத்திரி said...

வாங்க கிரி. இன்னைக்குத்தான் நம்ம இடத்துக்கு வந்திருக்கீங்க.

அத்திரி said...

ஆனந்த் உங்களை பார்க்கலாம்னு தான் வந்தேன் ஏமாத்திட்டீங்களே. அடுத்த வாட்டி கண்டிப்பப் வரனும். நன்றி ஆனந்த்.

அத்திரி said...

நன்றி தமிழ் பறவை

நன்றி அகநாழிகை

சிவஞானம்ஜி உங்க பெயரை சேர்த்துவிட்டேன். நன்றி

அத்திரி said...

நன்றி ஆ இதழ்கள்.

நன்றி குப்பன்.

Anonymous said...

ஆமா அடாமழையிலும் விடாப்பேச்சென்று கூடி என்னத்த கிழிச்சீங்க? இதுக்கு பேசாம பதிவிலேயே பேசிக் கிழிச்சிருக்கலாமே? சட்டக்கல்லூரியிலே நடந்தத பத்தி நாட்டுல ஒரு விரலைக் கூட ஆட்ட ஒங்களுக்கு தில் இல்ல. தாணாக்காரன் தள்ளிப்போன்னு சொன்னான்னே பயந்து ஓடிரீங்க. நீங்கல்லாம் கூடி பேசரதுக்கெல்லாம் நாட்டுநடப்புத்தான் ஒரு சாட்டா? சொல்லுங்கையா. போயி மழையில பேசி என்ன மயித்த புடுங்கி கிழிச்சீங்க. எட்டுப்பேரு ஒம்போது போரான பதிவு போட்டோமின்னு சொல்லிடாதீங்க. துப்புகெட்ட பயலுவ. மிடில்கிளாஸ்மாதவங்க ஒங்களுக்கு சட்டகல்லூரில அடிச்சவனும் அடிப்பட்டவனும் எவ்ளோ மேலுய்யா.

Anonymous said...

சகா நர்சிம் ஒரு பேச்சிலர். அனைவரும் மனதில் கொள்க.
tamilmanam -> tamil matrimony->
family man :)

குப்பன்_யாஹூ said...

அனானி சார். உலக பொருளாதாரம் மந்தமா இருக்காம், மெரீனா சுண்டல் காப்பி, பன் வியாபாரிகள் ஒரே புலம்பல்.

அவுங்களுக்கு ஆதரவு கொடுக்கணும் ன்னு மாசா மாசம் கூடுறோம்.

அது போக தமிழ்மணம் , தமிழிச், தேன்கூடு போன்ற திரட்டிகளுக்கும் போக்குவரத்து மந்தம், அதனால இந்த மாத்ரி பதிவர் சந்திப்பு, பதிவர் மாநாடுன்னு போட்டு நாற்பது, ஐம்பது பதிவுகள் போட்டு தாக்குவோம் தல.

குப்பன்_யாஹூ

அத்திரி said...

அனானிக்கு என்ன பதில் எழுதலாம் என நினைக்கும் வேளையில் கலக்கலான பதில் சொல்லிவிட்டீர்கள் குப்பன். நன்றி.

என்னை பொறுத்தவரைக்கும் அனானியின் மறுபெயர் கோழை

முரளிகண்ணன் said...

aththiri,

we are (cable sankar,lucky,me) talk abour varanam aayiram and other forth coming movies. cable & lucky are related to cine field, so i gather some interesting matter from them

அத்திரி said...

வாங்க முரளி, எத்தனை மணிக்கு கிளம்புனீங்க?. மறுமொழி பகுதியில் எனது பதிவு வரவில்லை. என்ன காரணம்?.

தாமிரா said...

நன்றாக எழுதியுள்ளீர்கள் அத்திரி, நன்றி.! நான் கடைசியாக‌ வந்து கலந்துகொண்டதால் முன்னர் நடந்ததை தெரிந்துகொள்ள வாய்ப்பானது.

பரிசல்காரன் said...

நேற்று உளவுத்துறை, போலீஸெல்லாம் வந்துச்சு தெரியுமா.. இந்த மாதிரி தப்பான தகவலைப் பரப்பினா புடிச்சு உள்ள போட்டுவாங்க.

இது பின்னூட்டமில்ல. எச்சரிக்கை!

என்ன தப்பான தகவலா...

//சகா நர்சிம் ஒரு பேச்சிலர். அனைவரும் மனதில் கொள்க.//

இதுதான்!

அத்திரி said...

நன்றி தாமிரா


//நேற்று உளவுத்துறை, போலீஸெல்லாம் வந்துச்சு தெரியுமா.. இந்த மாதிரி தப்பான தகவலைப் பரப்பினா புடிச்சு உள்ள போட்டுவாங்க.//

பதிவர் சந்திப்பா அப்படின்னா?????????????????


வாங்க பரிசல் முதல்லயே பயமுறுத்திட்டீங்களே..!!!!!!!!!!

பேச்சிலர் என்றதும் சகா நர்சிம்மின் முகத்தில் புன்னகையை பார்க்கனுமே( நான் அப்படித்தான் நினைத்தேன்)

ஆட்காட்டி said...

உருப்பட்ட மாதிரித் தான்?

Anonymous said...

நேற்றைய ,இன்றைய ,நாளய ஜாதிய மோதல்கள்,அத்துமீறல்கள்,பெரியண்ணத் தனங்கள் இவைகளை ஒழிக்க வேண்டு மென்றால் மாவட்டங்களில்,போக்குவரத்துக் கழகங்களில் பேர்களை எல்லோரும் ஏற்கும் வகையில் எளிய மூறையில் மாற்றியது போல் கடுமையான சட்டங்களை எதிர் கால அரசியல் லாபம் கருதாமல் செயலாக்கினால் நல்லது.


தென் மாவட்டங்களில் இந்த மோதல் வாடிக்கை யான நிகழ்ச்சி.

அரசியல் தலைவர்களும்,பத்திரிக்கை யாளர்களும் நிகழ்ச்சியில் நடை பெற்ற முழு சம்பவத்தில் தான் சார்ந்த ஜாதியை காப்பாற்றும் முயற்சியே நடை பெற்றுவருவது சரியில்லா நிலை.

இன்றைய உண்மை நிலவரம் பற்றி யாரும் பேசத் தயராயில்லை.

ஆங்கிலேயர் நம்மை ஆண்ட காலத்திலும்,அதற்கு முன்னரும் ஜாதிகள் அவர்கள் பார்த்த தொழில் மூலம் ஏற்பட்டதாய் சரித்திரம் சொல்கிறது.

அது சமயம் முற்பட்ட் சமுகத்தினர் பிற ஜாதியினரை கொடுமைகள் செய்ததாகவும் ஒரு சில அரசியல் தலைவர்கள் ( இந்தப் சீரமைப்புப் பணியை தொடங்கி வைத்தது முன்னேறிய வகுப்புத் தலைவர்களும் உண்டு என்பர்)பிரச்சாரம் செய்து இன்றய சிறப்பு நிலக்கு காரணம் என்பது மறுக்க முடியா உண்மை.

அரசியல் கட்சிகளின் ஜாதிக் கணக்கீட்டு முறையில் தேர்தலை சந்திப்பது,வெற்றி பெற்ற பின்னர் ஜாதி விகிதாச்சார அடிப்படையில் அமைச்சர்களை நியமிப்பது, ஒட்டுக்களை பெறவேண்டும் என தேசியத் தலைவர்களாம் அருள் கடல் பசும்பொன் மு.ராமலிங்கம்,கல்விக் கண் கொடுத்த காமராஜ், விடுதலை விரர் வ.உ.சி,போன்ற யெல்லோருக்கும் பொதுவான பெரியவர்களை , ஒரு ஜாதி(அவரவரது) சங்குக்குள் அடைத்து நவீன அகத்தியானாய் மாற முயற்சிப்பது,
தேவையில்லா வன்முறை மோதல்களை தோற்றுவிக்கிறது

பேர்களில் ஜாதி எனும் வால் யில்லை
தெருக்களில் ஜாதி எனும் கொம்பு யில்லை
மாவட்டங்களில் ஜாதி எனும் முள்கிரீடம்
இல்லைஆனால் மக்கள் மனதில்,உள்ளத்தில்,சிந்தனையில்,எண்ணத்தில்,கருத்தில்,செயலில்,எழுத்தில்,படிப்பில்,படைப்பில்,உடல் முழுதும் ஒடும் குருதியில்,நாடி நரம்புகளில்.அனைத்து செல்களிலும்

ஒய்யாரச் சிம்மாசனம் போட்டு மனிதகுலத்தை ஆட்டிபடைக்கும்
ஜாதி எனும் அரக்க சுபாவத்தை முழுமையாய்
அகற்றிடும் நாள் வந்திடவேண்டும் எனும் புனித வேள்வி தொடங்கட்டுமே.

ஒன்றே குலம்
ஒருவனேதேவன்

உண்மையாய் மாறட்டுமே!

cable sankar said...

அத்திரி மழையினால் எல்லோரோடும் கலந்து பேச முடியவில்லை.. மன்னிக்கவும்.. நாங்கள் பேசிக் கொண்டிருந்ததை முரளி கண்ணன் சொல்லிவிட்டார். நன்றி அத்திரி

அத்திரி said...

நன்றி ஐயா,

இன்றைக்கு தெனாவட்டு ட்ரெய்லர் பாத்தீங்களா?

'ஒதுங்கிப்போறேன், என்னை உரசாதீங்க"

நீங்க போடுங்க பதிவை

கோவி.கண்ணன் said...

//சகா நர்சிம் ஒரு பேச்சிலர். அனைவரும் மனதில் கொள்க//

அவர் (அப்படியே) நிம்மதியாக இருக்கவும் வேண்டிக் கொள்க !
:)

narsim said...

சகா.. என்டிடிவி ரேஞ்சுக்கு இருக்கு உங்க ரிப்போர்ட்.. கலக்குங்க!!

அது பேச்சிலர் இல்ல சகா.. வீட்ல நான் "பேச்சு இலர்" மாதிரி.ஹ ஹா

rapp said...

me the 25th:):):)

T.V.Radhakrishnan said...

அத்திரி...எனக்கும் சந்திப்பில் கலந்துக் கொள்ள ஆசை..ஆனால்...தற்சமயம் நான் ஸ்டேட்ஸில் உள்ளேன்...ஜனவரியில்தான் திரும்புகிறேன்..அப்போது அனைவரையும் சந்திக்கிறேன்.
அழகாக எழுதி இருக்கிறீர்கள்.

அத்திரி said...

கோவி கண்ணன் said:அவர் (அப்படியே) நிம்மதியாக இருக்கவும் வேண்டிக் கொள்க !

அய்யய்யோ?!!!!!!!!!!!!!!!!!!!!!!

நன்றி கோவியாரே..

அத்திரி said...

//சகா.. என்டிடிவி ரேஞ்சுக்கு இருக்கு உங்க ரிப்போர்ட்.. கலக்குங்க!!//

சென்னையில ரொம்ப குளிரு சகா!!!!!!!!!!!!


//அது பேச்சிலர் இல்ல சகா.. வீட்ல நான் "பேச்சு இலர்" மாதிரி.ஹ ஹா//

அங்கேயுமா?>???!!!!!!!!!!!!!!!

நன்றி நர்சிம்

அத்திரி said...

வாங்க ராப். இப்பதான் முதல்ல நம்ம இடத்துக்கு வந்திருக்கீங்க. அப்பவும் மீ த 1 2 தானா?.

நன்றி.

அத்திரி said...

வாங்க ராதாகிருஷ்ணன் சார். கருத்துக்கு நன்றி.

கார்க்கி said...

கலக்கல் தொகுப்பு. சுருக்கமாக ஆனால் விரிவாக இருக்குங்க.. ஒரு டவுட்

"கார்க்கி( மூளைக்காரன்)"

என்னங்க இது?????

அத்திரி said...

வாங்க கார்க்கி.தமிழ் மணம் பிரச்சினையை பற்றி என்னுடன் பேசியதால் இப்படி சொல்லிவிட்டேன்.

நன்றி சகா

கும்க்கி said...

மா மியாவ்..மி மி மி மியாமிமீ மம்.

கும்க்கி said...

அதாகப்பட்டது..
என்ன சொல்ல வர்ரோம்னா..
யாரையும் முழுசா பேச விடாம..
மழையே பேசிக்கிருச்சி..ன்னு ..

அத்திரி said...

வாங்க கும்க்கி. பதிவு எழுத ஆரம்பிச்சுட்டீங்களா?

மழை இல்லைனா பதிவர் சந்திப்பு இன்னும் சூடாயிருக்கும்.

நன்றி.

கார்க்கி said...

சகா, தமிழ்மண கருவிபட்டை சரி செய்யப்பட்டதாக அவர்கள் கூறினாலும் பலருக்கு பிரச்சனை உள்ளது. எனக்கு கடைசி பதிவுக்கு பட்டைத் தெரியவில்லை. ஆனால் அதற்கு முந்தைய பதிவுகளில் தெரிகிறது. ஆனால் 8 வாக்குகள் வாங்கியும் என் பதிவு பரிந்துரையில் இல்லை. தமிழ்மனத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். பார்க்கலாம். உங்கள் பிரச்சனை குறித்தும் எழுதியுள்ளேன்.